திங்கள், 31 ஆகஸ்ட், 2020

நாட்டில் போதைப் பொருள் டீல்;13 .பொலிஸ் அதிகாரிகளின் மறியல் நீடிப்பு

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பொலிஸ் அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் இன்று (31) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய குறித்த அதிகாரிகளை செப்டம்பர் மாதம் 14ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த 13 பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரில்.31-08-20. இன்று

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று (30) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், மன்னாரில் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன், மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில்.21-08-2020. இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேசமே மௌனம் காப்பது ஏன், இலங்கை
 அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் வெளிவரும், காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, 
சர்வதேசமே புதிய அரசாங்கத்திடம் நீதியை பெற்றுத்தாருங்கள் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை 
ஏந்தியவாறு அமைதியான முறையில் 
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு, காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நினைவகம் ஒன்றை அமைப்பதற்கு இடம் கோரி கையெழுத்துக்களும்
 பெற்றுக்கொள்ளப்பட்டன.
அதேநேரம் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பினால் ஜனாதிபதிக்கு எழுதிய மகஜர் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபலனிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் 
சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் 
தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





செட்டிக்குளத்தில் வைத்தியர் பற்றாக்குறையை தீர்க்க கோரி போராட்டம்

 

வவுனியா – செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (31) காலை 8.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம்
 முன்னெடுக்கப்பட்டது.
செட்டிகுளம் வைத்தியசாலையில் பல நிர்வாக குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்த மக்கள், குறிப்பாக வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நோயாளார் விடுதி மூடப்பட்டுள்ளதுடன், சிறிய நோய்களிற்காக 
சிகிச்சைக்கு சென்றாலும் வவுனியா பொது 
வைத்தியசாலைக்கு மாற்றப்படும் நிலையே காணப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகுவதாகவும் கூலி தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால், வவுனியா சென்று வருவதற்கு பொருளாதார ரீதியாக கஸ்டங்களை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
குறித்த வைத்தியசாலையை நம்பி செட்டிக்குளம் பிரதேசம் மற்றும் அதனை அண்மித்த பல கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்ற நிலையில், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 12 வைத்தியர்களுக்கான நியமனம் (காடர்) இருக்கின்றபோதும் 2 வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர் என 
தெரிவிக்கப்படுகிறது.
சத்திர சிகிச்சை நிபுணர், பல்வைத்தியர் போன்றோரும் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் மருத்துவ விடுதியையும் இயக்க முடியாமல் நோயாளர்களிற்கு சரியான சிகிச்சைகளை வழங்கமுடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள்
 குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் காணப்படுகின்ற நிர்வாக குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு வலியறுத்தியே இன்று 
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்டபோது பொலிஸாரால் வைத்தியசாலை பிரதான வாயில் மூடப்பட்டது. இதனால் நீண்ட நேரமாக வாயிலை மறித்தபடி பொதுமக்கள் 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மக்களுடன் கலந்துரையாடியதுடன், இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரிவிப்பதுடன், எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இந்த வைத்தியசாலையில் இருக்கின்ற அனேகமான பிரச்சினைகள் தீர்க்கப்படுமென 
உறுதியளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் உறுதிமொழியை அடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் நோயாளர்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

கண்டியில் நிலநடுக்கம் ஏற்படவில்லை. சிறிய அளவில் குலுக்கல்

கண்டியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.கண்டி – திகன பகுதியில் இரவு 8.40 மணியளவில் பாரிய சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.அந்தப் பகுதியை சேர்ந்த மக்களால் அது உணரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் 
வெளியாகி உள்ளன.
இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையத்தின் தலைவர் அருன வால்பொல கருத்து வெளியிடுகையில், நிலநடுக்கம் ஏற்படவில்லை. சிறிய அளவில் குலுக்கல் உணரப்பட்டதாகவும், அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.நிலநடுக்கம் என வெளியான தகவல்களை அடுத்து கண்டி – திகன பகுதி மக்கள் பெரும் அச்சத்தல் உள்ளதாக தெரியவருகின்றது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 29 ஆகஸ்ட், 2020

எங்களைப் பற்றி 10 நிமிடம் முன்னாடி யோசிங்க கண்ணீரில் பழங்குடி மக்கள்

 

