வியாழன், 31 ஆகஸ்ட், 2023

சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் திமோர் தீவில் பதிவு


இந்தோனேசியாவின் திமோர் தீவில்.31-08-2023.  இன்றுசக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 
குறித்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
திமோர் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள குபாங்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
என்பதும் குறிப்பிடத்தக்கது
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 30 ஆகஸ்ட், 2023

சிங்கள மக்களுடைய காணிகளை நாங்கள் ஆக்கிரமிக்கவும் இல்லை வழிபாட்டிடங்கைள தகர்கவும் இல்லை

 நாட்டில் நாங்கள் சிங்கள மக்களுடைய காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை  அவர்களுடைய வழிபாட்டு இடங்களை தகர்த்துவிட்டு அங்கு எங்களுடைய வழிபாட்டு இடங்களை அமைக்கவும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரான கனகரத்தினம் சுகாஸ் 
தெரிவித்துள்ளார்.
போயா தினத்தை முன்னிட்டு தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தையிட்டி எங்களுடைய பூர்வீக பிரதேசம். சைவத்தமிழ்
 மக்களுக்கு சொந்தமான காணி. காணிக்குள் வந்து சட்டவிரோதமான விகாரையை அமைத்திருக்கின்ற படியால்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
சிங்கள குடிமகன் இங்கே வந்து வீடு கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இங்கே தமிழ் மக்களுடைய பூர்வீக காணிக்குள் வந்து 
சட்டவிரோதமான விகாரையை அமைத்திருப்பதை தான் நாங்கள் எதிர்க்கின்றோம். இங்கே சைவக் கோயில் இருந்ததற்கான 
வரலாறு உள்ளது.
ஒரு சாதாரண சிங்கள குடிமகன் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கு விரும்பி வந்து வடகிழக்கிலே காணி வாங்கி வீடு 
கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த உரிமை அனைவருக்கும் இருக்கிறது.
ஆனால் திட்டமிட்ட வகையில் இன அழிப்பு செய்கின்ற நோக்கோடு, தங்களுடைய மக்களுடைய அடையாளத்தை தகர்ப்பதற்காக வருகின்ற சிங்களக் குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

இலங்கையில் முப்பத்தி ஏழாவது ஆசிய பசுபிக் மாநாடு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைச்சின் 37 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் குறித்த மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், அரசாங்கத்தின் ஆதரவை பெறுவதற்கு 
28-08-2023..அன்று  விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.
குறித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திங்கள், 28 ஆகஸ்ட், 2023

உக்குளாங்குளம் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஏலத்தில் விடப்பட்ட மாம்பழம்

வவுனியாவில் மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போதே இவ்வாறு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்குளாங்குளம் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான.26-08-2023..அன்று  மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக 
ஏலத்தில் விடப்பட்டது.
இதன்போது பலத்த போட்டிக்கு மத்தியில் 162,000 ரூபாவுக்கு மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இவ் மாம்பழத்தை வவுனியா - உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் 162,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் ஐம்பது வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டது

நாட்டில் தட்டுப்பாடு நிலவும் மேலும் 50 வகையான மருந்துகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 தற்போது மருத்துவ விநியோகத் துறையில் 230 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த மருந்துகள் அனைத்தும் உடனடியாக இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு 
குறிப்பிட்டுள்ளது.
 இந்திய கடன் உதவியின் கீழ் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 26 ஆகஸ்ட், 2023

கோவிட்-19 இன் பிஏ.2.86 மாறுபாடு சுவிட்சர்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளது

கோவிட்-19 இன் பிஏ.2.86 மாறுபாடு சுவிட்சர்லாந்தில் கழிவுநீரில் கண்டறியப்பட்ட பின்னர் உலக சுகாதார அமைப்பால் (WHO) உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. 
இன்றுவரை, ஐந்து நாடுகளில் சுமார் பத்து பேரில் காணப்படுகின்றன. இந்த மாறுபாடு 30 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் 
கொண்டுள்ளது. இந்த காரணத்திற்காக, ஒரு வாரத்திற்கு முன்பு WHO இதை கண்காணிக்க வேண்டிய வகைகளில் மற்ற ஆறு வகைகளுடன் 
சேர்க்க முடிவு செய்தது.
 ஒரு குறிப்பிட்ட நாட்டில் "எல்லாமே புழக்கத்தில் இருக்கும்" என்று WHO தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

