வெள்ளி, 30 ஜூன், 2023

யாழ் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானத்தை திறந்து வைத்தார் மைத்திரிபால சிறிசேன

யாழ் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் 3.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட மைதானம் இன்று (30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
 தொடர்ந்து பாடசாலை மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 
கலந்து கொண்டார்.
 நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்
 இராமநாதனின் முன்மொழிவில், 3.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உடுப்பிட்டி மகளீர் கல்லூரி மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பாடசாலை அதிபர் இராஜலட்சுமி சுப்பிரமணிய குருக்கள், ஸ்ரீ லங்கா 
சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய
 குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, நாடாளுமன்ற 
உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன, பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் 
கலந்து கொண்டனர்.
 அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 29 ஜூன், 2023

ஜப்பானில் சிவப்பு நிறமாக திடீரென மாறிய ஆற்று நீர் அதிர்ச்சியடைந்த் பொதுமக்கள்

ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா ஆற்று நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆற்று நீரானது திடீரென செந்நிறமாக மாறி காட்சியளித்தது.
மேலும், வழக்கமாக நீல நிறத்தில் தெளிவாக தென்படும் இந்த பகுதி நீரானது செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 
அருகில் உள்ள பீர் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே, ஆற்று நீர் செந்நிறமாக மாறியது தெரியவந்துள்ளது.
பீர் தயாரிப்பு நிறுவனமான ஓரியன் ப்ரூவரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவுகளில் பயன்படுத்தப்படும் வண்ண சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீரின் நிறம் மாறியதாக தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 28 ஜூன், 2023

சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை

கடந்த வார இறுதியில் தங்கம் விலை உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை 
குறைந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
இன்றையவிலை நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ஒரு கிராம் 5,446 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.232 குறைந்து ஒரு சவரன் ரூ.43,568 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து கிராம் 4,461 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ. 35,688 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை 
அதேவேளை வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,700ஆகவும் விற்பனை
 செய்யப்படுகிறது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 


செவ்வாய், 27 ஜூன், 2023

பாடசாலை மாணவனை முல்லைத்தீவில் தாக்கிய ஆசிரியர்

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவனை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று
 பதிவாகி உள்ளது.
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் மண்வெட்டியை எடுத்து வருமாறு மாணவன் ஒருவருக்கு கூறியுள்ளார்.
மண்வெட்டியை குறித்த மாணவன் எடுக்காத நிலையில் அருகில் இருந்த மாணவன் மண்வெட்டியை எடுத்துச் சென்ற நிலையில் மற்றைய மாணவனை ஆசிரியர் தாறுமாறாக தாக்கியுள்ளார்.
காயம் அடைந்த மாணவனை பெற்றோர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஆசிரியரை கைது செய்த பொலிஸார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>




