திங்கள், 28 பிப்ரவரி, 2022

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்க்கு பூநகரியில் நேர்ந்த சோகம்

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை காந்திபுரத்தை சேர்ந்த பொலிஸ் கொஸ்தாபலான கணேசரட்ணம் ஹரிகரன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தரான கல்முனையை சேர்ந்த ஆர். லிகிதன் என்பவரே படுகாயமடைந்துள்ளார். மன்னாரில் பணி புரியும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணி நிமித்தம் யாழ்ப்பாணம் வந்து விட்டு , மன்னார் நோக்கி திரும்பும் வேளை பூநகரி – சங்குப்பிட்டி பாலம் கடந்து சற்று தொலைவில் , இராணுவ சோதனை சாவடிக்கு அருகில் அவர்கள் பயணித்த மோட்டார்
சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்தது வீதியோர கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. அதில் இருவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மற்றையவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி மக்களின் காணிப் பிரச்சனைகளுகு தீர்வு

இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் எந்த ஒரு பகுதியிலும் வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாகக் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். வன்னி மாவட்ட காணி பிரச்சனைகள் தொடர்பான நடமாடும் சேவை ஒன்று வவுனியாவில்.27-02-2022. இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு 
கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன, மத வேறுபாடில்லாமல் வடபுலம், தென்புலம் என்ற பேதங்கள் இல்லாமல் இந்த காணி தொடர்பான விடயங்களையும், பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இங்கு வாழ்கின்ற பொதுமக்கள் என்ற வகையில் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு இந்த நாட்டிலே எந்த ஒரு
இடத்திலும் குடியிருப்பதற்கும், வீடொன்றைக் கட்டுவதற்கும், வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கும் உரித்து இருக்கின்றது. இந்த விடயத்தில் எந்த வேறுபாடுகளும் பார்க்க முடியாது. அனைவருமே 
சமமாக மதிக்கப்பட வேண்டும். காணி என்ற விடயம் மிகவும் முக்கியமானது. அதன் ஆவணங்கள் என்பது ஒருவரது வாழ்வின் பல்வேறு தேவைகளுக்கு முக்கியமாகக் காணப்படுகின்றது.
வடக்கு மக்களை நாம் கவனிப்பதில்லை என்ற குறைபாடு சொல்லும் கருத்துக்களும் உண்டு. அந்தக்கருத்துகளுக்கு ஒருபோதுமே இடமில்லை. காணி பிரச்சனைகளை தீர்ப்பதற்கான இந்த நடமாடும் சேவை முதன் முதலில் வடபிரதேசத்தில் ஆரம்பித்து வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மொழியிலே உங்களோடு உரையாட முடியாததையிட்டு மனவருத்தம் அடைகின்றேன். அனைவருக்கும் 
பிரச்சினைகள்
இருக்கின்றன. அவற்றை நாம் இனம்கண்டு அதனைச் சாதகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக வருகைதந்த உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>சனி, 26 பிப்ரவரி, 2022

