வியாழன், 30 நவம்பர், 2023

கொரியாவில் நாய் இறைச்சி தடைக்கு எதிராக பண்ணையாளர்கள் போராட்டம்

தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதை கண்டித்து நாய் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு
 வருகின்றனர்.
தென் கொரியாவில் நாய் இறைச்சியை அந்நாட்டு மக்கள் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். 
இந்நிலையில் நாய்க்கறி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதை பரிசீலித்த அந்நாட்டு அரசு கடந்த
 செப்டம்பரில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டம் 
இயற்ற பரிசீலித்தது. 
பின்னர் நாய் இறைச்சிக்கு தடைவிதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுதும் நாய் பண்ணையாளர்கள், நாய் இறைச்சி பிரியர்கள் அரசுக்கெதிராக போராட்டத்தில் இறங்கி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக 
அந்த நாட்டில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 29 நவம்பர், 2023

யாழ் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி அபகரிக்கப்படும் அபாயம்

யாழ் மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்ட அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக
 ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் 
தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார்.
“அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி தொடர்பில் அண்மையில் பொது அமைப்புகளுடன் சங்கானை பிரதேச செயலாளர் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தினார்.
அதன் போது, குறித்த பகுதி மக்கள் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு 
திணைக்களத்தின் 
வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்வதை ஏற்றுக்கொள்ளவில்லை.
கரையோர பகுதி மக்களின் வாழ்வாதரம் கடற்கரையை நம்பியே காணப்படுகின்றது. மாட்டுவண்டி சவாரித்திடல், சுடுகாடுகள், விவசாய நிலங்கள் காணப்படுகின்றன. 
கவே, வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் முன்மொழிவை முற்றிலும் எதிர்க்கிறேன். இதேவேளை, குறித்த பகுதியை வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கினால் விகாரைகள், சிங்கள 
குடியேற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் 
சந்தேகிக்கின்றனர்.
எனவே,யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் குறித்த முன்மொழிவை நிராகரித்து வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். இல்லையேல் இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
செவ்வாய், 28 நவம்பர், 2023

தென் கொரியாவில் கவிதை எழுதியதற்காக சிறைத் தண்டனை விதிப்பு

வடகொரியாவைப் புகழ்ந்து கவிதை எழுதியதற்காக தென் கொரியாவில் 68 வயது நபர் ஒருவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் அந்த நபருக்கு சிறைத்தண்டனை விதித்தது, 
இது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில்வழங்கப்பட்டது. “ஒருமைப்பாட்டின் வழிமுறகள்” 
என்ற தலைப்பில் கவிதை 2016 இல் வடக்கின் மாநில 
ஊடகங்களில் 
மேலும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களில் ஒருவர். பெயர் குறிப்பிடுவது போல, கவிதை இரண்டு கொரியாக்களை ஒன்றிணைக்க வாதிடுகிறது. வடகொரிய பாணி சோசலிச அமைப்பில் 
இரு கொரியாக்களும் ஒன்றிணைந்தால் இலவச வீடு, 
இலவச மருத்துவம், இலவசக் கல்வி கிடைக்கும் என்று அந்தக் கவிதையில் நாயகன் கூறியுள்ளார்.
அந்த நபர் முன்னர் ஒரு தனி சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு 10 மாதங்கள் சிறையில் இருந்தார். 2013 ஆம் ஆண்டில், அவர் வட கொரியாவின் இராணுவத்தைப் புகழ்ந்து ஆன்லைன் கருத்துகளையும் வெளியிட்டார்,
 மேலும் அடுத்த ஆண்டுகளில் தென் கொரிய வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்களில் அரசுக்கு எதிரான உள்ளடக்கத்தை தொடர்ந்து வெளியிட்டார்.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 27 நவம்பர், 2023

