புதன், 30 நவம்பர், 2022

உயர் தரம் பாடசாலைகளில் (A/L) கற்பதற்கு மாணவர்களின் O/L பெறுபேறு எவ்வாறு அமையவேண்டும்

இலங்கையில் 
 O/L Pass என்பது 6 S ஆகும் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியும் இதுவாகும் ஒரு மாணவன் 6S பெற்றால் கணிதம் W எனில் 
அடுத்துவரும் 2 ஆண்டுகளுக்கிடையில் கணித பாடத்தில் S எடுத்தால் O/L Pass என்ற தகுதியினைப் பெறுவார் O/L 6 பாடம் Pass தமிழ் பாடம் W எனில் அடுத்து வரும் 1 வருடத்துக்கிடையில் O/L பரீட்சையில் S பெற்றால் அ
ம் மாணவன் O/L Pass இம் மாணவர்கள் பாடசாலையில் Vocational Stream இல்
O/L எல்லாப்பாடங்களிலும் W என்றாலும் கற்க முடியும் மாறாக 6 S எடுத்தாலும் ஏனைய Stream இல் கற்க முடியாது.
பாடசாலைகளில் இணைந்து A/L கற்பதற்கான நிபந்தனைகள் என்ன?
1. எந்த Stream இலும் கற்பதற்கான குறைந்த பட்ச நிபந்தனை O/L பரீட்சையில் 3 C உம் 3 S உம் ஆகும் இதில் கணிதமும் தமிழும் W இல்லாதிருத்தல் வேண்டும்.
2. Bio கற்பதாயின் கணிதம் தமிழ் உட்பட 3 C உம் 3 S உடன் விஞ்ஞான பாடத்தில் C அவசியமாகும்.
3. Maths கற்பதாயின் 3C, 3S உடன் கணித பாடத்தில் C அவசியமாகும் விஞ்ஞான பாடத்தில் S அவசியமாகும்.
4. Commerce கற்பதாயின் 3C, 3S உடன் அந்த C சித்தியில் வர்த்தகப் பாடம் அல்லது முயற்சியாண்மைக் கற்கை அல்லது கணிதம் அல்லது வரலாறு பாடத்தில் C அவசியமாகும்.
5. Arts கற்பதாயின் 3C, 3S அவசியமாகும் அல்லது கணிதம் தமிழ் Pass பண்ணி 2 C 4 S இருந்தால் 3 வது C இற்காக SBA இல் கணிதம் தமிழ் தவிர்ந்த ஏனைய S எடுத்த பாடத்தில் 3 இருந்தால் கலைப் பிரிவில் கற்க முடியும். எப்பாடத்தினையும் எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இடாப்பில் பெயரினை எழுதி A/L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பம் 
செய்ய முடியும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
செவ்வாய், 29 நவம்பர், 2022

இலங்கையில் வங்கி கணக்கிற்குள் இணையத்தளம் ஊடாக சட்டவிரோதமாக ஊடுருவி மோசடி

இலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் உள்ள, இரண்டு கணக்கிற்குள், இணையத்தளம் ஊடாக சட்டவிரோதமாக ஊடுருவி, ஒரு கோடி ரூபாக்கும் மேலதிக தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 37 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின், நிதி மற்றும் வணிகக் குற்ற விசாரணைப்பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, வாத்துவ, பிலியந்தலை, பண்டாரவளை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 22 - 36 வயதுக்கு இடைப்பட்ட, காலி, வெலிகம, ரத்கம, வாத்துவ மற்றும் பட்டியகெதர ஆகிய பிரதேசங்களைச் 
சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்க 
உத்தரவிடப்பட்டது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 28 நவம்பர், 2022

இலங்கையர்கள் கட்டாரில் 600 உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம்

கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மைதான கட்டுமானம், சாலை அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு 
உயிரிழந்துள்ளனர். 
6500க்கும் அதிகமானோர் உயிரிழப்பு இந்நிலையில், கட்டாரில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 22 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டுமாணப் பணியில் ஈடுபட்டிருந்த 6500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கார்டியன் நாளிதழ் 
குறிப்பிட்டுள்ளது
ரணத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், மாரடைப்பினால் அவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடகவியலாளர்களை தடுத்த அதிகாரிகள் 
இது தொடர்பில் ஆராயச் சென்ற பிபிசி ஊடகவியலாளர்கள் குழுவை கட்டார் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
ஞாயிறு, 27 நவம்பர், 2022