உங்கள் வீட்டில் இந்தச் செடி இருந்தால் குடும்பத்தில் மன உளைச்சல் இருக்குமாம்

ஒரு குடும்பத்தில் நாலைந்து பேர் இருந்தால் அதில் எல்லோருமே மன நிம்மதியுடன் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. யாருக்காவது மன உளைச்சல் பிரச்சனை நிச்சயம் இருக்கத்தான் செய்யும். 
ஆனால் இந்தச் செடி உங்கள் வீட்டில் இருந்தால் மன உளைச்சலில் இருந்து மீள முடியாத துயரத்தில் யாராவது ஒருவர் நிச்சயமாக இருப்பார்கள் என்று உறுதியாகக் கூறலாம். அந்த அளவிற்கு பிரச்சினையை உண்டு பண்ணக்கூடிய அந்த செடி என்ன செடி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து
 கொள்ள இருக்கிறோம்.
குடும்பத்தில் இருக்கும் குழப்பங்களுக்கு பெரும்பாலும் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் காரணமாக இருக்கிறது. வீட்டை எப்போதும் சுத்த பத்தத்துடன், நறுமணமாக வைத்துக் கொண்டால் நிச்சயம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீண்ட காலம் தாங்க முடியாது. அதனால் தான் முந்தைய காலங்களில் எல்லாம் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சொன்னார்கள்.
ஆனால் பெரும்பாலும் இப்போது வாரம் ஒருமுறை செய்வதற்கு கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களின் ஆதிக்கம் பெறத் துவங்கி உள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ,சச்சரவுகளும், மனநிம்மதி இல்லாமல் பிரிவுகளும் ஏற்படுகிறது. இந்த பிரிவுகள் ஏற்படாமலிருக்க கட்டாயம் இறைவழிபாடு 
அவசியம்.
எதிர்மறை ஆற்றல் பெருகுவதற்கு இறைவழிபாடு குறைவது மட்டும் காரணம் அல்ல, நம் வீட்டில் இருக்கும் சிறு சிறு விஷயங்கள் கூட அதற்கு காரணமாக அமையும். அந்த வகையில் உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் வீட்டில் இரவு நேரங்களில் ஈரமான துணிகளை வைத்திருப்பது, கதவு, ஜன்னல் போன்றவற்றில் சத்தம் வருவது, இரும்பு பொருட்கள் அதிகம் சேர்ப்பது, பேச்சில் நல்ல வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது
 போன்றவையும் அடங்கும்.
கெட்ட வார்த்தைகளைப் பேசும் இல்லத்தில் நிச்சயம் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும், எனவே வார்த்தைகளில் இனிமை தேவை. அது மட்டுமல்லாமல் வீட்டை சுற்றிலும் நாம் வளர்க்கக்கூடிய செடிகள் பசுமையாக இருக்க வேண்டும். வாடிய செடி அல்லது முட்கள் நிறைந்த செடி போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ரோஜா 
செடியிலும் முட்கள் இருக்கத்தானே செய்கிறது? அதையும் 
தவிர்த்து விட வேண்டுமா? என்றால் இல்லை,
 முழுமையாக முட்கள் 
இருக்கும் கள்ளிச் செடி போன்ற அமைப்பில் இருக்கும் குரோட்டன்ஸ் செடிகளை அகற்றி விட வேண்டும். அது மட்டுமல்லாமல் வீட்டின் சுவர்களில் முளைத்திருக்கும் சிறு சிறு செடிகள் கூட குடும்பத்தில் எதிர்மறை ஆற்றல் உண்டு பண்ணும்.
எனவே வீட்டை சுற்றிலும் சுவர்களில் எங்காவது செடிகள் வளர்ந்து இருக்கிறதா? என்பதைப் பார்த்து அதனை அகற்றி விட வேண்டும். அதுமட்டுமல்லாமல் வீட்டின் பின்புறத்தில் காய்ந்து போன செடிகள் இருக்கக் கூடாது. காய்ந்து போன வாடியிருக்கும் செடிகள் இருக்கும் இல்லத்தில் இது போல பிரச்சனைகளும், சந்தேகங்களும், சண்டை, 
சச்சரவுகளும் அதிகரிக்கும். எனவே வீட்டை சுற்றிலும் இருக்கும் வாடிய செடிகளை வேரோடு அகற்றி ஓடும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். நீங்கள் வளர்க்கும் வீட்டு செடிகளை கூட எப்போதும் 
வாடி விடாமல் பூத்துக் குலுங்குமாறு பாதுகாத்து வளர்க்க வேண்டும். செடிகள் பசுமையாக செழிக்க வளரும் பொழுது உங்கள் இல்லத்திலும், எண்ணத்திலும் பசுமை மேலோங்கும்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


வியாழன், 24 பிப்ரவரி, 2022

தீவிரமாகும் .உக்ரைன் மீது போர்! சரணடைந்து வரும் ராணுவ வீரர்கள்

இந்நிலையில், ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில், கார்கிவ் நகரம் அருகே உள்ள உக்ரைனின் விமானத்தளம் தீப்பற்றி எரிந்தது. தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதால், 
உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்து வருகின்றனர். இத்தகவலை ரஷ்ய ராணுவம் தற்போது 
தெரிவித்துள்ளது. 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>உதவிக்கரம் நீட்டும் மோல்டோவா மக்கள்-உக்கிர தாக்குதலால் பீதியில்

