வெள்ளி, 30 டிசம்பர், 2016

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சாந்தகுமார் ஆன்மீகன் (30.12.16)

 சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆன்மீகன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாள்.30.12. 2016. இன்று வெகுசிறப்பாக தனது இல்லத்தில்  உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை 
அன்பு அப்‌பாஅம்மா
அப்‌பப்‌பா அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் 
தம்பிமார் அக்காமார்
மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள்  இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் அருள்பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு
பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம் நிலாவரை நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன …வாழ்க வளமுடன்.  நிழல்  பாடங்கள் இணைப்பு..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
செவ்வாய், 27 டிசம்பர், 2016

அனைத்து மனிதர்கள் இறந்தால் பூமி என்னவாகும்!.?

மனிதர்கள் அனைவரும் இறந்தால் பூமி என்னவாகும்!.? சுவாரஸ்ய 
காணொளி  இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 26 டிசம்பர், 2016

ஒரு தலையுடன் பிறந்த இரண்டு பசுக் கன்றுகள்!


திருமலையில்  கிண்ணியா நடுத்தீவு என்னும் இடத்தில் விசித்திரமாக  ஒரு தலையுடன் பிறந்த இரண்டு பசுக் கன்றுககளை   நேற்று காலை .பசு ஒன்று ஈன்றுள்ளது 
தலை ஒன்று உடல் இரண்டு கால் ஏழுடன் பிறந்துள்ளது பசு கன்று
பலரையும் வியப்பில் ஆழ்த்திய இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>ஞாயிறு, 25 டிசம்பர், 2016

தமிழர் திருமணத்தில் உக்கிர மோதல்? சோறு – கறிகள் சிதறின…

கனடாவின், டொரன்டோவில் இடம்பெற்ற திருமணமொன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி
 வெளியிட்டுள்ளன.
குறித்த மோதலானது மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தினரிடையே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோதலின் காணொளியும் இணையத்தில்
 வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இம்மோதலுக்கான காரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
மணமகளின் முன்னாள் காதலன் திருமணத்துக்கு வந்து அந்தரங்க படங்களை சிலவற்றை வெளியிட்ட தாகவும் இதன் பின்னரே மோதல் இடம்பெற்றதாகவும் சில ஊடகங்கள் 
தெரிவிக்கின்றன.
எனினும் மணமகன் மற்றும் மணமகள் தரப்புகளுக்கிடையில் நிலவிய மனக்கசப்பே மோதலுக்கான காரணமென 
தெரிவிக்கப்படுகின்றது
இத் திருமணம் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்களுடையது என அத்திருமணத்தில் கலந்துகொண்டவர்களால் சமூகவலைதளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இது இலங்கைத் தமிழர்களினது எனக் கூறி காணொளியும் பதிவேற்றப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
வெள்ளி, 23 டிசம்பர், 2016

இரவு நேர கொழும்பு – யாழ்ப்பாண பயணிகளின் அவசர கவனத்திற்கு!

கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு,(Dolphins hires Van)இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் நீங்கள்? உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள்…
01.அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான்.
அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை எடுக்கும் போது இதனால் வரும் பின் விளைவுகளை கொஞ்சமும் நீங்கள் சிந்திப்பதில்லை.
02. வாகனத்தை hire பண்ணும் போது வாகன சாரதி யார் என்று பாருங்கள் அத்துடன் இரவு நேர பயணம் என்றால் ஏற்கனவே அவர் இந்த ரூட் இல் இரவில் ஓடிய அனுபவம் உள்ளவரா ? அத்துடன் தொடர்ச்சியாக ஓடுபவரா என்று பாருங்கள்.
ஏனெனில் அனுபவம் உள்ளவர் தான் நித்திரை இல்லாமல் ஓடமுடியும். இதுதான் மிகமுக்கியமான ஒன்று. வான் condition ஐ விட driver condition ஐ பார்க்க வேண்டும்.
03. வாகனத்தை hire பண்ணுவார்கள் நீங்கள் அதனால் வாகன சாரதியை உங்கள் கட்டுப்பாடிற்குள் வைத்திருக்க வேண்டும்.
Driver சொல்லுவற்கெல்லாம் தலை ஆட்ட கூடாது. உதாரணமாக அவர் அடிக்கடி phone கதைப்பவராக இருந்தால் நாம் அதை கட்டுப்படுத்த அறிவுறுத்த வேண்டும்
04.Maximum speed என்ற ஒன்று உண்டு எனவே அதை தாண்டி போகிறாரா என்று பார்க்க வேண்டும்.
05.கூடுதலாக எந்த வான் சாரதியும் இரவு நேரத்தில் தான் பயணிக்க ஆசைப்படுவான் ஏனெனில் அவனுக்கு driving செய்வது மிகவும் இலகு.
ஆனால் இங்கே தான் ஆபத்து இருக்கு, road இல் வாகன நெரிசல் இரவு நேரங்களில் மிகவும் குறைவு இதனால் இந்த சூழ்நிலை driver ஐ நித்திரை கொள்ள வழி வகுக்கும்.
06. பயணிக்கும் நேரம்.??? பொதுவாக கடுமையாக நித்திரை தூங்கும் நேரம் அதிகாலை 2 மணி தொடக்கம் 5 மணி வரை எனவே எமது பயணத்தை மாலை ஒரு 5 மணி அளவில் தொடங்கினால் 
நாம் யாழ்ப்பாணத்தை அல்லது கொழும்பை அதிகாலை 2 மணியளவில் அல்லது அதற்க்கு முன்னர் அடையலாம் அல்லது அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் தொடங்கினால் பகல் 12 மணிக்கு முதல் எமது இடத்தை
 அடையலாம்.
அடிக்கடி தேநீர் அருந்த அல்லது wash room போக என வாகனத்தை நிறுத்தி செல்லுங்கள். இதனால் விபத்துக்கள் 
குறைய வாய்ப்புண்டு.
07.அத்துடன் திடீர் திடீர் என முளைக்கும் புதிய van உரிமையாளர்களும் van சாரதிகளும். வெளிநாட்டில் இருந்து காசு வருமானால் எல்லாரும் யோசிக்கும் இலகு தொழில் இந்த வான் ஓட்டம்.
இதைவிட இது இப்பொழுது வெளிநாட்டுகாரனின் investment ஆக்கிவிட்டுது. எனவே கொஞ்சம் சிந்தித்து பயண
 முடிவுகளை எடுங்கள்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 19 டிசம்பர், 2016

அச்சமூட்டும் புயல். மாருதா’புயல்…ஆழ்வார் பேட்டை வரை நீரில் முழ்கும்..! இலங்கை இருக்காது..!

இன்னும் இரண்டு நாட்களில் புதிய புயல் கிளம்பி வருகிறது..! இது வைகைபுயல் போல காமெடிப் புயல் அல்ல. மிக மோசமான புயல் என்கிறார்கள் வானவியல் நிபுணர்கள்.
இலங்கை பஞ்சாங்கமும் கொஞ்சம் அதிர வைப்பதாகவே இருக்கிறது..! தனுஸ்கோடி முற்றிலும் அழிந்தது போல சென்னையின்  சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும்,இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு வரலாற்று ரீதியான கதையும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, ராவணன் வதம் நடந்த போது நடந்த கடும் சண்டையில் ராவணன் வெற்றி பெற முனிவர்கள் சேர்ந்து யாகம் வளர்த்தார்கள். அவர்கள் யாகம் வளர்ப்பதை அறியாத வானர சேனைகள், ராவணபடைகளை அரண்மனையை விட்டு வெளியேற்ற பெருமளவு தண்ணீரை மழையாக பெய்ய வைத்து அரண்மனைக்குள் செலுத்தினார்கள்.
இதனால் யாகம் கெட்டது. அப்போது கடும் சினம் கொண்ட முனிவர்கள் வானத்தை நோக்கி சாபம் இட்டனர். தண்ணீரே அழிந்து போ..தண்ணீரால் அழிந்து போ..என்று முனிவர்கள் சபித்தனர்.
அந்த சாபம் தான் அடிக்கடி இலங்கை சுனாமியாலும், கடும் வெள்ள சேதத்தாலும் அழிந்து பெரும் உயிர் சேதத்தை உருவாக்கி வருகிறது  என்று வரலாற்று சம்பவத்தோடு தொடர்புபடுத்தி கூறுகிறார்கள்.
இப்பொது வரும் மாருதா புயல் கடும் சீற்றத்துடன்..அசுர வேகத்தில் தாக்கும் இந்த புயலில்    இலங்கை பெருமளவு பாதிக்கும் என்று கூறுகிறார்கள்.
அதே போல சென்னையின்   கடலோரப் பகுதிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
வருண பகவனே  மக்களைக் காப்பாற்று..!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!!

மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினயா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் மற்றும் பசிபிக் சுனாமி எச்சிரிக்கை மையம் கூறியுள்ளது.
Taron, நியூ அயர்லாந்து கிழக்கு பகுதியில் 60 கி.மீ தொலைவில் 
சுமார் 75 கி.மீ ஆழத்தில்,
 உள்ளுர் நேரப்படி மாலை 8.51 மணிக்கு இந்த நிலநடுக்கும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பப்புவா நியூ கினியா, நவ்ரூ, சாலமன் தீவுகள், இந்தோனேஷியா, உட்பட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினயாவில் சில இழப்புக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்னும் சேதங்கள் குறித்த தெளிவான அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>சனி, 17 டிசம்பர், 2016

இலங்கையில் வர்தா புயலின் தாக்கம் ஆதாரம்?

இறந்த நிலையில் கடல்பாம்புகள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு கடற்கரையில் இவ்வாறு குறித்த கடல்பாம்புகள் கரை ஒதுங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வர்தா புயலின் தாக்கத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்பாம்புகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்று
 கருதப்படுகின்றது.
எனினும் இவ்வாறு ஆழ்கடல் உயிரினங்களின் இறப்புகளின் காரணமாக கரையோர மக்களை அச்சமடைந்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
திங்கள், 12 டிசம்பர், 2016

இவ்வாண்டு ஈழத்து தமிழச்சி பிரான்ஸ் நாட்டு அழகியாக தெரிவாகியுள்ளார் !

பிரான்ஸ் இல் இவ்வாண்டு நடைபெற்ற Miss Elegante France அழகி போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாட்டு அழகிகளுக்குள் Miss Elegante France அழகியாக ஈழத்து தமிழச்சி சபறினா கணேசபவன் அவர்கள் தெரிவாகியமை ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கிறது, இந்த தமிழச்சியை  
வாழ்த்துவோமே 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 10 டிசம்பர், 2016

அரச தனியார் பேருந்து சாரதிகள் இடையில் கோண்டாவில் பகுதியில் கைகலப்பு

இன்று சனிக்கிழமை கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள அரச பேருந்து தரிப்பிடத்தின் முன்னால் அரச பேருந்து சாரதிகளிட்கும் தனியார் பேருந்து சாரதிகளிட்கும் இடையில் கைகலப்பு இடம்பெறுள்ளது இதில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகள் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இதன்போது கோண்டாவில் சாலைக்கு முன்பாக தனியார் பேருந்து மறிக்கப்பட்டு அக்கரைப்பற்று
வழித்தட பேருந்து சாரதி மற்றும் கோண்டாவில் சாலையில் பணியாற்றிய சிலரால் தாக்கப்பட்டு கோண்டாவில்
சாலைக்குள் இழுததுச் செல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள தனியார் பேருந்து சாரதிகள் கோண்டாவில் சாலைக்கு
முன்பாக பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில்
 ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து எம்மிடம் பேசிய 764 வழித்தட தனியார் பேருந்து சாரதிகள் குறித்த வழித்தடத்தினூடான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்
தாக்குதல் மேற்கொண்ட நபர்களை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாதுவிடின் முழு அளவிலான பணிப்புறக்கணிப்பில்
ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் முன்னரும் இவ்வாறு முறையற்ற விதத்தில் நடைந்துகொள்கின்றபோதும்
சமரசமாக தாம் பிரச்சனைகளை பெரிதாக்காது விலகிச் செல்வதாகவும் அதன் பலாபலனை இ.போ.ச சாரதிகள் இன்று தமது சாரதியைத் தாக்கியதன்
மூலம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டனர் எனவும் இம்முறை சமரச முயற்சிக்கு தாம் தயாரில்லை எனவும் தெரிவித்த அவர்கள் கைதின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கை ஒன்றினை
மேற்கொள்ளவேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 6 டிசம்பர், 2016

