தாயகச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாயகச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஜூன், 2026

நாட்டின் மண்ணின் பெருமையாய் மக்கள் நெஞ்சில் வாழும் சேவகன்: கிளிநொச்சி முத்து மணிவிழா காணும் வரலாற்றுத் திருநாள்

கிளிநொச்சி முத்து மணிவிழா காணும்
ஆளுமைகளை அணிகலன்களாகக் கொண்ட ஆணழகனே,
கூட்டுறவும் வாழ்வியலும் உங்கள் வாழ்வின் வசந்தங்களே.
கல்வியியலை வாழ்வியலுடனும்,
வாழ்வியலை கல்வியியலுடனும் இணைத்து
பல தலைமுறைகளின் பாதையை ஒளிரச் செய்த பெருமகனே!
சூழல்நேயத்தை மனிதநேயமாகக் கொண்டு உழைத்த உத்தமனே, 
ஆணிவேர்வரை ஆராய்ந்து எழுதும் ஆற்றல் உமக்கே உரியது. 
உங்கள் குரலில் விளக்கவுரை கேட்க, 
சிவனும் மகனும் எழுந்தருளி நிற்பார்களோ! 
பக்தர்களாய் நாம் பரவசம் அடைவோம். 
உங்களுக்கு ஓய்வா? 
திட்டங்களே திணறுகின்றனையா! 
செயல்களே சிந்திக்கின்றனையா! 
உங்கள் சிந்தனையின் சக்கரம் ஓய்ந்தால், 
பல கனவுகளின் பயணமும் நின்றுவிடுமே! 
“Sustainability” இனி sustain ஆகிடுமோ? 
DITWA எமக்குப் பேரிடர் அல்ல; 
ஆனால் உங்கள் ஓய்வே
எம் மண்ணுக்குப் பேரிடராகும்! 
அன்பை விதைத்து, பண்பை அறுவடை செய்த 
அருமை மனிதரே! 
ஓய்வு என்பது உங்கள் பணிக்கு முடிவல்ல, 
புதிய பணிகளின் தொடக்கமே.
தங்கள் ஓய்வுக்காலம் சிறக்கவும்,
நீண்ட ஆயுளும், நிறைந்த உடல்–உள ஆரோக்கியமும் பெற்று, 
இன்னும் பல ஆண்டுகள் சமூகத்திற்கு ஒளிவிளக்காய் திகழவும் 
எமது இந்த இணையத்தின்  நல் வாழ்த்துகள் .உரித்தாகுக  .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 12 மே, 2026

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி செல்வச் சந்நிதியில் நடைபெற்றது

நாட்டில் .தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை வாரம் இன்று முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது
 அந்தவகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது
 தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்திய போது
 மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக
 மாறியிருந்தது.
இதனை விடவும் இந்த கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும், எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும், இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழினப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்றைய தினம் (12) முல்லைத்தீவு முள்ளியவளை சந்தி அம்மன் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது. ஈழம் கவி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு 
நடைபெற்றது.
இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.ஜீட்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஒரு பிரிவாகவும், தமிழ் தேசியப் பேரவையினர் ஒரு பகரிவாகவும் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிரைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசிய உணர்வார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் 
கலந்துகொண்டனர்.
திருகோணமலை -பாட்டாளிபுரம் பகுதியில் இன்று காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
 ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு,மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சு பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மற்றும் கனகபுரம் வீதியில் 
வாகன வாடகை உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் இன்று காலை 10 மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி
 பகிர்ந்தளிக்கப்பட்டது.
நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி 
செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது. கொட்டும் மழைக்கு மத்தியிலிலும் கஞ்சியினை பலரும் 
வாங்கி பருகினர்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டிக்கும் வகையில் வவுனியாவில் இலுப்பையடிப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்களுக்கு.12-05-2026. இன்று  காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியிருந்தனர்.
இறுதிப் போரின்போது உணவின்றி தவித்த மக்களுக்கு கஞ்சி எவ்வாறு உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது என்பதையும், அக்காலப் பகுதியில் மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களையும் நினைவுபடுத்தும் விதமாக இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு அமைந்திருந்தது.
இந்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக கஞ்சியினை அருந்திச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகம் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்தன

நாட்டில்  2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு பிரசித்திபெற்ற கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஆலய முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் 2025ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் திருக்குமரன், மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் கண்டாவளைக் கோட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் ஆலய நிர்வாகத்தினரால் பணப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

அத்துடன் ஆலயத்தால் நடத்தப்படும் அறநெறிப் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. 