நாசா விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து 4 விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.
 இந்த விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் விண்கலம் இன்று செலுத்தப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த திட்டம் 
மாற்றியமைக்கப்பட்டது. 
நாளை காலை 3.27 மணிக்கு விண்கலம் செலுத்தப்படும் என நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்துள்ளன.
நாசாவிற்கான மைக்ரோ கிராவிட்டி ஆய்வகத்திற்கு சுழற்சி முறை பணிக்காக அனுப்பப்படும் ஸ்பேஸ்எக்ஸின் 7வது குழுவினர், ஆகஸ்ட் 26 அதிகாலை 3:27 மணிக்கு அனுப்பப்பட உள்ளதாக நாசா தனது அறிக்கையில் 
தெரிவித்துள்ளது.
தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு இந்த கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. பால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலம் ஆகியவை ஆரோக்கியமாக உள்ளன என்றும் நாசா கூறியிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜாஸ்மின் மொக்பெலியின் தலைமையில் டென்மார்க்கின் ஆண்ட்ரியாஸ் மொஜென்சன், ஜப்பானின் சடோஷி புருகாவா மற்றும் ரஷியாவின் கான்ஸ்டான்டின் ஆகிய விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்திற்கு செல்கின்றனர். 
இவர்கள் ஆறு மாத காலம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள்.என்பதும் குறிப்பிடத்தக்கது     

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கோட்டையிலிருந்துபுறப்படும் ரயில்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்களில் தாமதம் ஏற்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் மின் தொழில்நுட்ப ஊழியர்கள் அவசர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரயில் சேவைகள் ரத்து மற்றும் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 23 ஆகஸ்ட், 2023

ஒரே நேரத்தில் இரண்டு விமானங்களுக்கு கொடுக்கப்பட்ட சிக்னல் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

டெல்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா நகருக்கு செல்லும் யு.கே.725 விமானம்.23-08-2023. இன்று காலை டெல்லி விமான
 நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அதே சமயம் அகமபாதாபாத் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த 'விஸ்தாரா' விமானம், டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த இரு விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர், பாக்டோக்ரா நகருக்கு புறப்பட இருந்த விமானத்தை உடனடியாக நிறுத்தும்படி
 உத்தரவு கொடுத்துள்ளார்.
இதையடுத்து டெல்லி-பாக்டோக்ரா விமானம் பிரதான ஓடுபாதையில் இருந்து திருப்பப்பட்டு, வேறொரு ஓடுபாதைக்கு மாற்றப்பட்டது. இதனால் மற்றொரு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. சரியான நேரத்தில் கட்டுபாட்டு அறை அதிகாரிகள் உரிய உத்தரவை பிறப்பித்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

நாட்டில் தாமரை கோபுரத்தைப் பார்க்க வரும் மக்களுக்காக விழிப்புணர்வு பலகைகள்

நாட்டில் தாமரை கோபுரத்தைப் பார்க்க வரும் மக்களுக்காக விழிப்புணர்வு பலகைகள் காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள புகழ்பெற்ற இடங்கள் தொடர்பில் 
விழிப்புணர்வு
 ஏற்படுத்தும் வகையில் இந்த பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு தாமரைக் கோபுரத்தின் சுவர்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.இதேவேளை, கடந்த காலங்களில் தாமரை
 கோபுரத்தின்
 கண்காணிப்பு அறையின் சுவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், அவற்றை மீளமைப்பதற்கு பாரிய செலவினம் மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>திங்கள், 21 ஆகஸ்ட், 2023

இலங்கை பாராளுமன்றம் நாளை முதல் கூட்ட முடிவு

பாராளுமன்றத்தை.22-08-2023 நாளைமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
 ஓகஸ்ட் 24ஆம் திகதி வியாழக்கிழமை அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2341/03 ஆம் இலக்க
 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட நிறுவனம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு
 விவாதம் நடைபெறும்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

