திங்கள், 31 ஜூலை, 2023

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான இரண்டு இளைஞர்கள்

போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், இன்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில்  கைது
 செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடையவராவார்.   இவருடன்  யாழ். பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் நான்கு இளைஞர்கள்  ஜேர்மனிக்கு செல்ல முயற்சித்தபோதே கைது செய்யப்பட்டுள்னர். 
இந்த இளைஞர்களால் வழங்கப்பட்ட ஆவணங்களை பரிசோதித்த  குடிவரவு மற்றும் குடியகல்வு  அதிகாரிகள், அவர்களிடம்  காணப்பட்ட  கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளனர். 

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட  இவர்கள்  மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 30 ஜூலை, 2023

நாட்டில் மின்சார சபைக்கு 5000 கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டம் நஷ்டம் ஏற்படுமாம்

இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் 5000 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என அதன் சிரேஷ்ட பொறியியலாளர்கள் 
கூறுகின்றனர்.
 இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டணம் 75% அதிகரிக்கப்பட்ட போதிலும் நஷ்டம் ஏற்படுகிறது.
 தற்போது, ​​டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, நாட்டின் தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்ய, மின்சாரம் பெறுவதால், இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது.
 இது தவிர, நிலக்கரியின் விலை மற்றும் அவற்றை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது கப்பல் தாமதக் கட்டணத்தை செலுத்த வேண்டிய தேவையும் இந்த நஷ்டம் அதிகரிக்க காரணமாக உள்ளது.
 எனினும், அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதன் மூலம், சபையை திவாலாக்கி, நிறுவனங்களை விற்பனை செய்வதே சிலரது நோக்கமாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன-
.என்பதும் குறிப்பிடத்தக்க


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 29 ஜூலை, 2023

நாட்டில் நீதி கிடைக்காது: சர்வதேச விசாரணையே வேண்டும் சிறிதரன்


 இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வாக மனிதப்புதை குழி விடயங்களுக்கு ஒரு நீதி விசாரணை வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
 கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் குருந்தூர்மலை உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நேற்று இடமபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் 
இவ்வாறு கூறியுள்ளார்.
 கொக்குத்தாெடுவாய், மண்டைதீவு மனித புதைகுழி என இன்னும் பல இடங்களிலே இராணுவ முகாம்களிலே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மனித புதைகுழிகள் என்பது இராணுவம் மற்றும் அரச படைகளால் மிகவும் வன்மமான முறையிலே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தமிழர்கள் என தெரிவித்துள்ளார்.
 இந்த மண்ணிலே நீதியற்ற மனிதர்களாக தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு தீர்வாக இவ்வாறான விடயங்களுக்கு ஒரு நீதி விசாரணை வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
 செம்மணி மனித புதைகுழியிலிருந்து மண்டைதீவு மற்றும் கொக்குதொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, மன்னாரில் இருக்கும் மனித புதைகுழி என இவ்வாறு பல இடங்களிலும் மனித புதைகுழிகள் தோண்ட தோண்ட தமிழர்களாக வந்து கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய அநியாயம் என்றும் கூறியுள்ளார்.
 தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் பிழை என கூறும் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை நாட்டின் நீதித்துறை கேள்விக்குறியே. இந்த அநியாயத்தினுடைய நீதி என்பது இலங்கையிலே கிடைக்காது என்பதனால் தான் சர்வதேச விசாரணையை கோரி போராட்டம் இடம்பெறுகின்றது என்றும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 28 ஜூலை, 2023

யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
 யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் வர்த்தக நடவடிக்கைகள் போக்குவரத்து செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
 கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணியும் இன்று வெள்ளிக்கிழமை(28) இடம்பெற அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயல்பு நிலை 
பாதிக்கப்பட்டுள்ளது.
 யாழ்.மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் 
காணப்படுகிறது.
 இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை இடம்பெற்று வருகின்ற போதும் தனியார் பேருந்து சேவைகள் 
இடம்பெறவில்லை. 
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் அங்காங்கே காணப்பட்டாலும் வழமையான நிலையுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 27 ஜூலை, 2023

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மர்ம பொருளுடன் சிக்கிய 6 பேர்