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகத்தின் முன்மாதிரியான இந்தப் பணியை 
 இந்த இணையமும் வாழ்த்துகின்றன . பரிசில்கள் பெற்றுக் கொண்ட மாணவச் செல்வங்களுக்குப் பாராட்டுக்கள்என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








 

வெள்ளி, 27 மார்ச், 2026

நாட்டில் ஊரியான் பகுதியில் மஞ்சள் அறுவடை விழா மாகாண நிதி ஒதுக்கீட்டில் விவசாயி சாதனை

நாட்டில்  நடைபெற்ற மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதிமூலம் செய்கை மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் அறுவடை நிகழ்வு முரசுமோட்டை ஊரியான் பகுதியில் இ.இராசரத்தினம் என்ற விவசாயின் வயலில் 
நடைபெற்றது.
கால் ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் மஞ்சள் இன அறுவடை நிகழ்வானது கண்டாவளை விவசாய 
போதனாசிரியர் க.தனுசீலன் தலைமையில் நடைபெற்றது.
வீ.சோதிலட்சுமி கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் கண்டாவளை கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.சற்குணநேசன், பாடவிதான உத்தியோகத்தர்கள் விவசாயப்போதனாசிரியர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது-

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 3 ஜனவரி, 2026

யாழ் தையிட்டியில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொடரும் போராட்டம்

யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக இன்று சனிக்கிழமை காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு
 வருகின்றனர்.
 இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையில் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது
 இந்த நிலையில் குறித்த போராட்டம் பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல்வாதிகள் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது
 இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்   
போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் வகையில் வாகனப் பதிவு, ட்ரோன் மூலம் கண்காணிப்பு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் புகைப்படமெடுத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
 இந்த அச்சுறுத்தல்கள் இல்லாதிருந்தால் ஏராளமான மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனவும் காணி விடுவிக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என அவர் கூறியுள்ளார்.
 களவெடுத்த பொருளுக்கு பாதுகாப்பு வழங்குவது போன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

புதன், 27 நவம்பர், 2024

நாட்டில் வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

நாட்டில் புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும்
 பூட்டி.27-11-2024.  இன்று புதன்கிழமை மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கியுள்ளனர்.
 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் பூட்டி யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆதரவு
 வழங்கியுள்ளதாக
 புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் தர்மலிங்கம் நவநீதன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு இன்று மாலை அஞ்சலி செலுத்துவதற்கு 
தயாராகி இருக்கின்றன. மேலும் மாவீரர் தின நினைவேந்தல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில்.27-11-2024. புதன்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பொதுசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது தியாகி திலீபனின் நினைவுத் தூபி 
முன்பாகவும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மாவீர்ர் நினைவாலயம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையிலான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.







 

வெள்ளி, 22 நவம்பர், 2024

நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பம்

நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக. 21-11-2024.அன்று  
ஆரம்பமானது.
 மாவீரர் தினத்தின் இறுதி நாளான 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் நேற்று மகாவீரர் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
 கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் நடைபெற்ற மவீரர் தின வைபவம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றதுடன், உயிரிழந்த 
மாவீரர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தி, அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
 1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி, லெப்டினன் சங்கர் என்ற விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி, போரில் உயிரிழந்த முதலாவது விடுதலைப் புலி உறுப்பினராக மரணமடைந்ததையடுத்து, அவரது
 நினைவாக 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முல்லைத்தீவு நிட்டகைக்குளம் காட்டில் முதலாவது மகாவீரர் தின விழா கொண்டாடப்பட்டது.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 5 செப்டம்பர், 2024

