வெள்ளி, 30 செப்டம்பர், 2022

பீகாரில் மருத்துவர் வழங்கிய தவறான சிகிச்சையால் ஒரு கையை இழந்த பெண்

  இந்தியாவின் பீகாரில் காது சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் ஒருவருக்கு மருத்துவர் வழங்கிய தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு கையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் பாட்னாவில் உள்ள மகாவீர் ஆரோக்கிய சன்ஸ்தானில் செவிலியர் ஒருவரின் அலட்சியத்தில் இளம்பெண் ஒருவரின் கை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 11ம் திகதி காது அறுவை சிகிச்சைக்கு வந்த ரேகாவுக்கு நரம்புக்கு பதிலாக தமனியில் ஊசி போடப்பட்டது. இதனால் ரேகாவின் கை மெதுவாக பச்சை நிறமாக மாற ஆரம்பித்தது.
இதனையடுத்து ரேகா உடனடியாக கையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வலி குறித்து மருத்துவமனையில் புகார் அளித்தார், ஆனால் அந்த நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனம் செலுத்தவில்லை.
மாறாக அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு கையை அவர் இழந்தார். கையை இழந்தது மட்டுமின்றி, நவம்பரில் அவருக்கு நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது.
இதனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் பொலிஸில் புகார் அளித்தனர். ஆனால், பொலிஸார் இதனை வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படும் நிலையில் நியாயம் கேட்டு கோர்ட்டிற்கு 
சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் கூறுகையில், “இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து நிறைய அழுத்தங்களை எதிர்கொள்கிறார்கள்.
மருத்துவ அலட்சியத்தால், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன், அவரது கையும் துண்டாகியுள்ளது. இதற்காக, நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நோயாளிக்கு உரிய இழப்பீடு கிடைக்க வேண்டும்.
இந்த வழக்கில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அந்த வழக்கிறிஞர் 
தெரிவித்தார்.    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 29 செப்டம்பர், 2022

இலங்கையில் கோதுமை மாவின் வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் அதன் விலை மேலும் அதிகரிக்கும் என அவர்கள் 
குறிப்பிட்டுள்ளனர்.
சந்தையில் தற்போது கோதுமை கிலோ ஒன்று 410 ரூபா முதல் 420 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பல சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் சுமார் 2,000 வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் கோதுமை மா விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன.இதனால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனையகங்களின் உரிமையாளர்கள் 
தெரிவிக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 28 செப்டம்பர், 2022

நாட்டில் கொழும்பில் குடியிருப்பில் பாரிய தீவிபத்து

கொழும்பு -கிரேன்பாஸ் கஜீமா குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்தினால் ஏராளமான வீடுகள் பாதிப்படைந்துள்ளன.

தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து காரணமாக குறித்த குடியிருப்பு பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் காற்று காரணமான தீ வேகமாக அங்குள்ள ஏனைய குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவுவதாகவும் அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் அனைவருமே இணைந்து தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீப் பரவல் காரணமான மக்களின் உடமைகள் மற்றும் சொத்துக்கள் என்பன முழுமையாக சேதமடைந்துள்ளதாகத்  தெரிவிப்பு 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 27 செப்டம்பர், 2022

இலங்கையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் வெளியான செய்தி

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வருடம் டிசெம்பர் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்துவதன் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை
 வெளியிட 6மாதங்கள் ஆனதாகவும், 3 மாதங்களில் மீண்டும் 
அதே பரீட்சையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் 
அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.எனவே க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 26 செப்டம்பர், 2022

முல்லைத்தீவு குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல இது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசமாம்

குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என கொழும்பில் பௌத்த பிக்குகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப்
 பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த ஆர்ப்பாட்டம் செயற்படுத்தபட்டுள்ளது
கொழும்பு சுதந்திர சதுக்கப்பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி புத்தசாசன அமைச்சினை நோக்கி செல்கிறது.குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தான் தமது சுயலாப அரசியலுக்காக பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பௌத்தர்கள் மற்றும் பிக்குமார் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

