சனி, 30 ஜனவரி, 2021

தையிட்டியில் தனியார் காணியில் புத்த விகாரை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

யாழ்-தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்க இராணுவ தளபதி சவேந்திர சில்வாவினால் 30-01-2021.இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பிரதேச ஒருங்கிணைப்பு குழு
 கூட்டத்தில் புத்த விகாரை
 அமைக்க எதிர்ப்பு வெளியிடப்பட்டு, நிரந்தரக் கட்டடம் அமைக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே
புத்த விகாரை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>






























வெள்ளி, 29 ஜனவரி, 2021

மானிப்பாயில் முச்சக்கர வண்டியில் நடமாடும் விபச்சாரம். நால்வர் கைது.


யாழ்  மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவர் அடங்கலாக கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், 20 வயது இளம் பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.முச்சக்கர 
வண்டியில் நடமாடும் கலாசார 
சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உட்பட நால்வர் மானிப்பாய் பொலிஸாரால்.27-01-2021. அன்று கைது செய்யப்பட்டனர்.45 வயதுடைய சுதுமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணை வைத்து இந்த 
கலாசார சீரழிவை பணத்துக்காக முன்னெடுத்துள்ளார்.அவர்களுக்கு உடந்தையாக தெல்லிப்பழையைச் சேர்ந்த 
முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் செயற்பட்டுள்ளனர். அந்த நான்கு 
பேரும் பொலிஸாரால் கைது 
செய்யப்பட்டனர்.கலாசார சீரழிவு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்திய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அந்தக் கும்பலைச் சேர்ந்த நால்வரையும் கைது 
செய்திருந்தார்.சந்தேக நபர்கள் நால்வரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர். அதன்போதே 
நால்வரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.இதேவேளை, கைது 
செய்யப்பட்ட சுதுமலையைச் சேர்ந்த பெண் 15 வயது சிறுமியை பணத்துக்காக கலாசார சீரழிவில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் 3 மாதங்கள் விளக்கமறியலில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்று பொலிஸார் 
தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 28 ஜனவரி, 2021

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு - கிழக்கில்

சிறீலங்காவின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடித்து கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு 
தவிர்ப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம் திகதிவரை நடத்த போவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் 
அறிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

சிறீலங்காப் கடற்படையினரால் இந்திய - சிறீலங்கா கடல் எல்லையில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு 27.01.2021. அன்று.மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கோப்பாவெளியில் இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவர்கள் நான்கு பேருக்கும் மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அங்கத்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரைகளும்
 நிகழ்த்தப்பட்டன.
இங்கு உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தேசிய அமைப்பாளர் த. சுரேஷ் கருத்து தெரிவிக்கையில்.
இந்திய - சிறீலங்கா எல்லையில் நடந்த துன்பியல் சம்பவத்தில் எமது தொப்புள் கொடி உறவுகளான நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்தமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம்.
எம்மை பொறுத்தமட்டில்  இதை ஒரு படுகொலையாகவே கருதுகின்றோம். ஏனென்றால் படகு விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
படகு விபத்துக்குள்ளாகி அந்த படகு கடலில் மூழ்கும் வரை சிறீலங்கா கடற்படை என்ன செய்து கொண்டு இருந்தது. கடற்படை மீனவர்களை காப்பாற்ற முடியாத ஒரு திறமையற்ற
 கடற்படையாக இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. எனவே இது தமிழக மீனவர்கள் தமிழ் மீனவர்கள் என்ற காரணத்திற்காகவே இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எனவே இந்த மீனவர்கள் உயிரிழப்புக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறினார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>







பொதுமக்கள் கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 34 ஆவது ஆண்டு நினைவு தினம்