நல்லூர் மாவீரர் நினைவாலயம் பெருந்திரளான மக்கள் குவிந்தனர்

கண்ணீரால் நனைந்தது தமிழர் தாயக பகுதிகளில்.27-11-2022. இன்று மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நல்லூரில் வைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்து  தங்களது உரிமைக்காக 
குரல் கொடுத்து மாய்ந்து போன தமது மாவீரர்களை நினைத்து,  அகவணக்கம் செலுத்தி ஈகைச் சுடர் ஏற்றி  மலர் தூவி 
அஞ்சலி செலுத்தினர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 26 நவம்பர், 2022

நாட்டில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க யுனிசெப் புதிய அறிக்கை

கடந்த 80 ஆண்டுகளை போன்றல்லாது, 2022-இல் சிறுவர் நலன்சார் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என யுனிசெப்(UNICEF) அறிக்ககையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான நெருக்கடியை தவிர்ப்பதற்கு பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் இடங்கள் மற்றும் அது குறித்து பெற்றுக்கொள்ளக்கூடிய சேவை தொடர்பிலான தரவுகள் முறையாக இருக்க வேண்டுமெனவும் 
தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் “இந்த பொறிமுறை சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான திட்டமிடலையும் விரிவாக்கங்களையும் மேம்படுத்துவதற்கு உதவியாக அமையும்.
புதிய சட்டம்
புதிய சட்டத்தில் சிறுவர்களுக்கான பாதுகாப்பும் வலுபடுத்தப்பட வேண்டும். அத்தோடு குடும்பங்களை வலுவூட்டுவது தொடர்பிலும் கவனம் 
செலுத்த வேண்டும்.
இதனூடாக குழந்தைகளை தடுத்து வைத்தல், வேலைக்கமர்த்தலை முற்றாக நிறுத்த முடியும்
உறுதியான சமூக சேவை, நீதிக்கான சமூகப் பணி ஆகியவை சிறுவர்களை இலங்கையில் பாதுகாப்பதற்கான சிறந்த பொறிமுறையாக இது காணப்படும்.
பொருளாதாரம், பொது நிதி மறுசீரமைப்பு

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 25 நவம்பர், 2022

நாட்டில் அஃப்லாடாக்சின் அதிகம்: சமபோஷ விற்பனைக்கு மொறவக்க நீதிமன்றம் தடை உத்தரவு

நாட்டில் சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொறவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகை உணவுகளில் அஃப்லாடாக்சின் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம்.இதன்படி, மொறவக்க பிரதேசத்துக்குட்பட்ட இப்பொருளின் விற்பனையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யுமாறும், தற்போது சந்தையில் உள்ள பொருட்களின் இருப்புகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இந்தப் பொருட்களைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியதில் அஃப்லாடோக்சின் அளவு அதிகமாக இருந்ததை வெளிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் அறிக்கை
 அளித்திருந்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வியாழன், 24 நவம்பர், 2022

யாழ் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் சரண்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அப்பாடசாலை மாணவனின்
 தந்தை 24-11-2022.இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண  காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
ஒஸ்மானியா கல்லூரிக்குள்.23-11-2022. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் 
பிரகாரம் காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததுடன் , சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும்
 முன்னெடுத்து இருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை சந்தேகநபர் யாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். அதேவேளை , சந்தேக நபரை கைது செய்யவேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் இன்றைய தினம் கற்பித்தல் செயற்பாடுகளை புறக்கணித்து இருந்தார்கள் என்பது 
குறிப்பிடத்தக்கது


புதன், 23 நவம்பர், 2022

நான் எவரும் தலையிடுவதை விரும்பவில்லை மத்திய வங்கி ஆளுநர்

அரசியலமைப்பின் பிரகாரம் பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் காணப்படுகின்ற போதிலும், நாட்டின் நிதிக்கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய வங்கிக்கே காணப்படுகிறது.
அதன் சுயாதீன தன்மையில் எவரும் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 
தெரிவித்தார்.
கொழும்பில் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரவு செலவு திட்ட விவாதத்தின் போது  மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுகிறது. பொருளதார நெருடிக்களுக்கு மத்திய வங்கியே காரணமென்றும் அதன் விளைவாகவே மக்கள் துன்பத்தினால் அவதிப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
நாட்டு மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் நிவாரணங்கள் சலுகைகளை மத்திய வங்கி வழங்க வேண்டும் என்கிறார்கள்.
இன்று நிதிக்கொள்கை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொள்கையின் பிரகாரம் வேறொருவரின் விவனாரத்தில் நான் தலையிட 
விரும்பவில்லை.
அதேபோன்று  சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் மத்திய வங்கி செயல்பட வேண்டும். அதன் நிதி  தொடர்பான முடிவுகளை பிறர் எடுப்பதை நான் விரும்பவில்லை.
ஆனால் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பாராளுமன்றம் மற்றும் மத்திய வங்கி இரண்டினதும் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு நிச்சயம் 
இருக்க வேண்டும்.
வரிகளை விதிக்கவும் செலவினை கட்டுப்படுத்தவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அதனால் தான் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்ஜெட்டை நிறைவேற்றுவதைப் பார்க்கிறீர்கள். வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.
அரசியலமைப்பிற்கமைய பொருளாதாரம் பாராளுமன்றத்திற்கு உரித்துடையது. எனினும் அனைத்து பலமும் காணப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கு பொது நிதி தொடர்பில் மாத்திரமே அதிகாரம் உள்ளது. மத்திய வங்கி தொடர்பில் சிலருக்கு புரிதல் குறைவாகவே 
உள்ளது என்றார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 22 நவம்பர், 2022