கனமழை, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஆனைமலைக் குன்று பழங்குடி மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பான மாற்று இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான பழங்குடி கிராமங்கள் உள்ளன. கடந்த ஆண்டு அங்கு பெய்த கனமழை, காட்டாற்று ,
வெள்ளம் போன்றவை அந்த மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டுவிட்டன. நாகரூத்து என்ற பழங்குடி கிராமத்தில் மலசர் இனப் பழங்குடி மக்கள் அதிகம் வசித்துவருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் பாறைகள் உருண்டு வந்து, அங்குள்ள 22 வீடுகளை அடித்துச் சென்றன. இதில், குஞ்சப்பன் என்பவரின் இரண்டு வயது மகள் சுந்தரி அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். சில நாள்களுக்குப் பிறகே சுந்தரியின்
 உடல் கிடைத்தது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 26 ஆகஸ்ட், 2020

வரணியில் பஸ்ஸில் பயணித்த இளைஞன் மீது வாள் வெட்டு

 

தென்மராட்சி – வரணி, இயற்றாலை பகுதியில் வாள் வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இளைஞர் ஒருவர் மந்திகை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில்
 அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (25) இரவு 7 மணியளவில் 
இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முன்னாள் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஆ.சாந்தகுமாரின் மகனான சாந்தகுமார் சதுசன் (20-வயது) என்பவரே 
படுகாயமடைந்துள்ளார்.
மேசன் வேலைக்கு செல்லும் குறித்த இளைஞன் வேலை முடிந்து பேருந்தில் வரும் போது வரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயப்பகுதியில் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் ஐந்து பேர் குறித்த இளைஞனை பேருந்திலிருந்து இறக்கி வாளால் வெட்டியதாக 
தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கைவிரல் இரண்டு துண்டாடப்பட்ட நிலையில், வலக் காலிலும் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் மந்துவிலுக்கு செல்லும் பாரதி வீதி சந்தியில் இளைஞனை போட்டுவிட்டு குறித்த கும்பலம் 
தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



அமரர் அ .அமிர்தலிங்கத்தின் 93வது ஜனன தினம் அனுஷ்டிப்பு.26-08-20

 

இலங்கையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர், சுட்டுக் கொல்லப்பட்ட அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 93வது ஜனன தினம் .26-08-2020.இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்படி வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு.26-08-2020. இன்று காலை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்டோர் 
கலந்து கொண்டனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


நாவலப்பிட்டியில் நகர சபை உறுப்பினர்கள் நால்வர் கடத்தி தாக்கப்பட்டனர்

 

கண்டி – நாவலப்பிட்டி நகர சபையின் உறுப்பினர்கள் 4 பேரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை
 ஆரம்பித்துள்ளது.
குறித்த 4 பேரும் கடந்த 23ம் திகதி அடையாளம் தெரியாத சில நபர்களினால் கடத்தி செல்லப்பட்டனர். பின்னர் குறித்த 4 பேரும் தாக்கப்பட்டு நாவலப்பிட்டிய, குறுந்துவத்த வீதியில் இறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்துள்ள குறித்த 4 பேரும், நாவலப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கொழும்பு மாநகரில் பிச்சையெடுத்த கோடீஸ்வரர். பொலிஸார் அதிர்ச்சியில்

 

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் அருகே பிச்சை எடுக்கும் போது, தள்ளு வண்டியைத் திருடியதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ள நபர், மஹகரகம பமுனுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோ
 பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த 
பிச்சைகாரரின் சொகுசு மாடி வீட்டின் தோட்டத்தில் ஒரு வேகன் ஆர் கார் மற்றும் ஒரு சொகுசு காரையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.வீட்டின் மேல்மாடியை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் மாத வருமானம் ரூபா 30,000 மற்றும் பிச்சை எடுப்பதில் தினசரி வருமானம்
 ரூபா 5,000 கிடைத்துள்ளது.
கொழும்பு – கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் ரூபா 20,000 மதிப்புள்ள பழங்களை ஏற்றிய தள்ளு வண்டியை திருடியதாக புகார் வந்ததையடுத்து, சி.சி.டி.வி கமரா வீடியோவை அவதானித்த பொலிசார் ஞாயிற்றுக்கிழமை (23) குறித்த நபரை கைது செய்துள்ளனர்.குறித்த 
சி.சி.டி.வி கமரா வீடியோவில் வண்டியைத் தள்ளுவதும், பின்னர் தேவாலயத்தின் அருகே பிச்சை 
எடுப்பதில் வழக்கமாக ஈடுபட்டுவதும் பதிவாகியுள்ளதை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.வண்டியை தனது வீட்டிற்கு கொண்டு வர ஒரு நபருக்கு ரூ 5,000 கொடுத்துள்ளார்.இந்தச் சம்பவம் குறித்து கடலோர பொலிஸ் குற்றப்புலனாய்வுத் தலைமை அதிகாரி ஜயந்த குமாரா தலைமையிலான போலீஸ் குழு விசாரணை நடத்தி
 வருகிறது

