சனி, 7 ஜனவரி, 2023

இலங்கை தாமரை கோபுரத்திற்கு இதுவரை வந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்தை எட்டியுள்ளன


இலங்கை தாமரை கோபுரம் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டதில் இருந்து இன்றுடன் ஐந்து இலட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளதாக
 தெரியவந்துள்ளது.
இந்த தகவலை தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாத்தறை பிரதேசத்தில் இருந்து 06-01-2023.அன்று வருகை தந்த 500,000 வது பார்வையாளரை வரவேற்று பற்றுச்சீட்டு வழங்கப்பட்டதுடன், அவருக்குப் கண்ணாடியில் அமைக்கப்பட்ட தாமரைக் கோபுர நினைவு பரிசிலும் வழங்கப்பட்டது.
பொதுமக்களின் பார்வைக்காக கோபுரம் திறக்கப்பட்ட நாளிலிருந்து ரூ.268 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது.
மேலும், 4,083 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தாமரைக் கோபுரத்தை பார்வையிட்டடுள்ளனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.