நாட்டில் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமா. வெளியான அறிவிப்பு

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது இரத்து செய்யவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க 
தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை நேற்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கூறியுள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
றித்த பிரதேசங்களில் இதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கு, இந்த கொடுப்பனவுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திங்கள், 21 நவம்பர், 2022

களுத்துறையில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தஆசிரியர் கைது

இலங்கை களுத்துறை தெற்கில் சில காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்துள்ளதுடன் 1,299 போதை மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர், களுத்துறையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வருவதுடன், மாவனெல்லையில் நிரந்தர வதிவிடமாக உள்ளதாகவும் 
தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 20 நவம்பர், 2022

இலங்கையில் O/L பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2023) ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sunil Premajayantha) தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விடுத்தார்.
O/L பரீட்சையை அடுத்த வருடம் ஏப்ரலில் நடத்த எதிர்பார்த்தாலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையால், மேலும் தாமதங்கள் தவிர்க்க முடியாதவை என்றார்.
பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானித்ததாக அமைச்சர் தெரிவித்தார்
உயர்தரப் பரீட்சை ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும் அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறும் எனவும்
 அவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 19 நவம்பர், 2022

ஓமானில் இலங்கைப் பெண்கள் துஸ்பிரயோகம் ;அதிர்ச்சித்தகவல்

வீட்டுப்பணிப்பெண்களாக சென்று ஓமானில் சிக்குண்டுள்ள இலங்கைபெண்கள் தூதரக அதிகாரிகளால் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் என பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது .
சம்பவம் தொடர்பில் ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பான இல்லமொன்றில் உளஉடல் பாதிப்புகளை எதிர்கொண்ட 90பெண்கள் தங்கியுள்ளனர். அந்த தங்குமிடம் ஒரு பெண்ணிற்கான அடிப்படை வசதிகளை கொண்டிருக்கவில்லை.
இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பெண்களில் சிலர் ஏலத்தில் விற்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் எதிர்கொண்ட மோசமானஅனுபவம் காரணமாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் துயரமளிக்கும் விதத்தில் அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படும் தங்குமிடத்திலும் அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நான் ஓமானிற்கு வந்து மூன்று 
வருடங்களாகின்றன நான் கடந்த மாதம் இங்கு வந்தேன் ஆனால் அவர்கள் நான் வெளியே செல்ல அனுமதிக்கின்றார்கள் இல்லை 
அதிகாரியிடம் எனது கடவுச்சீட்டும் டிக்கெட்டும் உள்ளது அவர் அவற்றை கிழித்துவிடப்போவதாக மிரட்டுகின்றார். அவர் என்னை தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கின்றார் .
நான் இங்கு யாரையும் காதலிக்க வரவில்லை நான் ஒரு மாதகாலமாக முடங்கியநிலையில் இருக்கின்றேன். அந்த அதிகாரி எனது ஆவணங்களை பரிசலீப்பதற்கு மறுக்கின்றார்.
ரிவித்துள்ளார்.
அதிகாரியொருவர் இருக்கின்றார் அவர் 1.5 மில்லியனிற்கு யுவதிகளை விற்பனை செய்கின்றார் அவர் பெண்களை பாலியல் நடவடிக்கைகளிற்காக கடத்துவதில் ஈடுபட்டுள்ளார்.
தொல்லைகொடுக்கும் அதிகாரி
இங்குள்ள அனைத்து பெண்களிற்கும் சமைத்து சாப்பிடுவதற்கு 10 கிலோ உணவையே அவர்கள் வழங்குகின்றனர். பெண்கள் பட்டினியால் அழும் தருணங்களும் உண்டு என சிக்குண்டுள்ள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது இரண்டு கழிவறைகள் உள்ளன ஒவ்வொன்றையும் 40 பெண்கள் பயன்படுத்துகின்றனர்.
அதற்கும் உரிய கதவுகள் இல்லை . குறிப்பிட்ட நபர் பெண்களை பாலியல் நடவடிக்கைகளிற்காக விற்கின்றார். அதோடு பல பெண்கள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் தகவலைகளை நான் ஊடகங்களிற்கு தெரிவிக்க முடியாது எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். ஏனையபெண்களும் பாதிக்கப்படுவதற்கு முதலில் அவர்களை மீட்கவேண்டும்.அங்கு தொடர்பாடல் 
வசதிகள் எதுவுமில்லை .
பல பெண்கள் பல மாதங்களாக தங்கள் குடும்பத்தினரை தொடர்புகொள்ளவில்லை இங்குள்ளவர்கள் தங்கள் பெண்பிள்ளைகள் இறந்துவிட்டார்கள் என கருதுகின்றனர் .
ஆனால் அவர்கள் பாலியல் நடவடிக்கைகளிற்காக விற்கப்பட்டுள்ளனர் முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் இதன் மூலம் கிடைக்கின்ற பணத்தை தங்கள் மத்தியில் பங்குபோட்டுக்கொள்கின்றனர் எனவும் அங்குள்ள பெண்களில் ஒருவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம்
 ஒன்று தெரிவித்துள்ளன .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 18 நவம்பர், 2022