நாட்டில் சுற்றுலாத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி யோசனை

சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அதற்கு பங்களிக்கும் அனைவருக்கும் வசதி செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 
தெரிவித்தார்.
ஹோட்டல் திறப்பு விழா ஒன்றில் 19-08-2023.அன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் இலக்குகளை விரைவாக அடையக்கூடிய முன்னணி துறையாக சுற்றுலாத்துறை திகழ்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பல முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்துறை மற்றும் தனியார் துறையினரின் அதிகபட்ச பங்களிப்பை பெறுவதே எதிர்பார்ப்பு என தெரிவித்த ஜனாதிபதி, பங்களிப்பு செய்யும் அனைத்து தரப்பினருக்கும் வசதிகளை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் வலியுறுத்தினார்.
அத்துடன் யால தேசிய பூங்காவிற்கு நாளாந்தம் பெருந்தொகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகை தருவதுடன், அவர்களை இலக்கு வைத்து இப்பிரதேசத்தை விரிவான முறையில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 19 ஆகஸ்ட், 2023

இலங்கையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு தொற்றால் பாதிப்பு

இலங்கையில் 2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
தொற்றுநோயியல் பிரிவின் அறிவிப்பின் படி, கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதிவரை மொத்தம் 60,136 வழக்குகள் பதிவாகியுள்ளன,  அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 12,886 வழக்குகள் 
பதிவாகியுள்ளன.  
மேலும், மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30,000 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், டெங்கு நோய் பரவும் இடங்கள் அதிகமாக காணப்படும் 43 பகுதிகளை அதிக  ஆபத்துள்ள பகுதிகளாக MOH  அடையாளம் 
படுத்தியுள்ளது. 
ஆகஸ்ட் மாதத்தில் 3,446 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.  


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

கண்டி பெரஹராவை முன்னிட்டு மக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகள்

நாட்டில் கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
 எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J. இதிபொலகே தெரிவித்தார்.
 இதற்கமைவாக, கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையிலும் மீண்டும் கோட்டை வரையிலும் இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று, அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று, அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அங்கீகரிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது 
மீளாய்வுக்காக குறித்த குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் மற்றும் 27ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முதலாவது மதிப்பாய்வின் போது ஜூன் மாதம் இறுதி வரையிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் செயல்திறன் குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து குறித்த அதிகாரிகள் குழுவினாலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையினாலும் அங்கீகரிக்கப்பட்டால், சுமார் 338 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு வழங்க 
அனுமதிக்கப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை கடந்த மார்ச் மாதம் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு அங்கீகாரமளித்தது.
இதன் முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு முன்னதாக வழங்கப்பட்டமை .என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
 

புதன், 16 ஆகஸ்ட், 2023

பிரதமரின் தலைமையில் இந்தியாவில் 32,500 கோடி செலவில் பாதை உருவாக்க புதிய திட்டம்

பிரதமரின் தலைமையில்.16-08-2023. இன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCE) ரெயில்வே துறையில் ரூ.32, 500 கோடி மதிப்பிலான இருப்பு பாதைகளை அமைக்கும் 7 "மல்டி டிராக்கிங்" திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
இத்திட்டங்கள் உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் 9 மாநிலங்களில் 35 மாவட்டங்களை உள்ளடக்கி கட்டமைக்கப்படும்.
இத்திட்டத்தின்படி ரூ.32,500 கோடி செலவில் இந்திய ரெயில்வேயின் 2339 கிலோமீட்டர்கள் இருப்பு பாதைகள் உருவாக்கப்படும். இந்த 9 மாநிலங்களில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் இதன் மூலம் 
உறுதி செய்யப்படும்.
இருப்பு பாதைகளை அதிகரித்தல், ரெயில் போக்குவரத்தை சீராக்குதல், பயணிகளுக்கு நெரிசலை குறைத்தல் மற்றும் பயணிகள் தடையின்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்தல் ஆகியவை இந்த திட்டங்களின் நோக்கமாகும். 
உணவு தானியங்கள், உரங்கள், நிலக்கரி, சிமென்ட், இரும்பு, ஸ்டீல், எக்கு, கச்சா எண்ணெய், சுண்ணாம்பு, சமையல் எண்ணெய் முதலிய முக்கிய 
பொருட்களின் விரைவான போக்குவரத்திற்கும் இது மிகவும் 
உதவியாக இருக்கும். 
இதன் மூலம் வருங்காலங்களில் ரெயில்வே துறை 200 மில்லியன் டன் சரக்குகளை கூடுதலாக எடுத்து செல்ல முடியும். பாரத்மாலா, சாகர்மாலா, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து, துறைமுக வழியான 
கப்பல் போக்குவரத்து மற்றும் உடான் விமான சேவை
 உட்பட பலவித போக்குவரத்து கட்டமைப்புகளையும், வழிமுறைகளையும் ஒன்றிணைத்து சீரான, சிறப்பான மற்றும் மக்களால் 
எளிதில் விரைவாக பயன்படுத்த கூடிய ஒரு போக்குவரத்து அமைப்பை உருவாக்கும் பிரதம மந்திரி கடி ஷக்தி தேசிய திட்டம் (PM-Gati Shakti National Master Plan) எனும் மிகப்பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது
.என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜொலித்த இந்திய கொடி

சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது. 124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. 
இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது. முழுவதும் கருப்பு நிற சலவைக்கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. புர்ஜ் கலிபா மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
 இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் இந்தியாவின் மூவர்ண கொடி, மகாத்மா காந்தியின் உருவம் உள்ளிட்டவை லேசர் ஒளியில் ஒளிபரப்பானது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.திங்கள், 14 ஆகஸ்ட், 2023

உத்தரகாண்ட் மாநிலத்தின் மேக வெடிப்பைத் தொடர்ந்து பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது

மேக வெடிப்பு என்பது ஒரு சிறிய காலக்கெடுவுக்குள் கணிசமான அளவு மழைப்பொழிவால் வகைப்படுத்தப்படுகிறது, பொதுவாக மலைகள் வளிமண்டலத்தில் இருந்து ஈரப்பதத்தை
 உட்கொண்டு 
மேகங்களை உருவாக்கும் மலைப்பகுதிகளில் பரவுகிறது. இதனால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அடிக்கடி மேகவெடிப்பு 
ஏற்பட்டு கனமழை 
கொட்டி வருகிறது. இந்நிலையில் திடீரென அங்குள்ள சமோலி மாவட்டத்தின் நந்தபிரயாக் அருகே மேகவெடிப்பு ஏற்பட்டு 
கனமழை கொட்டியது.
அதன் தொடர்ச்சியாகவே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவுகளால் சாலைகள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேக வெடிப்பு காரணமாக, கனமழை பெய்ததால், பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டில் நெதர்லாந்து செல்ல முயன்ற இந்திய தம்பதியொருவர் கைது

போலி கடவுச்சீட்டில் நெதர்லாந்து செல்ல முற்பட்ட இந்திய தம்பதியொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 43 வயதுடைய இருவரும் திபெத்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஆண் கர்நாடக மாநிலத்தில் வசிப்பவர் மற்றும் பெண் உத்தரகாண்ட் 
மாநிலத்தை சேர்ந்தவர்.
 இந்த ஜோடி நெதர்லாந்திற்கு செல்ல இரண்டு போலி சீன பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்த முயற்சித்ததாக அதிகாரிகள் 
தெரிவித்தனர்.
 கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி முதல் சுற்றுலா விசாவில் இலங்கையில் தங்கியிருந்த அவர்கள் குவைத் சென்று அங்கிருந்து நெதர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் 
தெரியவந்துள்ளது.
 அல் ஜசீரா ஏர்லைன் கவுண்டருக்கு அவர்கள் அழைத்தபோது, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் பரிந்துரைத்தனர், அவர்கள் அவர்களின் பயண ஆவணங்களை 
ஆய்வு செய்தனர், 
அவர்கள் போலி சீன கடவுச்சீட்டுகளை தயாரித்துள்ளனர் என்பதைக் கண்டறிந்தனர். அதிகாரிகள் தம்பதியரின் பைகள் மற்றும் சாமான்களை சோதனை செய்தனர் மற்றும் அவர்களின் உண்மையான இந்திய பாஸ்போர்ட்களை கண்டுபிடித்தனர்.
 விசாரணையில், இரண்டு போலி பாஸ்போர்ட்டுகளைப் பெறுவதற்காக ஒரு நபருக்கு 6,000 அமெரிக்க டாலர்களை வழங்கியதாக 
அவர்கள் தெரிவித்தனர்.
 மேலதிக விசாரணைகளுக்காக தம்பதியினர் விமான நிலையத்தில் உள்ள சிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 12 ஆகஸ்ட், 2023

