ஞாயிறு, 10 ஜூன், 2018

உலக கின்னஸ் சாதனை படைத்தார், திரு.அருணந்தி ஆரூரன்

திரு.அருணந்தி ஆரூரன், உலக கின்னஸ் சாதனை படைத்தார்,
கர்நாடக சங்கீத கச்சேரியில் அதி கூடிய நேரம் 40 மணி நேரம் தொடர்ந்து பாடி, 29 மணி 40 நிமிட உலக கின்னஸ் சாதனையை
 முறியடித்து, தொடர்ந்து பாடி
திரு.அருணந்தி ஆரூரன், உலக கின்னஸ் 
சாதனை படைத்தார், என்பதில் இலங்கையராகநாம்  பெருமை
 கொள்வோம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 1 ஜூன், 2018

ஸ்ருட்கார்ட் நகரில் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் 16/06/18

யேர்மனியில்16/06/2018 அன்று  ஸ்ருட்கார்ட் நகரில் இயங்கிவரும்,உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பும்,நோர்வேயில் இயங்கும் அடுத்த தமிழ் தலைமுறைகள் அமைப்பும் இணைந்து வழங்கும்,தாயகத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவும் நோக்குடன் நடாத்தப்படும் இந்த நிகழ்வுக்கு 
யேர்மனி வாழ் மக்கள் பூரண 
ஆதரவு வழங்கி எங்கள் தாயக உறவுகளின் கண்ணீர் துடைக்க கரம் கோர்ப்பீர்கள் என்று நம்புகின்றோம்,உங்களை சந்திக்க யேர்மனி மதுரக்குரலோன் கண்ணன் அவர்களும் அவர்களுடன் இணைத்த கலைஞர்களுடன்.ஈழத்தில் தனது
 இரண்டு கால்களை இழந்தும்.மற்றவர்களுக்கு உதவிசெய்யும் பண்பாளன் நல்ல பாடகர் நல்ல தோல் கருவி வாசிக்கத் தெரிந்த சமூக சேவையாளன் செல்வன் நிமால் அவர்களும் டென்மார்க்கில் இருந்து தாயகப்பாடகர் இரா செங்கதிர் அவர்களும் பிரான்ஸ்சில் இருந்து 
திரு இந்திரன் அவர்களும் சுவீஸ்ல் இருந்தும் எழுச்சிகுயில் அம்றிதா அவர்களும். நடன தாரகை செந்தூரி அவர்களின் குழுக்களும்.நூறன்பேர்க் மற்றும் ஸ்ருட்காட் மாணவ மாணவிகளும்
 இன்னும் பல கலைஞர்கள் சுவீஸ்ல் இருந்து வருகின்றார்கள் ,இவர்களை சந்திக்க அரிய வாய்ப்பு,வருங்கள் உறவுகளே உங்கள் கரங்களால் தாயக மக்களின்
 கண்ணீர் துடைப்போம்,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

Blogger இயக்குவது.