உக்ரைன் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதனால், உக்ரைன் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
பலர் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மோல்டோவா நாட்டின் அதிபர் மைய சண்டு, உக்ரைன் மக்களுக்கு
 உதவிக்கரம் நீட்டியுள்ளார். 
ரஷியா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என்று மோல்டோவாவின் அதிபர் 
அறிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார். 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>புதன், 23 பிப்ரவரி, 2022

நாடு முழுவதும் ஆக்கிரமிக்கப்போகும் ஆயுதம் தாங்கிய இராணுவப் படைகள்

நாடு முழுவதும் 22-02-2022.அன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனக்கு 
வழங்கப்பட்டுள்ள
அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம் கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல், அநுராதபுரம், 
பொலன்னறுவை,
பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களில் பொது அமைதியைப் பேணுவதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான சுமார் 300 தனியார் பேருந்துகள் இரத்து

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான சுமார் 300 தனியார் பேருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படும் மாகாணங்களுக்கிடை யிலான தனியார் பேருந்துகள் சுமார் 3,200 உள்ளதாகவும், அவற்றில் சுமார் 2,000 பேருந்துகள் தற்போது இயங்கி 
வருவதாகவும் அதன் தலைவர் சரத் விஜித குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
2,000 பேருந்துகளில் இதுவரை 300 ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த நிலை தொடருமானால் பேருந்துகளை இயக்க முடியாமல் பயணிகள் கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்
 எனவும் கூறினார்.
அதேசமய்ம் சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங் களில் வழமையான டீசல் இல்லை எனவும் சுப்பர் டீசலை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் சரத் விஜித குமார 
தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு கடல்சார் கண்காணிப்பு விமானங்களை இலவசமாக வழங்கும் அமெரிக்கா

இரண்டு கடல்சார் கண்காணிப்பு விமானங்களை இலங்கை அரசாங்கத்துக்கு இலவசமாக வழங்க அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை விமானப்படை  21-02-2022.அன்று
 தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படை மூலம் இயக்கப்படும் வெளிநாட்டு இராணுவ விற்பனை ஒப்பந்தத்துக்கு அமையவே விமானங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் முதல் விமானம் 2022 இன் பிற்பகுதியில் அல்லது 2023 இன் முற்பகுதியில் விமானப்படைக்கு வழங்கப்படும் என விமானப்படை பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் வேண்டுகோளுக்கமைய, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் கடல்சார் கண்காணிப்பு திறனை வலுப்படுத்துவதற்காக 2 விமானங்களை விமானப்படைக்கு வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் 
குறிப்பிட்டார்.
டெக்ஸ்ட்ரான் ஏவியேஷன் தயாரித்த பீச்கிராஃப்ட் 360ஈஆர் இரட்டை-டர்போபிராப் விமானத்தை விமானப்படை கோரியிருந்தாகதத் 
தெரிவித்தார்.
இது அமெரிக்காவிலுள்ள ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு முகவரகம் ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்ட இலகுரக போக்குவரத்து விமானமாகும் என்றும் 
அவர் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
திங்கள், 21 பிப்ரவரி, 2022

வெளிநாடு செல்ல யாழில் இருந்து முற்பட்ட 16 பேருக்கு நேர்ந்த நிலை

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 28 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (20-02-2022) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டவர்களில் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி 
செய்ப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

இ.போ.ச சாரதியை தாக்க யாழில் முயன்ற தனியார் போக்குவரத்து சாரதி

யாழில் பயணிகள் முன்னிலையில் இ.போ.ச சாரதியை தாக்க முயன்ற தனியார் போக்குவரத்து சாரதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பருத்தித்துறை நோக்கிப் புறப்பட்ட 750 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மீதே அச்சுவேலி பேருந்து நிலையத்தில் வைத்து இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நோக்கிப் பயணித்த பயணிகளும், அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகளும் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் அச்சுவேலி நகர்ப் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திற்கு சென்றதை அடுத்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த நபர் அங்கிருந்து விலகிச் சென்றதாகவும் 
கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>நாட்டில் காட்டுப் பகுதியில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்