நிலாவரை.கொம் செய்திகள் >>>

கண்டுபிடிக்கப்பட்ட 16 நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் வம்சத்து கல்வெட்டுதமிழர் பிரதேசத்தில்

 சிவகங்கை மாவட்டம், சக்கந்தியில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால கல்வெட்டினை தொல்லியலாளா்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொல்லியல் 
ஆய்வாளர் கொல்லங்கடி கா.காளிராசா, இந்தக்கல்வெட்டில் பெருமாளுக்கு இறையிலியாக வழங்கப்படும் நிலத்தின் 
எல்லையைக் குறிக்கும் வகையில் 4 பக்கங்களிலும் திருவாழிச் சின்னம் புடைப்பாக வடிக்கப்பட்டுள்ளதாக 
தெரிவித்துள்ளார்.ஸ்வஸ்திஸ்ரீ’ எனும் 
மங்கலச் சொல்லோடு ஆரம்பமாகி 22 வரிகள் இடம் பெற்றுள்ளதாகவும், சிதைந்துள்ள எழுத்துக்களை 
உடைய வரிகள் நாயக்கா் கால அரசின் புகழ்பாடக்கூடிய மெய்கீா்த்திச் சொல்லாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நாயக்கா் காலத்தில், மதுரையைச் சுற்றியுள்ள 
பகுதிகளை 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி நடத்தினா். அவற்றுள் சக்கந்தியும் ஒன்றாகத் திகழ்ந்துள்ளது.
மேலும், இதே பகுதியில் உள்ள செங்குளத்தினுள் பழைமையான கல்வட்டம், முதுமக்கள் தாழிகள் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுவதாகவும் 
அவர் தெரிவித்துள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>> >

 

 

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் கின் ஆட்சிக் கட்டிலில் அமரத் தயாராகிறார் தங்கை

 கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா சர்ச்சைகளுக்கு பெயர்போன நாடாகும். அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அதற்கும் ஒருபடி மேலே.சர்வதேச ஊடகங்களில் அவர் குறித்த
எதிர்மறையான செய்திகளுக்கு 
பஞ்சம் இருந்ததில்லை. கடந்த சில மாதங்களாக கிம் ஜாங் அன்னின் உடல்நிலை குறித்த செய்திகள்தான் வலம் வருகின்றன. கிம்முக்கு இதய அறுவை
 சிகிச்சை நடந்து அது தோல்வியடைந்ததால், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்.கிம் உயிரோடு 
இருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது’ என்றெல்லாம் செய்திகள் உலவிவந்தன.
 இந்நிலையில், சமீபத்தில் கிம் தொடர்பாக 
வடகொரிய 
அரசு வெளியிட்ட அனைத்து புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை’ என்று தென்கொரிய 
புலனாய்வுத்துறையினர் தெரிவித்திருந்தது 
சர்ச்சையைக்கிளப்பியது.
இந்த நிலையில் தற்போது தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் “வடகொரிய 
தலைவர் கோமாவில் இருக்கிறார்” என்று 
கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை 
ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரின் சகோதரியான
 கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” 
என அவர் கூறினார்.அதேசமயம் வடகொரியா 
விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் நிபுணர்கள் பலர் கிம் இறந்து விட்டதாகவே கூறுகின்றனர். கிம் ஜாங் அன்னின்
 தந்தை கிம் ஜாங் இல் இறந்து சில மாதங்களுக்குப் பின்னரே அவரது இறப்பு 
முறையாக அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கிம்மின் சகோதரி தலைவர் பொறுப்பை ஏற்கும்போது இந்த விஷயம் தெளிவுபடுத்தப்படும் 
என கூறியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

யாழ் அல்வாய் வாள் வெட்டு சந்தேக நபர் ஒரு வருடத்தின் பின் கைது

 

கடந்த வருடம் வடமராட்சி அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர்.24-08-2020. இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் அல்வாய் பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது

நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

மட்டக்களப்பில் கோஸ்டி மோதலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட மாணவன்.