தமிழ் மக்கள் அனைவரும் சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை

தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே எமது ஆதரவு என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் பரமசிவம் சிறீதரன்,
 தமிழ் மக்கள் அனைவரும் 'சங்கு'ச் சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை 
விடுத்துள்ளார்.
 அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , ஈழத் தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் அனாதைகளாக அலைந்து திரிகிறார்கள். நாம் நம்பிய அனைவருமே தேர்தல்களின் பின்னர் எம்மை ஏமாற்றியே 
வருகிறார்கள். 
தேர்தலில் வாக்குறுதி கொடுத்த யாருமே அதன் பின்னர் எம்மை மதித்ததில்லை. இம்முறை எமக்கு ஒரு புதிய தெம்பு பிறந்துள்ளது. வெற்றி பெறப்போவதில்லை எனத் தெரிந்து கொண்டே நாம் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறோம். 
 நாம் நம்பிய அனைவரும் எம்மைக் கைவிட்ட போதும், நாம் எமது உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடவில்லை என்பதையும், அதற்காகப் போராடும் எமது உணர்வுகளை இன்னும் இழந்து
 விடவில்லை என்பதையும் அத்துடன் எமது வலிகளையும் வேதனைகளையும் இந்த உலகுக்கு உரக்கச் சொல்லப் போகிறோம்.
 வெற்றி பெறும்வரை எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடுத்த அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவது 
எமது வரலாற்றுக் கடமை. கடந்த காலங்களில் கூட்டணியின் தலைமை பல துரோகங்களுக்குத் துணைபோய் இருக்கிறது என்பது. 
ஆனால், இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை தமிழ் இனத்தின் வரலாற்றுக் கடமையைச் செய்யத் தயங்காது. என்றுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 13 ஜூலை, 2024

தமிழர் தாயாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில்  தமிழர் தாயாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று 
முன்னெடுக்கப்பட்டது.
 வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு 
வரும் போராட்டத்தின் 2700 நாளான இன்றையதினம் குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும் எங்கே
 எங்கே உறவுகள் எங்கே, கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என்று கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை
 என்பது குறிப்பிடத்தக்கதாகும்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 1 மே, 2024

மே தினப் பிரகடனம் வடக்கு கிழக்கில் தமிழ் மரபுகளை சீரழிக்காமல் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்

