செவ்வாய், 31 ஜனவரி, 2023

நாட்டில் விமானத் துறையில் வேலைவாய்ப்பு. வெளியான முக்கிய செய்தி

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம்
 தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேகமாக நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.அனுபவம் வாய்ந்த திறமையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக சங்கத்தின் தலைவர் திசர அமரானந்த தெரிவித்தார்.
ஆனால் தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படாவிடில், வேறு தரப்பினர் அதில் இணைக்கத் தயாராக இருந்தால், அது பாரிய பிரச்சினையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்
அடிப்படையில் பல்வேறு நபர்கள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்த 
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திங்கள், 30 ஜனவரி, 2023

நாட்டு மக்களுக்கு அரிய வாய்ப்பு. வாழ்நாளில் ஒரு நாள் மாத்திரமே பார்க்கலாம்.


அரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அரிய பச்சை வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் நாளை மறுதினம் (01) வரவுள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர்.C2022E3, அல்லது ZTF எனும் இந்த வால் நட்சத்திரம் இறுதியாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நியண்டதால் மனிதனின் இறுதி காலத்தில் 
அவதானிக்கப்பட்டது.
இந்த பிரகாசமான பச்சை நிற வால் நட்சத்திரம் நாளைமறுதினம் மற்றும் பெப்ரவரி 2 ஆம் திகதி பூமியில் இருந்து 45 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் என கூறப்படு
கின்றது.about:blank
இந்நிலையில் , தென் திசையாக தொலைநோக்கியின் உதவியுடன் இதை பார்க்க முடியும் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வால் நட்சத்திரம் தற்போது நமது சூரிய மண்டலத்தின் வழியாக வேகமாக நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அதேசமயம் இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் 50,000 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தோன்றாது என்று பிரிட்டனின் கிரீன்விச் ரோயல் ஒப்சர்வேட்டரியின் வானியலாளர் கலாநிதி கிரெக் பிரவுன் 
தெரிவித்துள்ளார்

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நாட்டில் கையடக்கத் தொலைபேசியில் பாராளுமன்றத்தை வீடியோ படம் எடுத்த இருவர் கைது

நாட்டில் பாராளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் எடுத்த இருவர் இன்று (29) மாலை பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்  என்றும் மற்றையவர் முஸ்லிம் இளைஞர் என்றும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும்  பாராளுமன்ற மைதானத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியின் ஊடாக தியவன்னா ஓயா பகுதிக்கு  வந்து, அங்கிருந்த மரங்களுக்கு மத்தியில் இருந்து பாராளுமன்ற கட்டிடத்தொகுதியை வீடியோ எடுத்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 28 ஜனவரி, 2023

யாழ். வலயம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதல் நிலை

தரம் ஐந்து புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை 
படைத்துள்ளது
இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் தொகை -329,668 இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் 
எண்ணிக்கை- 48,257ஆகும்.
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம்-14.64%. வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் 
எண்ணிக்கை – 17,622
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொகை – 2749 அதன் சதவீதம் – 15.6%. தேசிய மட்டத்தில் நிலை – 6 வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர் களின் எண்ணிக்கை அடிப்படையில் வலயங் களின் 
தேசிய மட்ட நிலை
யாழ். கல்வி வலயம் – (25.37%) – 1
பொலநறுவை வலயம் – (21.71%) – 2
தங்காலை வலயம் – (21.51%) – 3
கம்பஹா கல்வி வலயம் – (21.44%) – 4
வலஸ்முல்ல வலயம் – (20.80%) – 5
பதுளை கல்வி வலயம் – (20.41%) – 6
நிக்கரவெட்டிய வலயம் – (20.03%) – 7

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வெள்ளி, 27 ஜனவரி, 2023

அமெரிக்காவின் 6 முக்கிய அமைப்புகள் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு கடிதம்

 