நாட்டில் வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் மக்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விடயத்தை 
குறிப்பிட்டுள்ளார். 
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எங்களுடைய வரைபடத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகள் 
இருந்தால் அதனை அடையாளப்படுத்த நடவடிக்கை 
எடுத்துள்ளோம்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் படி நான் சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய அந்த படங்களை மக்களுக்கே மீள 
வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கமைய, 
எனது அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவசாரிகள் திணைக்களத்தின் செயலாளர் நாயகம் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.
மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ள இவர்கள் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடங்கள் எவை என்பது குறித்து முழுமையான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர். அந்த தகவல்களுக்கு அமைய இறுதி அறிக்கையும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஜனாதிபதி செயலாளரின் தலையிலான குழுவிடம் சமர்ப்பித்து, அதனூடாக காணி ஆணையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பின்னர் அந்த காணிகளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
இதனைத் தொடர்ந்து உரிய காணியை, காணி உறுதி பத்திரத்துடன் மக்களிடம் வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 26 நவம்பர், 2023

நாட்டில் மருந்துகள் உள்ளிட்ட ஆய்வக பொருட்கள் பாவனையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

நாட்டில் 2022ஆம் ஆண்டு அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவப் பொருட்களில் 349 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வுக்கூடப் பொருட்கள் பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையின் பிரகாரம், இந்த விடயங்கள்
 தெரியவந்துள்ளன. 
இதன்படி  உரிய மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வகப் பொருட்கள் செயலிழந்ததன் காரணமாக பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மேலும், கடந்த வருடத்தில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான
 மருந்துகளின் பாவனை தோல்வியின் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வழங்குவதற்கு முன், அவற்றின் நிலையைப் பரிசோதிக்கும் திறன் மருத்துவ வழங்கல் 
துறைக்கு இல்லை என்றும், அதனால் மருந்துகள் பழுதடைந்ததாகத் தெரிவிக்கப்படும் நேரத்தில் நோயாளிகள் பெரும்பாலான 
மருந்துகளை ஏற்கனவே பயன்படுத்தியிருப்பதும் தணிக்கையில் தெரியவந்துள்ளது. . 
இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், சுகாதாரத் துறையை நடத்துவதில் அத்தியாவசிய பதவிகளில் 1,331 மருத்துவ அதிகாரிகளின் வெற்றிடங்கள் இருப்பதாக கணக்காய்வாளர் திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
மேலும், 77 பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், 1,759 செவிலியர்கள், 275 செவிலியர்கள், 136 மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், 68 தொழில் சிகிச்சையாளர்கள், 126 மருந்தாளுனர்கள் மற்றும் 270 ஆடிட்டர்கள் காலியாக இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 25 நவம்பர், 2023

கொழும்பு நோக்கி மாத்தறையில் இருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியது

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று இரத்மலானை கொலுமடம சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 
சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்தின் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது. 
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 24 நவம்பர், 2023

நாட்டில் கடத்தப்படும் குழந்தைகள் தீவிர விசாரணையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்

இலங்கையில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிரப்படுத்தியுள்ளது.
 இந்த குற்றங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸிடம் 23-11-2023.அன்று  தெரிவித்துள்ளனர்.
 அதிகளவிலான குழந்தைகள் கண்டி பிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
 இந்த கடத்தல் தொடர்பாக நோர்வேயில் இருக்கும்
 இலங்கை பிரஜை ஒருவரிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இது தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 23 நவம்பர், 2023

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த தம்பதியினருக்கு கனடாவின் கிடைத்த அதிர்ஷ்டம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தற்செயலாக இரண்டு லொட்டரிச்சீட்டுகளை வாங்கியுள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக, இரண்டு லொட்டரிச்சீட்டுகளுக்கும் பரிசு கிடைக்க, ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள் அவர்கள்.
 பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Port Moody என்னுமிடத்தில் வாழும் Shannon Von Richter, Karsten தம்பதியருக்கு, தங்கள் நகரத்தைச் சேர்ந்த
 இரண்டு பேருக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக தகவல் கிடைக்க, ஆச்சரியமடைந்துள்ளார்கள். ஆனால், அந்த 
இரண்டு பரிசுமே அவர்களுக்குத்தான் என்பதை முதலில் அவர்கள் அறியவில்லை. 
தம்பதியர் தற்செயலாக இரண்டு லொட்டரிச்சீட்டுகள் வாங்க, இரண்டு சீட்டுகளுக்குமே பரிசு விழுந்துள்ளதை பின்புதான் அவர்கள் அறிந்துகொண்டுள்ளார்கள். ஒரு லொட்டரிச்சீட்டுக்கு 1,666,666 டொலர்கள் வீதம் மொத்தம் 3,333,333.40 டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது 
தம்பதியருக்கு.
 இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைக்கும் என எதிர்பார்க்காததால், அதை என்ன செய்வது என்று திட்டமிடக்கூட இல்லையாம் அவர்கள்.
எனக்கூறி உள்ளார்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 22 நவம்பர், 2023

