செவ்வாய், 16 ஜூன், 2026

நாட்டில் டெங்கு தொற்றால் கடுமையான அழுத்தத்திற்கு சுகாதாரத்துறை :மக்களிடம் வேண்டுகோள்

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், சுகாதார அமைப்பு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ எச்சரித்துள்ளார் 
வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  அதிகரித்து வரும் டெங்கு நோயாளிகளின் சேர்க்கை காரணமாக, குறிப்பாக கொழும்பில் உள்ள சில மருத்துவமனைகள் ஏற்கனவே நெரிசலை சந்தித்து
 வருவதாகக் கூறினார். 
 "நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், மருத்துவமனை அமைப்பால் சமாளிக்க முடியாமல் போகலாம். நாம் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்," என்று 
அவர் கூறினார். 
 மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் சுமையைக் குறைப்பதற்கு, டெங்கு பரவுவதைத் தடுப்பதே மிகவும் பயனுள்ள வழியாகும் என்று வலுயுறுத்திய அவர், நடைபெற்று
 வரும் டெங்கு
 தடுப்புத் திட்டங்களுக்கு பொதுமக்கள் தீவிரமாக ஆதரவளிக்கவும், தங்கள் வீடுகள், பாடசாலைகள், பணியிடங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.