மாணவர்கள் மீது கொழும்பில் பொலிஸாரால் கண்ணீர் புகை வீச்சு

 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்கும் வகையில், பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகம்
 நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு தாமரை தடாகத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்தே பொலிஸார் இந்த கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு பிளவர் வீதியிலும் பொலிஸார்
 போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்
 நடத்தியுள்ளனர். 
அத்தோடு, மாணவர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 
மாணவர் பேரவையின்
 அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 17 நவம்பர், 2022

இலங்கையில் கஞ்சா செடியை வளர்க்க ஜனாதிபதி ரணில் அனுமதி வழங்கியுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் கஞ்சா செடியினை வழர்ப்பதற்கு அனுமதியளித்துள்ளார். அதாவது பல நாடுகளில் போதைப்பொருளாக காணப்படும் கஞ்சாவினை வளர்க்க அனுமதித்ததனை எல்லோரும் ஆச்சரியமாக 
கருதுகின்றனர்.
அதாவது, கஞ்சாவானது அதிகளாவான மூலிகைகளை கொன்டு காணப்படுவதனாலும், இதனை வழர்ப்பதன் மூலமாக அதிகளவிலான வருவாயினை ஈட்ட முடியும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இந்த முன்மொழிவினை அறிவித்ததாக இராஜயங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

 

புதன், 16 நவம்பர், 2022

இரவிலும் பகலிலும் நடக்கும் அமெரிக்க ராணுவ தளத்தில் விமானப் பயிற்சிக்கு தடை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் உள்ள யோகோடாவில் அமெரிக்க ராணுவத்தின் விமானப்படைத் தளம் 
செயல்பட்டு வருகிறது. 
இந்த விமானப்படைத் தளத்தில் உண்டாகும் இரைச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு
 தொடர்ந்துள்ளனர். 
அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஒலி மாசுபாட்டிற்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும் அவர்கள் அளித்த புகார் மனுவில் 
கூறப்பட்டுள்ளது. 
இந்த ராணுவ தளத்தைச் சுற்றி சுமார் 5 முதல் 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ராணுவ தளத்தில் விமானங்கள் மூலம் ஏற்படும் இறைச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள், குறிப்பாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் 
தெரிவித்துள்ளனர். 
ஜப்பானில் செயல்பட்டு வரும் இந்த யோகோடா ராணுவ தளத்திற்கு எதிராக கடந்த 1976-ம் ஆண்டிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
அதனை தொடர்ந்து பல முறை வழக்குகள் தொடரப்பட்டதாகவும், தற்போது 14வது முறையாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 15 நவம்பர், 2022

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துமாறு நாடாளுமன்ற எதிர்க்கட்சி மற்றும் குழுக்கள் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும், குழுக்களும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துமாறு, தேசிய தேர்தல் ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வ கோரிக்கையை 
முன்வைத்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,15-11-2022. இன்று செவ்வாய்க்கிழமை காலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று கடிதம் ஒன்றை 
கையளித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் காங்கிரஸ், உத்தர லங்கா சபை, ஜனநாயக இடதுசாரி முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான சுயேச்சைக் குழு, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா 
முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முற்போக்கு கூட்டணி, நவ சமசமாஜ கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத முன்னிலை சோசலிஸக் கட்சி ஆகியவை இந்த கோரிக்கை கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன. 
தமது கூட்டுக் கோரிக்கைக்கு பதில் கிடைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதத்தில் 
எச்சரிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 14 நவம்பர், 2022

