செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

இந்த வகை சொக்லெட்களை கனடாவில் சாப்பிட வேண்டாம் என அவரச அறிவிப்பு

 

கனடா நாட்டில் குறிபிட்ட வகை சொக்லெட்களை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் குறிப்பாக இந்த வகை சொக்லெட்கள் விற்பனை செய்யப்படுவதாக கனேடிய சுகாதார திணைக்களம் அ
றிவித்துள்ளது.
இதன்படி, செலன்டோ ஒர்கானிக் (Salento Organics) என்ற பண்டக் குறியைக் கொண்ட சொக்லெட் வகைகளை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
சொக்லெட் பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள சேர்மானங்களில் குறிப்பிடப்படாத ஒர் பால் வகை இந்த சொக்லெட்களில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, chocolate pineapple bites, dark chocolate pitaya bites, organic banana dark chocolate clusters, மற்றும் organic peanuts dark chocolate dipped போன்ற சொக்லெட் வகைகளை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வகை சொக்லெட் வகைகள் சந்தையில்
 இருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளப்படுவதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வாமை பிரச்சினை உடையவர்கள் இந்த சொக்லெட் வகைகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் இதனால் உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 27 பிப்ரவரி, 2023

மேலும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் 05 வருடங்கள் நீடிப்பு

தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் காலம் மேலும் 05 வருடங்கள் நீடிக்கப்படவுள்ளது. இதன்படி, வருடாந்த கையொப்பத்தின் அடிப்படையில் இந்த தேசிய மையத்தின் காலத்தை 2023 முதல் 2027 வரை நீட்டிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மோதல் சூழ்நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதை வழிநடத்தவும், கண்காணிக்கவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் 
தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் நாட்டில் நிறுவப்பட்டது. இந்த பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணி 2002 ஆம் ஆண்டு 
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின் தலைமையில் உள்ளூர் மற்றும்
 வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவுடன் 
ஆரம்பிக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியம் 
கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் இருந்து பின்வாங்கியது, அதன் பின்னர் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் 
பணிகளை 
மேற்கொண்டு வருகிறது. வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இராணுவ கண்ணிவெடி அகற்றும் பிரிவு மற்றும் 04 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இந்த நிலையத்திற்காக செயற்பட்டு வருகின்றன. இந்த அரசு சாரா
 நிறுவனங்களில் 3000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். சர்வதேச உதவி நிறுவனங்கள் கண்ணிவெடி அகற்றும் செயல்முறைக்கு ஆதரவை வழங்குகின்றன. கடந்த வருடம் இதற்கென 14.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது 17 மில்லியன் 
அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என 
எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்ட உலக கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தின்படி, 2028ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாற வேண்டும். அது தொடர்பாக, 2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நபர் எதிர்ப்பு கண்ணிவெடி தடைச் சட்டத்தையும் 
பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. 2010 ஆம் ஆண்டு தேசிய கண்ணிவெடி
 நடவடிக்கை மையம் நிறுவப்பட்ட போது, 2020 ஆம் ஆண்டளவில் அந்த 
அபாயத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட கண்ணிவெடிகள் உள்ள பகுதிகளை அகற்ற திட்டமிடப்பட்டது, ஆனால் 
அப்போது 
அடையாளம் காணப்படாத ஏராளமான கண்ணிவெடிகள் உள்ள பகுதிகள் 
அடையாளம் காணப்பட்டது. 2012-2017 மற்றும் 2022 இல் 
நிரந்தரமாக ஆபத்தான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டது. 
இது ஆய்வுகள் மூலம் அடையாளம் காணப்பட்டது. இதன்படி வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிக்காக 15 சதுர கிலோமீற்றர் நிலம் எஞ்சியுள்ளது. இது தவிர, அங்கீகரிக்கப்படாத 02 சதுர 
கிலோமீட்டர் பரப்பளவும் நிரந்தர ஆபத்தான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் 
பணியை இலங்கை உடனடியாக முடித்துள்ளதாகவும், 2027ஆம் ஆண்டுக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான இறுதி மூலோபாய திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் 
அமைச்சர் கூறுகிறார். ஜெனிவாவில் உள்ள சர்வதேச கண்ணிவெடி நடவடிக்கை மையமும் இத்திட்டத்தின் வளர்ச்சிக்கு 
உதவியிருக்கிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

யாழ் நவற்கிரி நிலாவரையில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் பதற்றம்

யாழ் நவற்கிரி நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இரவோடு இரவாக வைக்கப்பட்டதால்
 பதற்றம் ஏற்பட்டது.