கொக்கட்டிச்சோலையின் 34 வது ஆண்டு படுகொலை தினம் மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள “கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி” முற்றத்தில் இன்று வியாழக்கிழமை (28)  காவல்துறையினரின் தடைகளையும் மீறி இடம்பெற்றது.
இதன்போது நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கம் செலுத்தி உயிரிழந்தவர்களை
 நினைவு கூர்ந்தனர்.
1987ஆம் ஆண்டு, முதலைக்குடா இறால் வளர்ப்புப் பண்ணையில் வேலைசெய்த முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு, அம்பிளாந்துறை, கற்சேனை, பட்டிப்பளை, தாந்தாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 65 மக்கள் படுகொலை 
செய்யப்பட்டனர்.
இப்படுகொலையை விசாரணை செய்வதற்கென அப்போதைய சிறீலங்கா அதிபரான ஜே.ஆர் ஜெயவர்த்தன சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நீதியையையும் பெற்றுக் கொடுக்கவில்லை. 
குறித்த படுகொலையின் போது உயிரிழந்த தமிழர்களை நினைவு கூரும் வண்ணமே ‘கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2000ஆம் ஆண்டு மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டமை 
குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என மண்முனை தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் தி.புஸ்பலிங்கத்திற்கு  காவல்துறையினர் தடைவிதித்ததன் காரணமாக தவிசாளர் இந்நிகழ்வில் கலந்து 
கொண்டிருக்கவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினளர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபையின்
 முன்னாள் பிரதித் தவிசாளர், இ.பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், வடகிழக்கு வாலிபர் முன்னணித் தலைவர், கி.சேயோன், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர், லோ.தீபாகரன், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து 
கொண்டிருந்தனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>









புதன், 27 ஜனவரி, 2021

புதிய பேரூந்து நிலையத்தில் முதன்மை மொழியாக மாற்றம் பெற்ற சிங்களம்

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேரூந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக 
27-01-2021.இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னைய நல்லாட்சி அரசின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்,நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர பேரூந்து நிலைய 
திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.இன்றைய நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நகர அபிவிருத்தி 
அதிகாரசபையின் அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.  122மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கடந்த நல்லாட்சி 
அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் குறித்த பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையத்தின் அறிவிப்பு பலகைகளில் சிங்களம் முதன்மை மொழியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







செவ்வாய், 26 ஜனவரி, 2021

இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கைக்கு இன்று பதில்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கான பதிலை-26-01-2021. இன்று செவ்வாய்க்கிழமை மாலை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தமிழ் ஊடகமொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அந்த அறிக்கையில் காணப்படும் தரவுகள், குறைபாடுகள், பிழைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது தனித்தனியாக 
ஆராயப்படுகின்றது.
மிக ஆழமாக ஆராய்ந்ததன் பின்னர் அந்த அறிக்கைக்கான பதிலை.26-01-2021. இன்று மாலை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இலங்கை அரசினால் சமர்ப்பிக்கப்படும் பதில் அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் ஏற்றுக்கொள்வார் என தாம் நம்புவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில், இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார 
வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் உள்ளிட்ட காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இராணுவத்திற்கு கிராமத்தில் இருந்தும் குறைந்தபட்சம் மூன்று இளைஞர்கள்