ரத்தினபுரியில் உத்தியபூர்வமாக்கப்படும் கஞ்சாபயிர் செய்கை.வெளியான செய்தி

இலங்கையில் ரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிர் செய்வது தொடர்பான யோசனையை சுகாதார அமைச்சு அமைச்சரவையில் முன்வைக்க உள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக சுதேச 
வைத்தியத்துறை ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த யோசனையை முன்வைக்க உள்ளார்.
இந்த யோசனை எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளது.மேற்குலக நாடுகளின் சந்தைகளில் கஞ்சாவுக்கு மிகப் பெரிய கேள்வி நிலவுவதாகவும் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலைமையில் கஞ்சாவை ஏற்றுமதி செய்வது வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட சிறந்த
வழியாக இருக்கும் என ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.இலங்கையில் பல இடங்களில் சட்டவிரோதமாக ஏற்கனவே கஞ்சா பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. எனினும் அவை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காகவே
 பயிரிடப்படுகின்றன.
கஞ்சா சேனைகளை பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். மேலும் சித்த மருத்துவம் போன்ற சுதேச மருத்துவ தேவைகளுக்காக இலங்கை கஞ்சாவை இறக்குமதி செய்து வருகிறது என்பது 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 24 செப்டம்பர், 2022

இலங்கையில் ஹோட்டலுக்கு உண்ணச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமைத்த உணவில் தூண்டில் முள்ளுடன் மீன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடரில் மேலும் தெரியவருவது,
ஹோட்டலில் நபரொருவர் உணவு வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது குறித்த உணவில் இருந்த மீன் தூண்டில் முள்ளுடன் 
இருந்துள்ளது.
இதனை குறித்த நபர் புகைப்படம் எடுத்து இணையத்தில்
 பகிர்ந்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 23 செப்டம்பர், 2022