அந்தப் பகுதியில் கடமையிலிருந்த இராணுவத்தினரே அதனை அமைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், பிரதேச சபையின் தலையீட்டையடுத்து.25-02-2023.. 
சனிக்கிழமை அன்று 
 பகலில் இந்த புத்தர் சிலை இராணுவத்தினரால் அகற்றப்பட்டது.
சம்பவ இடத்தில் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார், கஜேந்திரன் மற்றும் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 25 பிப்ரவரி, 2023

இந்தியாவில் இமயமலை மலைத்தொடர் அருகே ஏற்படவுள்ள நிலநடுக்கம்

இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் 
எச்சரித்துள்ளது.
எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என புவியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்திய டெக்டோனிக் தகடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செ.மீ நகர்ந்து வருவதாகவும் இதன் காரணமாக அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் 
தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மேற்கு நேபாளத்திற்கும் இமயமலைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் எந்த நேரத்திலும் நில அதிர்வு நிலைகள் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இமயமலை மலைத்தொடர் அருகே ஏற்பட்டால் அதன் தாக்கம் இலங்கையிலும் உணரப்படும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்படி ஒரு நிலநடுக்கம் வருமா? இல்லை? என்று இதுவரை கூற முடியாது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவ்வாறான அதிர்ச்சியை உணர்ந்தால் சமவெளி நிலத்திற்கு வருவது மிகவும் உத்தமம் என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பலமான நிலநடுக்கம் ஏற்பட்டால் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலும் உணர முடியும் என 
சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இமயமலையில் ஏற்பட்ட 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை கொழும்பு பிரதேசமும் உணர்ந்ததாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

பதின் எட்டு வயது வரை எழுதப் படிக்கத் தெரியாத நபர் பிரித்தானியாவில் செய்த சாதனை

ரித்தானியாவில் அபூர்வ நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு 18 வயதுவரை எழுதப்படிக்கத் தெரியாத நபர் ,.24-02-2023.இன்று சாதனை ஒன்றை 
புரிந்துள்ளார்.
சிறுவயதில் Jason Arday என்ற அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள், வாழ்க்கை முழுவதும் யாரோ ஒருவரின் உதவியுடன் தான் அவர் வாழ முடியும் என்று கூறியிருந்தார்கள்.
11 வயது வரை சைகை மூலமே உணர்வுகளை வெளிப்படுத்திவந்த Jasonக்கு 18 வயது வரை எழுதப் படிக்கத் தெரியாது.
ஆனால், மருத்துவர்களின் கணிப்பை பொய்யாக்கி, கடினமாக உழைந்த Jason, அடுத்த மாதம் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக இணைய இருக்கிறார்.
படித்து, படிப்படியாக உயர்ந்து, இன்று இந்த நிலையை Jason அடைந்துள்ளார் . அதன்படி 37 வயதில், கருப்பின பேராசிரியர்களிலேயே இளம் வயதுடையவர் என அவர் கருதப்படுகிறார்.
பல்கலையில் மொத்தம் ஐந்து கருப்பினப் பேராசிரியர்கள்தான் உள்ளார்கள். பிரித்தானியாவைப் பொருத்தவரை, 23,000 பேராசிரியர்களில் 155 பேர் மட்டுமே கருப்பினப் பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 23 பிப்ரவரி, 2023

யாழ் சுண்டுக்குளி இளைஞன் தேர்தல் ஆணையத்திற்கு பணம் அனுப்பியுள்ளார்

யாழ். சுண்டுக்குளியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு பணத்தினை அனுப்பியுள்ளார்.
அனைவரும் ஒத்துழைப்பு செய்வோம், தேர்தலை நடாத்த ஒத்துழைப்போம், சிறு துளி பெருவெள்ளம் ஆகட்டும், தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் என கோரி அவர் இவ்வாறு பணத்தினை 
அனுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையகத்திற்கு தேர்தலை நடாத்துவதற்கு பணம் வழங்காத காரணத்தினால் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை இவ்வாறு அனுப்பியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
புதன், 22 பிப்ரவரி, 2023