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸார் கசிப்பு உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனராம்

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும் அவரது இரண்டு 
நண்பர்களுக்கும் 
சுமார் நான்கு மணிநேர பாதுகாப்பினை வட்டுக்கோட்டை பொலிஸார் 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கியுள்ளனர்.
 இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான் மதியம் எனது தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது கசிப்பு காய்ச்சும் வாடை அடித்தது. 
இதன்போது நானும் என்னுடன் வேலை செய்தவரும் கசிப்பு காய்ச்சும் வாடை அடிப்பதாக பேசிக்கொண்டிருந்தோம். இதன்போது கசிப்பு காய்ச்சிய வீட்டுக்காரன் வேலி பக்கத்தில் இருந்து சத்தகம் கட்டிய கொக்கத்தடி மூலம் எனது கழுத்தை அறுக்க முயன்றார். 
நான் திடீரென்று சத்தகத்தை பிடித்தவேளை அது எனது கையை வெட்டியது. உடனே நான் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துவிட்டு வந்தேன். பின்னர் இரவு நான் எனது வீட்டில்
 இருக்கும்போது கண்ணாடி போத்தில்களால் எனது வீடு மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தப்பட்டது. வீட்டின் கதவு வாளாலும் கத்தியாலும் வெட்டி சேதமாக்கப்பட்டது.
 எனது மகளின் வீடும் எனது வீட்டுக்கு பக்கத்திலேயே உள்ளது. இதன்போது நான் எழுப்பிய சத்தத்தை கேட்ட எனது மகள் சம்பவ இடத்திற்கு வந்தவேளை எனது மகள் மீது கையில் வைத்திருந்த கூரிய 
ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டது. அந்த ஆயுதம் சரிவாக 
எனது மகளின் கையில் விழுந்ததால், வெட்டு காயம் 
இல்லாமல் மகளின் 
கையில் பாரிய கண்டல் காயம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள்
 வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து விடயத்தை தெரியப்படுத்தினோம். ஆனால் தாங்கள் அடுத்தநாள் தான் வருவார்கள் என கூறினார்கள். 
இதன்போது தாக்குதல் நடாத்திய நபர் தாங்கள் பொலிஸாருக்கு காசு கொடுத்ததாகவும் ஆகையால் அவர்கள் வரமாட்டார்கள் 
என்றும் கூறினார். இந்நிலையில் நாங்கள் கொழும்பு 
பொலிஸாருக்கு (119) விடயத்தை தெரியப்படுத்தினோம். இவ்வாறு தெரியப்படுத்திய பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸார் இரவு 11 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். இவ்வாறு வந்தவர்கள் ஏன் கொழும்பிற்கு (119) அழைப்பு மேற்கொண்டீர்கள் என கேட்டனர். 
எங்களது உயிர் போன பிறகு நீங்கள் நாளைக்கு வந்து என்ன பிரயோசனம். எங்களது உயிரை காப்பாற்ற தான் அங்கு 
அறிவித்தோம் 
என்றோம். குறித்த தாக்குதலை மேற்கொண்ட கசிப்பு காய்ச்சும் நபர் வேறு இடத்தை சேர்ந்தவர். வாடகை வீட்டில் தான் எமது பகுதியில் 
வசித்து வருகின்றார். 
இந்நிலையில் தாக்குதல் நடாத்திய மூவரும் அந்த வாடகை வீட்டில் பதுங்கினர். உள்ளே சென்று அவர்களை கைது செய்யுமாறு நாங்கள் 
கூறினோம். வீட்டின் உரிமையாளரும் வீட்டினை தான் திறந்து 
விடுவதாகவும், அவர்களை கைது செய்யுமாறும் கூறினர். 
ஆனால் உள்ளே சென்று அவர்களை 
கைது செய்ய 
தங்களுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அனுமதி வேண்டு என கூறினர். உடனே அங்கு திரண்டிருந்த ஊர்மக்கள் 
அனைவரும் இணைந்து நாங்கள் அவர்களை பிடித்து வந்து உங்களிடம் கொடுக்கிறோம் என கூறியவேளை அவர்ளையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இவ்வாறு 11 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை யாரும் உள்ளே செல்லவில்லை. வெளியில் நின்ற பொலிஸார் உள்ளே இருந்தவர்களுடன் தொலைபேசியில் கதைத்தவாறு இருந்தனர். 
இந்நிலையில் 
அங்கிருந்த நாங்கள் அனைவரும் அதிகாலை 3 மணியளவில் சுழிபுரம் பத்திரகாளி மடத்தடிக்கு சென்று அங்கே இருந்தவேளை பொலிஸார் உள்ளே இருந்த மூவரையும் திடீரென ஏற்றிச் சென்றனர். 
 பின்னர் தாக்குதலுக்குள்ளான எனது மகள் மூன்று நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதும் இதுவரை எம்மிடம் எந்தவிதமான விசாரணைகள் நடாத்தப்படவும் இல்லை, எங்களை பொலிஸ் நிலையத்திற்கு 
அழைக்கவும் இல்லை. 
இன்றுவரை அந்த வீட்டில் கசிப்பு உற்பத்தி நடக்கிறது. எமது ஊருக்கு அருகே உள்ள கடை ஒன்றுக்கு பொலிஸாரின் முச்சக்கர வண்டி வரும். கசிப்பு அந்த இடத்தில் வைத்து பொலிஸாரை சந்தித்து காசு 
கொடுப்பார். உடனே பொலிஸாரின் முச்சக்கர வண்டி திரும்பிச் சென்றுவிடும். எங்களது ஊரில் எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கசிப்பு உற்பத்தியை தடுத்து நிறுத்தி எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என அவர் தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 21 நவம்பர், 2023