இலங்கையின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அமெரிக்காவின் 6 முக்கிய அமைப்புகள் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
அதில் ஒரு சுதந்திர வாக்கெடுப்பு கோரியும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான அமெரிக்காவின் அழுத்தம் குறித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுதப் போரின் இறுதிக்கட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,46,679 ஆக இருக்கலாம் என்றும் அந்த அமைப்புகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.
சுதந்திரத்திற்குப் பின்னர், அடுத்தடுத்து சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கங்களின் கீழ் தொடர்ச்சியான ஒடுக்குமுறை மூலம் இலங்கை அரசால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு
 வருகின்றன.
இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு, நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என்ற விடயங்களில் பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, பரந்த உலகிற்கும் கவலை தருவதாக அந்த அறிக்கை 
மேலும் கூறுகிறது.
எனவே ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துங்கள்.
ஈழத் தமிழர்களின் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் தீர்மானிக்க சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையின் பரிந்துரையைத் தொடர, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டைப் பயன்படுத்த அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துங்கள் என்று அமெரிக்காவின் 6 தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை 
விடுத்துள்ளன.
அவர்கள் அரசியலமைப்புகள் மற்றும் பல பெரிய தலைப்புகளைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் முட்டை பிரச்சினையை தீர்க்க முடியாதுள்ளார்கள்.
எவ்வாறாயினும், பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் இந்த முட்டைப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், மரியாதை வேட்டுக்களின்; மத்தியில் கோழிகள் மற்றும் சேவல்களின் சத்தம் மக்களுக்கு கேட்கும் என்று 
அசேல சம்பத் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வியாழன், 26 ஜனவரி, 2023

கடவுச்சீட்டு தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை பிரித்தானியர்களுக்கு

பிரித்தானியர்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை அடுத்த வியாழக்கிழமை, அதாவது, பிப்ரவரி 2ஆம் திகதி, கடவுச்சீட்டுக்களை  புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன
ஒன்லைனில் கடவுச்சீட்டுக்களை  புதுப்பிப்பதற்கான கட்டணம் 75.50 பவுண்டுகளிலிருந்து 82.50 பவுண்டுகளாக 
அதிகரிக்கிறது.
சிறுவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணமும் 49 பவுண்டுகளிலிருந்து 53.50 பவுண்டுகளாக அதிகரிக்கிறது. தபால் நிலையம் மூலமாக புதிய கடவுச்சீட்டுக்களை  பெற விண்ணப்பக்கட்டணம்
, பெரியவர்களுக்கு 85 பவுண்டுகளிலிருந்து 93 பவுண்டுகளாகவும், சிறுவர்களுக்கு 58.50 பவுண்டுகளிலிருந்து 64 பவுண்டுகளாகவும் 
அதிகரிக்கிறது.
இப்படி கடவுச்சீட்டு புதுப்பித்தல் முதலான விடயங்களுக்கான கட்டணங்கள் பிப்ரவரி 2ஆம் திகதி சுமார் 9 சதவிகிதம் அதிகரிக்க  இருப்பதால், தற்போதைய கட்டணத்தில் கடவுச்சீட்டுக்களை  புதுப்பிக்க இன்னமும் 
ஒரு வாரமே உள்ளது.
ஆகவே, தங்கள் கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்கவேண்டிய பிரித்தானியர்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 25 ஜனவரி, 2023

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி கனடாவுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு

கனடாவுக்கு புலம்பெயர காத்திருப்பவர்களுக்கு கனேடியர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றினையிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில்
கனடாவுக்குப் புலம்பெயரும் எண்ணத்தில் இருக்கிறீர்களா?
 வேண்டாம். இங்கு நீங்கள் ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ள பூஞ்சை நிறைந்த சிறிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாதம் ஒன்றிற்கு 1,600 டொலர்கள் வாடகை கொடுக்கவேண்டியிருக்கும்.
வெறும் ஒரு Caesar சாலடுக்கு 42 டொலர்கள் கொடுக்கவேண்டியிருக்கும். மணிக்கு 15 டொலர்கள் ஊதியம் கிடைக்கும். ஆனால், எல்லாவற்றிற்கும் வரி செலுத்தவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து பொதுமக்களை போலவே New Democratic Party (NDP) கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங்கும் விலைவாசி உயர்வு குறித்து தனது கோபத்தை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,உங்கள் விலைகள் தொடர்ந்து ராக்கெட் போல ஏறிக்கொண்டே செல்கின்றன. Sobeys பல்பொருள் அங்காடியில் ஒரு caesar சாலடுக்கு 42 டொலர்கள், Loblawsஇல் 
சிக்கனுக்கு 37 டொலர்கள்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 24 ஜனவரி, 2023