திங்கள், 26 ஜூன், 2023

குக்கரில் சமைத்து இந்த உணவுகளை தவறியும் சாப்பிடக் கூடாதாம்

உணவுப் பொருட்களை ஆரோக்கியமான வழியில் சமைத்து சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.
உணவுகளை பல வழியில் சமைத்து சாப்பிடலாம். 
ஆனால் உணவுகளை எண்ணெயில் பொரித்து உண்பதை விட ஆவியில் வேக வைத்து சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.
தற்போது உணவுகளை குக்கரில் சமைத்து சாப்பிடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
ஏனெனில் குக்கரில் சமைக்கும் போது குறுகிய நேரத்தில் உணவுகளை சமைத்துவிடலாம்.
ஆனால் அனைத்து உணவுகளையுமே குக்கரில் சமைத்து சாப்பிடக்கூடாது. சில சமயங்களில் குக்கரில் சமைக்கும் உணவுகளும் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
அதுவும் சில உணவுகளை குக்கரில் சமைக்கும் போது அதன் விளைவாக உணவின் சுவை பாழாவதோடு உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்.அரிசி
தற்போதைய காலத்தில் சாதத்தை குக்கரில் தான் சமைத்து
 சாப்பிடுகிறார்கள்.
ஆனால் அது முற்றிலும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். ஏனெனில் அரிசியில் ஸ்டார்ச் உள்ளது.
இது தீங்கு விளைவிக்கும் அக்ரிலாமைடு என்ற கெமிக்கலை வெளியிடும்.
இந்த கெமிக்கல் உடலில் சில மோசமான பிரச்சனைகளை வரத் தூண்டும்.
எனவே குக்கர் சாதத்தை சாப்பிடாமல் வடித்த சாதத்தை சாப்பிடுங்கள்.
பால் பொருட்கள்
பால் பொருட்களை எப்போதும் குக்கரில் சமைத்து சாப்பிடுவதைத்
 தவிர்க்க வேண்டும்.
பொதுவாக குக்கரில் வேக நீண்ட நேரம் எடுக்கும் உணவுகளையே
சமைக்க வேண்டும்.
ஆனால் பால் மற்றும் பிற பால் பொருட்கள் குறைவான நேரத்திலேயே சூடாகிவிடும்.
எனவே பால் பொருட்களை குக்கரில் சமைக்கக்கூடாது.உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை பெரும்பாலும் குக்கரில் தான் 
வேக வைப்போம்.
ஆனால் அரிசியைப் போன்றே உருளைக்கிழங்கிலும் ஸ்டார்ச் 
அதிகமாக உள்ளன.
எனவே சாதத்தைப் போன்றே உருளைக்கிழங்கையும் குக்கரில் வேக வைக்கக்கூடாது.
நிச்சயம் பாத்திரத்தில் உருளைக்கிழங்கை வேக வைத்தால் நீண்ட நேரம் எடுக்கும்.முட்டை
சிலர் முட்டை விரைவில் வேக வேண்டும் என்பதற்காக குக்கரில் முட்டைகளை வேக வைப்பார்கள்.

ஆனால் முட்டைகளை குக்கரில் வேக வைக்கும் போது விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
பொதுவாக முட்டைகளை எப்போதும் உயர் தீயில் தான் 
வேக வைக்க வேண்டும்.
ஆனால் குக்கரில் முட்டைகளை சமைக்கும் போது உயர் தீயில் வைத்தால் அது விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும். பாஸ்தா
குக்கரில் சமைக்கக்கூடாத மற்றொரு உணவுப்
 பொருள் பாஸ்தா.
பெரும்பாலானோர் பாஸ்தாவை வாணலியில் சமைத்தாலும் சிலர் பாஸ்தாவை குக்கரிலும் சமைக்கிறார்கள்.
பாஸ்தாவிலும் ஸ்டார்ச் அதிகமாக இருப்பதால், குக்கரில் சமைத்தால் அது தீங்கு விளைவிக்கும் கெமிக்கலை வெளியிட்டு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
காய்கறிகள் மற்றும் பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இப்படிப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்போதுமே குக்கரில் சமைக்கக்கூடாது.
அப்படி சமைத்தால், அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் முழுமையாக அழிந்துவிடும்.மீன்
அசைவ உணவுகளை பெரும்பாலும் குக்கரில் சமைப்போம்.
 ஆனால் மீன் மிகவும் குறுகிய நேரத்தில் விரைவில் 
வேகக்கூடியது.
மீன் சற்று அதிகமாக வெந்துவிட்டாலும், அதன் சுவை பாழாகிவிடும்.
எனவே மீனையும் குக்கரில் சமைக்கக்கூடாது.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





ஞாயிறு, 25 ஜூன், 2023

லுட்சேர்னில் சிறப்பாக நடைபெற்ற புனித பேதுருவானவரின் திருநாள் புனிதரின் திருச்சுருவ பவணி

லுட்சேர்னில் பணியகத்தின் புனித பேதுருவானவரின் திருநாள் இன்று மாலை 14:30 மணிக்கு st karli மேல் ஆலயத்தில் வணபிதா
 லஸ்சன்டி சில்வா தலைமையில் வணபிதா சூ. டக்ளஸ் 
லோகு இணைந்து கூட்டுத்திருப்பலி ஆரம்பமாகி புனிதர்
 பேதுருவானவரின் திருச்சுருப பவணியுடன் திருச்சுருப ஆசீர்வாதம் இடம்பெற்றது
இத் திருநாளில் அயல் மாநில மக்களும் கலந்து கொண்டு இறை ஆசீரை பெற்றுக்கொண்டனர் முடிவில் குளிர்பானங்களும்,சிற்றுண்டிகளும் மக்களுக்கு வழங்கப்பட்டது.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>