நாட்டில் கால் பதிக்கவுள்ள மற்றுமொரு வெளிநாட்டு எரிபெருள் நிறுவனம்

உலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை 
முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று 
கைச்சாத்திடப்பட்டுள்ளது.
110 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமையுடைய எரிபொருள் நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை 
நிறுவவுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் நீண்ட கால ஒப்பந்தத்தின்படி ஷெல் தயாரிப்புகள் இலங்கையில் விற்பனை செய்யப்படும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவற்றில் சிறிய அளவிலான பல்பொருள் 
அங்காடிகள், வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதிகள், கஃபே, ஏடிஎம், உணவு விடுதிகள் இருக்கும் என்றும் இலங்கை முதலீட்டு சபை 
அறிவித்துள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறந்து பெட்ரோலிய விநியோக நடவடிக்கைகளை குறித்த நிறுவனம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனமும் ஷெல் நிறுவனமும் இணைந்து இலங்கையில் 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 20 நவம்பர், 2023

தம்பலகாம பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை இன்றி அவதியுறுகின்றனர்

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்ற தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக 
தெரிவிக்கின்றார்கள். 
திங்கட்கிழமை (20) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் பதிவு செய்யப்பட்ட 45க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும்
 நிலையில் அவர்கள் தங்கள் கால்நடைகளுக்கான
 மேய்ச்சல் தரை இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். 
கோடைகால சிறுபோக செய்கையின்போது 
நெற்செய்கை 
மேற்கொள்ளப்படாத தம்பலகாமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து தமது கால்நடைகளை பராமரித்து வருகின்றபோதும் 
பெரும்போக
 நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற காலப்பகுதிகளில் தங்கள் கால்நடைகளை வைத்து பராமரிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி
 வருகின்றார்கள் இதனால் பெரும்பாலான பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பினை கைவிட்டு வருவதாகவும் 
தெரிவிக்கின்றார்கள்.
 பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற நவம்பர் மாதம் தொடக்கம் தைப்பொங்கல் வரையான 75 நாட்களுக்கு தம்பலகாமத்தில் இருந்து 58 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மொரவெவ குளத்தை அண்மித்துள்ள பகுதியில் சிலர் தமது கால்நடைகளை வைத்து பராமரித்து 
வருகின்றனர்.
 இவர்களில் தம்பலகாமத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் பண்ணையாளர்கள் 20 பேரும், மொரவெவ பகுதியைச் சேர்ந்த ஒரு பண்ணையாளரும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
 இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி அதிகாலையளவில் மொரவெவ பகுதியைச் சேர்ந்த சிலரால் தம்பலகாமத்தைச் சேர்ந்த சில 
பண்ணையாளர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களும் சேதப்படுத்தப்பட்டு அவர்கள் வைத்திருந்த உணவுப் பொருட்களினுள் மண்ணென்னை ஊற்றப்பட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