ஒரு மில்லியன் ரூபா (இலங்கை மதிப்பில் 24 கோடி) பெறுமதியான போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 30 கிலோ செயற்கை கஞ்சாவுடன் முதலில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மற்ற மூன்று சந்தேக நபர்களும் பெட்டா மற்றும் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் 100 கிலோ எடையுள்ள ‘ஐசிஇ’ போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ‘ஆம்பெடமைன்’ இருந்தது 
கண்டுபிடிக்கப்பட்டது.  
ஹாங்காங்கில் இருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமான் ஒன்றை சோதனை செய்த போது, ​​போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் செயற்கை கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர். 
விமான சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மற்ற மூன்று சந்தேக நபர்களும் 
கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேக நபர்களுக்கு எதிராக விளக்கமறியலில் வைக்க உத்தரவைப் பெற்றுள்ளனர்.
 என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

புதன், 26 ஜூலை, 2023

நாட்டிலிருந்து வெளிநாடு செல்லும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்ல விரும்பும் தாய்மாருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முக்கிய அறிவிப்பை 
வெளியிட்டுள்ளது.
 அந்த வகையில், 2 – 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடு செல்லும்போது அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் DS4 ஆவணத்தை முன்வைக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 மேலும், பாதுகாவலர்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
செவ்வாய், 25 ஜூலை, 2023

வடமராட்சியில் முச்சக்கர வண்டியும் பட்டா வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து

யாழ் வடமராட்சி பிரதேசத்தில் முச்சக்கர வண்டியும் பட்டா வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்து சம்பவம் 25-07-2023.இன்றைய தினம்  மந்திகை, மடத்தடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.எதிர் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருந்த இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி தலைகீழாக புரண்டு சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் பருத்தித்துறை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளார்.  
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திங்கள், 24 ஜூலை, 2023

மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் வெள்ளிக்கிழமை ஹர்த்தால்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும்.28-07-2023. வெள்ளிக்கிழமைபூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24)இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஹர்த்தாலுக்கான அழைப்பு 
விடுக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் அரசியல் 
கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்கவேண்டும் என்பதுடன் அன்றையதினம் வெள்ளிக்கிழமை வர்த்தகர்கள், 
விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பதுடன் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள போராட்டத்திலும் பங்கேற்கவேண்டும் என அழைப்பு 
விடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாண தலைவர்களே  கூட்டாக   அழைப்பு 
விடுத்துள்ளனர் .
அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில், மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த பகுதிக்கு அண்மையில்   ஆரம்பிக்கும் கவனயீர்ப்பு பேரணியானது முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு முன்பாக சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக  மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அங்கு  மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும்  மேற்கொள்ளப்படவுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 23 ஜூலை, 2023

யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையில்.அனுஷ்டிக்கப்பட்ட கறுப்பு யூலை நினைவேந்தல்

ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 
யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையில்.23-07-2023. இன்று மாலை இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது 
கறுப்பு யூலை நினைவேந்தல் பொதுச் சுடரினை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து ஏனையவர்களும் சுடரேற்றி
 அஞ்சலி செய்தனர்.
மேலும் நினைவேந்தல் பதாகையில் 1983 கறுப்பூயூலை தமிழினப் படுகொலையானது சிறிலங்கா அரசாங்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 
படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளையும்
 நாடு முழுவதும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் நினைவுகூறுகிறோம்
 எனவும்1948 முதல் இன்றுவரை நடைபெற்ற நடைபெறுகின்ற இன அழிப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றவாறாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா 
கஜேந்திரன் மற்றும் கட்சியின் ஊடகப் பேச்சாளர்களாக 
சட்டத்தரணி சுகாஷ், சட்டத்தரணி காண்டீபன் உட்பட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை 
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 22 ஜூலை, 2023

ஐ.நா எச்சரிக்கை தானிய ஏற்றுமதி தடையால் பல உயிரிழப்புகள் ஏற்படுமாம்

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. 
பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் போர் காரணமாக
 தடைப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் கருங்கடல் தானிய ஒப்பந்தம் செய்தது. அதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதித்தது.
இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது. இந்நிலையில், தானிய ஒப்பந்ததில் இருந்து 
ரஷியா விலகியதால் தானியங்களின் விலை உயர்வு, கோடிக்கணக்கான மக்களுக்கு பசி மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வின் அவசர கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறும்போது, "தற்போது 69 நாடுகளில் சுமார் 36 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. 
தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. பசி-பட்டினியால் வாடுவார்கள். இதன் காரணமாக பலர் இறக்கக் கூடும் என்றார்.
 போதுமான உக்ரேனிய தானியங்கள் ஏழை நாடுகளை சென்றடையவில்லை என்று ரஷியா புகார் தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகியது என்பது என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 21 ஜூலை, 2023