யாழ் வைத்தியசாலையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கறுப்புப் பட்டி போராட்டம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக.24-01-2023. இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து 
 கடமையாற்றினர்.
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற  கறுப்பு வாரத்தின் முதல் நாளான இன்று  இந்த எதிர்ப்பு 
முன்னெடுக்கப்பட்டது.
அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத் தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்பவற்றை நிவர்த்தி செய்து வளங்களை சீரான முறையில் வழங்குமாறு கோரியும், முறையற்ற விதத்தில் தன்னிச்சையாக வரி என்ற போர்வையில் அரசினால் பறிமுதல் செய்யப்படும் சம்பளப் பணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதையும் ஒருங்கிணைத்து அரசாங்கத்தினால் நிர்வகிக்கத் தவறிய மருந்துப் பொருட்களுக்கான முறையற்ற வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 23 ஜனவரி, 2023

கோண்டாவிலில் பாரிய எதிர்ப்பினால் மூடப்பட்டுள்ள பிரபல உணவு விற்பனை நிறுவனம்.

யாழ்.கோண்டாவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு உணவு விற்பனை நிறுவனம் ஒன்றின் கிளையை தற்காலிகமாக மூடுமாறு நல்லூர் பிரதேசசபை பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த அசைவ உணவகத்திற்கு
முன்பாக சைவ ஆலயங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமக குறித்த ஆலய நிர்வாகம் மற்றும் சைவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தன.அதேபோல் குறித்த வியாபார நிலையம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு 
அமைவுச் சான்றிதழ் மற்றும் வியாபார அனுமதி பத்திரம் என்பன பெறப்படவில்லை என்றும்
கூறப்படுகின்றது.இந்த விடயம் கடந்த 17ம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய குறித்த உணவு விற்பனை நிலையத்தை தற்காலிகமாக மூடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நல்லூர் பிரதேசசபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 22 ஜனவரி, 2023

நாட்டில் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு -உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியிலும் மின்வெட்டு

நாட்டில் பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அடுத்த வாரம் உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.
இந்நிலையில், அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதில் சிரமம் இருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் இன்று (22) காலை முதல் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மின்சார வாரியத்திடம் நாப்தா இருப்பு இல்லாததால், இந்த ஆலையின் பணிகள் நிறுத்தப்பட்டு, 165 மெகாவாட் திறன் தேசிய அமைப்பிற்கு 
இழக்கப்பட்டுள்ளது.
விருப்பத்தேர்வு எண் 1 மற்றும் விருப்பத்தேர்வு எண் 2 இன் கீழ் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என மின்சார சபை 
தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சமர்ப்பித்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், மின்வெட்டை இடைநிறுத்தும் வகையில் அனல் மின் நிலையங்களை இயக்குமாறு இலங்கை மின்சார சபையின் தலைவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
விருப்பத்தேர்வு எண் 1 ஐ நடைமுறைப்படுத்த இலங்கை 4.1 பில்லியன் ரூபாவை கூடுதலாக செலவிட வேண்டும்.
தெரிவு இலக்கம் 2க்கு 2.4 பில்லியன் ரூபா செலவாகும் எனவும், சிபெட்கோ அல்லது வங்கிகளில் கடன் வசதிகள் இல்லாத காரணத்தால் மின்வெட்டை இடைநிறுத்த முடியாது எனவும் இலங்கை மின்சார 
சபை தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
சனி, 21 ஜனவரி, 2023

கொலம்பியாவில் வாழ்க்கையினை இழந்து கஸ்டப்பட்ட போது ஒரே நாளில் கோடிக்கு அதிபதியான பெண்

