புதன், 2 பிப்ரவரி, 2022

நாட்டில் சுதந்திர தின நிகழ்வில் மீண்டும் தமிழில் தேசிய கீதம் இசைப்பது குறித்து அரசின் செய்தி.

சுதந்திர தின வைபவத்தின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய 
கீதம் பாடப்பட்டது.
இந்த நடவடிக்கை பல தரப்பினராலும் பெரும் வரவேற்பிற்கு உட்பட்டது.எவ்வாறிருப்பினும் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த நடைமுறை நீக்கப்பட்டது.இதற்கு பல தரப்பினராலும் கண்டனமும் , அதிருப்தியும் வெளியிடப்பட்டது.
எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.
இந்நிலையில் இவ்வருடமாவது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுமா என்று நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண, ‘அது குறித்த எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அதற்கு தற்போது என்னால் பதிலளிக்க முடியாது.’ என்று தெரிவித்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.