பிக்கு மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் ஆர்ப்பாட்டம்: பொலிஸார் நீர்தாரை பிரயோகம்


கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
 அனைத்து பல்கலைக்கழக  பிக்கு மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் 
மேற்கொண்டுள்ளனர்.
 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது, ​​கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில்
 இந்த நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனை, களனி உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு மாணவர் சேர்க்கையை விரிவுபடுத்தவும், ️️பாளி, சமஸ்கிருதம், பௌத்த தத்துவம்/ஆய்வு உள்ளிட்ட பாடங்களை வெட்டுவதை நிறுத்துங்கள் என்ற கோஷங்களை எழுப்பியவாறு பிக்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வியாழன், 20 ஜூலை, 2023

அமெரிக்காவில் கனேடியருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஏன் தெரியுமா

அமெரிக்காவில், கனடிய பிரஜை ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடிய சிறையொன்றிலிருந்து மிகவும் ஆபத்தான போதைப் பொருளை பல நாடுகளுக்கு விநியோகம் செய்துள்ளதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபேக் மாகாணத்தைச் சேர்ந்த சந்தேக நபர், பென்டய்ல் என்ற போதை மருந்து விநியோகம் செய்தார் என 
தெரிவிக்கப்படுகிறது.
மொன்றியலைச் சேர்ந்த 43 வயதான் சான் நக்யுயின் என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2021ம் ஆண்டு நக்யுயின் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
போதை மருந்து விநியோகம் மற்றும் ணச் சலவையில் ஈடுபட்டதாக நக்யுயின் ஒப்புக்கொண்டுள்ளார்.இனதனால் அமெரிக்க நீதிமன்றம் 22 ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

புதன், 19 ஜூலை, 2023

முதன்முறையாக மீன்பிடிக்கச் சென்ற இளைஞகளை பகிடிவதை செய்த 7 மீனவர்கள் கைது

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பலநாள் மீன்பிடி படகில், முதன்முறையாக மீன்பிடிக்கச் சென்ற இளைஞருக்கு பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் 7 மீனவர்கள் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக குறித்த மீன்பிடி படகு சென்றிருந்தபோது, குறித்த இளைஞரை கடலில் தள்ளிவிட்டு, சக மீனவர்கள் அவரை துன்புறுத்தியமை தொடர்பில் 
முறைப்பாடு கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி, 
பேருவளை – அம்பேபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த 7 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 18 ஜூலை, 2023

இலங்கை களனி பாலத்தில் 28 கோடி ரூபா பெறுமதியான இரும்பு ஆணிகள் திருட் டு

களனி பாலத்தில் சுமார் 28 கோடி ரூபா பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டு அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் டொக்டர் பந்துல குணவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 பாராளுமன்ற அமர்வில் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் கேள்வி எழுப்பப்பட்டது.
 அதற்கு பதிலளித்த அமைச்சர் குணவர்தன, சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கணிசமான இழப்பு தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 
தெரிவித்தார்.
 அதன்பிறகு, பாலம் மேலும் சிதைவடையாமல் பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 நிலைமையின் தீவிரத்தன்மையை சுட்டிக்காட்டிய அமைச்சர் குணவர்தன, புகையிரதப் பாதையில் இருந்து அகற்றப்பட்ட சிறிய இரும்புத் துண்டானது கூட பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
 நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதுபோன்ற திருட்டு சம்பவங்களால், ரயில்வே உள்கட்டமைப்பு மட்டுமின்றி, ரயில்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் 
வலியுறுத்தினார்.
 குற்றச்சாட்டின் அளவு குறித்து உரையாற்றிய தயாசிறி ஜயசேகர, அகற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆணிகளின் எண்ணிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.
 280 மில்லியன் ரூபா பெறுமதி தோராயமாக 77 இலட்சம் கிலோகிராம் இரும்பாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 உண்மைப் புள்ளி விவரங்கள் மற்றும் திருடினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விரிவான அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்பதாக அமைச்சர் குணவர்தன நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.
 நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற திருட்டுகளைத் தடுக்கவும், முக்கியமான ரயில்வே உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும் ஒரு சிறப்பு வேலைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 17 ஜூலை, 2023