நல்லடக்க இறுதி ஊர்வல காட்சிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்!முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள மெரீனா கடற்கரையிலும் பாதுகாப்பு அதிகரிப்பு -ஜெயலலிதா உடல் ஆயிரக்கணக்கானோர் நல்லடக்க த்திற்கு   ஊர்வலமாகசென்ற நிழல் படங்கள் இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 1 டிசம்பர், 2016

யாழ். குடாநாடு பலத்த சூறாவளியில் சிக்கி கொண்டுள்ளது ! (காணொளி இணைப்பு)

யாழில் இன்று அதிகாலை முதல் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகின்றது என இலங்கையின் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
சூறாவளி காரணமாகப் பல இடங்களிலும் பயன்தரு மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளன.அத்துடன் யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இலங்கையின் திருகோணமலையிலிருந்து 720 கிலோ மீற்றர் தொலைவில் வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம் யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இலங்கையின் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் இருந்து கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவுகின்றதாகத் தெரியவருகின்றது. இன்று காலை தெருவில் போகமுடியாத அளவுக்கு கடும் குளிர் நிலவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே வேளை காற்றுடன் கூடிய மழை குடாநாட்டில் பெய்து கொண்டிருப்பதாக தெரியவருகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>காணொளி இணைப்பு யாழில் இன்று அதிகாலை பலத்த சூறாவளிக் காற்று >>>

வெள்ளி, 18 நவம்பர், 2016

யாழ் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பரிசளிப்புவிழா

யாழ் புத்தூர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நேற்று வித்தியாலய மண்ட பத்தில் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.
வித்தியாலய முதல்வர் J.A தவநாயகம் தலைமையில்  நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக
 வட க்கு மாகாண உறுப்பினர் ஆனந்தி சசிதரன், சிறப்பு விருந்தினராக கோப்பாய் கோட்டக்கல்வி பணி ப்பாளர் நா.சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை 
வழங்கிவைத்தனர்.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது நிதி ஒதுக்கீட்டிலிருந்து 50,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கல்லூரி அதிபரிடம் கையளித்தார்.
வெகு சிறப்பாக நடைபெற்ற இப் பரிசளிப்பு விழாவில் பாடசாலை பழைய மாணவர்கள் உட்பட பொது மக்கள் பலரும் 
கலந்து கொண்டனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>மோட்டார் சைக்கிள் வாகன விபத்தில் ஒருவர் பரிதாபகரமாக பலி!

ஹொரண - பெல்லபிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஹொரண பிரதேசத்தில் இருந்து புளத்சிங்கள பிரதேசம் நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் வந்த வாகனம் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 13 நவம்பர், 2016

பெண் பொலிஸாரை கலைத்து கலைத்துத் தாக்கும் அதிர்ச்சிக்காணொளி,

மட்டக்களப்பில் நடு வீதியில் வைத்து கிராம சேவையாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரை தூசன வார்த்தைகளால் திட்டிய மங்களராமய விகாராதிபதி அண்மையில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிசார் பலர் முன்னிலையில் பெண் பொலிசார் ஒருவரை கலைத்துக் கலைத்து தாக்க முற்படும் காணொளி, ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழர்கள் மென்வலுவைக் கடைப்பிடிக்கவேண்டும் இல்லையெனில் கிடைக்கவிருக்கும் அரசியல் தீர்விற்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எல்லோருக்கும் வகுப்பு எடுத்துக்கொண்டுதிரியும் சூழலில் நல்லாட்சி அரசின் ஆசீர்வாதத்தோடு புத்த சிலைகள் வைக்கப்படுவதும், பொது வெளியில் இவ்வாறாக அநாகரினமாக நடந்து வன்முறையைத் தூண்டும் வகையிலுமான செயற்பாடுகளும் மறுபுறம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நல்லாட்சியால் இவற்றை வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.
காணொளி. புகைபடங்கள் -இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.