சனி, 20 ஜனவரி, 2018

ஓமந்தை மக்கள் யாழ்- கொழும்பு ரயிலை மறித்து போராட் டம்

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதமொன்று வவுனியா, ஓமந்தை புகையிரத நிலையத்தில் வைத்து பொது மக்களால் வழிமறிக்கப்பட்டுள்ளது.குறித்த புகையிரதமானது சுமார் 
ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான 
நேரம் வழிமறித்து வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தை – விளாத்திக்குளம் கிராமத்திற்கான 
பாதையை மறித்து 
புகையிரத பாதை அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த புகையிரதம் மக்களால் வழிமறித்து நிறுத்தி 
வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த ஏழு வருடங்களாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்ற போதும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையிலேயே இவ்வாறானதொரு 
நடவடிக்கையை தாம் எடுத்துள்ளதாக புகையிரதத்தை வழிமறித்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில், புகையிரத பயணிகள் அசௌகரியங்களுக்கு 
உள்ளாகியுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சற்று முன், வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் தலையீட்டினால் 
புகையிரதம் செல்வதற்கு வழிவிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஒரு கிழமைக்குள் குறித்த பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுத் தருவதாக அவர் மக்களிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வெள்ளி, 19 ஜனவரி, 2018

மாப்பிள்ளைக்கு பெப்பே காட்டிவிட்டு கள்ளக் காதலனுடன் மணமகள் ஓட்டம்!!

வவு­னி­யா­வில் பெண்­ணொ­ரு­வர், வெளி­நாட்­டுக் கண­வனை வேண்­டாம் எனத் தெரி­வித்­து­விட்டு, திரு­ம­ணத்­துக்கு வந்த வாக­னச்­சா­ர­தி­யு­டன் காதல்­வ­யப்­பட்டு சென்ற சம்­ப­வம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.
வவு­னியா மகா­றம்­பைக்­கு­ளம் பகு­தி­யில் கடந்த 7 மாதங்­க­ளுக்கு முன்­னர் வெளி­நாடு ஒன்­றி­லி­ருந்து வந்த மண­ம­கன் அப்­ப­கு­தி­யில் பெண் ஒரு­வ­ரைத் திரு­ம­ணம் முடித்­தார்.மனை­வியை தாயா­ரு­டன்
 வீட்­டில் விட்­டு­விட்டு வெளி­நாட்­டுக்­குச் சென்று மணப்­பெண்னை எடுப்­ப­துக்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார்.இந்­த­நி­லை­யில், இங்கு கடந்த 7மாதங்­க­ளாக வசித்து வந்த குறித்த மணப்­பெண் தனது 
திரு­ம­ணத்­துக்கு வாட­கைக்கு அமர்த்­தப்­பட்ட வாக­னச்­சா­ர­தி­டன் சென்­று­விட்­டார் என்று மணப்­பெண்­ணின் உற­வி­னர்­கள் வவு­னியா பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­த­னர்.இரு­வ­ரை­யும் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்த பொலி­ஸார் மணப்­பெண்­ணின் விருப்­பத்­தைக்
 கேட்­ட­னர்.
அப்­போது, மணப்­பெண் வெளி­நாட்டு மண­ம­கன் தேவை­யில்லை என்­றும், அவ­ரு­டன் நடை­பெற்ற திரு­ம­ணத்தை இரத்­துச் செய்­து­விட்டு, தனது காத­ல­னு­டன் வாழ விரும்­பு வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.இது­தொ­டர்­பில் ஆராய்­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வியாழன், 18 ஜனவரி, 2018

மண்ணில் இலங்கையின் ஒரு பகுதி புதைந்து போகும் பேராபத்து?

இலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைபடத்தின் மூலம் 
தெரியவந்துள்ளது.
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 80 வீதமானவை இவ்வாறு புதைந்து போகும் அபாயத்தை எட்டியுள்ளது.
இவ்வாறான ஆபத்து நிறைந்த பகுதியில் 6000 குடும்பங்கள் உள்ளதாகவும், ஒரு இலட்சத்து 61 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
30 வருட யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட டைனமைட்டுகளை விடவும் அதிகமான டைனமைட்டுகள் பதுளை மாவட்டத்தில் ஒரு வருடத்திற்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஒருவரும் சிந்திக்கவில்லை எனவும், கற்பாறைகளை உடைத்து இலாபம் பெற்றுக் கொள்வதற்கு மாத்திரமே அனைவரும் சிந்தித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இந்த மாவட்டத்திற்கான வரைபடம் 
ஒன்றை தயாரித்து வழங்குமாறு கோரினோம் எனினும் வழங்கப்படவில்லை.
 அதிக மக்கள் வாழும் பகுதிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பதுளைக்கு ஆபத்து ஏற்பட்டால் முழுமையான இலங்கையின் விவசாயமும் 
பாதித்து விடும்.
சேனாநாயக்க சமுத்திரம், எலஹெர, பராக்கிரமபாகு சமுத்திரம், கிரிதலை, மின்னேரியா, கவுடுல்ல ஆகிய அனைத்திற்கும் பதுளை ஊடாகவே நீர் வழங்கப்படுகின்றது.
பதுளைக்கு பாதிப்பு ஏற்பட்டால் 9 மாவட்டங்களின் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.