 அத்துடன் கால்நடைகள் சுடப்பட்டும் இறைச்சிக்காக கடத்தப்பட்டும் வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே கால்நடைகளுக்கான நிரந்தரமான மேய்ச்சல் தரையை வழங்குமாறும் இல்லாவிடில் பெரும்போக செய்கையின்போது கால்நடைகளின் மேய்ச்சலுக்காக தற்காலிக இடங்களையாவது வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை 
விடுக்கின்றனர்.
 நாட்டின் ஜனாதிபதி உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்குமாறும் கால்நடைகளின் உற்பத்திகளை அதிகரிக்குமாறு கூறிவருகின்றபோதும் கால்நடை வளர்ப்பிற்கான மேய்ச்சல் தரைகள் பண்ணையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. 
யுத்தம் முடிவுற்ற காலத்தின் பின்னர் வனஜீவி மற்றும் வனவளத்துறை திணைக்களினால் பெரும்பாலான மேய்ச்சல்தரைகள் கையகப்படுத்தப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது. பலமுறை கோரிக்கை
 விடுக்கப்பட்டும் அது விடுவிக்கப்படாமையினால் 
பெரும்பாலான பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை விற்று வருகின்றார்கள்.
 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடவான பகுதியில் கால்நடை வளர்ப்புக்காக 1500 ஏக்கர் மேய்ச்சல் தரை நிலம் வழங்கப்பட்டிருந்ததுடன் அப்பகுதியில் 60 பேருக்கான உறுதிக்காணி 120 ஏக்கரும் 
வழங்கப்பட்டிருந்தது. 
எனினும் அவையும் தற்போது வனஜீவி மற்றும் வனவள பாதுகாப்புத் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறான நிலை தொடருமானால் தாமும் கால்நடை வளர்ப்பை கைவிடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 19 நவம்பர், 2023

உலகில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக பூமியில் நீர்மட்டம் உயரும் அபாயம்

உலகில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிகள் உருகுவது எதிர்பார்த்தை விட வேகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் 
கூறியுள்ளனர்.  
இதுகுறித்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில், உலக சராசரி வெப்பநிலை 2 டிகிரி உயர்ந்தால், பூமியில் கடல் மட்டம் 40 அடி உயரும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.   
இதனால் கடலோரத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறும் கட்டாயம் ஏற்படும் என்றும் அவர்கள்
 குறிப்பிட்டுள்ளார். 
எனவே, இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகளின் COP28 காலநிலை மாநாட்டில் பங்கேற்கும் சர்வதேச தலைவர்கள் கவனம் செலுத்துமாறும் ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  
பேரழிவுகளைத் தவிர்க்க உலக காலநிலையில் மறுகட்டமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 18 நவம்பர், 2023

நாட்டில் போராட்டப் பேரணியால் பாரிய நெருக்கடியில் வீதிப் போக்குவரத்து

நாட்டில் போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதியின் கம்சபாவ சந்தியை அண்மித்த வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி இன்று மாலை நுகேகொடையில் ‘
மக்கள் எதிர்ப்பு’ என்ற போராட்டத்தை 
ஏற்பாடு செய்துள்ளது.
இதில் கலந்து கொள்ள போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றதால், நுகேகொட, கம்சபாவ பகுதியில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 17 நவம்பர், 2023