கணவன் மற்றும் தோழி இருவராலும் துரோகத்துக்கு உள்ளான பெண்ணுக்கு லொட்டரியில் அதிர்ஷ்டவசமாக இரட்டை ஜாக்போட் அடித்துள்ளது.தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கணவனைப் பிரிந்து மகளுடன் கடினமான வாழ்க்கையை வாழ்ந்துவந்த பெண்ணுக்கு லொட்டரியில் ஒரே நேரத்தில் இரண்டு ஜாக்பாட் அடித்துள்ளது.
தனது சுயவிவரத்தை வெளியிடாத அப்பெண், தான் மிகவும் நம்பிய தனது கணவர், தன்னுடைய நெருங்கிய தோழியை காதலித்து அவருடன் வாழ தன்னை விட்டுச்சென்றதாகவும், இருவரும் தனக்கு துரோகம் 
செய்த்தாகவும் தெரிவித்தார்.
ஆனால், தனக்கு லொட்டரியில் பரிசு விழுந்ததும் தனது கணவர் தான் முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக அவர் கூறினார்.இருவருமே விட்டுச்சென்றப்பின் ஒரு வருடம் கழித்து, இந்த ஜனவரி 17-ஆம் திகதி வெவ்வேறு லொட்டரி குலுக்கல்களில் இரண்டு சீட்டுக்களை 
வாங்கியுள்ளார்
இப்போது, அந்த இரண்டிலும் அவர் பரிசுத்தொகையை வென்றுள்ளார். அவர் மொத்தம் 268,000 பவுண்டுகள் வென்றார்.இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூ.12 கோடி ஆகும்.மகளின் படிப்புச்செலவுகளுக்கு கூட அவதிப்பட்டுவந்த நிலையில் இந்த பரிசுத்தொகை பெரும் உதவியாக இருக்கும்
 என தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வெள்ளி, 20 ஜனவரி, 2023

யாழில் பேருந்தில் வீடு செல்வதற்கு மூன்று மணிவரை பஸ் தரிப்பிடத்தில் கடுகடுக்க காத்திருந்த பாடசாலை மாணவர்கள்.

பஸ் நிறைந்து Footboard இல் சில மாணவர்கள் நிற்க வேண்டி வரவே பின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த நானும் இன்னொருவரும் மாணவர்களை சிறிதாக அதட்டி உள்ள ஏறுங்கட Bag குகள கழட்டிக் கொண்டு உள்ள போங்கோ உள்ள போங்க என்டு அறிவுத்தவே ஒரு 11 அல்லது 12 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவன் என் கால்களுக்கு அருகில் 
தரித்து நின்டான்.
அவனிடம் சின்னதாக கதையை குடுத்தேன்.எங்கடாபா எல்லாரும் ஒன்னா போறீங்க என்டு…வீட்ட போறம் அண்ணை என்டுறது அவர்ட பதில்.Ahh பள்ளிக்கூடம் முடிச்சு வீட்ட போறன்டா ஏன்டாலேற்… school la எதும் புறோக்கிறாம் நடந்ததோ என்டு கேட்க
எங்கள ஒரு பஸ்சும் ஏத்தேல அதான் இவ்வள நேரம் போச்சு என்டு பசி தோய்ந்த முகத்தோட அந்த குழந்தை சொன்ன பதிலில நான் கண்ட வேதனை உண்மையில கடந்து போன பேருந்து சாரதிகளுக்கான 
வாழ்நாள் சாபமே.
ஏன்டா ஏத்தாம போனவங்க என்ட “நாங்கள் சீசன்டிக்கெற்றண்ணை”அதான் ஏத்தேல.Hahaha இப்பெல்லாம் பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.1:35 ல இருந்து3:00 மணி தட்ட அந்த குழந்தைகளை தாண்டிச் சென்ற ஒவ்வொரு பேருந்துகளின் சாரதிகளுக்காகவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்ளுறன்.உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இந்த நிலைமை வந்திடக்கூடாது என்டு!