சனி, 24 ஜூன், 2023

ஸ்காபுரோவிலுள்ள தமிழ் கடை ஒன்றில் இப்படியுமா பாதிக்கப்பட்டவரின் ஆதங்கம்

கனடா ஸ்காபுரோவிலுள்ள தமிழ் கடை ஒன்றில் மாம்பழங்களை வாங்கிய ஈழத்தமிழர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்ட விதத்தையும் அதனால் ஏற்பட்ட வலியையும் தனது முகநூல் பக்கத்தில் 
வெளியிட்டுள்ளார்.
அவரது முகநூலில், 14 டொலருக்கு 9 மாம்பழங்களை வாங்கிய நிலையில் மாம்பழங்கள் அனைத்தும் பழுதடைந்திருந்தது. அதனை கொண்டு உரிய கடைக்கு சென்றேன். முதலாளியினை நட்புடன் அணுகி ஓரமாக கூட்டிச்சென்று பழுதடைந்த பழங்களைக்காட்டி அண்ணா இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என கூறி காண்பித்தேன்.
அதற்கு நீங்களும் இதை பார்த்து அல்லவா எடுத்திருக்க வேண்டும் என கூறியபோது, அது உண்மைதான் அண்னே . நீங்களும் இதை பார்த்து அல்லவா விற்கவேண்டும் என்றேன்.. அதற்கு சற்று தடுமாற்றத்துடன் ம்ம்ம்.. வேறொன்றை எடுத்து செல்லுங்கள் அல்லது பணத்தைப் பெற்றுச் செல்லுங்கள் என்று கூறியவாறே உதாசீனமாக உள்ளே 
சென்றுவிட்டார்.
முன் கடை விற்பனையில் பெண்மணி ஒருவர் விறுவிறுப்பாக ஈடுபட்டுக்கொண்டு நின்றார். தரையில் கொட்டுண்டு புரண்டு ஓடிய சில மங்குஸ்தான் பழங்களையும் கூச்சமின்றி மக்கள் பார்க்கிறார்களே என்ற சலனம் ஏதுமின்றி எடுத்து பெட்டியில் 
அடுக்கி வைத்தார்.
அந்த இடம் ஒரு நடைபாதை. அவரை அணுகி பழுதடைந்த மாம்பழப் பெட்டியை மாற்ற கேட்டபோது. அந்த பெண்மணி பாராமுகமாக போனில் கதைத்துக்கொண்டும் மற்றய கஸ்ட்மர்க்ளுக்கு விற்பனை செய்வதிலுமே கவனமாக இருந்தார்.
போன் கதைக்கிறேன் தெரியவில்லையா? என்றார். அவரது குரல் உயர்வும் பாரா முக்கமும் அந்த மாம்பழங்களை திரும்பவும் நாம் கொண்டுசென்று காட்டியது அவர்கள் ஒருவருக்குமே பிடிக்கவில்லை என்பது எனக்கு புரிந்தது. நானாகவே சென்று ஒன்றை மாற்றுவதற்க்காக உள்ளே சென்று அதே இன மாம்பழ பெட்டிகளை பார்த்தபோது.
அனைத்துமே உண்பதற்கு தரமற்றவையாக இருந்தது. மீண்டும் அந்த பெண்ணிடம் அதை குறிப்பிட்டு கூறியபோது. அவர் சினத்துடன் கூறினார். அப்ப.. என்ன... அவற்றை எல்லாம் எறியவா சொல்கிறீர்கள் என்று. இதன் அர்த்தம் என்ன? இதுதான் நமது வியாப்பாரம் என்றாரா? 
எனக்கு புரியவில்லை.
 சீனாகாரர்களின் கடை எவ்வளவோ பரவாய் இல்லை
அப்போதுதான் உணர்ந்தேன். கேவலம் தமிழர்களது கடைகளை விட சீனாகாரர்களின் கடை துப்பரவிலும் தூய்மையிலும் நேர்மையிலும் விலையிலும் பரவாயில்லை என்று மக்கள் கதைப்பது உண்மைதானே என்பது உறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது..