நாடளாவிய ரீதியில் இருக்கின்ற சகல பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கும் பிரதேச செயலக மட்டத்திலிருந்து ஆட்சேர்ப்பு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி, - மார்ச் மாதம் வரையில் இந்த ஆட்சேர்ப்பு திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், வர்த்தக மற்றும் பொதுச்சேவை பிரிவுகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பவே மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மேற்படி பிரிவுகளில் இணைந்துக்கொள்ள விரும்பும் தேக ஆரோக்கியமான ஆற்றல் மிக்க இளைஞர் பாதுகாப்பு படைத் தலைமையகங்களுடன் தொடர்புகொள்ள முடியும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி, மத்திய, கிழக்கு பகுதிகளில் இருக்கின்ற பாதுகாப்பு படைத் தலைமையக மட்டங்களில் கடந்த 20, 22,-31 ஆம் திகதிகளில் ஆட்சேர்ப்பு பணிகளுக்கான தொடர் விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் மேற்படி
 ஒவ்வொரு பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் பிரிகேட் படைப் பிரிவு தளபதியின் தலைமையில் பிரிகேடியர் பொது பதவி நிலை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்பிரகாரம், பாதுகாப்பு பதவி நிலை 
பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ், இராணுவ 
ஆட்சேர்ப்பு பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏ.ஏ.டி.என்.எஸ்.பி. துனுவில மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பதவி நிலை அதிகாரி - 1 லெப்டினன் கேணல் எம்.எல்.டி.மொல்லிகொட ஆகியோரின் தலைமையில் ஆட்சேர்ப்பு பணிகள் இடம்பெற உள்ள நிலையில் ஒவ்வொரு 
கிராமத்தில் இருந்தும் குறைந்தபட்சம் மூன்று இளைஞர்கள் இராணுவத்திற்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
எனவே, இராணுவத்தில் இணைந்துகொள்ள விரும்புவோர் அருகிலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தினை தொடர்பு கொண்டு வயதெல்லை,கல்வித் தகைமை என்பவற்றை தெரியப்படுத்தி, சம்பள விவரம், சலுகைக் கொடுப்பனவுகள் மருத்துவ சலுகைகள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும்.
அல்லது அருகிலுள்ள இராணுவ படைப் பிரிவிற்கு நேரடியாக சென்று அங்கு ஆட்சேர்ப்புக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளை சந்தித்து மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளவும் முடியும்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>


ஞாயிறு, 24 ஜனவரி, 2021

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுக.ள்24-01-2021. இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு  ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. 
 கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ். ஊடக அமையம், தெற்கு ஊடக அமையம் மற்றும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்  என்னும் தொனிப்பொருளில் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.
 இதன்போது ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர்மலை அணிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நினைவுரைகளும் 
இடம்பெற்றது. 
 கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ரீ. தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள்
 நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபை 
முதல்வர் தி. சரவணபவன், பிரதி 
முதல்வர் க.சத்தியசீலன், தமிழ் தேசிய மக்கள் முன்னைனியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் 
பெடி கமகே உள்ளிட்ட சகோதர இன ஊடகவியலாளர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பி. இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து
கொண்டிருந்தனர். 
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>





சனி, 23 ஜனவரி, 2021

அத்தியாவசிய பொருட்களுக்கான நிலையான விலைகள் பெப்ரவரி முதல்

 நாட்டில் நேரடி இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெப்ரவரி முதல் அமலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கான நிலையான விலையை பராமரிக்க 
ஒப்புக் கொண்டுள்ளனர் என்று வர்த்தக அமைச்சு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடி இறக்குமதியாளர்களுடன் வர்த்தக அமைச்சில் நேற்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக மேற்கொள்ளப்படும் செயல்முறைக்கு பதிலாக, CWE மற்றும் கூட்டுறவு விற்பனை
 நிலையங்களுக்கு ஒரு குறிப்பிட்ட முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை 
வாங்குவதற்கான திட்டங்கள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பதை அமைச்சர் இக்கலந்துரையாடலின்
 போது விளக்கினார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பெப்ரவரி மாதம் யாழ் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம், 25ஆம் திகதிகளில் கொவிட்-19 நிலைமைகளுக்கு ஏற்ப புதிய 
ஒழுங்குடன் இடம்பெறவுள்ளது.
வழமையாக 1,500 மாணவர்கள் வரையில் தான் பட்டமளிப்பு
 விழாவில் பட்டம் பெறுவார்கள். ஆனால் இம்முறை 
அதற்கு முற்றிலும் மாறாக 2,500 மாணவர்கள் வரையில் பட்டம் பெறவுள்ளனர். கொரோனாப் பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிப்பது மிகவும் சிரமமானது.
எனினும் மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு அமையவே புதிய ஒழுங்கு நடைமுறை களுடன் இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.
வழமையாகப் பட்டமளிப்பு விழா இடம்பெறும் கைலாசபதி அரங்கில் இத்தடவை இடம்பெறாது. மாறாக, புதிதாக அமைக் கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டரங்கில் தான் 35ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் கொரோனா தொற்று நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு 
எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வழமையாக மூன்று நாள்கள் இடம்பெறுகின்ற பட்டமளிப்பு விழா, இம்முறை 02 நாள்களில் நாள் ஒன்றுக்கு 03அமர்வுகள் வீதம் 06 அமர்வுகளில் நடத்தி முடிக்கப்படவுள்ளது.
மேலும் பட்டமளிப்பு விழா மண்டபம் மாற்றப்பட்டுள்
ளமையால், மண்டபத்துக்கான நுழைவாயிலாக மருத்துவப் பீடத்தின் நுழைவாயில் பயன்படுத்தப்படும் என மேலும் 
தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை முடிவுக்கு ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், தனது 
தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றில்  மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு 
விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு வாதிட்டது. நேற்றைய விசாரணையின்போது, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் 
தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் உத்தரவு
 பிறப்பித்தனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான 
பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கினர்.  வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு 
ஒத்திவைத்தனர்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆளுநர் இந்த பரிந்துரை மீது முடிவு எடுக்கவில்லை என்பது
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ பிரான்ஸ் செல்வாக்கை பயன்படுத்தவேண்டும்