உங்க ஜாதகத்தில் குரு பெயர்ச்சியில் இந்த யோகம் இருக்காஅப்ப நீங்க அதிஷ்டசாலிதான்

சுப கிரகமான குரு சந்திரனுடன் இணைந்தோ அல்லது சந்திரனுக்கு ஐந்து அல்லது ஒன்பதாம் இடங்களில் இருந்தாலோ குரு சந்திர யோகம் ஏற்படுகிறது. குரு பகவானால் நாடாளும் யோகம் சிலருக்குத் தேடி வரும். குரு பகவான் அரசாளும் தகுதியை அள்ளித்தருவார். உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் குருபகவான் எங்கே எப்படி இருக்கிறார் என்று பார்த்து உங்களுக்கு இந்த யோகங்கள் இருக்கிறதா என்று முடிவு செய்து
 கொள்ளுங்கள்.
குருபகவான் பொன்னவன். தனது பொன்னான பார்வையினால் ஒருவரை சுபப்படுத்துவார். நிறைய நன்மைகளை செய்வார். திருமணம், குழந்தை பாக்கியம், நல்ல வேலை, கல்வி, வருமானத்தையும் தருவார். குருபகவானால் சிலருக்கு சில யோகங்கள் கிடைக்கும் அதில் முக்கியமானது குரு சந்திர யோகம். குரு சந்திர யோகம் தவிர குருபகவானால் சில முக்கியமான யோகங்கள் உள்ளன.
குருவினால் ஒருவருக்கு சகடயோகமும் ஏற்படும். சந்திரனுக்கு 2,6,8,12ஆம் இடங்களில் சந்திரன் இருந்தால் அது சகடயோகம். ஒருவருக்கு சகடயோகம் வந்தால் ஏற்றம் இறக்கம் நிறைந்த வாழ்க்கை அமையும். அரண்மனையில் சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜாவாக அரசாள வேண்டும் என்பதில்லை வேலை செய்யும் இடத்தில் உயர்பதவி கிடைத்தாலும், அரச வேலையில் உயர்பதவி கிடைத்தாலும் அது ராஜ யோக அமைப்புதான்.
கஜகேசரி யோகம்
கஜகேசரி யோகம் நன்மை தரக்கூடிய யோகமாகும். குரு பகவான் சந்திரனில் இருந்து 4, 7,10ல் இருந்தால் கஜகேசரி யோகமாகும். கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் அமைந்திருப்பதால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும்.
நாடாளும் யோகம் தரும் குருபகவான்
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் குருபகவான் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும். ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு மதிப்பு இருக்கும். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார்.
இந்த நான்கு ராசிகளும் வியாழ வட்டம் என்றும் குரு வளையமாகும்.
கோடீஸ்வர யோகம் தரும் குரு சந்திர யோகம்
குரு பகவான் சந்திரனை பார்ப்பார் அதாவது உங்களுடைய ராசியை தனது ஐந்து அல்லது ஒன்பதாம் இடங்களை பார்வையிடுவது, ராசியில் குரு சந்திரன் உடன் இணைவதால் இந்த யோகம் ஏற்படுகிறது. கல்வி ஞானம், உலக அறிவு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். லக்னாதிபதி சுமாரான நிலையில் இருந்தாலும் ராசிப்படி நன்மைகள் நடைபெறும்.
குரு மங்கள யோகம்
குரு மங்கள யோகம் குரு உடன் மங்களகாரகன் செவ்வாய் இணைவது குருபகவான் செவ்வாயை பார்வையிடுவது குரு மங்கள யோகமாகும். குருவிற்கு நண்பர் செவ்வாய். இருவரும் கூட்டணி அமைத்து ஒரு ஜாதகத்தில் இருந்தாலோ, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலோ இந்த யோகம் ஏற்படும். குருவிற்கு 4,7,10 ஆம் இடங்களில் செவ்வாய் அமர்வது குரு மங்கள யோகமாகும். இயற்கை பாவ கிரகமான செவ்வாய் சுபத்துவம் அடைந்து நன்மை தருவார். இந்த யோகம் உள்ளவர்கள் விளையாட்டு, ராணுவம், காவல்துறையில் சிறந்து விளங்குவார்.
செல்வம் செல்வாக்கு தரும் வசுமதி யோகம்
ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் சுக்கிர புதன் சேர்க்கை பெற்றிருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் ஜாதகர் தன் சொந்த முயற்சியால் முன்னேறுவார். செல்வம், செல்வாக்கு யாவும் சிறப்பாக அமையும்.
அஷ்ட லட்சுமி யோகம்
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் குரு ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் இருந்து ராகு ஆறாமிடத்தில் இருந்தால் அஷ்ட லட்சுமி யோகம் ஏற்படுகிறது. ஒருவருக்கு ஆறாம் வீட்டில் அசுப கிரகம் அமைவது சிறப்பு அதுவும் ராகு அமைவது அந்த வீட்டின் கடன், நோய், எதிரி தொல்லையை ஒழிக்கும்.
குரு சண்டாள யோகம்
ஜாதகத்தில் குரு, ராகு சேர்க்கை பெற்றிருப்பது அல்லது ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.
குரு கேது கூட்டணி தரும் யோகம்
குருவும், கேதுவும் இணைந்து ஒரு பாவத்தில் அமர்ந்திருப்பது கேள யோகம் எனப்படும் கோடீஸ்வர யோகத்தை தருகிறது. கேதுவிற்கு வலிமையான இடங்களாகச் சொல்லப்படும் விருச்சிகம், கன்னி, கும்ப வீடுகளிலும், மேஷம், கடகம் ஆகியவற்றிலும் இந்த அமைப்பு குரு மற்றும் கேது தசைகளில் ஜாதகருக்கு நல்ல யோகத்தை தரும். குறிப்பாக மேஷம், கடகம் ஆகிய சர ராசிகளில் இந்த கூட்டணி இருக்கும் நிலையில் ஜாதகரை வெளிமாநிலம், வெளிதேசத்திற்கு அனுப்பி செல்வத்தை 
அள்ளிக்கொடுக்கும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வியாழன், 22 செப்டம்பர், 2022

நீதி கோரி யாழ். பல்கலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

குருந்தூர்மலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும், பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு 
முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று கூடியிருந்தனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக இராமநாதன் வீதி ஊடாக பரமேஸ்வராச் சந்தியை அடைந்து சிறிது நேரம் வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பின்னர் பேரணியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், ரவிகரன் மற்றும் மயூரனை விடுதலை செய், எமது காணி எமக்கு வேண்டும், எமது மலை எமக்கு வேண்டும், குருந்தூர் மலையை ஆக்கிரமிக்காதே போன்ற கோஷங்களை எழுப்பி தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மேலும், ரவிகரன் மற்றும் மயூரன் விடுதலை செய்யப்படாவிட்டால் வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 21 செப்டம்பர், 2022