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 23 ஜூன், 2023

நாட்டில் 3 வயதுக்குட்பட்டகுழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கும் திட்டம் தடைப்பட்டுள்ளன

  3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான திரிபோஷா வழங்கும் திட்டம் ஒரு வருடத்திற்கு மேலாக தடைப்பட்டுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம் தெரிவிக்கின்றது.
இது குழந்தைகளின் போசாக்கு தரத்தை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு கவலை 
வௌியிட்டுள்ளார்.
இந்நிலையில் நாட்டுக்கு போஷாக்கு குறைபாட்டுக்கு உள்ளாகும் பிள்ளைகளின் வீதம் அதிகரித்துள்ள நிலையில் இதனை நிவர்த்தி செய்ய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்..என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வியாழன், 22 ஜூன், 2023

இலங்கையில் 67 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம்

இலங்கையில் 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை, கொத்தட்டுவை, மஹரகம ஆகிய டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் போது 7000 இற்கும் அதிகமான வீடுகளின் சுற்றுச்சூழலை பரிசோதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2 வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 46473 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 21 ஜூன், 2023

கல்முனையில் வாத்தியாரை நடுரோட்டில் நையப்புடைத்த பொதுமக்கள்; காரணம் என்ன

அம்பாறை - கல்முனை வாத்தியார் ஒருவர் தன்னிடம் கல்வி கற்கவந்த மாணவியிடம் தவறாக நடத்துகொண்ட நிலையில் பிரதேசமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கல்முனையைச் சேர்ந்த பிரபாகரன் ஆசிரியரே இவ்வாறு பொது மக்களால் நன்றாக கவனிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர், ஆரையம்பதி பரிதி டியூட்டரி மெட்ரிக்ஸ் போன்ற இடங்களில் மீடியா வகுப்புக்களை நடத்துபவர் என
 கூறப்படுகின்றது.
இந்நிலையில் , தனது மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதன் காரணமாக பொதுமக்களால் நன்கு உபசரிக்கப்பட்டார். இது குறித்த காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.




செவ்வாய், 20 ஜூன், 2023

யாழ் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட தமிழருக்கு பிரித்தானியாவில் கிடைத்த உயர் விருது

யாழ்ப்பாணம் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) பிரித்தானியாவின் உயர் விருதுகளில் ஒன்றான OBE (Order of the British Empire) 
விருதை பெற்றுள்ளார்.
இந்த விருது பிரித்தானிய மன்னரின் பிறந்தநாளில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் அரவிந்தன் குமாரசுவாமி பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் 
மருத்துவ மற்றும் பல் மருத்துவ அறிவியல் கல்லூரியிலும், மகளிர் மருத்துவ 
மற்றும் பரிசோதனை மருத்துவப் கல்லூரியிலும் மருத்துவப் பேராசிரியராகவும், பேர்மிங்காம் பெண்கள் மருத்துவமனை 
அறக்கட்டளையில் மகளிர் மருத்துவம், இனப்பெருக்க 
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசகராகவும் 
பணியாற்றுகிறார்.
இவருக்கு கிடைத்த இந்த உயர் விருது குறித்து birmingham women's and children's hospital (BWC) தனது உத்தியோகபூர்வ தளத்தில் பின்வருமாறு 
தெரிவித்துள்ளது.
எங்கள் BWC குழுமத்தில் மிகவும் விரும்பப்படும் உறுப்பினரான பேராசிரியர் அரி. குமாரசாமி, பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதில் தனது ஆராய்ச்சியின் மூலம் அவர் ஆற்றிய பணியைப் பாராட்டி, 
மாட்சிமை மிக்க மன்னரால் OBE விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார், என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம்
. நமது மகளிர் மருத்துவமனையில் பணிபுரியும் பேராசிரியர் குமாரசாமி, உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கருச்சிதைவு மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான ரத்தப்போக்கு போன்றவற்றிற்கான ஆராய்ச்சியாளராக களமிறங்கி தன் சேவையை தொடர்கிறார்.
இந்நிலையில் எங்கள் அறக்கட்டளையின் மகப்பேறு மருத்துவ ஆலோசகரான, பேராசிரியர் குமாரசாமி பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பெண்ணோயியல் மற்றும் இனப்பெருக்க மருத்துவப் பேராசிரியராகவும், ரொமியின் கருச்சிதைவு ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் இயக்குநராகவும், உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மகளிர் ஒத்துழைப்பு மையத்தின் இணை இயக்குநராகவும் உள்ளார்.
மேலும் பிரித்தானியாவில் இவரால் ஆரம்பிக்கப்பட்ட அம்மாலைஃப் என்ற தொண்டு நிறுவனம், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் மகப்பேறு இறப்புகளைக் குறைக்கும் உலகளாவிய நோக்கத்துடன் தனது சேவையை தொடர்கிறது.
அத்துடன், பேராசிரியர் குமாரசாமி இளம் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டுவதில் ஆர்வமாக உள்ளார், மேலும் அவரிடம் பயிற்சி பெற்ற பலர் சிறந்த மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களாக உருவாகியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள மக்களுக்கான விஷயங்களை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு 
மற்றும் ஆர்வம் என்பவற்றை கௌரவித்து ஜூன் 16 வெள்ளிக்கிழமை மூன்றாவது மன்னர் சார்லஸ் அவர்களின் பிறந்தநாள் மரியாதை அறிவிப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருது அங்கீகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் குமாரசாமி, கருச்சிதைவு மற்றும் பிரசவம் தொடர்பான இறப்புகளைச் கையாள்வதில் 
எங்கள் ஆராய்ச்சிக் பிரிவுகள் ஆற்றிவரும் சக்திவாய்ந்த பணிக்கான அங்கீகாரமாக இது அமைந்துள்ளது. ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும், உலகில் எங்காவது ஒரு தாய் பிரசவத்தின்போது 
இறந்துவிடுகிறார்.
எங்கள் ஆராய்ச்சியின் தாக்கம் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான வாழ்க்கையை உறு்திப்படுத்தவதாக அமையலாம். தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் கொண்டாடப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.  
என்பதும் குறிப்பிடத்தக்கது