’மிதிலி புயல் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கூ றப்பட் டுள்ளது

வங்காள விரிகுடாவில் “மிதிலி” புயல் நிலை கொண்டுள்ளதால் கடலுக்குச் செல்லும் மீனவர்களும் கடற்படையினரும் கடலில் பயணிப்போரும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த புயலானது.17-11-2023. இன்று மாலை வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து பங்களாதேஷ் கடற்கரையை கடக்கவுள்ளது . இதன் போது 
காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோ மீற்றராகக் காணப்படும் எனவும் கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது
 கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வியாழன், 16 நவம்பர், 2023

இலங்கைக்கு சீனாவிலிருந்து வருகின்றது மற்றுமொரு உளவுக்கப்பல்

இலங்கையின் விசேட பொருளாதாரவலயத்தில் தனது அதிநவீன ஆராய்ச்சிகப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை 
சீனா கோரியுள்ளது.
 சியாங் யாங் கொங் 3 என்ற கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.
 குறிப்பிட்ட கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா
 அதிகாரிகள் கோரியுள்ளனர்.
 2024 ஜனவரி 5ம் திகதி முதல் 20ம் திகதி வரை இந்த கப்பல் இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடும்.
 சீனாவின் இயற்கை வளங்களிற்கான அமைச்சிற்கு சொந்தமான கப்பலே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
 இந்தியாவின் கடும் கரிசனைகளிற்கு மத்தியில் ஒக்டோபர் மாதம் சீன கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 15 நவம்பர், 2023

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சாள்ஸின் உருவம் கனேடிய நாணயக்குற்றிகளில் பொறிக்கப்பட உள்ளது

கனடாவில் பயன்பாட்டில் உள்ள நாணயக் குற்றிகளில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ஸின் உருவப்படம் பொறிக்கப்பட உள்ளது. அனைத்து நாணய குற்றிகளிலும் விரைவில் இந்த உருவப்படம் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 மன்னர் சார்ள்ஸ் தனது 75 ஆம் பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபத்தின் உருவப்படம் நாணயத்தாள்களிலும் நாணய குற்றிகளிலும் பொறிக்கப்பட உள்ளது.
அன்னாரின் மறைவை தொடர்ந்து மன்னராக பதவி ஏற்று கொண்ட மூன்றாம் சார்ஸ் மன்னரின் உருவப்படம் இனிவரும் காலங்களில் கனடிய நாணயத்தாள் மற்றும் நாணய குற்றிகளில் பொறிக்கப்பட உள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத இறுதிக்குள் புதிய நாணயக் குற்றிகள் அச்சிடப்பட உள்ளதாகவும் டிசம்பர் மாதம் இந்த நாணய குற்றிகள் புழக்கத்தில் விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 கிரீடம் இல்லாத மன்னரின் உருவப் படம் ஒன்று நணயப் குற்றிகளில் பொறிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 350 கலைஞர்கள் இந்த நாணயக் குற்றிகளில் பொறிப்பதற்கான உருவப்படத்தை
 வரைந்து உள்ளனர்.
இந்த வடிவமைப்புகளை பிரித்தானிய பங்கிங்ஹாம் மாளிகைக்கு அனுப்பி அதில் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கனடாவின் பிரபல ஸ்டீவன் ராஷ்டியின் வடிவமைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளமை 
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>செவ்வாய், 14 நவம்பர், 2023

ஒன்டாரியோவில் மீண்டும் முகக்கவசங்களை அணிய உத்தரவு

கனடா ஒன்ராறியோவில் உள்ள நீண்ட கால பராமரிப்பு ஊழியர்களுக்கு, கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் அந்த துறையில் ஏற்பட்டுள்ள 
பாதிப்புகளுக்கு மத்தியில் முகக்கவசத் தேவைகள் 
மீண்டும் வந்துள்ளன.
 புதிய விதிகள் நவம்பர் 7 முதல் நடைமுறைக்கு வந்தன, 
மேலும் ஊழியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆதரவுப் பணியாளர்கள், இப்போது அனைத்து உள்ளக பகுதிகளிலும் முகக்கவசங்களை சகல இடங்களிலும் அணிய வேண்டும்.
குடியிருப்பாளரின் அறையில் அல்லது சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது தவிர, பராமரிப்பாளர்களும் பார்வையாளர்களும் உள்ளகத்திற்குள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று "கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது" என்று உத்தரவு கூறுகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 13 நவம்பர், 2023

