வெள்ளி, 31 மார்ச், 2023

குடத்தனை கடற்கரையில் கடற்படை முகாமிற்கு அருகில் வந்த சிவலிங்கம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள்
 தெரிவிக்கின்றனர். 
குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக 
காணப்படுகிறது.
குறித்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் 
என நம்பப்படுகிறது.
எனினும் குறித்த சிவலிங்கத்தை அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு சைவ மக்கள் எற்பாடு செய்து வருவதாகவும் பிரதேச தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
சிவலிங்கம் காணப்படும் இடத்யிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் ஒன்றும் காணப்படுகிறமை 
குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 30 மார்ச், 2023

இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள தகவல்

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண் தொழிலாளர்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் 
வெளிநாடுகளில் 
உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தங்குமிடம் வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் மோசடி முகவர் மூலமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.
வேலைவாய்ப்பில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட புலம்பெயர்ந்த இலங்கை பெண்  தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு தூதரகங்கள் ஆரம்பத்தில் பாதுகாப்பு வீடுகளை 
வழங்கியது.
எவ்வாறாயினும், இலங்கை பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சட்டவிரோத முகவர் நிலையங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் பயணம் செய்தவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதால், 
தூதரக அதிகாரிகள் பாதுகாப்பு தங்குமிடங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்கினர்.
சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பெண் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 29 மார்ச், 2023

பெண்ணின் மோசமான செயல் பெண்ணும் மாணவர்களும் யாழில் கைது

 யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர்  பொலிஸாரினால் கைது 
செய்யப்பட்டுள்ளார். 
யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த குறித்த பெண் நேற்றைய தினம் மாவட்ட குற்றச்சாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 
பெண் வியாபாரியிடம் போதைப் பொருள் 
வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளரும் 28-03-2023-அன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும் கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருள் வியாபாரியான பெண் நீண்ட காலமாக போதை பொருள் விற்று வருகின்றமை  தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டமை அடுத்து இந்த கைது 
இடம்பெற்றுள்ளது. 
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 28 மார்ச், 2023

தமிழக கடற்கரையில் பிரித்தானிய வாழ் இலங்கை தமிழ் பிரஜை அதிரடியாக கைது

பிரித்தானியாவில் அகதி நிலை கோரிய இலங்கை தமிழர் ஒருவர் இந்திய கடலோர காவல்படையினரால் தமிழக கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 39 வயதான  தமிழரே  இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
 இலங்கைக்கு சட்டவிரோத  பயணம்
கைதான தமிழ் பிரஜை இலங்கையை விட்டு அகதியாக வெளியேறி இலங்கைக்கு திரும்ப முடியாது என்ற நிபந்தனையுடன் நிரந்தர விசா பெற்று லண்டனில் தங்கியிருப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர் நேரடியாக இலங்கைக்கு செல்ல 
முடியாததால்,
 இந்தியாவுக்கு வந்த அவர், படகு மூலம் சட்டவிரோதமாக
 இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
கைதான மேலதிக விசாரணைக்காக அவர் இலங்கை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
அதேவேளை இலங்கை நாட்டில் உயிராபத்து என அகதி அந்தஸ்த்து கோருவோர் , இலங்கை நாட்டை தவிர எந்தவொரு நாட்டுக்கும் செல்ல அனுமதியுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 27 மார்ச், 2023

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதன்முறையாக தரையிறங்கியது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 787-10 ட்ரீம்லைனர் 27-03-2023..இன்று அதிகாலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதன்முறையாக தரையிறங்கியது.
ஜப்பானிய கேரியர் ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ் உடன் 787 அக்டோபர் 2011 இல் சேவையில் நுழைந்தது.
"இந்த விமானம்.27-03-2023 இன்று முதல் வாரத்தில் நான்கு நாட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான
 நிலையத்திற்கும் இடையில் நேரடி விமான சேவையில் ஈடுபடவுள்ளது" என Aitken Spence நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் வசந்த குடலியனகே தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 26 மார்ச், 2023

கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் தொடர்ந்து குறைந்து வருகிறது