நாட்டில் மருத்துவமனை இறப்புகளை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்


சுகாதாரத்துறைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்டுள்ள மரணங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை
 சுகாதார அமைச்சர் அறிவிக்கவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்த
 நிபுணர் குழுவில், மருத்துவம், செவிலியர், ஒவ்வாமை 
ஆகிய இரண்டிலும் விரிவான அறிவும் புரிதலும் உள்ள பேராசிரியர்கள் உட்பட 5 பேர் இடம் பெறுவார்கள் என்றும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்
.மேலும், அரச மருத்துவமனைகளில் நடந்த அனைத்து சர்ச்சைக்குரிய மரணங்கள் குறித்தும் முழு விசாரணை நடத்தி அமைச்சரிடம் அறிக்கை சமர்பிப்போம். கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுகாதாரப் பணிப்பாளர் மேலும், இந்தக் குழுவினால் வழங்கப்படும் 
அறிக்கை நாட்டில் உள்ள வைத்தியசாலை அமைப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கு உதவிகரமாக
 இருக்கும் எனவும் தெரிவித்தார்.சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே சுகாதாரத்துறையின் 
எதிர்பார்ப்பு என அவர் வலியுறுத்தியுள்ளார்.சில மரணங்கள் சந்தேகத்திற்கிடமானவை என ஊடகங்களில் பரப்பப்படும் 
செய்திகளால், மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வரத் தயங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் சுகாதாரம் சீர்குலைந்திருக்கவில்லை எனவும் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.பேராதனை போதனா வைத்தியசாலை, 
பேராதனை சிறுவர் வைத்தியசாலை மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையை அவதானித்ததன் பின்னர் பெறப்பட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை தமக்கு வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது        

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 16 ஜூலை, 2023

யாழ் காங்கேசந்துறைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் சேவை இயக்குவதற்கு நடவடிக்கை

யாழ் காங்கேசந்துறை மற்றும்  கொழும்புகும்  இடையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் கருத்தின் அடிப்படையில் இந்த சொகுசு ரயில் சேவையில் முன்னெடடுக்கப்பட்டுள்ள ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.
இரவு 10 மணியளவில் இந்த சொகுசு ரயிலை இயக்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் இந்த ரயிலுக்கான டிக்கெட்டின் விலை சுமார் 4000 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு ரயில்வேயின் ஒரு பகுதி நவீனமயப்படுத்தப்பட்டதன் பின்னர் கோட்டைக்கும் காங்கேசந்துறைக்கும் இடையில் தினமும் ஆறு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் இடிபோலகே தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 15 ஜூலை, 2023

நீதிமன்றம் பிரித்தானியாவில் 2 இந்தியர்களுக்கு விடுத்த கடுமையான தண்டனை


இந்திய அகதிகள் 3 பேரை காருக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
பிரித்தானியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி 
சேர்ந்த 48 வயதான பல்விந்தர் சிங் புல் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தென்கிழக்கு பிரித்தானியாவில் உள்ள எல்லையோர நகரமான டோவரில் காரில் சென்று கொண்டிருந்தபோது எல்லை பாதுகாப்பு படையினர் 
தடுத்து நிறுத்தினர்.  
தொடர்ந்து, அவரது காரை சோதனை செய்தபோது, காருக்குள் இந்திய அகதிகள் 3 பேரை மறைத்து வைத்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பல்விந்தர் சிங்கை பொலிஸார் கைது செய்தனர்.இச் சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் அதே டோவர் நகரில் மற்றொரு இந்திய வம்சாவளியான ஹர்ஜித் சிங் தலிவால் என்பவர் 4 இந்திய அகதிகளை காரில் மறைத்து கடத்தி வந்தபோது எல்லை பாதுகாப்பு படையிடம் சிக்கினார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.  
கைது செய்யப்பட்டவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடந்தது. அப்போது பல்விந்தர் சிங் மற்றும் ஹர்ஜித் சிங் ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்புளித்தார்.  
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 14 ஜூலை, 2023

இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்விக்காக இந்தியாவிடம் உதவி கோரும் மனோ கணேஷன்

