ஞாயிறு, 8 ஜனவரி, 2023

நாட்டில் விவசாயிகளிடமிருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து அரச ஊழியர்களுக்கு சம்பளம்

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டின் இறப்பர் தொடர்பான ஏற்றுமதி 39 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், இறப்பர் இறக்குமதியினால் இந்நாட்டின் இறப்பர் விவசாயி மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதக குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டில் 1463 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறப்பர் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
முறையான விசாரணைகள் மற்றும் பொருத்தமான வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் காரணமாக, 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் இறப்பர் இறக்குமதியை 93 வீதத்தால் குறைக்க முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் 
தெரிவித்துள்ளார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.