இலங்கையில் மின்சார வாகன இறக்குமதிக்கான முதலாவது அனுமதிப்பத்திரம் வழங்கல்

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களில் , முறையான வழிகளில் பணம் அனுப்புனர்கள் , மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் திட்டம் அண்மையில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு முதல் மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை.21-'9-2022. இன்று 
வழங்கியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தியோகபூர்வ வழிகளில் நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அண்மையில் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 20 செப்டம்பர், 2022

முல்லைத்தீவில் தமிழர் பூர்வீகத்தில் அத்துமீறல் நாளைமுதல் தொடர் போரட்டத்திற்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடமாகிய தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த வளாகத்தில் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரையினுடைய கட்டுமானப் பணிகள் தொடர்பில் முல்லைதீவு நீதிமன்ற தடை உத்தரவுகளை மீறி விகாரை அமைப்பு பணிகள் நிறைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதனை விட விடுமுறை தினத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மக்களின் காணிகளுக்குள் எல்லைக் கற்கள் இடப்பட்டு மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு குருந்தூர் மலையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது.
மக்களுடைய மத உரிமை, நில உரிமை பறிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலைமையில் இவற்றிற்கு எதிராக தொடர்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு குறித்த பகுதியினுடைய பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
அதற்கமைய நேற்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய குறித்த கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளையதினம் 21ஆம் திகதி காலை 9 மணி முதல் குருந்தூர் மலை பிரதேசத்தில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே தங்களுடைய போராட்டத்திற்கு அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளினுடைய பிரதிநிதிகள், உள்ளிட்ட அனைத்து தமிழ் உவுகளையும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை 
விடுத்துள்ளனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 19 செப்டம்பர், 2022

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை 
விடுத்துள்ளது.
இதன்படி, இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாள் மற்றும் வழமையான சேவைகளின் ஊடக கடவுச்சீட்டு வழங்கப்படும்.
முன்பதிவு செய்யாதவர்களுக்கு இன்று எவ்வித சேவைகளும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்யாதவர்களை அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டாம் என குடிவரவுத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

இலங்கையில் பாடசாலை முடிவடையும் நேரம் நீட்டிப்பு..வெளியான முக்கிய செய்தி

நாட்டில் பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் 
இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் அதிகரிக்கப்படும் மேலதிக நேரம் மாணவர்களின் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கல்வி சார்பிலும் விளையாட்டுக்காக அதிக வளத்தை ஒதுக்குமாறு அமைச்சரிடம் கோரியுள்ளேன்.
தற்போது, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை கவலைக்குரிய விடயமாகும். பாடத்திட்டத்தில் அனைத்தும் புகுத்தப்பட்டிருப்பினும் இது சாத்தியமாகவில்லை.கல்வி அமைச்சர், பாடத்திட்டத்தில் விளையாட்டுக்கு அதிக 
முக்கியதுவம் அளித்துள்ளார்.
விளையாட்டை ஒரு பாடத்திட்டமாக கருதி, அது மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்பட வேண்டும் இது மாணவர்களின் பாதுகாப்புக்கு நல்லது.அதுமட்டுமல்லாமல் பெற்றோர், பிள்ளைகளின் உறவை மேலும் வலுப்படுத்தும்.
குறைந்தது 2 மணித்தியாலங்களாவது, பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
சனி, 17 செப்டம்பர், 2022

நாட்டில் அரிசியில் அலுவலகம் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி செய்தி

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில், மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்பினை ஏற்படுத்தும் பல நச்சு இரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் நடத்திய ஆய்வில், இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தின் ஆய்விற்கமைய, நாட்டில் பயன்படுத்தப்படும் அரிசியில் ஆர்சனிக் அளவு 0.2 சதவீதம், ஈயம் 0.2 சதவீதம், பாதரசம் 0.1 சதவீதம், செலினியம் 0.3 சதவீதம் உள்ளடங்குகின்றது. இவை அனைத்தும் கனரக உலோகங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உள்ளூர் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 43 சதவீதம் ஈயம், 26 சதவீதம் காட்மியம், 20 சதவீதம் பாதரசம், 47 சதவீதம் செலினியம் இருப்பது
 தெரியவந்துள்ளது.
மேலும் இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதால் புற்று நோய், குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடுவது என்ற பாதிப்புகள் உள்ளதென 
தெரியவந்துள்ளது.
இந்நாட்டில் தடைசெய்யப்பட்ட பல வகையான பூச்சிக்கொல்லிகள் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் கிளைபோசேட், கார்போபியூரான், மோனோகுரோடாபஸ் போன்றவை பிரதான களைக்கொல்லிகளாகும்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை இரண்டு வருடங்கள் அப்படியே வைத்திருக்கலாம். அங்கே பல்வேறு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 16 செப்டம்பர், 2022