கொழும்பு அவிசாவளை முதல் நுவரெலியா வரை நாடெங்கும் பரந்து வாழும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஆகியவை தொடர்பில், 
இந்திய மத்திய அரசு, உதவிட உத்தரவாதம் தர வேண்டும்
. மலையகம் 200 நினைவுறுத்தல் தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு இந்த அடிப்படைகளில் அமைய வேண்டும். இவ்வருட 
ஆரம்பத்திலேயே
 நாம் இந்திய தூதுவர் கோபால் பாகலேயிடம், மலையகம் 200 நினைவுறுத்தல் நிகழ்வுகள் உரையாடி தொடர்பில் எழுத்து மூல கோரிக்கை 
விடுத்துள்ளோம்.
இலங்கை வந்து சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடமும் உரையாடியுள்ளோம். இந்நிலையில், அடுத்தவாரம், இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இவை தொடர்பில்
 இந்திய பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ண உத்தரவாதங்கள் அளிப்பார் என நாம் நம்புகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ மேலும் கூறியதாவது;
கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில், இந்திய மத்திய அரசை நாம் நம்பி உள்ளோம். குறிப்பாக, நாடெங்கும் பரந்து வாழும்,
 இந்திய வம்சாவளி மலையக தமிழர் பிள்ளைகளின் 
பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், 
தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. இந்த பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிக்க, 
விசேட வேலைத்திட்டம் தேவை. அதேபோல், தேயிலை, இறப்பர் மலைகளில் அல்லலுறும் எங்கள் பெண்களின் வெளிநாட்டு, உள்நாட்டு வேலை வாய்ப்ப்புகளை உறுதிப்படுத்த தாதியர் பயிற்சி கல்லூரி 
அவசியம். உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியை அடிப்படையாக கொண்டு ஒரு முதற்கட்ட பல்கலைக்கழக கல்லூரி 
ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இவை அனைத்தும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கான விசேட சமூக அபிவிருத்தி திட்டங்களாக முன்னேடுக்கப்பட வேண்டும். மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, தென் மாகாணங்களில் வாழும் நமது 
மக்கள் தொடர்பில் தமக்குள்ள தார்மீக கடப்பாட்டை இந்திய மத்திய அரசு நிறைவேற்றும் என நாம் நம்புகிறோம்.அதேவேளை, 
இலங்கையில் மலையக தமிழரது தேசிய அரசியல் அபிலாஷை கோரிக்கைகள் தொடர்பில் நாம் உள்நாட்டில் இலங்கை அரசுடன் பேசுவோம். அதிகாரபூர்வ அரசாங்க தரப்பு பேச்சுவார்த்தை குழுவை முறைப்படி
 அமைத்து, அத்தகைய பேச்சுகளை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் உறுதி அளித்துள்ளார். அந்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றுவார் என நாம் நம்புகிறோம்.
என்பதும் குறிப்பிடத்தக்கது      

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 13 ஜூலை, 2023

சிங்கப்பூரில் 25000க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கைப்பேசிகளை திருடிய வெளிநாட்டு ஊழியர்

சிங்கப்பூரில் சுமார் 25,000 க்கும் மேற்பட்ட iPhone கைப்பேசிகளை திருடிய வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லிம் ஜென் ஹீ என்ற முன்னாள் உதவி செயல்பாட்டு மேலாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் அப்போது பணிபுரிந்த “பெகாட்ரான் சர்வீஸ் சிங்கப்பூர்” நிறுவனத்துக்கு அவர் செய்த திருட்டு செயல் காரணமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் இழப்பு ஏற்பட்டது.
ஆகவே அந்நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி Apple நிறுவனத்திற்கு இழப்பீடு தொகையை கொடுக்க வேண்டியிருந்தது. குற்றங்கள் நடந்த நேரத்தில், சிங்கப்பூர் மற்றும் ஆசியாவின் பிற நாடுகளில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் பழுதுபார்க்கும் சேவைகளை பெகாட்ரான் நிறுவனம்
 வழங்கி வந்தது.
 51 வயதுமிக்க மலேசியரான லிம், இரு நம்பிக்கை துரோக குற்றச்சாட்டுகளுக்காக கடந்த மே மாதம் குற்றம் சாட்டப்பட்டார். இன்னொருவருடன் சேர்ந்துகொண்டு அவர் அந்த வேலையை செய்ததாக கூறப்படுகின்றது.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 12 ஜூலை, 2023

யாழ் மண்டைதீவு கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் 
அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்றைய தினம் புதன்கிழமை அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக 
நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது
இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் ஒன்று கூடியவர்கள்
 நகர்ந்து சென்று வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.
அதனை அடுத்து அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டன.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

Blogger இயக்குவது.