தமிழ் மக்களின் மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கில் குடிசனப் பரம்பல்களை மாற்றி சீரழிக்காமல் அந்த மக்களின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.
 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் இன்று(01) வெளியிடப்பட்ட மே தின பிரகடன தீர்மானத்திலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்குக் காரணமாக அமைந்த தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தவறியமையும்
 அநாவசியமாக பல்லாண்டுகாலமாக ஒரு யுத்தததை நடத்தியமையும் அந்த யுத்தத்தை நடாத்துவதற்கு அரசாங்கம் உருவாக்கிய 
பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிவடைந்து
 பதினைந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னமும் நடைமுறையில் இருப்பதானது மக்களின் அடிப்படை உரிமைகளை
 தொடர்ந்தும் மீறும் ஒரு செயற்பாடாகும். அதேபோல் யுத்தத்தின் காரணமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான
 பொதுமக்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவித காத்திரமான
 நடவடிக்கைகளை எடுக்காமையானதும் மிகுந்த விசனத்தை 
ஏற்படுத்துவதுடன் அரசாங்கத்தின் தமிழர் விரோத போக்கையும் வெளிக்காட்டி நிற்கின்றது. 
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றிற்கு உரிய தீர்வினைக் காணவேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
 வட கடலில் பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து வடபுல மீனவர்களுக்குமிடையில் மீன்பிடி தொடர்பாக தொடர்ச்சியான சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன
. ஈழத்து மீனவர்களின் படகுகள் சேதமாக்கப்படுகிறது. வலைகள் அறுக்கப்படுகின்றன.
 இலட்சக் கணக்கான பெறுமதி வாய்ந்த சொத்துகள் கடலில் நிர்மூலகாப்படுகின்றன. அதே சமயம் நாளாந்தம் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் நீதிமன்றங்களால் 
அவர்களது படகுகள் அரசுடையாக்கப்படுவதும் 
தொடர்கதையாகி வருகின்றது. 
இவை நிறுத்தப்படவேண்டும். இதற்கு ஏற்ப இந்திய அரசும் இலங்கை அரசும் மீனவ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்ட இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு விரைந்து செயற்படவேண்டுமென்று கோருகின்றோம். கடந்த சில வருடங்களாக 
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுகளாலும் வரட்சியாலும் சில இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளின் காரணமாகவும் தவறான உரக்கொள்கையினாலும் இப்பொழுது தெங்கு 
செய்கையில் ஏற்பட்டுவரும் நோய் காரணமாகவும் விவசாயிகள் தமது ஜீவனோபாயத்தையே முற்றுமுழுதாக 
இழந்து நிற்கிறார்கள்.
 மேலும் விவசாயிகளின் விளைச்சலுக்கு உரிய நிர்ணய விலை கிடைக்காமையாலும் விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கான உரம் மற்றும் கிரிமிநாசினிகளை தேவையான அளவிற்கு மானிய அடிப்படையில் வழங்குவதுடன் 
விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய வேண்டும். நுன்நிதிக்கடன் வழங்கும் நிறுவனங்கள் அப்பாவிப் பெண்களிடம் 
மிகப்பெருமளவிலான வட்டியினை அரவிடுவதோடு நிதியை மீளச் செலுத்துகையில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் 
அந்நிறுவனங்களினால் பெண்கள் குறிப்பாக குடும்பத்தை தலைமையேற்று நடத்தும் பெண்கள் பாலியல் தொல்லை உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதுடன் தற்கொலை செய்துகொள்வதற்கும்
 தூண்டப்படுகின்றனர்.
 இத்தகைய நுன்நிதிக் கடன் நிறுவனங்களைத் தடைசெய்வதுடன் உழைக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்குத் தேவையான நிதியை இலகுதவணை அடிப்படையில் வழங்க அரசாங்கம்
 முன்வரவேண்டும். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகள்
 இல்லாமையும் தொழிலாளர், விவசாயிகளை பலமடங்கு பாதித்திருக்கிறது. வறுமைக்கோட்டிற்குக் கீழிருப்போர் பல மடங்கு உயர்ந்திருப்பதாக ஐ.நா. புள்ளிவிபரங்கள் கூறுகின்றது.
 அரசாங்க வருவாயை கூட்டுவதற்காக வரிகள் அதிகரிக்கப்படுவதும் விலைகள் உயர்த்தப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிறதே அன்றி, வறிய மக்களின் மூன்று வேளை உணவிற்கு
 உத்தரவாதமில்லாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழிருக்கும் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் போஷாக்கு
 உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் பொதுவான பொருளாதர உதவித் திட்டத்தின்கீழ் நிவாரணம் வழங்கப்படவேண்டும்.
 அரசாங்கத்தின் தவறான கொள்கைகளின் காரணமாக நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது மாத்திரமல்லாமல், இலஞ்சம் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு காரணமாக அரச இயந்திரமும் முற்றுமுழுதாக 
சீர்குலைந்திருக்கிறது. இவற்றிற்கு எதிரான மக்களின் குரல்களையும் தொழிற்சங்கங்களின் குரல்களையும் பொது அமைப்புகளின் குரல்களையும் அடக்குவதற்காக தொடர்ச்சியாக பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் இயற்றப்படுகினறன.
 இவற்றை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன், தொழிற்சங்கங்களும் பொது நிறுவனங்களும் சுதந்திரமாக இயங்குவதற்கும் தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கான உரிமைகள் உத்திரவாதம் செய்யப்படவேண்டும்.
 அரசாங்கத்தின் நான்காவது தூணாகவும் ஜனநாயகத்தின் காவலனாகவும் திகழ்கின்ற ஊடகத்துறைக்கு எதிராக அரசாங்கம் புதிய புதிய சட்டங்களினூடாக அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றது.
 இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள், அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் ஊடகம் போன்றவை சுதந்திரமாகவும் பக்கசார்பற்றும் இயங்கக்கூடிய வகையிலும் அவற்றின் சுயாதீனச் செயற்பாடுகள் தடையின்றி செயற்படும் வகையிலும் அரச அடக்குமுறைச் சட்டங்கள் அகற்றப்படவேண்டும்.
 வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்பது தமிழ் பேசும் மக்களின் மரபுவழித் தாயகமாக இருந்து வருகின்றது. குடிசனப் பரம்பல்களை மாற்றியும் கலாசார ஊடுருவல்களை ஏற்படுத்தியும் அங்கு வாழும் 
மக்களின் மொழி, கலாசார, பண்பாடு மற்றும் பொருளாதார வளங்களை சீரழிக்காமல் காலாதிகாலமாக வாழ்ந்துவரும் அந்த மக்களின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 30 ஏப்ரல், 2024

தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் எடுத்துள்ள தீர்மானம்

தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் 30/௦4/2024 அன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை 
பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர்.  
1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.  
2. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை
 தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.  
3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.  
4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.  
5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு 
செயல்படுவது. ஒப்பம் 
வணக்கத்துக்குரிய ஆயர், திருகோணமலை மறைமாவட்டம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கைலை ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதீனம் பேராசிரியர் கே ரி கணேசலிங்கம் தலைவர் அரசறிவியல்துறை யாழ் பல்கலைக்கழகம்
 கலாநிதி. க. சிதம்பரநாதன், அரங்க செயற்பாட்டு குழு அருட்பணி த ஜீவராஜ் ஏசு சபை சமூக செயற்பாட்டாளர் மட்டக்களப்பு    நிலாந்தன்
 அரசியல் ஆய்வாளர் 
அருட்பணி பி ஞானராஜ் (நேரு) மனித உரிமை செயற்பாட்டாளர் மன்னார் நீதி சமாதான ஆணைக்குழு யாழ் மறை மாவட்டம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரழுச்சி இயக்கம், தமிழ்
 சிவில் சமூக அமையம், வடக்கு கிழக்கு வலிந்து 
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம், அறிவார் சமூகம்,  திருகோணமலை அகில இலங்கை மீனவர் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கூட்டமைப்பு, கரைச்சி வடக்கு சமாசம் சமூக விஞ்ஞான ஆய்வு மையம், சிவில் 
அமைப்பு மட்டக்களப்பு, தமிழ் ஊடகத் திரட்டு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாண பல்கலைக்கழக 
மாணவர் ஒன்றியம், மாவட்ட கமக்காரர் அமைப்பு, வவுனியா தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் தமிழர் கலை பண்பாட்டு மையம்,
 எம்பவர் நிறுவனம், மக்கள் மனு வடக்கு கிழக்கு
 சிவில் சமூக குழு, குரலற்றவர்களின் குரல், மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் அமைப்பு, சமூக 
மாற்றத்துக்கான அமைப்பு, வவுனியா தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள், இணையம் திருகோணமலை புழுதி சமூக உரிமைகளுக்கான அமைப்பு, திருகோணமலை நலிவுற்ற சமூகங்களின் அபிவிருத்திக்கான 
தன்னார்வ அமைப்பு என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 16 ஏப்ரல், 2024

நாட்டில் நெடுங்கேணியில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விழா இடம்பெற்றது.