உலக சந்தையில்  கச்சா எண்ணெய் விலை  தொடர்ந்து குறைந்து 
வருகிறது.
அதன்படி நேற்று பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 74.99 டொலர்களாக பதிவாகியுள்ளது.
மற்றும் டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.26 டொலர்களாக காணப்பட்டது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
சனி, 25 மார்ச், 2023

பண்ணையில்பறவைக்காய்ச்சலால் 3.30 லட்சம் கோழிகளை அழிக்கும் ஜப்பான்

ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. 
இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. மேலும் அதனை சுற்றிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளில் கோழிகள் மற்றும் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 
இந்த பறவைக்காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பதற்காக இந்த பண்
ணையில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். 
ஜப்பானில் கடந்த சில மாதங்களாக பறவைக்காய்ச்சல் தீவிரமடைந்து வருவதும், இதன் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வெள்ளி, 24 மார்ச், 2023

கலிபோர்னியாவை தாக்கிய சூறாவளி மற்றும் கனமழையால் 3.5 கோடி பேர் பாதிப்பு


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3.5 கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சூறாவளி காற்று மற்றும் கனமழையால் நேற்றும், இன்றும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சூறாவளியின் பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள்
 வேருடன் சாய்ந்து விழுந்தன. மின் இணைப்புகளும் பரவலாக சேதமடைந்தன. கனமழையால் 3.5 கோடி பேர் பாதிக்கப்பட்டதுடன், 1.2 லட்சம் வீடுகளுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி செய்தி தொடர்பாளர் கரீனா கர்ரால் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், வெள்ளம், மரங்கள் சரிவது மற்றும் பிற தடைகளால் மீட்பு பணிக்கான முயற்சிகளில் தொய்வு ஏற்படும் என 
கூறியுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோ நகரில் மரம் விழுந்ததில், 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் சராசரியாக 4 மணிநேரம் விமானம் தரையிறங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
சான்டா பார்பரா கவுன்டியில் பலத்த காற்றால் 26 வீடுகள் 
சேதமடைந்தன. புயலை முன்னிட்டு, குறைந்தது 2 வாரத்திற்கு 
தேவையான உணவு, குடிநீர், மருந்து பொருட்கள்
 மற்றும் எரிபொருள் ஆகியவற்றை வைத்து கொள்ளும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 23 மார்ச், 2023

நாட்டில் தலைப்பிறை எங்கும் தென்படாததனால் ரமழான் நோன்பு நாளை 24ஆரம்பிக்கப்படும்

ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டில் எங்கும் தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம் (24) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் 22-03-2023.அன்று மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததன் காரணமாக, ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்யவும், புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் ஆரம்பிக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 22 மார்ச், 2023