இலங்கை யால காடுகளில் உள்ள விலங்குகள் வறட்சியினால் கடுமையாக பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக  தேசிய பூங்காவும்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாணிக்க கங்கை நீர் பயன்படுத்தப்படுவதாக யால தேசிய பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 அதன்படி, மாணிக்க கங்கையில் இருந்து பெறப்படும் தண்ணீர் பவுசர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது . 
இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் நீர் யால தேசிய பூங்காவில் வன விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 20 இடங்களுக்கு விடுவிக்கப்படவுள்ளதாக உயர் அதிகாரி மேலும்
 தெரிவித்தார். 
 இதேவேளை, இவ்வருடம் நாளாந்தம் வரும் சுற்றுலா பயணிகளின் மூலம் 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக யால தேசிய பூங்கா தெரிவித்துள்ளது
 நாளாந்தம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மூலம் சராசரியாக 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக பூங்காவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 ஏனைய வருடங்களில், இக்காலப்பகுதியில் வருகை குறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு யால தேசிய பூங்காவிற்கு வருகை அதிகரித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

யாழ் இளைஞனிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பாரிய பண மோசடி செய்த நபர்

வெளிநாடொன்றிற்கு யாழ்ப்பாண இளைஞர் ஒருவரை அனுப்புவதாக கூறி நபர் ஒருவர் சுமார் 25 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு 
செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,இத்தாலியில் வசிக்கும் யாழ்ப்பாணம் வலிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தரகர் மூலம் குறித்த இளைஞனை அணுகியுள்ளார்.
இளைஞனுடன் சகல விபரங்களையும் பெற்றுக்கொண்ட தரகர் போலி விசாவினை இத்தாலியில் வசிக்கும் நபர் மூலம் பெற்றுக்கொண்டு இளைஞனுக்கு வழங்கியுள்ளனர்.
வீசாவினை தூதரகத்திடம் காண்பித்த போது குறித்த வேலை வாய்ப்புக்கான வீசா போலியானது என உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞன், 
இத்தாலியில் வாசிக்கும் யாழைச் சேர்ந்த நபரே 
பிரதான சூத்திரதாரி.
குறித்த நபர் என்னைப் போன்ற பலரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய்களை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 10 ஆகஸ்ட், 2023

இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த வெளிநாட்டு போர் கப்பல் ஒன்று

இலங்கையில்  சீனாவின் போர்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
சீனாவின் HAI YANG 24 HAO என்ற கப்பலே இன்றைய கப்பல் (10-08-2023) காலை சம்பிரதாய பயணமாக இலங்கையை வந்தடைந்துள்ளது.
129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பணியாளர்கள் 
பணிபுரிகின்றனர்.
மேலும் குறித்த கப்பலை கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.இதற்கிடையில், இந்த கப்பல் ஒகஸ்ட் 12 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 9 ஆகஸ்ட், 2023

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கு யாழில் அதிரடி சீல்

யாழில் உள்ள முக்கிய நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் 
தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால்  08-08-2023.    அன்று யாழ்ப்பாண நகர் பகுதி உணவகங்கள் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த யாழ். பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும், யாழ். பண்ணை பகுதியில் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் சிக்கின.
இரண்டு உணவக உரிமையாளர்களிற்கும் எதிராக இன்றைய தினம் (09-08-2023) யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாண நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் 
செய்யப்பட்டது.
வழக்கினை விசாரணை செய்த நீதவான் உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் பிணையில் விடுவித்ததுடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு கட்டளை வழங்கிய நிலையில் வழக்கினை 18.10.2023ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதைத்தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகங்கள் இரண்டும் இன்று சீல் வைத்து மூடப்பட்டது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>Blogger இயக்குவது.