வவுனியா நெடுங்கணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா.16-04-2024. இன்று இடம்பெற்றது.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழில்துறை திணைக்களம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலகமும் வவுனியா
 வடக்கு வலயக் கல்வி அலுவலகம் இணைந்து நடாத்திய குறித்த நிகழ்வானது நெடுங்கேணி மகா வித்தியாலய மைதானத்தில்
 இடம்பெற்றது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.  
இதன்போது பாரம்பரிய முறையில் விருந்தினர்களை 
வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு தமிழ் சிங்கள கலை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், பாரம்பரிய உணவு கண்காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. 
இந் நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளர் சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஷ்குமார், வவுனியா வடக்கு பிரதேச
 செயலாளர் இ.பிரதாபன் மற்றும் முக்கியஸ்தர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 9 ஏப்ரல், 2024

கிளிநொச்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி போராட்டம்

கிளிநொச்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி.09-04-2024.  இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று 
முன்னெடுக்கப்பட்டது. 
 வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 
கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக 
இப் போராட்டம்
 இடம்பெற்றது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி இடம்பெறும் இப் போராட்டமானது,
09-04-2024. இன்றைய தினம்(09) வடக்கு கிழக்கு எங்கும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 ஒரு கூலித் தொழிலாளியின் நாளாந்த வருமானம் 1500 ரூபா ரூபாவாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரிசியின் விலையை 100 ரூபாயிலும் குறைக்குமாறும் , அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைக்குமாறு கேட்டு நின்றனர். 
 மேலும் பல உயிர்களை காவு வாங்காமல் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து தருமாறும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 12 மார்ச், 2024

வடக்கு கிழக்கு பெண்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

 