உலக அதிசயமான கிழக்கிலங்கையில் சிவபூமியினரின் பெரும்பணி

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை திறந்து வைக்கப்படவுள்ளது என செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தெரிவித்ததாவது
கிழக்கிலங்கை வரலாற்றில் சிவபூமி திருமந்திர அரண்மனை மார்ச் மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இலங்கை சிவபூமி அறக்கட்டளையால் நிறுவப்பட்டுள்ள திருமந்திர அரண்மனை சம்பிரதாய பூர்வமாகத் திறந்த
வைக்கப்படவுள்ளது.
3 ஆயிரம் தமிழ் பாடல்கள் பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாற்றுப் பெட்டகமான திருமந்தி ரத்தைகையால்உளிகொண்டு மூன்று ஆண்டுகளாக இளைஞர்கள் கருங்கல்லில் செதுக்கியுள்ளனர்.
இந்தப் பாடல்களை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதியில் அமைக்கப்பட்டுள்ள திருமந்திர அரண்மனையில் சிவபூமி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கருங்கல்லினால் ஆக்கப்பட்ட கோவிலில் முகலிங்கப் பெருமானும் கிழக்கிலங்கையில் முதல் முதலாக வித்தியாசமான முறையில்
கிழக்கிலங்கையில் தானகத் தோன்றிய தான் தோன்றிஸ் இடத்துக்கு வந்த போது இந்த மாடு கருங்கல் மாடு சாணிபோடுமா என்று கேட்ட போது அந்த மாடு எழுந்து நின்றுபோட்டசாணி கருங்கல் சாணியாக இன்றைக்கும்
பாதுகாக்கப்படுகின்றது.
போர்த்துக்கேய தளபதிகளே இந்தக் கோவிலை பெருமையாக நினைத்து வழிபட்ட மரபு இன்றும் பேசப்படுகின் றது. அந்த இடத்தில் தோன்றிய தான் தோன்றீஸ்வரர் ஆலயம் கிழக்கிலே பிரமாண்டமான கோவில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடுகின்ற அந்தக் கோவிலில் இப்போது யாழ்ப்பாணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்த அறக்கட்டளை
அறக்கட்டளை பல தருளச் செய்துள்ளார்கள்.
இது மட்டுமல்ல திரு 108 சிவலிங்கமும் நடு திருமந்திர அரண்மனையை மந்திர அரண்மனைச் சுற்றாடல்கள் அமைத்துள்ளார்கள். புனிதம் பெறக் கூடியதாக அங்கே பல்வேறு விடயங்கள் நிலை நாட்டப்பட்டு சம்பிரதாய பூர்வமாகக் கிழக்கிலங்கை மக்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 24 ஆம்திகதி இடம்பெறவுள்ளது.
திருவாசக அரண்மனையை நாவற்குழியில் அமைத்து பேணிப் பாதுகாப்பது போன்று கிழக்கிலங்கையிலே இந்தப் பணி செய்து கிழக்கிலங்கை மக்களிடமே தான்தோன்றீஸ் வர ஆலயத்தின் நிர்வாகத்தி வரர் போத்துக்கேயர் அந்தண்டனே இந்தப் பணியை ஒப்படைக்கின்றார்கள்
கிழக்கிலங்கை மக்கள் மட்டுமல்லர், அனைத்து சைவ
 மக்களும் வருகை தந்து உலக அதிசயமான 3 ஆயிரம் பாடல்கள் கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ள 1330 திருக்குறள் இந்தியாவில் 
கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. திருவாசகம் யாழ்ப்பாணத்தில் 650 காட்சியளிக்கின்றது.
இங்கே கருங்கற் கோவிலிலே முகலிங்கம் இலங்கையிலே ஒரே ஓர் ஆலயத்திலே இணுவில் காரைக்கால் சிவன் கோவிலிலே முகலிங்கம் இருக்கின்றது. இப்போது கிழக்கிலங்கையில் மூலக் பதிக்கப்பட்டுள்ளது. கருவறையிலே முகலிங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது
108 சிவலிங்கம் கருங்கல் அமைக்கப்பட்டிருக்கின்றது. 3 ஆயிரம் திருமந்திரப் பாடல்களும் வாசலிலிலே அசையாத் தேராக 
சிற்பத்தேர் ஒன்று உருவாக்கப்பட்டு அந்தத்தேரிலே சிவபெருமானும் திருமந்திரத்தைப் படைத்த திருமூலரும் சிற்பமாக 
எழுந்துள்ளார்.
ஆனால் உலகத்திலேயே 3 ஆயிரம் தமிழ்ப்பாடல்களை சுருங்கல்லில் பதிப் பித்த பெருமை சிவபூமி அறக்கட்டளையைச் சாரும். இதைத் தாங்குகின்ற பெருமை கிழக்கிலங்கை மக்களைச் சாரும். அற்புதமான இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் 
ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருமந்திர 
அரண்மனை எதிர்காலத்தில் சைவத்தின் அடையாளங்களில் ஒன்றாக 
திகழவுள்ளது.
காலத்தால் அழியாதவாறு கருங்கற்களில் #மூவாயிரம் திருமந்திர பாடல்களையும் பாரதிபுரத்தைச் சேர்ந்த #வினோத் என்ற கலைஞர் (புகழுடற் சின்னங்களில் தம் கைவினையை வெளிப்படுத்திய தேர்ச்சி மிக்கவரை ) கொண்டு கைகளால் செதுக்கி அதனை அமைக்கப்பட்டு 
வருகின்ற சிவபூமி திருமந்திர அரண்மனையில் பதித்து செயற்கரிய சைவப்பணியை கிழக்கிலங்கையிலும் (மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில்) செயற்படுத்திக் கொண்டிருக்கிறார் செஞ்சொற்செல்வர் கலாநிதி 
ஆறு.திருமுருகனார்.
வட புலத்தில் நாவற்குழியில் திருவாசக அரண்மனை அமைந்தமை போன்று எதிர்காலத்தில் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் திருமந்திர அரண்மனை அமையவுள்ளமை சிறப்பிற்குரியது.
இத்தகு சிறப்பிற்குரிய மட்டக்களப்பு சிவபூமி திருவாசக அரண்மனை நாளை மறுதினம் 24.03.2023 வெள்ளிக்கிழமை திறந்து 
வைக்கப்படவுள்ளது.
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
செவ்வாய், 21 மார்ச், 2023