முக்கிய பதவிகளில் இங்கிலாந்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் சுயெல்லா பிரேவர்மேனின் பதவி பறிபோனது

பிரித்தானியாவின் உள்துறை செயலாளரான சுயெல்லா பிரேவர்மேன்.13-11-2023. இன்று பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். .
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை குறித்து சுவெல்லா பிரேவர்மேன் அண்மையில் விமர்சித்திருந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு
 உருவாகியிருந்தது. 
இந்த சூழ்நிலையில், அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிய உள்துறை அமைச்சராக முன்னர் வெளியுறவு 
அமைச்சராக கடமையாற்றியஜேம்ஸ் கிளவெர்லி 
நியமிக்கப்பட்டுள்ளார். 
அத்துடன் இங்கிலாந்தின் முன்னாள்  பிரதமர் டேவிட் கேமரூன் புதிய வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 12 நவம்பர், 2023

நாட்டில் சீனியை பதுக்கி வைத்திருப்போருக்கு அமைச்சர் எச்சரிக்கை

நாட்டில் சீனியை பதுக்கி வைத்துள்ள அனைத்து களஞ்சியசாலைகளுக்கும் சீல் வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர்  நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  
குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை 
குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சந்தையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்  அமைச்சர் குறிப்பிட்டார்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 11 நவம்பர், 2023

ஒன்றாறியோ மாகாணத்தில் தொழில் பெற விரும்புவோருக்கான மகிழ்ச்சியான தகவல்

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்பவருக்கு மாகாண அரசாங்கம் மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியேற்றுள்ளது.
 தொழிலுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் கனடிய தொழில் அனுபவம் தொடர்பில் கவலை கொள்ள தேவையில்லை என அறிவித்துள்ளது. தொழில் தகைமைகளில் கனடிய பணி முன் அனுபவம் தேவையில்லை என ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.
 தொழில் வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் மற்றும் தொழில் வாய்ப்பு குறித்த விளம்பரங்களில் தொழில் முன் அனுபவம் பற்றிய விடயங்களை குறிப்பிடக் கூடாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவிற்குள் பிரவேசிக்கும் குடியேறிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக் கூடிய வகையில் நடைமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மாகாண அரசாங்கம் 
சுட்டிக்காட்டி உள்ளது.
 மாகாணத்தில் நிவவி வரும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு இவ்வாறு தொழில் முன் அனுபவ தேவைப்பாடு தடையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 
விளம்பரங்கள் மற்றும் விண்ணப்பங்களில் எதிர்வரும் 
காலங்களில் கனடிய தொழில் முன் அனுபவம் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 10 நவம்பர், 2023

உலகில் முதல் நியூயோர்க்கில் இடம்பெற்ற முழு கண் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரம்