வடக்கு கிழக்கு பெண்கள் எதிர்கொண்டு வரும் அரசின் இன, மத ரீதியான அடக்குமுறைகளையும் நில ஆக்கிரமிப்பையும், இராணுவ மயமாக்கலையும் முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசு 
துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.  
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டிணைவில் கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி ஒன்று.12-03-2024. இன்று  
இடம்பெற்றுள்ளது.  
வடக்கு - கிழக்கின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்றலில் இருந்து இருந்து பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்து விழிப்புணர்வு பேரணியாக கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தை சென்றடைந்துள்ளனர்.
பேரணியின் முடிவில் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில், இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசத்தைச் சார்ந்த தமிழ் பேசும் பெண்கள் எதிர் கொண்டு வரும் பன்முகப்பட்ட 
அடக்குமுறைகளுக்கு எதிராக கூட்டாக குரல் கொடுப்பதற்காக வடக்கு கிழக்கை சேர்ந்த எட்டு மாவட்டங்களிலும் இயங்கி
 வரும் பெண்கள் அமைப்புகள் மற்றும் பெண் செயற்பாட்டாளர்களான நாம் இங்கு ஓரணி திரண்டிருக்கிறோம்.  
இலங்கையின் அனைத்து பெண்களும் இன, மத, சமூக வேறுபாடுகளை கடந்து ஆணாதிக்க அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். ஆணாதிக்க மயப்பட்ட குடும்ப, சமூக, 
வேலைத்தள, அரச அடக்குமுறைகளுக்கு இலங்கைப் பெண்கள் அனைவரும் உள்ளாகின்றனர். பெண்கள் மீதான வன்முறை 
கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன் 
மோசமடைந்துள்ளது. இணையவழிக் குற்றங்கள் 
அதிகரித்துள்ளன.
எனினும், இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசத்தை பாரம்பரிய வாழ்விடமாகக் கொண்ட தமிழ் பேசும் பெண்களான நாம் குறிப்பான பன்முகப்பட்ட அடக்குமுறைகளுக்கு உள்ளாகி
 வருகிறோம்:  
1) இலங்கை அரசின் திட்டமிட்ட இன மற்றும் மொழி ரீதியான அடக்குமுறைகளுக்கு எழுவது வருடங்களுக்கு மேலாக உள்ளாகி வருகிறோம்.  
2) முப்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட இன அழிப்புப் போரின் அழிவுகளையும் வலிகளையும் சுமந்துகொண்டு இருக்கிறோம்.  
3) இன்றுவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ்ப் பெண்கள் எனும் காரணத்தாலேயே எமது சசோதரிகள்
 கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர். தாய்மாராகவும், மனைவி மாராகவும், சகோதரிகளாகவும் எமது குடும்ப அங்கத்தவரின்
 பாதுகாப்பு குறித்து எப்பொழுதும் மனப் பதைப்புடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்  
4) உண்மையை அறிந்து கொள்ளவும், நீதிக்காகவும், நியாயமான இழப்பீடு களைப் பெறவும், எமது உறவுகளுக்காக நினைவேந்தலைகளை மேற்கொள்ளவும், கௌரவாமான அரசியல் உரிமைகளைக் கொண்ட பிரஜைகளாக வாழவும் குரல் கொடுத்து வருகிறோம்  
5) இலங்கை அரசானது இதுவரை பொறுப்புக்கூறலை புறக்கணித்து வருவதால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எனும் வகையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி வருகிறோம். 
6) எமது சகோதரிகள் பலரும் அரசின் திட்டமிட்ட காணி அபகரிப்பு காரணமாக இன்று வரையில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். அரச திணைக்களங்களான வன இலாகா, தொல்பொருள் திணைக்களம்
 ஆகியவற்றினால் எதேச்சாதிகாரமாக காணிகள் அபகரிக்கப்படுதல், அரச படைகளால் காணிகள் அபகரிக்கப்படுதல் காரணமாக 
வீடுகளையும் விவசாய நிலங்களையும் இழந்து பொருளாதார 
பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். பொருளாதாரத்தை 
இழந்துள்ளனர்.  
7) அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கம் காரணமாக அச்சுறுத்தல்களையும் அவமானப்படுத்தல் களையும் எதிர்கொண்டு வருகின்றனர் .  
8) ராணுவ மயமாக்கப்பட்ட பிரதேசத்து பெண்கள் எனும் வகையில் பொதுவில் பெண்கள் அனைவரும் அச்சத்துடன் வாழும் நிலைக்குத் 
தள்ளப்பட்டுள்ளோம்.  
9) வடக்கு கிழக்கில் பெண்களின் சுயாதீனமான சமூக நடவடிக்கைகள் அனைத்தும் அரச உளவுப் பிரிவின் தொடர் கண்காணிப்புக்கு உள்ளாவதுடன் பெண் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தல்களையும்
 அத்துமீறல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.  உதாரணமாக  ஆண் உளவாளிகள் பெண்களை புகைப்படம் எடுத்தல், பெண்களை விசாரித்தல் எனும் பெயரில் மாலை நேரங்களில் வீடுகளுக்கு 
செல்லுதல், இரவிலும் தொலைபேசியில் அழைத்தல். சமூக செயற்பாட்டில் உள்ள பெண்கள் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்படல், பெண்களின் சமூக செயற்பாடுகளை அச்சுறுத்துவதற்காக
 பெண்கள் மீது பொலிசார் காரணமற்று வழக்கு தொடுத்தல் போன்றவற்றைக் கூற முடியும்.  
10) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பத்து பெண்கள் பாதுகாப்புத் தரப்பினால் அச்சுறுத்தப்படல், தொடர்கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படல், தாக்கப்படல் நடைபெறுகிறது அரசின் இனவாத 
அடக்குமுறைகளால் மாத்திரமன்று, வடக்கு கிழக்கு
 தமிழ் சமூகத்தில் காலங்காலமாக நிலவிவரும் ஆணாதிக்க 
அடக்குமுறை போனதும் உரிமை மறுப்புகளினதும் காரணமாகவும் தமிழ்ப் பெண்களான நாம் பாதிக்கப்படுகிறோம். 
குடும்ப வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், இணையதள ரீதியான குற்றங்கள் ஆகியன தமிழ் சமூகத்தைச் சார்ந்த ஆண்களால் தமது சொந்தக் குடும்பத்துப் பெண்களுக்கு 
எதிராகவும் சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கு எதிராகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாடசாலைகளில் சிறுமியர் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன. 
தொழில் பாதுகாப்பு காரணமாக வேலைத்தள வன்முறைகளை பெண்கள் வெளிக்கொண்டு வராமல் உள்ளனர். இது மாத்திரமன்றி தமிழ் சமூகத்தில் காணப்படும் சாதிய, பிரதேச வேறுபாடுகள், மத ரீதியான
 பிரிவினைகள் யாவும் பெண்களையே அதிகம் பாதிக்கின்றன.
 இவற்றுடன் தமிழ் சமூகத்தில் நிலவும் ஜனநாயக மறுப்பு சிந்தனைகள், பிற்போக்கான கலாச்சார அடக்குமுறைகள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளன.
இந்நிலையில், • வடக்கு கிழக்கு பெண்கள் எதிர்கொண்டு வரும் அரசின் இன, மத ரீதியான அடக்குமுறைகளையும், நில ஆக்கிரமிப்பையும், இராணுவ மயமாக்கலையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு இலங்கை அரசை கோருகிறோம்  
• வடக்கு கிழக்கில் சட்ட ஒழுங்கு உரிய முறையில் அமுலாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் • ஒட்டுமொத்த இலங்கைப் பெண்களும் சுதந்திரமாகவும், உரிமைகளுடனும் வாழ்வதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோருகிறோம்.
• பாதிக்கப்படும் பெண்களின் நலனை கருத்திற்கொண்டு அரச அதிகாரிகளும், காவல்துறையும் பக்கச்சார்பின்றி செயலாற்றக் கோருகிறோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழீழத்திற்கு சொந்தமானது சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சிங்கள இலங்கைக்கு சொந்தமானவை அல்ல தமிழீழத்திற்கு சொந்தமானது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் 
தெரிவித்துள்ளார். 
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் சிங்கள அரசாங்கங்கள் மாத்திரமே இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 
இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் .மிலிந்த மொரகொடவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து 
விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்படி 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
22 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாட்டிற்கு மாகாண சபைகள் பொருந்தாது என  மிலிந்த் மொரகொட முன்வைத்துள்ள பிரேரனையில் முன்வைக்கப்பட்டுள்ளமை என்ப குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