இலங்கையில் தமிழ்மக்களிற்கு எதிரான அடக்குமுறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கு பிரான்ஸ் தனது அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தவேண்டும் என பிரான்சின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனிற்க்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக 
வாழ்வதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புசபை உறுப்பினர் என்ற அடிப்படையில் பிரான்ஸ் தனது அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் 
விடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 22 ஜனவரி, 2021

நாட்டில் சிறைக்கைதிகளுக்கு புதிய நடைமுறை?

நாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடாக தமது உறவினர்களுடன் உரையாடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே 
கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைகளுக்கு வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்
 கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மீனவர்கள் தாக்கப்பட் டமைக்கு ஜனவரி 25 இல் கண்டன ஆர்ப்பாட்டம்

கடந்த ஜனவரி 18ஆம் திகதி, நமது கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகிய 4 மீனவர்கள் சென்ற படகு மீது,சிறிலங்கா  கடற்படை வேகமாக வந்து மோதி நொறுக்கி மூழ்கடித்தது. உயிருக்குத் தத்தளித்த மீனவர்களை, மற்ற மீனவர்கள் வந்து காப்பாற்ற விடாமல் தாக்கி விரட்டி அடித்தது. கடலில் தத்தளித்த மீனவர்கள் மீது பெட்ரோலை 
ஊற்றித் தீ வைத்தனர்.
இறந்த 4 மீனவர்களின் உடல்கள் தற்போது இலங்கை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை உடனே தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து இங்கே உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும்.
இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு, இந்திய அரசு கொடுத்து வருகின்ற ஊக்கத்தினால் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து வேட்டையாடிக்
 கொன்று வருகின்றது.
கடந்த 35 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, சிங்களக் கடற்படை கொன்று இருக்கின்றது.
இந்திய அரசைப் பற்றிய அச்சமோ கவலையோ துளியளவும் சிங்கள 
அரசுக்கு கிடையாது.
சிங்கள இனவெறி அரசையும், அவர்களை ஊக்குவித்து வருகின்ற இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான நரேந்திர மோடி அரசையும் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு ஜனவரி 25 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் மாபெரும் கண்டன 
ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தோழமைக் கட்சித் தலைவர்களும்,தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பெருமளவில் திரண்டு வந்து கலந்துகொள்ள வேண்டும் என  வைகோ கேட்டுக் கொள்கின்றர் 
.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 21 ஜனவரி, 2021

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கனடா பிரம்டனில் அமைக்கப்டும்

