ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

இலங்கையின் புகழ்பூத்த ஈழத்து கலைஞன் திரு எஸ்.ஜே.சாந்தன் காலமானார்:

ஈழத்தின் புரட்சிப் பாடகர்  திரு எஸ்.ஜே.சாந்தன்  
26,02l 2017. வெள்ளிக்கிழமை  இன்று மதியம் 2.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி சாந்தன் காலமானார்: யாழ்.வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தது  யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சாந்தன் இன்று காலை மரணமாகியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், பின்னர் அவருக்கு நாடித் துடிப்பு காணப்படுவதாகவும் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் 
தெரிவித்திருந்தன.
இந்நிலையில், அவர்  இயற்கை எய்திவிட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக 
அறிவித்துள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி பழைய மாணவர்பொதுக்கூட்டம் 26.02.17 !

நுவரெலியா பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டத்திற்க்கான அழைப்பு  வாழ்வில் எல்லோருக்கும் மறக்க முடியாத அநுபவம் என்றால் அது அவர்களது பாடசாலை வாழ்க்கையே. கல்வி, விளையாட்டு சண்டைகள், அழகான இனபுரியாத அழகான  காதல்கள், அன்பான ஆசிரியர்கள், வாழ்வில் என்றும் மறக்க முடியாத நண்பர்கள் என அனைத்துமே வாழ்வின் பொக்கிசங்கள்!
அவ்வாறாக  நுவரெலியா ஹாவா எலியாவில் அமையப்பெற்றுள்ள பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி பல சாதனையாளர்களை உருவாக்கிய ஒன்றாக காணப்படுகின்றது.
குறிப்பாக மதிப்பிற்குறிய  திரு. புத்திரசிகாமணி,  திரு. முத்துசிவலிங்கம், திரு. கிசோக்குமார்,திரு. சதாசிவம், தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் திரு. இராதாகிருஸ்ணன், திரு. பந்துல செனவிரட்ன,
திரு. மாதவன், திரு. சசி மாதவன், திரு என்.கார்திக்,  திரு. அபேசிங்க,திரு. பெருமாள், திரு. உமாசந்திர, திரு. நேருஜி,  என சமூகத்தில் பெயர்  சொல்லக்கூடிய பல ஜாம்பவான்களையும், அரசியல்வாதிகளையும், கல்விமான்களையும், உருவாக்கிய பாடசாலையாக  நுவரெலிய பரிசுத்த திருத்துவ கல்லூரி காணப்படுகின்றது.
இதனை தாண்டி பல்வேறு மாணவர்கள் இன்று தனது குடும்ப வாழ்வில் சிறப்பாக வாழவும், சமூகத்தில் மதிப்புடன் வாழ்வதற்கான அடித்தளத்தினை இட்டு தந்த பாடசாலையாக பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி காணப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கையின் அனைத்து பாடசலைகளின் பழைய மாணவர்களை தத்தமது பாடசாலைக்கு வரவழைத்து அவர்களது இளமைக்கால மறக்க முடியாத அந்த பள்ளி நாட்களை மறுபடியும் ஞாபகமூட்டும் பழைய மாணவர்களை முதநிலைப்படுத்திய செயற்திட்டத்தினை லங்காபுரி செய்தி சேவை எதிர்வரும் காலங்களில் செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்ட பாடசாலையாக  நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியினை தெரிவு செய்துள்ளது. ஆகவே பழைய மாணவர்கள் தொடர்ந்தும் லங்காபுரி செய்தி சேவையுடன்  இணைந்திருக்கவும் உங்களுக்கான மேலதிக தகவல்கள் வந்தடையும்..
இத்தகவலை பகரிந்து உங்களது நண்பர்ளை மறுபடியும் நேரடியாக சந்திப்பதற்கான அழகான வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுங்கள்…
தற்போது இப்பாடசாலை பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டத்திற்க்கான அழைப்பு விடுத்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது..

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை?

பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதேபோல் பாகிஸ்தானிலும் காதலர் தினத்தை கொண்டாடி வந்தனர். இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு தடை விதிக்கக் கோரி
 இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்துல் வாகித் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். ‘‘காதலர் தினம் இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு எதிரானது.  எனவே காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘‘பாகிஸ்தானில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டது. காதலர் தின கொண்டாட்டத்தை நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு
 உடனடியாக எடுக்க வேண்டும். இந்த உத்தரவை
 அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அரசு மட்டுமின்றி ஊடகங்கள், பத்திரிகைகளிலும் காதலர் தின கொண்டாட்டத்தை ஊக்குவிக்காமல் தவிர்க்க வேண்டும் என்றும்
 அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>காதலர் தின கொண்டாட்டம் அவசியமா?

கேள்வி : காதலர் தினம் கொண்டாடப்படுவதை நீங்கள் ஏற்கிறீர்களா? 