நாட்டில் மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலம்

மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட வேண்டிய நிதியத்தின் கடன் நிவாரணத்திற்காக அந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் 
தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணத்திற்கு பதிலாக நாடு எடுக்கக்கூடிய வேறு எந்த மாற்று தீர்வையும் யாரும் கவனத்தில் கொள்ளவில்லை எனஅவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் குறித்த கடிதம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது :
நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகை சூழ்ந்துகொண்டு அப்பாவி தமிழக மீனவர்களை இரும்புக் கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தமிழக மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயமும், 5 மீனவர்களுக்கு உள் காயம் 
ஏற்பட்டுள்ளது. அதோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாக்கி - டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி மற்றும் 200 கிலோ மீன் உள்ளிட்ட சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள
 பொருட்களை இலங்கை நாட்டினர் எடுத்துச் சென்றுவிட்டனர். காயமடைந்துள்ள மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. 
மத்திய அரசு இதைக் கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மீண்டும் நிகழாமல் 
இருக்கவும், இலங்கை நாட்டினரால் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கவும், தாக்குதல் நடத்துவோர் 
மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 20 பிப்ரவரி, 2023

கட்டப்பிராயில் பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து 16 தங்கப் பவுண் நகைகள் திருட்டு

கோப்பாய் கட்டப்பிராய் பகுதியில் உள்ள பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 தங்கப் பவுண் 
நகைகளை திருடிச் சென்றுள்ளமை தொடர்பில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று வீட்டின் உரிமையாளரான ஓய்வுபெற்ற ஆசிரியை முறைப்பாடு 
வழங்கியுள்ளார் 
என்று பொலிஸார் கூறினர்.இரண்டுநாட்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தடயவியல் மற்றும் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருபவர்களுக்கு அரிய வாய்ப்பு

இத்தாலியில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.இதன்படி இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வெளிவிவகார அமைச்சு 
கவனம் செலுத்தியுள்ளது.¨
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முதன்மையான பங்களிப்பு சுற்றுலாத் துறை எனவும், தமது நாடு இத்துறையின் வளர்ச்சிக்கு இலங்கைக்கு பங்களிக்கும் எனவும் இத்தாலிய அரசாங்கம் 
தெரிவித்துள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 18 பிப்ரவரி, 2023

ஜெர்மனியில் ஊதிய உயர்வு கோரி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 2300 விமான சேவைகள் ரத்து

ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி 17-02-2023.அன்று  ஒருநாள் வேலை 
நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
இதனால் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். 
ஜெர்மனி வழியாக செல்லும் வெளிநாட்டு பயணிகளும் பாதிக்கப்பட்டனர். விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.ஆங்கிலம் பேசுபவர்களை புத்திசாலி என்று நினைப்பது சரியா

