செவ்வாய், 1 நவம்பர், 2022

விசேட திட்டம் இலங்கையில் அரச ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் அரச ஊழியர்களை இலக்கு வைத்து துவிச்சக்கரவண்டியில் பணிக்கு வருவதற்கான விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அரச ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் துவிச்சக்கரவண்டியில் பணிக்கு வருவதற்கான விசேட திட்டம் 
அறிமுகமாகியுள்ளது.
நேற்றைய தினம் அதாவது ஒக்டோபர் 31ஆம் திகதி ‘உலக நகரங்கள் தினத்தை’ முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வாக அரச ஊழியர்களிடையே சைக்கிளில் பயணித்தலை ஊக்குவிக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபை முன்னர் வெளியிட்டிருந்த அறிவிப்பில் மேலும், நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துவிச்சக்கரவண்டி மூலம் கடமைக்கு 
சமூகமளிக்க முடியும்.
துவிச்சக்கரவண்டிகளை வாங்குவதற்கு நிதி மற்றும் அவற்றை பாதுகாப்பாக நிறுத்த இடம் ஒதுக்கீடு உட்பட துவிச்சக்கரவண்டியில் கடமைக்குச் செல்லத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் எமது ஊழியர்களுக்கு செய்து கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“துவிச்சக்கரவண்டி வெள்ளி – துவிச்சக்கரவண்டியில் வேலைக்கு வாருங்கள்” (Cycle Friday – Come to work by bicycle) என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.