சத்குரு: இந்தச் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பைத்தான் இன்று காதல் என்று வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் உண்டு செய்யும் நிர்பந்தம் தானே அன்றி அதை காதல் என்று சொல்லிவிட முடியாது. வாழ்விலே வரும் ஒவ்வொரு நாளையும் நீங்கள் காதலோடு கொண்டாடினால், அந்தக் காதலர் தின கொண்டாட்டங்கள் ஏற்கக் கூடியவைதான். காதல் என்பது மனநிலையிலும், உணர்வு நிலையிலும் ஏற்படுகிற ஆழமான ஈடுபாடு. இந்த ஈடுபாட்டால் புதுவிதமான ஆனந்தத்தை மனிதன் உணர்கிறான். இந்த ஈடுபாட்டை, செய்கிற செயல்கள் எல்லாவற்றிலும், ஏன் விளையாட்டிலும், தியானத்திலும் கூட கொண்டு வர முடியும். எதை ஈடுபாட்டுடன் செய்தாலும் அது காதல்தான். வாழ்விலே வரும் ஒவ்வொரு நாளையும் நீங்கள் காதலோடு கொண்டாடினால், அந்தக் காதலர் தின கொண்டாட்டங்கள் ஏற்கக் கூடியவைதான். இன்னும் சொல்லப் போனால், உச்சபட்ச காதல் நிலை தான் ஆன்மீகம் – அதாவது எல்லாவற்றுடனும் காதலோடு ஈடுபடும்போது, உயிரின் இயல்பே காதலாய் மலரும்போது ‘ஆன்மீகம்’ பிறக்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>ஆபத்தான பனிப்புயல் அத்லான்டிக் கனடாவை நோக்கி!

அத்லான்டிக் கனடாவின் பெரும்பகுதியை ஆபத்தான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கப்படுகின்றது. மக்களை முடிந்த வரை-நியு பிறவுன்ஸ்விக்-உட்பட-வீதிகளிலிருந்து விலகி இருக்குமாறு கூறப்படுகின்றது.
நியு பிறவுன்ஸ்விக்கின் சகல பகுதிகளிலும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை ஒரு சாத்தியமான வாழ்க்கை நிலையை அச்சுறுத்தும் பனிப்புயலாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
மாலை மற்றும் இரவு அட்லான்டிக் கரையோர பகுதிகளை அண்ட வேண்டாம் எனவும் கூறப்படுகின்றது. வெள்ளமும் ஏற்படலாம்.
நோவ ஸ்கோசியாவும் ஸ்தம்பித்துள்ளது. பாடசாலைகள், வர்த்தகங்கள், காரியாலயங்கள், போக்குவரத்து சேவைகள், சில சுகாதார பராமரிப்பு சேவைகள் ஸ்தம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் ஆக கூடியது 70சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பொழிவுடன் காற்றின் வேகமும் மணித்தியாலத்திற்கு 110-கிலோமீற்றர்கள் வேகத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாகாணத்தின் மேற்கு பாகத்தில் 40 முதல்70 சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பொழிவு காணப்படும்.
புயல் ஏற்படலாம் என கருதுவதால் பிரின்ஸ் எட்வேட் பகுதியில் பாடசாலைகள் மூடப்பட்டன.
நியு பவுன்லாந் மற்றும் லபரடோர் பகுதியில் செவ்வாய்கிழமை பனிபொழிவு ஏற்படலாம்.
நியு பிறவுன்ஸ்விக் பல்கலைக்கழகம், சென். தோமஸ் பல்கலைக்கழகம், மவுன்ட் அலிசன் பல்கலைக்கழகம், மொன்ங்ரன் பல்கலைக்கழகம் ஆகியன மூடப்பட்டன.
பலமான காற்று மாகாணத்தை சுற்றி மேலதிக பிரச்சனைகளை உருவாக்குகின்றன என கூறப்படுகின்றது.
சூறாவளி போன்ற கொடிய காற்று நோவ ஸ்கோசியா பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 120-கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தடையும் ஏற்பட்டுள்ளது. வீதிகளில் பனி காரணமாக வழுக்கல் தன்மை காணப்படுகின்றது.
முடிந்த வரை பயணங்களை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை புயல் காரணமாக இரு மரணங்களும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களின்
 தொகை 40ஆகவும் உள்ளது..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

திருமணம் முடித்து 6 நாள்யாழில் கணவன் பலி, மனைவி படுகாயம்!

யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் இடம்பெற்ற டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் திருமணம் முடித்து 6 நாட்களான இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இச் சம்பமானது 
06.02.2017.அன்று  காலை 11 மணியளவில் வேலணை அராலி சந்தியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் 
தெரியவருவதாவது,
வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் மோதியுள்ளது. இதன்போது டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் இழுத்துச் சென்று 
கடலில் பாய்ந்துள்ளது.
இவ் விபத்தில் சம்பவ இடத்திலேயே 28 வயதுடைய பிரபாகரன் என்பவர் உயிரிழந்ததுடன் அவரது மனைவியான நிறெஞ்சனா என்பவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமைந்த குறித்த பெண் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்
 அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து 6 நாட்கள் எனவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதியை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.