திங்கள், 1 ஜூன், 2026

இன்று யாழ் நூலகம் எரியூட்டப்பட்டு 45 ஆண்டுகள்: மலரஞ்சலி செலுத்தி நினைவு கூரல்

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட போது அங்கிருந்த சுமார் 97,000 க்கும் மேற்பட்ட அரிய நூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளின் மூலப்பிரதிகள் என அனைத்தும் முற்றாக சாம்பலாகின.

இருபதாம் நூற்றாண்டின் மிக மோசமான கலாச்சார ஒடுக்குமுறையாகவும், இனவழிப்பு நடவடிக்கையாகவும் சர்வதேச அளவில் இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.

புகழ்பெற்ற தத்துவஞானியும் கலை விமர்சகருமான ஆனந்த குமாரசுவாமி, பேராசிரியர் டாக்டர் ஐசக் தம்பையா போன்ற அறிஞர்களின் அரிய கையெழுத்துப் பிரதிகளும் இதன்போது தீக்கிரையாக்கப்பட்டன.

யாழ் நூலகத்தின் மீது அதீத பற்றும், அங்கிருந்த அரிய ஆவணங்கள் மீது மிகுந்த மதிப்பும் கொண்டிருந்த பன்மொழி அறிஞரான அருட்கலாநிதி எச். எஸ். தாவீது அடிகள், நூலகம் எரியும் செய்தியைக் கேட்டு, அதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், நூலகத்தின் தோற்றத்திற்கு வித்திட்ட கே. எம். செல்லப்பா மற்றும் தாவீது அடிகள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, 45 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் 45 சுடர்கள் ஏற்றப்பட்டு ஈழத் தமிழர்களின் அறிவுசார் அடையாளத்தின் மீளெழுச்சி நினைவு கூரப்பட்டது.

1981 ஜூன் 1 இல் எரியூட்டப்பட்ட யாழ் பொது நூலகத்தின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. 

97,000 அரிய நூல்களையும் தமிழ் பாரம்பரிய ஆவணங்களையும் இழந்த இந்த ஆறா வடுவின் நினைவாக யாழ் மாநகர சபை அதிகாரிகள் மற்றும் வாசகர்கள் இணைந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் தேசிய மருத்துவமனையில் தொண்ணுறு மில்லியன் ரூபாயில் நரம்பியல் பிரிவு திறப்பு

நாட்டில்  தொண்ணுறு மில்லியன் ரூபா பெறுமதியான புதிய மருத்துவ வசதி இலங்கை தேசிய மருத்துவமனையில் (NHSL) 99 மில்லியன் ரூபா செலவில் முழுமையாக மறுசீரமைக்கப்பட்ட “நரம்பியல் மருத்துவ நிறுவகம்” (Institute of Neurology) இன்று (01) அதிகாரப்பூர்வமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையிலும், பிரதி சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி அவர்களின் பங்கேற்பிலும் காலை 10.00 மணிக்கு தொடக்க விழா நடைபெற்றது.
மூளை, முதுகெலும்பு, நரம்பு மற்றும் தசை தொடர்பான நோய்களை கண்டறிந்து சிகிச்சையளிக்கும் நரம்பியல் மருத்துவ சேவைகள் இந்த மறுசீரமைப்பின் மூலம் மேலும் விரிவாகவும் திறம்படவும் 
செயல்படவுள்ளது.
திறப்பு நிகழ்வுடன் இணைந்து, நிறுவனர் தேசமாண்ய விஞ்ஞான ஜோதி வைத்தியர் ஜே.பி. பீரிஸ் அவர்களின் புகைப்படம் சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் 62/63 எண் நரம்பியல் வார்டு தொகுதியும் அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இந்த புதிய வார்டு தொகுதி, ஒரு வார்டுக்கு 22 படுக்கைகள் என பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவாக இரண்டு வார்டுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 52 மில்லியன் ரூபா நிதி 
ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தரை மாடியில் உள்ள உடற்பயிற்சி சிகிச்சை பிரிவின் மறுசீரமைப்புக்கு 22 மில்லியன் ரூபாவும், மூன்றாம் மாடியில் உள்ள பேச்சு, தொழில் சிகிச்சை பிரிவுகள் மற்றும் கேட்போர் அரங்கின் மேம்பாட்டுக்கு 25 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது 16 ஆவது வார்டில் நூற்றாண்டுக்கும் மேலாக பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நரம்பியல் பிரிவுகள் 3 மற்றும் 4, இனி அதிக வசதிகளுடன், நெரிசலின்றி சேவையளிக்க வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் டாக்டர் குமார் விக்ரமசிங்க உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் விமான நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் போதைப்பொருளுடன் இருவர் கைது

இருவர் தாய்லாந்தில் இருந்து மர்மப் பார்சல்களுடன் வந்திறங்கிய  இலங்கை பயணிகள், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கச்சிதமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்! பாங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸ் (TG-307) விமானம் மூலம் 01-06-2026-அன்று  அதிகாலை 12.30 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்கவை
 வந்தடைந்தனர். 
இவர்கள் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களது 2 பயணப் பொதிகளை (Suitcases) அதிரடி சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, துணிகளுக்குள் மிகச் சாதுரியமாக 13 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோ கிராம் 104 கிராம் எடையுடைய உயர்தர 'குஷ்' (Kush) ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது! 
இதன் சந்தைப் பெறுமதி சுமார் 04 கோடி 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது! விசாரணையில் வெளிவந்த
 அதிர்ச்சித் தகவல்கள்.. முதலாவது நபர் - படோவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்!
இரண்டாவது நபர் - நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த, ஊதுபத்தி வியாபாரத்தில் ஈடுபடும் 26 வயதுடைய இளைஞர்! 
உறவினர்கள் - இதில் வேடிக்கை என்னவென்றால், படோவிட்ட நபரின் சொந்த சகோதரியைத்தான் இந்த ஊதுபத்தி வியாபாரி திருமணம் செய்துள்ளார். அதாவது, அளவோடு 'வியாபாரம்' செய்ய வேண்டிய மைத்துனர்கள் இருவரும் சேர்ந்து, இப்போது 'வழக்கில்' நீதிமன்ற 
அதிரடி உத்தரவு!
கைது செய்யப்பட்ட இரு மைத்துனர்களும் உடனடியாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து, பின்னணியில் இருக்கும் பெரும் புள்ளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிலுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் தலைமையகத்திடம் (PNB) இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.