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு;ள்ளது.
பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டவேளை 75000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என பற்றிக் பிரவுண் 
தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை இலங்கைஅரசாங்கத்தின் கலாச்சார இனப்படுகொலையின் ஒரு தொடர்ச்சி என தெரிவித்துள்ள அவர் எவரும் உயிரிழக்கவில்லை என காண்பிப்பதற்கும் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கும் இலங்கை அரசாங்கம் முயல்கி;ன்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் சொந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு பிரம்டன் மாநகர சபை தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை இலங்கைஅரசாங்கம் தனது இரத்தக்கரை படிந்த வரலாற்றை வெள்ளையடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை நாங்கள் கனடாவி;ல் அதற்கு எதிர்மாறானதை செய்வோம் எனவும் 
குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் தமிழர் இனப்படுகொலையை மறக்கப்போவதில்லை பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் நினைவில் வைத்திருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 18 ஜனவரி, 2021

குருந்தூர் மலையில் தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தர் சிலை வைத்து வழிபாடு

முல்லைதீவு குருந்தூர் மலை,ஆதி சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலப்பரப்பில் தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 18-01-2021.இன்று புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.17-01-2021.அன்றய றைய தினம் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருவதாக புகார்கள் 
எழுந்திருந்தன.
படையிரின் ஏற்பாட்டில் குருந்தூர் மலையில் இன்று இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க பிரசன்னத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தர் சிலை நிறுவப்பட்டு
 வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.17-01-2021.அன்றய தினம் படையினரது ஏற்பாட்டில் ஆலய சூழல் துப்புரவு செய்யப்பட்டிருந்தது.ஏற்கனவே அப்பகுதியில் வழிபாடு தவிர்ந்த கட்டுமானப்பணிகள் எதனையும் முன்னெடுக்க கூடாதென முல்லைதீவு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
குருந்தூர் மலையில் கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் பெயர்க்கப்பட்டு புத்தர் சிலை ஆக்கிரமிப்பு

நிலாவரை.கொம் செய்திகள் >>>



யாழ் மண்டைதீவில் காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்

யாழ் மண்டைதீவு பிரதேசத்தில் வெலிசுமண கடற்படை முகாமுக்கு அருகில் சட்டவிரோதமான காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் இணைந்து 18-01-2021.இன்றுபோராட்டம் மேற்கொண்டுள்ளனர்.கடற்படையினருக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்குவதற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தயாரில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்
 தெரிவித்தார்.
18-01-2021.இன்று மண்டதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனை கண்டித்து பொதுமக்களும் தமிழ்அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் 
ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது 29 குடும்பங்களை சேர்ந்த மக்களும் தங்களின் சொந்த நிலங்களை இழக்க தயாரில்லை. மீண்டும் மீண்டும் மக்களை குழப்பும் விதத்தில் காணி திணைக்களம் நடந்துகொள்கின்றது.
பிரதேச செயலாளர் இந்த பிரதேசத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் அவர்களிற்கு இதனை 
தெரிவிக்கவேண்டும்.
மீண்டும் மீண்டும் நிலங்களை அளப்பதற்கு அனுப்புகின்றனர் ஆற்றில் ஒடும் நீர் நித்திரையா முழிப்பா என பார்ப்பதற்கு கொள்ளி வைத்து பார்ப்பது போல காணித்திணைக்களம் செயற்படுகின்றது,
இது மக்களை குழப்புகின்ற முயற்சி மக்களிற்கு இதில் விருப்பமில்லை என காணித்திணைக்களத்திற்கும் அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும்.
மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை அரசாஙகம் எடுக்கவில்லை,காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் தான் அலுவல்கள் இடம்பெறுகின்றன
காணித்திணைக்களத்திடம் இந்த நோக்கத்தை கைவிடுமாறு பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும்,வாழ்க்கையில் கடற்படையினருக்கு காணி கொடுப்பதற்கு ஒருபோதும் மக்கள் இணங்கமாட்டார்கள் இந்த மக்களும் தங்க
ள் காணிகளை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என
 அவர் தெரிவித்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




Blogger இயக்குவது.