காலி – பத்தேகம பகுதியில் உள்ள 45 அடி கொண்ட கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் விழுந்துள்ளார்.பென்சில் செய்ய பயன்படுத்தப்படும் கனிய கரி எடுக்கும் சுரங்கம் ஒன்றிலேயே குறித்த பெண் விழுந்துள்ளார்.50 வயதான பெண் ஒருவர் இவ்வாறு
விழுந்துள்ளதாகவும், தற்போது அவர் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில், இன்று காலை பத்தேகம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>சனி, 19 பிப்ரவரி, 2022

நாட்டில் சந்தைகளில் நடக்கும் பயங்கரமான தில்லு முல்லு

நாட்டில் இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை, சுகாதார அமைச்சின், உணவு தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்படவுள்ளது. இரசாயன
 திரவியங்களைப் பயன்படுத்தி,
மெனிங் சந்தையில் வாழைப்பழங்கள் பழுக்கவைக்கப்படுகின்றமை தொடர்பான தகவல் இதன்போது வெளியிடப்பட்டது. இது குறித்து, சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை உள்ளிட்ட சில நிறுவனங்கள், நேற்றைய தினம் கூடி ஆராய்ந்தன. 
இந்த விடயம், உணவு தொடர்பான சட்டத்தின் கீழ் உள்ளபோதிலும், குறித்த குற்றச் செயலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக இதுவரையில் தண்டனை விதிக்கப்படவில்லை என இதன்போது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தினால், தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றும், நுகர்வோர் விவகார அதிகார
சபையிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டது. இதேநேரம், பொருளாதார மையங்களில் பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்ற முறைமை குறித்து அறிக்கை கோருவதற்கும், இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்காலத்தில் அரச நிறுவனங்களைத் தெளிவுபடுத்தி, பொதுமக்களுக்குரிய வழிகாட்டலை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டதாக நுகர்வோர் 
விவகார இராஜாங்க
அமைச்சு கூறியுள்ளது. இவ்வானான மோசமான செயற்பாடுகள் காரணமாக இரசாயன பொருள் கலந்த பழங்களை சாப்பிடும் மக்கள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

நாட்டு மக்களுக்கு கிடைக்க போகும் 10 இலட்சம் ரூபா பணம் இவர்களுக்கு மட்டுமே

வரலாற்று சிறப்புமிக்க ரம்புக்கனை தளிவல விஹாரையில் தங்க கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சரியான தகவலை வழங்குபவருக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என விகாரையின் பிரதமகுரு புஸ்ஸல்லா ஆரியவன்ச தேரர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தங்கம் மற்றும் வெண்கல கலசங்கள், ஊதா மற்றும் வெள்ளை படிக பெட்டிகள் இரண்டு, நினைவுச்சின்னங்களைக் கொண்ட ஒரு பளிங்கு பெட்டி, தங்க சுவடுகள் ஐந்து, பெட்டியிலுள்ள ஒரு கலசம்
ஆகியவை 11ஆம் திகதி இரவு திருடப்பட்டுள்ளன. இவை திருடப்பட்டு இன்றோடு ஐந்து நாட்கள் கடந்துள்ளன. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இது தொடர்பாக எந்தவித தகவலும் இன்னும் கிடைக்கவில்லை. இவை அனைத்தும் விலைமதிப்பு மிக்கவையாகும். 2300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த 
சொத்துக்களாகும். 
இது தொடர்பில் யாராவது தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பரிசோதகர் ஜயசேகரவை 071 5894924 அல்லது 070 2542162 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும். அல்லது எனது தொலை பேசி இலக்கத்துக்கும் 071 6920275 தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல்களை வழங்குபவர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என 
சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


