சனி, 15 ஆகஸ்ட், 2020

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - உடல் நிலை கவலைக்கிடம்

கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்தது; ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதேவேளை அவரது மகன் எஸ்.பி.பி.சரண், உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை என்றும், நலமாகவே இருக்கிறார் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.. தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
இதேவேளை நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் 31 எம்.எல்.ஏக்கள், 4 எம்.பிக்கள், ஆளுநர் என பல முக்கிய பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சினிமா உலகின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டு 
சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் 
அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
74 வயதாகும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சிறந்த பின்னணிப்பாடகருக்காக 6 முறை தேசிய விருதும், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.