பரிசில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்! - 140 பாடசாலைகள் மூடப்படுகிறது

ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தைத் அடுத்து, வரும் வியாழக்கிழமை பரிசில் 140 பாடசாலைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து இடம்பெறும் இந்த வேலை நிறுத்தத்தை அடுத்து, பரிசில் உள்ல 645 ஆரம்ப பாடசாலைகளில் 140 பாடசாலைகள் மூடப்படுகின்றன. 70 வீதமான ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
வேலை நிறுத்தத்தோடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் ஆசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பகல் 2 மணி அளவில் Place de la Bastille பகுதியில் போராட்டக்காரர்கள் ஒன்றினைய 
தீர்மானித்துள்ளனர். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 20 மார்ச், 2023

பிரித்தானியாவில் நிர்வாண குளியல் அமர்வுக்கு தடை விதித்துள்ளது

பிரித்தானியாவில் ”டர்கிஷ் பாத்ஸ்” எனப்படும் விக்டோரியன் ஸ்பா(Victorian spa) வளாகத்தில் நிர்வாண குளியல் அமர்வுகளில் தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருந்தது.
அதனை தொடர்ந்து விக்டோரியன் ஸ்பா(Victorian spa) வளாகத்தில் நிர்வாண குளியல்களுக்கு பிரித்தானிய நகரம் 
தடை விதித்துள்ளது.
ஹாரோகேட் டர்கிஷ் ஸ்பாவில் (Harrogate Turkish Baths) உள்ள விக்டோரியன் வசதி எனப்படும் வரலாற்று சிறப்புமிக்க குளியலறைகளில் ஆண்களும் பெண்களும் குளியல் அமர்வுகளுக்கு 
அனுமதிக்கப்படுகின்றனர். 
இந்த குளியலின் போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் குளியல் உடைகள் தேவைப்படுவது இல்லை.ஆனால்  டர்கிஷ் பாத்ஸ் ஹாரோகேட்டில் அதிகரித்து வரும் தகாத நடத்தை பற்றிய புகார் தொடர்ந்து, பிரித்தானிய நகரம் ஒற்றை பாலின குளியல் அமர்வுகளுக்கு 
தடை விதித்துள்ளது.
இதன்மூலம் அனைத்து குளியல் அமர்வுகளிலும் நீச்சலுடைகள் இப்போது கட்டாயம் என்று செயல்பாட்டு முடிவு 
எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹாரோகேட் கவுன்சில் அறிக்கையில், "எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களை நாங்கள் கவனிக்க வேண்டிய கடமை உள்ளது.
மேலும் அனைத்து ஒற்றை பாலின அமர்வுகளும் பாதுகாப்பான சூழலில் செயல்பட, மறு அறிவிப்பு வரும் வரை நீச்சல் உடைகளை அணிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது." என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாரோகேட் அதன் டர்கிஷ் குளியல் பகுதிகளுக்கு 120 ஆண்டுகளாக வெகு தொலைவில் உள்ள மக்களை அதிகமாக 
ஈர்த்து வருகிறது.
இந்த குளியல் அமர்வை பார்வையிட 16 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாக பின்பற்றப்பட்டு
 வருகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
ஞாயிறு, 19 மார்ச், 2023