வியாழன், 17 பிப்ரவரி, 2022

நிதி நிறுவனமொன்றிற்கு யாழில் செருப்படி கொடுத்து மாஸ் காட்டிய தமிழ் இளைஞன்

யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவத்தில், தனது தாய்மொழி தமிழ் என இளைஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது. யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில் வாகன விபத்து காப்புறுதிக்கு படிவம் பெற சென்ற இளைஞருக்கு சிங்கள
 மொழியிலான படிவம்
வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை நிராகரித்து, தனக்கு தமிழ் மொழியிலான படிவத்தை வழங்கும்படி கேட்டுள்ளார். அத்துடன், சிங்கள மொழியிலான படிவத்தின் மேல், ‘எனது தாய் மொழி தமிழ். தமிழ் படிவம் வழங்கவும் என்றும் அந்த குறிப்பிட்டுள்ளார். இது குறித்த அவ் இளைஞன் வெளியிட்ட 
முகநூல் பதிவில்,
சிறிய வாகன விபத்து ஒன்றிற்காக claim எடுப்பது தொடர்பாக யாழில் உள்ள ஒரு insurance நிறுவனத்திற்கு சென்ற போது பொலிஸ் ரிப்போட் எடுக்க வேண்டும். இந்த படிவத்தை நிரப்பி கொண்டே பொலிஸ்ல ரிப்போட் எடுத்திட்டு வாங்க என்று சொல்லி அங்கே வேலைக்கு நிற்கும் பெண் 
இந்த படிவத்தை தந்தார்.
நான் கேட்டன் உன்ட தாய்மொழி தமிழ் என்ட தாய்மொழி தமிழ் யாழ்ப்பாணத்தில நிர்வாக மொழி தமிழ். ஆனால் நீங்கள் தந்திருக்கும் இந்த படிவம் என்ன மொழி முடிந்தால் கொழும்பில் உள்ள 
உங்களுடைய கிளையில் தமிழ் படிவத்தை கொடுத்து இதை நிரப்பி கொண்டு போய் கொடுக்க சொல்லி ஒரு சிங்களவரிடம் கொடுக்க முடியுமா தமிழ் படிவத்தை என செருப்படிக் கேள்விகளைக் கேட்டதாக கூறியுள்ளார்.
அத்துடன் தனியார் நிறுவனமாக இருந்தாலும் இங்கே உங்கள் சேவை தமிழர்க்கு தான் வழங்குகின்றீர்கள் எனவும் அவ் இளைஞர் கூறியதுடன், ஒரு தமிழ் படிவம் தயாரித்து தமிழர்களிடம் கொடுக்க முடியாமல் நீங்கள் எல்லாம் என்ன செய்கின்றீர்கள் எனவும் அவர் காட்டமாக 
பதிவிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>புதன், 16 பிப்ரவரி, 2022

மன்னாரில் கையடக்க தொலைபேசி உதவியுடன் உயர்தர பரீட்சையை எழுதிய அதிபர் மகன்

மன்னார் அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில்கையடக்க தொலைபேசி உதவியுடன் உயர்தர பரீட்சையை எழுதிய அதிபர் மகனின் செயல் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மன்னார் – மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் பாடசாலை அதிபரின் மகன் பாடசாலை பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் சென்று ஒரு ஆசிரியரின் 
உதவியுடன் பரீட்சை எழுதும் போது அகப்பட்டுள்ளார். . மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்தின் தற்போதைய க.பொ.த அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகி உயர்தரப் பரீட்சைகள்
 நடத்தப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக உயர்தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சைகள் காணப்பட்டன. இதன்போது அடம்பன் மத்திய அதிபர் மகா வித்தியாலயத்தின் புதல்வர் பாடசாலையில் உயர்தரப் பரீட்சைக்காக வெளியில் வருகிறார். இந்நிலையில், 
கணிதத் தேர்வின் போது, ​​பள்ளி முதல்வரின் மகனான மாணவன், தேர்வு அறைக்குள் மறைத்து வைத்திருந்த மொபைல் போனை வெளியே எடுத்தான்.
இந்நிலையில், தனிப் பள்ளியின் தேர்வுக் கூடத்தில் பணியில்
 இருக்க வேண்டிய ஆசிரியர் ஒருவர், கணிதப் பாடத்திற்கான தேர்வு வினாத்தாளை செல்போனில் புகைப்படம் எடுத்து 
ஆசிரியை ஒருவருக்கு அனுப்பி, ஆசிரியர் எடுத்துச் சென்றுள்ளார். பதில் அளித்து வாட்ஸ்அப் மூலம் மாணவரின் அலைபேசிக்கு அனுப்பினார். அலைபேசியின் வாட்ஸ்அப் மூலம் வருவதாக கூறப்படும் கேள்விகளுக்கு மாணவ, மாணவியர் போனை பார்த்து தேர்வு வினாத்தாளில்
 பதில் எழுதுகிறார்.
இதன்போது, ​​பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர், மாணவர் தனது கைத்தொலைபேசியைப் பார்த்து விடை எழுதுவதை அவதானித்துள்ளார். உடனே ஆசிரியர் மாணவனை கையைப் பிடித்தார். இந்த விடயம் தொடர்பில் பரீட்சை திணைக்கள அதிகாரிகள், வலய கல்வி திணைக்கள அதிகாரிகள் மற்றும் அடம்பன் பொலிஸாருக்கு 
அறிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக தேர்வு கூடத்தை பார்வையிட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>திங்கள், 14 பிப்ரவரி, 2022