பிரிட்டன் மக்களின் தாய்மொழி ஆங்கிலம் ஆயினும் அங்கேயும் அறிவில் குறைந்தவர்கள், கெட்டவர்கள், நல்லவர்கள், அறிவாளிகள் என்று பல ரகம் உண்டு. ஒரு மொழியை பேசும் திறனை வைத்து மனிதர்களை எடைபோடக்கூடாது.
சில விஷயங்களில், துறைகளில் திறமைசாலிகளாக இருப்பவர்கள் அயோக்கியர்களாகவும் இருப்பதுண்டு. ஒருவன் ஒரு மொழியில் திறமைசாலியாக இருந்தால் அதற்குரிய ஆன்மா அவனிடம் இருக்கிறது. அது அக்காரியத்தை மட்டுமே செய்யும். மற்ற விஷயங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அவைகள் வேறு வேறு 
ஆன்மாக்கள்
ஆன்மாக்களைப் பற்றி சில விஷயங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும். மக்களுடைய இறை நம்பிக்கையைப் பற்றி இறைவன் கவலைப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். ஒவ்வொருவரையும் தனித்தனியே தானே கண்காணிப்பதும் அவர்களை வழிநடத்துவதும் இறைவனால் இயலாதக் காரியம் என்றே நான் நினைக்கிறேன்.
ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்கும், வழிநடத்துவதற்கும், அவர்கள் தவறு செய்யும்பொழுது தண்டிப்பதற்கும் இறைவன் ஆன்மாக்களை உருவாக்கி இருக்கிறார். பல புதிய ஆன்மாக்களை இன்றும் அவர் உருவாக்கிய வண்ணம் இருக்கிறார். இந்த புதிய ஆன்மாக்களாலேயே பல புதிய முன்னேற்றங்கள் உலகத்தில் ஏற்பட்டபடி இருக்கிறது.
உங்கள் கடந்த காலம் நிகழ் காலத்தை தீர்மானிக்கிறது, உங்கள் நிகழ் காலம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. எவர்க்கும் தம் விருப்பம்போல் வாழ இறைவன் அனுமதி அளித்திருக்கிறார், ஆனால் பிறர்க்கு ஊறு விளைவித்தால் அதற்கான தண்டனையை அவர்கள் அடைந்தே 
தீரவேண்டும்.
 அதுவே விதி. அதை தீர்மானிப்பது உங்களுடன் வாழும் ஆன்மாக்களே. ஆன்மாக்கள் உங்களுடைய செயல், பேச்சு மற்றும் சிந்தனையிலிருந்தும் உங்கள் விதியை தீர்மானிக்கின்றன.
ஆன்மாக்கள் அல்லது ஆவிகள் தனிச் சக்திகள். மனிதனுக்கு ஆவியுடல் என்று ஒன்றும் இல்லை. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் பல ஆவிகளுடன் வாழ்ந்து க்கொண்டிருக்கிறான். அவைகள் அவன் 
பிறந்ததிலிருந்து 
ஒவ்வொன்றாக இணைந்தவை. அவை அறிவு, திறன்கள், உணர்வுகள், ஆர்வங்கள் மற்றும் அனைத்தும் ஆகும். இவற்றோடு உறவினர்கள்,
நண்பர்கள் மற்றும் சில தெரிந்தவர்கள் சார்பிலும் சில ஆன்மாக்கள் சேர்வதுண்டு. எண்ணங்களும் உங்களுக்குத் சொந்தமானதல்ல. உதாரணமாக, நீங்கள் ஒரு விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க 
விரும்பினால், 
ஒன்றன் பின் ஒன்றாக ஆவிகள் சிந்திக்கின்றன. அந்தச் சிந்தனைகளை ஆன்மாக்கள் உங்கள் மூளை வழியாக உங்கள் மனதிற்கு அனுப்புகின்றன
. அவைகள் அனுப்பும்
கருத்துக்களை நீங்கள் கவனிக்கிறீர்கள் பிறகு அதில்
 ஒன்றைத் தேர்வு செய்கிறீர்கள் அல்லது நிராகரிக்கிறீர்கள். மூளை என்பது உங்கள் மனதுடன் ஆவிகள் தொடர்புக்கொள்ள பயன்படும் ஒரு சாதனம். மனம் என்பது கணினியின் மனம். ஒரு கணினியை முற்றிலுமாக அழித்தபின் நீங்கள் அதன் மனதைப் பெற மாட்டீர்கள். மனிதர்கள் நிலை
 இதே நிலைதான்.
உயிர் என்பது ஒரு உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஒரு சக்தி. அது ஒரு ஆவியோ அல்லது வேறு எதுவோ இல்லை. அது ஆட்டோ மெக்கானிசம் போன்றது. மரணத்திற்குப் பிறகு ஒரு நபருடன் வாழ்ந்த 
அனைத்து ஆவிகளும் வெளியேறி புதிய உடல்களைத் தேடி வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. இறந்த பிறகு யாரும் 
எந்த வடிவத்திலும் வாழ்வதில்லை. எல்லா மனிதர்களும் சதை மற்றும் எலும்புகளால் ஆன ரோபாட்கள், ஆவிகளுடைய விளையாட்டுகளுக்காக பயன்படும் பொம்மைகள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 16 பிப்ரவரி, 2023

நாட்டில் இன்று முதல் மின்வெட்டு இல்லை.வெளியான மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில்.16-02-2023.இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது 
என தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
புதன், 15 பிப்ரவரி, 2023