நாட்டில் சிறியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த பிரதேசங்களில் சிறியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மெக்னிரியூட் அளவு கோளில் 3 ரிக்டர் அளவில் புவியர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் 
தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிரிந்த பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் 
குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 18 மார்ச், 2023

சுமார் நாற்பது அரச நிறுவனங்களை இலங்கையில் மூட திட்டம்

இலங்கையில் சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.  
பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக 
அவர் கூறினார். 
செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க 
தெரிவித்தார். 
இவ்வாறான நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது, அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டார். 
குறித்த நிறுவனங்களை நிதியமைச்சின் கீழ் கொண்டு வந்து, தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 17 மார்ச், 2023

குலபடா கிராமத்தில் தலை மற்றும் வாயின்றி பிறந்த விசித்திரக் குழந்தை;

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தலை மற்றும் வாய் இல்லாத அபூர்வ மற்றும் விசித்திரமான குழந்தை 
ஒன்று பிறந்துள்ளது.
மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சரஸ்கானா பிளாக்கிற்கு உட்பட்ட குலபடா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் பெற்றோர் சுடாமணி ஹன்ஸ்தா (Chudamani Hansda) மற்றும் பப்லு மகாரானா (Bablu Maharana) என அடையாளம் 
காணப்பட்டனர்.
ஆதாரங்களின்படி, சுடாமணி பிரசவ வலியால் துடித்ததை அடுத்து ஆம்புலன்ஸில் பாங்கிரிபோசி மருத்துவமனைக்கு அழைத்துச் 
செல்லப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் வாகனத்திலேயே அவர் தனது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
குழந்தை வாயும் தலையும் இல்லாமல் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. சுடாமணி பாங்கிரிபோசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன்போது தலையின்றி குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 16 மார்ச், 2023

தலைநகர் பாரிஸ்சில் குவிந்த குப்பைகளால் குறைக்கூறும் சுற்றுலாப்பயணிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் குப்பைகள் நிறைந்த நகரமாக மாறியுள்ளது. பாரிஸிற்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது பலரின் 
கனவாக இருக்கலாம்.
ஆனால் அந்தக் கனவு நகரம் தற்போது குப்பைகள் நிறைந்த நகரமாக உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர சபை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
இந்நிலையில் குப்பைகளைச் சேகரிக்கும் நகர சபை ஊழியர்கள் கடந்த வாரத்திலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். எதிர்வரும் திங்கட்கிழமை வரை வேலை நிறுத்தம் நீடிக்கும் என தெரியவந்துள்ளது.
அதனால் நகரின் நடைபாதைகளில் 6,600 டன் குப்பைகள் கிடக்கின்றன. பிரான்ஸில் ஓய்வு வயதை 57லிருந்து 59க்கு உயர்த்தும் மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சம்பள உயர்வு கேட்டும் பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்கும் குப்பைகள் நிரம்பிக் கிடப்பதால், ஒரு சில சுற்றுப்பயணிகள் துர்நாற்றம் குறித்துக் குறை கூறுகின்றனர். இன்னும் சிலர் அது ஆரோக்கியமான ஜனநாயகத்தைக் குறிப்பதாகத் தெரிவித்தனர்.  


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

புதன், 15 மார்ச், 2023

டெல்லி பொலிஸ் சைபர் குற்றங்களைத் தடுக்க ட்ரூகோலர் செயலியுடன் ஒப்பந்தம்

 

சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ‘ட்ரூகோலர் செயலி’ நிறுவனத்துடன் இந்தியாவிலுள்ள டில்லி பொலிஸ்
 ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து டில்லி பொலிஸ் சிறப்பு ஆணையர் சஞ்சய் சிங் கூறியதாவது, ட்ரூகோலர் செயலி ஒரு ஐடி சரிபார்ப்பு தளமாகும். தற்போது இணைய வழி மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.
இந்நிலையில் செல்போன் மூலமாக இணைய வழி மோசடிகள் மிக அதிக அளவில் நடைபெறுகின்றன. அதனை கட்டுப்படுத்தும் விதமாக ட்ரூகொலர் செயலியுடன் டெல்லி பொலிஸ் ஒப்பந்தம் 
செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி மோசடி அல்லது பிற பதிவு செய்யப்பட்ட சிக்கல்கள் தொடர்பாக புகார்களை பெற்ற டில்லி பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தொலைபேசி எண்களை இனி ட்ரூகோலர் 
செயலி காண்பிக்கும்.
எந்த வித புகாரிலும் சிக்காத உண்மையான அழைப்பாளர்களுக்கு பச்சை பேட்ஜ் மற்றும் நீல டிக் வழங்கப்பட்டு இவர்களுக்கு அரசாங்க இலட்சிணையும் வழங்கப்படும். மேலும், செல்போனில் மோசடி அழைப்புகள் வந்ததுமே எச்சரிக்கை அறிவிப்பு வரும் வகையில் ஒப்பந்தம் 
போடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
செவ்வாய், 14 மார்ச், 2023

ஜெர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்

ஜெர்மனியில், ஊதிய உயர்வு வழங்கக்கோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், விமான 
சேவை முடங்கியது.
இதனால் இரவு நேரம், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்றுவதற்கு கூடுதல் ஊதியம் வழங்கக் கோரி, பெர்லின், பிரிமென், ஹம்பெர்க் விமான நிலைய ஊழியர்கள் வேலை 
நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தலைநகர் பெர்லினில் மட்டும் 200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 45,000 பயணிகள் பாதிப்புக்கு 
உள்ளாகினர்.
மேலும் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்கு, விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 13 மார்ச், 2023

ஏழு வாரங்களில் சென்னையில் சுமார் ரூ.6 கோடி அபராதத்தல் வசூல்

சென்னையில் கடந்த ஏழு வாரங்களில் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டிய வழக்குகளில் சுமார் 6 கோடி ரூபாய் 
அபராதம் வசூல்
அபராதம் செலுத்தாதவர்களின் வாகனம் மட்டுமின்றி அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறக்கப்படும் என போலீசார் தகவல்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
ஞாயிறு, 12 மார்ச், 2023

கொரோனா மீண்டும் பரவும்அபாயம்: எதனால் தெரியுமாஆராய்ச்சியில் அதிர்ச்சி

அமெரிக்கா - நியூயார்க் நகரத்தில் எலிகள் கொரானா தொற்றால் அதிகம் பாதிக்கப்படலாம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கன் சொசைட்டி பார் மைக்ரோபயாலஜியின் இதழில் வெளியான அறிக்கையில் நியூயார்க் நகரின் எலிகள் 3 விதமான கொரானா தொற்றால் பாதிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 9ம் திகதி வெளியான அறிக்கையில் அமெரிக்க நகரிலுள்ள எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வில் SARS-CoV-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரோன் வகை கொரானா வைரஸ் எலிகளுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் கழிவுநீர் பாதையிலுள்ள எலிகளுக்கு இந்த வகை கொரானா வைரஸ் வர வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
உயிரியலாளர்கள் 79 எலிகளில் 13க்கு நேர்மறை சோதனை செய்ததைக் கண்டறிந்துள்ளனர். எங்கள் கண்டுபிடிப்புகள் எலி மக்கள் தொகையில் SARS-CoV-2 ஐ மேலும் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தைக் 
கூறுகின்றன,
வைரஸ் விலங்குகளில் புழக்கத்தில் உள்ளதா மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனையாக உருவாகிறதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டத்திலிருக்கிறோம் என மருத்துவர் 
வான் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக, இந்த இடத்தில் எங்கள் ஆராய்ச்சி மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்களில் விலங்குகள் ஒரு பங்கைக் கொண்டிருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது, எனவே மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று
 தெரிவித்துள்ளார்.
எனவே இதன் மூலம் பொதுமக்களுக்கு எலிகள் மூலம் கொரானா தொற்று பரவும் அபாயம் இருக்கிறது என இந்த ஆராய்ச்சி
 தெரிவிக்கிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>Blogger இயக்குவது.