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



திங்கள், 19 ஜூன், 2023

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்: இலங்கை குறித்து முக்கிய நாடுகள் அறிக்கை


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு-19-06-2023. இன்று முதல் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த அமர்வு அடுத்த மாதம் ஜூலை 14ம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறும்.
இராஜதந்திர தரப்புகளின் தகவல்களின் படி, ஐக்கிய நாடுகள் 
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது அவர், இலங்கையில் பொறுப்புக்கூறல்
 பிரச்சினைகளில் முன்னேற்றம் இன்மை என்பதை சுட்டிக்காட்டுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் ஜெனிவாவில் நடைபெறும் அமர்வுகளில், இலங்கை தொடர்பான முக்கிய நாடுகள் குழு முறையான அறிக்கையை வெளியிடவுள்ளன.
கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை தன்னிச்சையாக கைது செய்தமை, பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லை மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் என்பன இதில் சுட்டிக்காட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 18 ஜூன், 2023

வெத்தலக்கேணியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 பேர் கைது


சட்டவிரோத நீர்மூழ்கி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 8 பேருடன் நான்கு டிங்கி படகுகள் மற்றும் நீர்மூழ்கி உபகரணங்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
 யாழ்ப்பாணம், மாமுனை, வெத்தலக்கேணி கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 கடற்படையினரால் நியமிக்கப்பட்டவர்கள் 22 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
 சந்தேகநபர்கள் 8 பேர், நான்கு டிங்கி படகுகள் மற்றும் நீர்மூழ்கிக் கருவிகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 17 ஜூன், 2023

சீனா ஒரே ராக்கெட்டில் 41 செயற்கைக்கோள்களுடன் 2டி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி புதிய சாதனை

 சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று மதியம் 1.30 மணிக்கு ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களுடன் நீண்ட 2டி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்த நீண்ட ராக்கெட் 476வது விமானப் பயணமாகும். ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் முக்கியமாக வணிக ரிமோட் சென்சிங் சேவைகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப சரிபார்ப்பை
 வழங்கும் எனவும் செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை 36 ஜிலின்-1 தொடரைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதன்மூலம், ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 16 ஜூன், 2023

யாழ் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா (1923 – 2023) 16.06.2023இன்று . காலை 7 மணிக்கு கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவை பிரகடனப்படுத்தி வைத்தார். நூற்றாண்டு நினைவு சின்னமும் அவரால் திரைநீக்கம் செய்து 
வைக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அவர்களும் இனிய விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர்களான வே.கா. கணபதிப்பிள்ளை வீ. கருணலிங்கம் மற்றும் யாழ்ப்பாண 
வலய கல்வி பணிப்பாளர் திரு முத்து இராதாகிருஷ்ணன் யாழ் மாநகர முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
1923 ஆம் ஆண்டு சேர் பொன் இராமநாதன் வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தில் இந்த கலாசாலை ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் கல்வி வரலாற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இக்கலாசாலையின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வியாழன், 15 ஜூன், 2023