 

ஏறாவூரில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் பாடசாலை மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் என்ற
 15 வயது மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.சம்பவம் பற்றி தெரியவருகையில், சிறு வாய்த்தர்க்கமாக 
ஆரம்பித்த விடயம், கோஷ்டி மோதலாக மாறி பின் பழி தீர்க்கும் வகையில் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
.சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக
 ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.இச்சம்பவம்பவத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்கின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 22 ஆகஸ்ட், 2020

குருநாகல் வலகும்புர பகுதியில் விபத்தில் ஐந்து பேர் ஸ்தலத்தில் பலி

            

குருநாகல் வலகும்புர பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.கார் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும்.22-08-20, இன்று அதிகாலை 
மோதிக்கொண்ட போதே இந்த 
அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மரணவீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தவர்களே விபத்தில்
 உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

யாழில் நீரியல் வளத் திணைக்களத்தின் திடீர் சுற்றிவளைப்பு

 

யாழ்ப்பாண நகரப் பகுதியில் கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றிலிருந்து மீன்பிடிக்கு தடை செய்யப்பட்டுள்ள தங்கூசி வலைகள் நீரியல்வள திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது 63 கிலோ கிராம் எடையுடைய ஒரு பொதியும் 50 கிலோ 
எடையுடைய இன்னொரு பகுதியும் நீரியல்வள திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.அண்மைக்காலத்தில் தங்கூசி வலை பாவித்து மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தங்கூசி வலை மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவருவோர் நீரியல்வள 
திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்ற நிலையில் நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் தங்கூசி வலை விற்பனை செய்யப்படுவதாக 
கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அங்கு 
விரைந்த நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் குறித்த கடையினை சோதனை 
செய்தபோது 113 கிலோ கிராம் எடையுடைய தங்கூசி வலைகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்தகடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

பொலிஸார் மீது யாழ் நகரில் தாக்குதல் நடத்திய நபர் அதிரடியாகக் கைது

                      

காங்கேசன்துறை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் 
பஸ் நிலையத்தில்,31-08-20. இன்று காலை இந்த 
சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சிவில் உடையில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு வந்து முச்சக்கரவண்டி வாடகைக்கு 
கேட்டபோது, அதிகமான பணம்
 சொல்லியிருக்கின்றார்கள்.பணம் அதிகம் என்ற காரணத்தினால், அவர் ஆட்டோ வேண்டாம் என 
கூறிவிட்டுச் சென்ற போது, அவரை கிண்டல் அடித்துள்ளனர். அதன்போது, ஏன் கிண்டல் அடிக்கின்றீர்கள் என கேட்டதற்கு, 
பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில், தாக்குதல் மேற்கொண்ட பிரதான நபர் 
யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


கோண்டாவிலில் திடீர் சுற்றிவளைப்பு இராணுவம் தீவிர சோதனை

யாழ் கோண்டாவில் பகுதியில்.20-08-20. நேற்றிரவு இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவத்தினர் ஏராளமானவர்கள் கோண்டாவில் மேற்கு பகுதியில் குவிக்கப்பட்டு திடீர் 
சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது அனைத்து வீதிகளிலும் சோதனை
 நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் மற்றும் ஏராளமான இராணுவத்தினர் இணைந்து இந்த 
சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.எனினும், இந்த திடீர் சுற்றிவளைப்புக்கான காரணம் 
தெரியவரவில்லை.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


எஸ்.பி.பியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்நலம் வேண்டி பிரார்த்தனைகள்

பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி கடந்த 5ஆம் திகதி எம்.ஜி.எம் 
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு காணொளியொன்றினையும் வெளியிட்டிருந்தார்.
குறித்த காணொளியில் தான் நலமாக இருப்பதாகவும், தொலைப்பேசியில் யாரும் அழைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.இதனை தொடர்ந்து அவரது உடல்நிலை நாளுக்கு 
நாள் மோசமடைந்திருந்தது. தற்போது செயற்கை சுவாச கருவியுடன், எக்மோ கருவியும் பொருத்தப்பட்டு சிகிச்சை 
பெற்று வருகிறார்.இந்நிலையில், எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்த தகவல்களை மருத்துவமனை அவ்வவ்போது 
வெளியிட்டு வருகிறது.இதன்படி,20-08-20. நேற்று
 வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரது
 உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
.இதற்கிடையில் நேற்று திரைபிரபலங்கள் பலரும் அவருக்காக கூட்டுப்பிராத்தனையில் ஈடுப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 20 ஆகஸ்ட், 2020

சிறுதானியப் பயிர்ச்செய்கையை கிளிநொச்சியில் ஊக்குவிக்க வேண்டிய கட்டாய நிலை

 


