திங்கள், 9 ஜனவரி, 2023

அமெரிக்கா விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு பூனைக் குட்டிகளை தத்தெடுத்தால் நீங்களும் வெளிநாடு செல்லலாமாம்

பூனைக்குட்டிகளைத் தத்தெடுப்பவர்களுக்கு இலவச விமானப் பயணத்தை வழங்குவதாக அமெரிக்கா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகஸ் விலங்கு அறக்கட்டளையிலிருந்து பூனைக்குட்டிகளைத் தத்தெடுப்பவர்களுக்கு இலவசப் பற்றுச்சீட்டுகளைத் தருவதாக அந்நிறுவனம் ட்விட்டர் மூலம் அறிவித்திருந்தது.
குறித்த ஒவ்வொரு பூனைக் குட்டிகளுக்கும் ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பூனைக்குட்டிகளின் பெயர்களாவன, ஸ்பிரிட் (Spirit), டெல்டா (Delta), ஃபிரான்டியர் (Frontier) எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒவ்வொரு பூனைக்குட்டியைத் தத்தெடுப்போருக்கும் பெரும் மதிப்புடைய விமான பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், ஸ்பிரிட் அல்லது டெல்டாவைத் தத்தெடுப்போருக்கு
250 அமெரிக்க டொலர் மதிப்புடைய 2 விமான பயண பற்றுச்சீட்டுக்களும் ஃபிரான்டியரைத் தத்தெடுப்பவருக்கு 250 அமெரிக்க டொலர் மதிப்புடைய 4 விமான பயண பற்றுச்சீட்டுக்களும் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.குறித்த பயணச்சீட்டுக்களை ஆண்டின் இறுதிவரை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.