சனி, 10 செப்டம்பர், 2022

நாட்டில் வைத்திய தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கற்பனை குற்றச்சாட்டுகளை முன்வைத்து,  அவர்களை தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடைப்பதை உடனடியாக நிறுத்துமாறு Medical Professionals Sri Lanka For System Change என அழைக்கப்படும் மாற்றத்திற்கான வைத்திய தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராசிரியர் அர்ஜுன அலுவிஹாரே, பேராசிரியர் லலிதா மெண்டிஸ், டொக்டர் M.K.ரகுநாதன் உள்ளிட்ட பல வைத்திய நிபுணர்கள் இந்த தொழிற்சங்கத்தில் அடங்குகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தங்களால் இயன்றதைச் செய்வதற்கான மூலோபாயத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அவர்கள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, அமைதியான வழியில் எதிர்ப்பினை தெரிவிக்குமாறு சிவில் அமைப்புகள் , ஏனைய குழுக்கள் மற்றும் பொதுமக்களை வைத்திய நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரசாங்க செலவினங்களை பெருமளவில் குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம்  பரிந்துரைத்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், 37 புதிய இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்துள்ளமை, மக்களை ஆச்சரியத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது என மாற்றத்திற்கான வைத்திய தொழிற்சங்கத்தினர்
 குறிப்பிட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை மாத்திரம் பெறுவதாக இராஜாங்க அமைச்சர்கள் கூறினாலும்,  சலுகைகள், கொடுப்பனவுகள் உள்ளிட்ட இதர வசதிகளுக்காக பல கோடி ரூபா செலவிடப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணமான  ஊழலுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளதாக Medical Professionals Sri Lanka For System Change என அழைக்கப்படும் மாற்றத்திற்கான வைத்திய தொழிற்சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.