இங்கிலாந்துப் பூங்காவில் உலகின் கொடிய விஷமுள்ள தாவரம் வளர்க்கப்பட்டதால் அதிர்ச்சி

ஆமணக்கு வகையை சேர்ந்த ரிசினஸ் கம்யூனிஸ் என்றழைக்கப்படும் செடி, உலகின் கொடிய விஷமுள்ள தாவரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த செடியில் உள்ள சில பொருட்கள் கொடிய சயனைடை விட 6,000 மடங்கு ஆற்றல் வாய்ந்தது.உலகின் மிக நச்சு தாவரம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 
இந்த நிலையில், இங்கிலாந்தின் கோல்வின் பேவில் உள்ள குயின் கார்டன்ஸ் பூங்காவில் ரிசினஸ் கம்யூனிஸ் செடி இருப்பது 
தெரியவந்துள்ளது. 
குயின் கார்டன்ஸ் பூங்காவில் வளர்க்கப்படும் செடிகளுக்கு நடுவே அசாதாரணமான புதிய வகை செடி இருப்பதை அங்குள்ள ஒரு பெண்மணி கண்டார்.உடனே அவர் அங்குள்ள பணியாளர்களிடம் இது 
குறித்து கேட்டுள்ளார். அவர்கள் இதை ஆமணக்கு செடி எனக் கூறியுள்ளனர்.அந்த பெண் செடியை தனது மொபைல் கேமராவில் படம்பிடித்து இணையத்தில் அதை குறித்த தகவல்களை 
பார்த்துள்ளார். 
அதன் பின் தன்னுடைய கணவருக்கும் அந்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன் பின் அவருடைய கணவர் இந்த செடியில் உள்ள ஆபத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த தாவரங்களை கையுறைகளால் கையாள வேண்டும், அவற்றின் விதைகள் மற்றும் விதைகளின் நுகர்வு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறினார். 
பொதுமக்கள், குழந்தைகள் செல்லப்பிராணிகள் உலா வரும் பூங்காவில் இத்தகைய விஷச்செடி இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்துகொண்டார். பின் அதை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செடி இருக்கும் பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 13 நவம்பர், 2022

இலங்கை பெண்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லத் தடை உத்தரவு

இலங்கை யிலிருந்து சுற்றுலா விசாவினைப் பெற்றுக் கொன்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களினூடா மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கைப் பெண்கள் அங்கு பல்வேறு வகையான து
ண்புறுத்தல்களுக்கு 
ஆளாகுவதாகவும் இவ்வாறு செல்பவர்களை உடனடியாக தடைசெய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை 
எடுத்துள்ளது.
எனவே, இவ்வாறு சுற்றுலா வீசா மூலமாக சென்றவர்கள் அங்கு வேலையின்றி இருப்பதாகவும், அவர்களை எந்தவோரு நிறுவனமும் பொறுப்பேற்காதபடியினால் அவர்கள் தவறாக நடாத்தப் படுவதாக இலங்கை தூதரகங்கள் தெரிவிக்கின்றன. எனவே முறையான 
பயிற்ச்சியின்றி வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்பவர்களை தடைசெய்யுமாறு தொழில் அமைச்சுக்கு 
அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 12 நவம்பர், 2022

தனது கல்லீரலை இத்தாலியில் இறந்த பின் தானம் செய்த 100 வயது மூதாட்டி

இத்தாலியில் 100 வயது மூதாட்டி கல்லீரலை தானம் செய்த நிலையில், அவரது கல்லீரல் மற்றொரு நோயாளிக்கு வெற்றிகரமாக 
மாற்றப்பட்டுள்ளது.
அதேசமயம் முதிர்ந்த வயது கொண்ட ஒருவரிடம் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே 
முதல்முறை ஆகும்.
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்படுவதற்குச் சற்று முன்பே உறுப்பு தானம் செய்யவிருந்த முதாட்டி 
உயிர் இழந்தார்.
இதனையடுத்து உறுப்பு தானத்துக்காகக் காத்திருந்த ஒருவருக்கு அவரது கல்லீரல் வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு உறுப்பு தானம் வழங்கியவர்களில் ஆக முதியவர்களுக்கு வயது 97 ஆக உள்ளது. இந்த நிலையில் நூறு வயது மூதாட்டி உறுப்பு தானம் செய்த ஆக முதியவர் எனும் சாதனையைப் 
படைத்துள்ளார்.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

Blogger இயக்குவது.