தற்காலத்தில், சிறுதானியங்களுக்கான பயிர்ச்செய்கையானது விவசாயிகளிடையே அருகிவரும் நிலையில் காணப்படுவதால், சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயநிலைக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளதாக, மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி – செல்வாநகர் கிராமத்தில், நேற்று  (19)  நடைபெற்ற குரக்கன் செய்கை அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கொரேனா வைரஸ் தாக்கா்தின் பின்னர்  எழக்கூடிய உணவுப் பாதுகாப்பை எதிர்கொள்ளும் முகமாக,  கிளிநொச்சி மாவட்டத்தில், விவசாயிகளிடையே 
சிறுதானியப் பயிர்ச்செய்கையானது ஊக்குவிக்கப்பட்டு வருகின்றதென்றார்.
 குறைந்தளவான நீர், பசளை, நோய்த்தாக்கத்துடனும் குறைந்தளவு கூலியாள் செலவுடனும் வெற்றிகரமாகப் பயிர்செய்யக்கூடிய சிறுதானியப் பயிர்களில் ஒன்றான குரக்கன் செய்கையை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த 
அவர், கிளிநொச்சி மாவட்டத்தின் மீண்டுவரும் செலவீனத்தில் 30 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு “ஓளசதா” எனும் புதிய குரக்கன் இனம் இவ்வாண்டு சிறுபோகத்தில் வழங்கி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
இதேபோன்று, “சௌபாக்கியா” எனும்  திட்டத்தினூடாகவும் 45 பயனாளிகளுக்கு குரக்கன் விதைகள் வழங்கிவைக்கப்பட்டு, தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக, அற்புதச்சந்திரன் 
மேலும் கூறினார்.
அத்துடன், விதை மானியத்திட்டத்தின் ஊடாகவும் சுமார் 21 ஏக்கர் விஸ்தீரணத்தில் செய்கை பண்ணப்பட்ட குரக்கனிலிருந்து குரக்கன் மாவானது இறக்குமதி செய்யப்படுமெனவும், அவர் தெரிவித்தார்,
நிலாவரை.கொம் செய்திகள் >>>


கிளிநொச்சி யில் விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்தில் பலி


கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியத்தில் இருவர் பலியாகியதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
 கிளிநொச்சி கனகபுரம் பகுதியில்.19-08-2020. இன்று மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலியாகியதுடன், ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். இதன் போது டிப்போ
 கனகபுரம் வீதியில் மாவீரர் துயிலுமில்லம் பகுதியின் வீதி வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வேலி தூண்களில் மோதுண்டு 
இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
 இவ்விபத்தில் 18 வயது மதிக்கதக்க இரு இளைஞர்கள் பலியாகியதுடன், 20 வயதுடைய மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 கிளிநொச்சி கோணாவில் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த 18 வயதான ஞானகுமாரன் கிருசாந்தன் உயிரிழந்துள்ளதுடன், கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சர்வநாதன் பவிக்சன் படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்த மற்றைய இளைஞர் குறித்து இதுவரை
 தகவல் தெரியவில்லை.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

நாட்டில் நாடாளுமன்றம்: ஆகஸ்ட் 20ஆம் தேதி கூட்ட ஜனாதிபதி உத்தரவு

 


இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றம் எதிர்வரும் 20ஆம் தேதி கூடவுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், எதிர்வரும் 20ஆம் தேதி காலை 9.30க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக அ
றிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் புதிய நாடாளுமன்றத்திற்கான சபாநாயகர், பிரதி சபாநாயகர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அவர்கள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு முன்பாக பதவி பிரமாணம் 
செய்துக்கொள்ளவுள்ளனர்.
அதன்பின்னர், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய சபாநாயகர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 20ஆம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடத்தப்பட்டது.
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை பெற்றிருந்ததுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி வேறு கட்சிகளில் போட்டியிட்ட மேலும் பலர் வெற்றியீட்டியிருந்த பின்னணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை 
கிடைத்திருந்தது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 2 தடவைகள் பிற்போடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல், கடந்த 5ஆம் தேதி அமைதியான முறையில் நடத்தப்பட்டது.
தெற்காசியாவிலேயே கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலொன்றை வெற்றிகரமாக நடத்திய நாடாக இலங்கை வரலாற்றில் 
பதிவாகியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 15 ஆகஸ்ட், 2020

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - உடல் நிலை கவலைக்கிடம்

கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்தது; ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதேவேளை அவரது மகன் எஸ்.பி.பி.சரண், உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை என்றும், நலமாகவே இருக்கிறார் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.. தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
இதேவேளை நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் 31 எம்.எல்.ஏக்கள், 4 எம்.பிக்கள், ஆளுநர் என பல முக்கிய பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சினிமா உலகின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டு 
சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் 
அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
74 வயதாகும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சிறந்த பின்னணிப்பாடகருக்காக 6 முறை தேசிய விருதும், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.