நாட்டில் குருந்தூர் மலை காணிகள் விடுவிப்பு! எந்த தீர்மானமும் எடுக்கவில்லையாம்

குருந்தூர் மலை ஒரு முக்கியமான தொல்பொருள் தளம் எனவும், விகாரைக்கு சொந்தமான அரச காணிகளை வேறு தரப்பினருக்கு வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
 1985ஆம் ஆண்டு வனம் மற்றும் வனவிலங்கு வலயங்களாக இருந்த காணிகளை அவ்வாறே பாதுகாப்பதே வடக்கு, கிழக்கு காணி பிரச்சினைகளுக்கு உத்தேச தீர்வு என ஜனாதிபதியின் செயலாளர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளர் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அது தொடர்பில் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
 கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு அமைய 
தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
 அக்கடிதத்தின் ஊடாக குருந்தி விகாரைக்கு சொந்தமில்லாத காணியை பொதுமக்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கோவிலை சுற்றிலும் பல இடங்களில் பல்வேறு பௌத்த விஹாரைகளின் 
இடிபாடுகள் சிதறிக் கிடப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 
எனவே இந்த நிலங்களை பகிர்ந்தளிப்பது பொருத்தமற்றது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர் குருந்தி கோவில் மற்றும் திரிய பிரதேசத்தின் இடிபாடுகள் தொடர்பிலும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 குருந்தி விகாரையைச் சுற்றியுள்ள சில வயல் காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்கள் மற்றும் காணிகளை இனங்கண்டு மாவட்ட செயலாளரின் பாதுகாப்பில் வைப்பதே அரசாங்கத்தின் விருப்பமாக உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் 
தெரிவித்துள்ளது.,என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






புதன், 14 ஜூன், 2023

யாழில் சிங்கர் நிறுவனத்தின் மின்சார மோட்டார் சைக்கிள் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது

இலங்கையில் முதல் முறையாக சிங்கர் அறிமுகப்படுத்தும்
‘லிமா’ எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில்.14-06-2023. இன்று 
இடம்பெற்றது.
அதிசிறந்த நம்பிக்கை மற்றும் பல உத்தரவாதங்களுடன் பல்வேறு புதிய பல வசதிகளுடன் வாடிக்கையாளரது நன்மைகளை முதன்மைப்படுத்தி இந்த எலெக்றிக் மோட்டார் சைக்கிள் அறிமுகம் 14-06-2023.
இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இருந்து யாழ் வருகைதந்திருந்த சிங்கர் நிறுவன முகாமையாளர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு
இடம்பெற்றிருந்தது.
அத்துடன் இலங்கைக்கான சிங்கர் விற்பனை பிரதானி வஜிர தென்னக்கோன். வியாபார மேம்படுத்தல் முகாமையாளர் சுஜித் ஸ்ரீமன்னே, சிங்கர் நிதி நிறுவன திறைசேரி முகாமையாளர் திலான் ரூபசிங்ஹ ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட லிமா மோட்டார் சைக்கிளின் முதலாவது வாடிக்கையாளராக ஸ்ரீநதியா நைகயக 
உரிமையாளர் முதல் மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொண்டமை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 13 ஜூன், 2023

இலங்கையில் மருந்துப்பொருட்களின் விலை குறையும் சாத்தியமாம்

இலங்கையில் அடுத்த இரண்டு மாதங்களில் மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்குமான சாத்தியம் உள்ளது, சவாலான தருணங்களை சரியான முறையில் முகாமை செய்ததால் சுகாதாரத்துறை இப்போது ஸ்திரமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தும்பன பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜூன் 15ஆம் திகதி முதல் மருந்துப் பொருட்களின் விலையை 16 வீதத்தால் குறைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருந்தின் விலையை மீளாய்வு செய்து விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் மேலும் 406 வைத்தியர்கள் பயிற்சிக்காக அனுப்பப்படவுள்ளதாகவும் அடுத்த மாதத்திற்குள் 2200 பேரை தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





Blogger இயக்குவது.