கடந்த 2021ல், அமெரிக்காவில் வசித்து வந்த 46 வயதான மின்சார துறை தொழிலாளி ஆரோன் ஜேம்ஸ் ஒரு விபத்தில் சிக்கினார். எதிர்பாராத விதமாக அவர் முகம் ஒரு மின்சாரம் பாயும் வயரில் படும்படி ஆனதால், 7,200 வோல்ட் மின்சார ஷாக் தாக்குதலுக்கு உள்ளானார்.
இதில் பலத்த காயமடைந்த அவருக்கு முழு இடது கண்ணுமே பறி போனது. இது மட்டுமின்றி இடது முழங்கை, மூக்கு, உதடு, முன்பற்கள், இடது கன்னம், தாடை ஆகியவை முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து, 
மே 27 அன்று நியூயார்க் லேன்கோன் ஹெல்த் எனும் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு புகழ் பெற்ற மருத்துவ மையத்தில் 
அனுமதிக்கப்பட்டார்.
விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஆரோனுக்கு பலனளிக்காது என்பதால் "முழு கண் மாற்று அறுவை சிகிச்சை" அவருக்கு தேவைப்பட்டது. ஆனால், ஒருவர் இழந்த முழு கண்ணையும் 
மீண்டும் வேறொரு கொடையாளியிடம் பெற்றாலும் அதனை பொருத்துவது மருத்துவ உலகில் இதுவரை ஒரு மிக பெரிய சவாலாக
 இருந்து வந்தது.
டாக்டர். எடுவர்டோ ரோட்ரிகஸ் (Dr. Eduardo Rodriguez) தலைமையில் ஒரு மருத்துவர் குழு இந்த சவாலான முயற்சியில் இறங்கியது. அவரது மேற்பார்வையில் சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற 
இந்த அறுவை சிகிச்சையில் ஆரோனுக்கு முழு கண்ணும் வேறொரு கொடையாளியிடம் இருந்து பெறப்பட்டு வெற்றிகரமாக 
பொருத்தப்பட்டது. 
இந்த சிகிச்சையில் முப்பரிமாண அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது மாற்றப்பட்ட இடது கண்ணில் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், விரைவில் ஆரோனுக்கு கண் பார்வை கிட்டும் என நம்புவதாகவும் டாக்டர். ரோட்ரிகஸ் தெரிவித்தார்.
 விபத்து மற்றும் பல்வேறு இதர காரணங்களால் கண் பார்வை இழந்தவர்களுக்கு இது ஒரு நற்செய்தி என பல்வேறு பிரபல கண் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது   
வியாழன், 9 நவம்பர், 2023

வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள்

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு,  95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.  

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று  (8.11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகும் நிலைமை தற்போது நாட்டில் காணப்படுகிறது. 
விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட சுமார் 1500 வைத்தியர்கள் ஒரு வருடம் என்ற குறுகிய காலத்துக்குள் சேவையிலிருந்து விலகியுள்ளனர். இது நாட்டிலுள்ள மொத்த வைத்தியர்களில் நூற்றுக்கு 5 சதவீதமாகும். 2022இல் காணப்பட்ட மொத்த வைத்தியர்களில் 5 சதவீதமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 
அடுத்து நாம் எதிர்கொள்ளவுள்ள அபாயம் யாதெனில் வைத்தியர்களுக்கான சகல தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ள 5000 பேர் நாட்டை விட்டு வெளியேறக் காத்திருக்கின்றனர். எனவே இவற்றை தடுப்பதற்கான 
சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த வைத்திய கட்டமைப்பிலிருந்து 5000 பேரை ஒரே சந்தர்ப்பத்தில் இழக்க நேரிட்டால் அது நூற்றுக்கு 25 சதவீத இழப்பாகும். 
 ஒரே சந்தர்ப்பத்தில் வைத்திய கட்டமைப்பில் 25 சதவீத மனித வலுவை இழக்க நேரிட்டால் அதனை இலகுவில் ஈடுசெய்யவோ, 
தாங்கிக்கொள்ளவோ முடியாது.  
இந்த நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் மதிப்பீடுகளை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய யுத்த காலத்தில் கூட இல்லாதவாறு வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 
சேவை வழங்கிக்கொண்டிருக்கும் ஓரிரு வைத்தியர்களும் இவ்வாறு வெளியேறிவிட்டால் அந்த வைத்தியசாலைகளை மூடுவதைத் தவிர மாற்று வழியில்லை. அத்தோடு 150 வைத்தியசாலைகளில் எதிர்பார்க்கும் சேவைகளைப் பெற முடியாத நிலைமை 
காணப்படுகிறது. 
 இதே போன்று மேலும் 168 வைத்தியசாலைகள் இவ்வாறு சேவைகள் முடங்கக்கூடிய நிலைமையில் காணப்படுகின்றன. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முறையான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாவிட்டால் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராவோம் என எச்சரிக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>Blogger இயக்குவது.