புறக்கோட்டை சந்தையில் உயிரை பறிக்கும் ஆபத்தான வாழைப்பழம்

கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தையில் பச்சை வாழைப்பழங்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
மிகவும் ஆபத்தான இரசாயனங்களைப் பயன்படுத்தி பச்சை வாழைப்பழங்கள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்படுவதாக 
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை மெனிங் சந்தையில் இடம்பெறும் இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் எந்தவொரு அதிகாரியும் இதுவரையிலும் அவதானம் செலுத்த வில்லை என தெரியவந்துள்ளது.
முதலில் பச்சை நிறத்தில் காணப்படும் வாழைத்தார்களுக்கு மிகவும் ஆபத்தான இரசாயனத்தை தெளித்து அதனை தொங்க விடுவதாகவும் இரண்டு மணித்தியாலங்களில் வாழைக்காய் வாழைப்பழமாக மாறிவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.
ஊடகமொன்று வழங்கிய தகவலுக்கமைய அங்கு சென்ற அதிகாரிகள் இரசாயன போத்தல்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.
இது பொது மக்களின் உயிரை பறிக்கும் செய்களில் ஒன்று என உணவு தர நிலை பரிசோதிக்கும் அதிகாரி ஒருவர்
 தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல இடங்களில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மெனிங் சந்தையில் மொத்தமாக கொள்வனவு செய்யப்படும் வாழைப்பழங்கள் கொழும்பின் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நாடளாவிய ரீதியில்பணிப்புறக்கணிப்பை தொடரும் தொழிற்சங்கம்

நாடளாவிய ரீதியில் தாதியர், துணை மற்றும் துணை மருத்துவ சேவைகள் உட்பட சுகாதாரத் துறையைச் சேர்ந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணி நிறுத்தப் போராட்டம் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் 
மீறி 11-02-2022.அன்று  ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
தமது போராட்டத்துக்கான தடை உத்தரவு இன்னும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை என அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது
.தடை உத்தரவு கிடைத்தவுடன் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தை கூட்டி எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்..
அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய ஆகியோரின் தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரி கொழும்பு மாவட்ட 
நீதிமன்றம் 11-02-2022.அன்று மாலை இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்தது.
சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


நாட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளும் விசேட நடவடிக்கை

காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.சுற்றாடல் அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் அதேவேளையில், பெப்ரவரி 14 ஆம் திகதி ‘காதலுக்கு ஒரு மரம்’ என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது.
குறித்த மரம் நடும் திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுக்க கிறீன் யுவர்சிட்டி, இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம் மற்றும் இலங்கை அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து காலை 9.00 மணிக்கு நடத்துகின்றன.
கடந்த ஆண்டும் காதலர் தினத்திற்காக இதேபோன்ற மரம் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அன்றைய தினம் 50,000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்aபாடுகள் செய்யப்பட்டதாக அமைச்சகம் 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>Blogger இயக்குவது.