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 19 ஜனவரி, 2023

பிரித்தானியாவில் கடுமையான பனிப்பொழிவு - விமான நிலையம் மூடப்பட்டது

பிரித்தானியாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மான்செஸ்டர் விமான நிலையம் அதன் இரு ஓடுபாதைகளையும் 
தற்காலிகமாக மூடியுள்ளது. 
மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் குறித்த நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு விமான நிலையத்தினை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. 
கடந்த சில நாட்களாக இங்கிலாந்து முழுவதும் கடுமையான வானிலை நிலவிவருகின்றது. பனி காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை, இரட்டை அடுக்கு பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன விபத்துக்குள்ளாகியது. இதில் ஏராளமானவர்கள் காயமடைந்திருந்தனர். 
மேலும் நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் உறைபனி வெப்பநிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு ஸ்காட்லாந்து, இங்கிலாந்தின் வடமேற்கு, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் வடமேற்குப் பகுதிகளில் வியாழன் அன்று பனி மற்றும் பனிப்பொழிவுக்கான இடத்தில் வானிலை அலுவலகம் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
குளிர்கால மழை பனி, அதிவேக காற்று, என்பனவற்றால் மக்கள் பயண இடையூறுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் 
அறிவுறுக்கப்பட்டுள்ளது.
இப்பனிப்பொழிவால் சில சாலைகள் மற்றும் இரயில்வேகள் சாலை, பேருந்து மற்றும் ரயில் சேவைகள் மூலம் நீண்ட பயண நேரங்களால் பாதிக்கப்பட்டுள்ளன."
இதேவேளை வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் நாளைய தினத்தில் இருந்து காற்று நகரத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
புதன், 18 ஜனவரி, 2023

இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு

வெளிநாடுகளில் இருந்து பல மில்லியன் ரூபாக்களை வடபகுதியில் இருக்கும் எமது உறவுகளுக்கு அனுப்புகிறோம்.அப்படி நாம் அனுப்பும் பணத்துக்கு என்னதான் நடக்கிறது..?உதவி செய்வது
 நல்ல விடயமாக
இருந்தாலும் அதற்கும் ஒரு மறுபக்கம் உண்டு. எமது உறவுகளை நாமே ‘தங்குநிலை பொருளாதாரத்துக்குள்’ தள்ளிவிடுகிறோம்.ஒரு இனத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தங்குநிலை பொருளாதாரம்
 பொருத்தமானது அல்ல.
சுய உற்பத்தியும் ஏற்றுமதியுமே முன்னேற்றத்துக்கான வழியாகும். எம்மவர்களிடம் பணம் தாராளமாக இருக்கிறது. ஆனால் 
‘ஐடியா’தான் இல்லை
இங்கே கரன் அண்ணா சொல்வதைக் கேளுங்கள். சிந்தியுங்கள். “பொருளாதார முன்னேற்றமே ஏனைய அனைத்து முன்னேற்றங்களுக்குமான
 வழியாகும்..!”

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 17 ஜனவரி, 2023

நாட்டில் புதிய முறையில் வரவுள்ள ஆசிரியர்களின் இடமாற்றம்

இலங்கையில் இனி வரவுள்ள காலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றம் ஒன்லைன் முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளதாக 
தெரிய வந்துள்ளது.
NEMIS-THRM எனப்படும் மனித வள மேலாண்மை அமைப்பில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் சேவைத் தரவுகளுடன் இடமாற்றங்கள்
 செய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.செயல்முறையை விரைவாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ள கணனியை 
தினமும் புதுப்பிக்க வேண்டும். எனவே ஆசிரியர்கள் வழங்கும் தகவல்களின் துல்லியத்தை அவர்கள் சரிபார்க்க வேண்டியது அவசியம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 16 ஜனவரி, 2023

ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 46 இலங்கை பிரஜைகள் 14-01-2023.அன்று மாலை விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர முற்பட்ட இலங்கையர்களின் குழு கைது செய்யப்பட்டதாக 
தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பலநாள் மீன்பிடி இழுவை படகில்
 புறப்பட்டனர்.
தனிநபர்கள் குழுவில் பல நாள் மீன்பிடி கப்பலின் பணியாளர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு பையன் உட்பட 43 ஆண்கள் உள்ளனர்.
அவர்கள் 24 டிசம்பர் 2022 அன்று பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது அவர்கள் 
கைது செய்யப்பட்டனர்.
  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என 13 வயது முதல் 53 வயது வரையிலானவர்கள் அடையாளம் 
காணப்பட்டுள்ளனர்.
மீள்குடியேற்றப்பட்ட குழுவினர், சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள கடத்தல்காரர்களே இந்த கடத்தலுக்கு தலைமை தாங்கியவர்கள் என 
தெரியவந்துள்ளது.
ஒருவரிடமிருந்து  ரூ. 200,000 ரூபாய் முதல் ரூ.  4,500,000  ரூபாயை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரீயூனியன் தீவிற்குள் மக்கள் சட்டவிரோதமாக நுழைவதை பிரெஞ்சு அரசாங்கம் மகிழ்விப்பதில்லை. 
மேலும் அத்தகைய நபர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 15 ஜனவரி, 2023