தமிழர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி தாக்குதல் இதுதான் சுதந்திரமா

இன்று நாடளாவிய ரீதியில் இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் 04-02-2024.அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் சுதந்திரத்தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க அழைப்பு 
விடுக்கப்பட்டிருந்தது. 
இதற்கமைய மட்டக்களப்பில் மாபெரும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் கிளிநொச்சியில் டிப்போ 
சந்தியில் இருந்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவும் ஏற்பாடு 
செய்யப்பட்டிருந்தது. 
இந்தநிலையில் டிப்போ சந்தியில் இன்று காலை ஆரம்பமாக இருந்த ஆர்ப்பாட்ட பேரணியானது, பாதுகாப்பு படையினரின் தலையீடு காரணமாக அது இரணைமடு சந்திக்கு மாற்றப்பட்டிருந்தது. 
இதனைத் தொடர்ந்து இரணைமடு சந்தியில் இருந்து கிளிநொச்சி நகர் நோக்கி குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். 
இதன்காரணமாக பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பல்கலைக்கழ மாணவர்களில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இதேவேளை போராட்டத்தை தடுத்து நிறுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டதுடன், தடியடி நடத்தியுள்ளனர்.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





செவ்வாய், 23 ஜனவரி, 2024

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சிறீதரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு

நாட்டின் கொள்கை ரீதியாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறு தமிழரசு கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அழைப்பு
 விடுத்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றதும் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் மக்கள் நலனை கருத்திற் கொண்டு தமிழ் தேசியத்தின் பாதையில் ஓரணியாக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக சிறீதரன்
 குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிட்டு, தற்போது தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழரசு கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் புத்துயிரூட்டுவதே தனது நோக்கம் என்றும் அவர் 
வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டை துரித கதியில் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 21 ஜனவரி, 2024

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் தெரிவு

திருகோணமலையில்.21-01-2024. இன்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.
இத்தெரிவுத் தேர்தலின் மற்றைய வேட்பாளரும் 
நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஆ சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார்.
 இத்தேர்தலின் போது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் 
எண்ணிக்கை 321.என்பதாகும்
இவருடைய சேவை தொடர எனது இந்த இணையங்களின்
நல்  வாழ்த்துக்கள் உரித்தாகுக 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





Blogger இயக்குவது.