மீசாலை பகுதியில் இரும்பு ஒட்டும் தொழிச்சாலையில் இடம்பெற்ற சம்பவம்

யாழ்.சாவகச்சோி – மீசாலை பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் தொழிச்சாலைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று 
இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் நேற்றிரவு 
இடம்பெற்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது ஒட்டுத் தொழிற்சாலையில் காணப்பட்ட மூன்று இலட்சத்து 75,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 15 செப்டம்பர், 2022

இலங்கையில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணிநேர பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக ஆளும் அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவர் ஒரு மணித்தியால வேலைக்காக 350 ரூபா பெற்றுக்கொள்வார்.
பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவுப் பரிமாற்றம் செய்வதற்கும் தற்காலிக வேலைவாய்ப்பு நியமனம் வழங்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திங்கள், 12 செப்டம்பர், 2022

நாட்டில் ஐந்து புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள்

மேலும் ஐந்து புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த வாரம் பதவிப் பிரமாணம்
இவர்களுக்கான பதவிப் பிரமாணம் அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஏற்கனவே இந்த வாரம் 37 ராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்
 நியமிக்கப்பட்டனர்.
சர்வகட்சி அரசாங்க யோசனை தோல்வியடைந்த நிலையிலேயே, பொதுஜன பெரமுனவை முன்னிலைப்படுத்தி இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் பணம் செலுத்தும்வரை காத்திருக்கும் நான்கு எரிபொருள் கப்பல்கள்

இலங்கையில் பணம் செலுத்த வேண்டிய நான்கு எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் காத்திருப்பதாக 
தெரிவிக்கப்படுகிறது.
இந்த நான்கு எரிபொருள் கப்பல்களையும் அடுத்த வாரத்தில் செலுத்தி இறக்குவதற்கு கிட்டத்தட்ட நூற்று ஐம்பது மில்லியன்
 டொலர்கள் தேவைப்படும்
எண்ணெய் கூட்டுத்தாபனம் ஏற்கனவே மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை வசூலித்து வருகிறது.
இரண்டு டீசல் கப்பல்கள், ஒரு பெட்ரோல் கப்பல், ஒரு கச்சா எண்ணெய் கப்பல் பணம் செலுத்தும் வரை காத்திருக்கின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 10 செப்டம்பர், 2022

நாட்டில் வைத்திய தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கற்பனை குற்றச்சாட்டுகளை முன்வைத்து,  அவர்களை தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடைப்பதை உடனடியாக நிறுத்துமாறு Medical Professionals Sri Lanka For System Change என அழைக்கப்படும் மாற்றத்திற்கான வைத்திய தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராசிரியர் அர்ஜுன அலுவிஹாரே, பேராசிரியர் லலிதா மெண்டிஸ், டொக்டர் M.K.ரகுநாதன் உள்ளிட்ட பல வைத்திய நிபுணர்கள் இந்த தொழிற்சங்கத்தில் அடங்குகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தங்களால் இயன்றதைச் செய்வதற்கான மூலோபாயத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அவர்கள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, அமைதியான வழியில் எதிர்ப்பினை தெரிவிக்குமாறு சிவில் அமைப்புகள் , ஏனைய குழுக்கள் மற்றும் பொதுமக்களை வைத்திய நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரசாங்க செலவினங்களை பெருமளவில் குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம்  பரிந்துரைத்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், 37 புதிய இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்துள்ளமை, மக்களை ஆச்சரியத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது என மாற்றத்திற்கான வைத்திய தொழிற்சங்கத்தினர்
 குறிப்பிட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை மாத்திரம் பெறுவதாக இராஜாங்க அமைச்சர்கள் கூறினாலும்,  சலுகைகள், கொடுப்பனவுகள் உள்ளிட்ட இதர வசதிகளுக்காக பல கோடி ரூபா செலவிடப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணமான  ஊழலுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளதாக Medical Professionals Sri Lanka For System Change என அழைக்கப்படும் மாற்றத்திற்கான வைத்திய தொழிற்சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
Blogger இயக்குவது.