யாழில் பொலிஸார் அடித்த தண்ணீரில் சம்போ போட்டு குளித்த .இளைஞர்கள்

பொங்கலை கொண்டாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு 15-01-2023.இன்றைய தினம் வருகை தந்துள்ளார்.இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு 
எதிர்ப்பு தெரிவித்த
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு குறித்த
பகுதியிலிருந்து போராட்டகாரர்களை கலைப்பதற்கான
 நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.மேலும், நீர்த்தாரை பிரயோகத்தினை பொலிஸார் மேற்கொண்ட நிலையில் சில இளைஞர்கள் பொலிஸார் அடித்த தண்ணீரில் சம்போ போட்டு குளித்ததாக 
தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
சனி, 14 ஜனவரி, 2023

வெள்ளவத்தை பகுதியில் ஒரு வாழையிலையின் விலையினை கேட்டு அதிர்ச்சியான மக்கள்


நாட்டில் தமிழர் திருநளான தைப்பொங்கல் விழா ஜனவரி 15-ம் திகதி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து வீடுகளிலும் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மேலும் தமிழர்களின்
திருநாளை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் கொண்டாட இருகின்றனர்.இத்தனை தொடர்ந்து கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தோரணம் ஒரு கட்டு 100/=ற்கும் ஒரு தலை 
வாழையிலை
 100/=ற்க்கும் அருகம்புல் ஒரு கட்டு 50/=ற்கும் கரும்பு இரண்டு 800/=ற்க்கு மாவிலை ஒருகட்டு 50/=ற்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வெள்ளி, 13 ஜனவரி, 2023

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பாக வெளியான தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், வர்த்தமானி இலக்கம் 2307/12 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் அரசாங்க நிதிக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
விளையாட்டுப் பொருட்கள், புகையிரத உதிரி பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் துறையில் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக இந்த வர்த்தமானி 
வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் அழகுசாதனப் பொருட்கள் போன்ற கைத்தொழில்களுக்குத் தேவையான பொருட்களை குறிப்பிட்ட உயர் வரி விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது விரும்பத்தக்கது என வர்த்தமானிக்கு அனுமதி வழங்கிய குழு தெரிவித்துள்ளது.
இல்லையெனில் கறுப்புச் சந்தை வியாபாரத்தை தடுக்க முடியாது என குழுவில் விவாதிக்கப்பட்டது.
மேலும், வர்த்தமானி எண் 2308/51 இல் வெளியிடப்பட்ட அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் உள்ள உத்தரவுகளுக்குக் குழு 
ஒப்புதல் அளித்தது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வியாழன், 12 ஜனவரி, 2023

நீங்களும் இந்த அரிதான சமையலறை குறிப்புகளைச் செய்து கணவரிடமிருந்து பேரன்பை பெறுங்கள்.

பிளாஸ்டிக்கால் வாழைப்பழத்தின் காம்பு பகுதியை சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!! 
கறிவேப்பிலை வாடாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் வாடாமல் இருக்கும்.
இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். 
தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை  மொரு மொறுப்பாக வரும்.
கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும். 
வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம்
 வெந்துவிடும். 
வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும். 
சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது 
பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது 
காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும். 
மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம். 
இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் 
சுவையாக இருக்கும்
வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல
 மணமாக இருக்கும்.
சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக 
இருக்கும். 
காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது. 
முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் 
சுவையாக இருக்கும்.
இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள்
 கெடாமலும் இருக்கும்
சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும 
கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள்
 கெடாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.
சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் 
இறங்கிவிடும்.
அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும். 
சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் 
வெந்துவிடும்
புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும். 
இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் 
வாடை வராது. 
சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால்
 நன்றாக வரும்
காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் 
சுவையாக இருக்கும்.
ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல்
 இருக்கும்.
 
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது. 
வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும்
 நீங்கி விடும்.
மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் 
படியாமல் இருக்கும். 
நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும். 
இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்
பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

Blogger இயக்குவது.