சக்திவாய்ந்த நிலநடுக்கம் நியூசிலாந்தில் அச்சத்தில் மக்கள்

நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹெட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது.
இதனால் பீதியடைந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
எற்கனவே துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் மேலும் அச்சமடைய 
வைத்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க்மாதா இணையம்.>>>செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு

நாட்டில்உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை அனுப்ப முடியாது என அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு 
.14-02-2023.இன்று காலை அறிவித்தது.
இந்நிலையில், இம் மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெற திகதிகள் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திங்கள், 13 பிப்ரவரி, 2023

மடுக்கரை, முள்ளிமோட்டை கிராமகளில் வசித்துவரும் மக்களின் அவலநிலை

 மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மடுக்கரை, முள்ளிமோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்துக்கு பாலம் அமைத்துக் கொடுக்கப்படாததால் பிரதேசவாசிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் தமது கிராமத்துக்கு நேரடியாக வருகை தந்து, பார்வையிட்டு, உள்ளக வீதி மற்றும் பாலம் போன்றவற்றை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான பயணம்
மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்தில் 2018ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட 90 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் 18 குடும்பங்கள் ஆற்றைக் கடந்து குடியேற்றப்பட்டுள்ளன.
அவர்களின் வீடுகளுக்கு அருகாமையிலேயே அருவி ஆற்றின் கிளை ஆறு ஓடிக்கொண்டிருப்பதால் தற்காலிக பாலம் கூட அமைத்துக் கொடுக்கப்படாமல், அங்கே வசிப்பவர்கள் ஆற்றில் இறங்கியே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
மழைக் காலங்களில் ஆற்றில் நீர் நிறந்து ஓடுவதால் அன்றாட கடமைகளை செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் திண்டாடி
 வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினையால் அவர்கள் தமது உறவினர்களின் வீடுகளிலேயே வசித்து வருவதாகவும் அவர்கள் கவலை
 வெளியிட்டுள்ளனர்.   


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

ஒற்றையாட்சி நாடு இலங்கை இங்கு வாழ முடியாவிட்டால் பிரித்தானியாவில் போய் வாழுங்கள்

இலங்கை ஒற்றையாட்சி நாடாகும், இங்கு சமஷ்டிக்கு இடமில்லை, இங்கு வாழ முடியாவிட்டால் பிரித்தானியாவில் 
போய் வாழுங்கள்.
இவ்வாறு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதிலடி வழங்கியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சமஷ்டி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் தென்பகுதி அரசியல்வாதிகள் பலர் தங்களது எதிர்க் கருத்துக்களை வெளியிட்டு 
வருகின்றனர்.
விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணை திருமணம் செய்துள்ளார், பிள்ளைகளும் சிங்கள வழியில் வாழ்கின்றனர், தெற்கில் படித்துள்ளார், தெற்கில் தொழில் செய்தார், தற்போது தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் போல் நடித்துக் கொண்டிருக்கிறார், அவர் ஒரு சிறந்த 
சந்தர்ப்பவாதி.
இவ்வாறு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு 
தெரிவித்துள்ளார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 11 பிப்ரவரி, 2023

அனைவரையும் யாழில் கவர்ந்த பூப்புனித நீராட்டு விழா

இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி வித்தியாசமான முயற்சியாகவும் ஆச்சரியப்படும் வகையில் வரவேற்பு மேசை அலங்கரிக்கப்பட்டடிருந்தது.
இந்நிலையில் குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இன்றையதினம் யாழிலுள்ள பிரபல விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு வைபவத்தில் மரக்கறி, 
தானியங்களால் உருவாக்கப்பட்ட நிறைகுடம் விளக்குகள், வாழையிலை மற்றும் மேசைவிரிப்பு என்பன அலங்கரிக்கப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள நிலநடுக்கம்.


இலங்கையில் வெல்லவாய – புத்தல – பெல்வத்த பகுதிகளில் பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கமே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கான அறிவிப்பு.எவ்வாறாயினும், உயிர் அல்லது கட்டட சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என கு
றிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சிறு அளவிலான நில அதிர்வானது நாட்டிலுள்ள அனைத்து நில அதிர்வு உணர் கருவிகளிலும் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 9 பிப்ரவரி, 2023

சுகாதார உதவியாளர் ஒருவரின் அலுமாரியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மதுபான போத்தல்கள் சிக்கினார்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் சுகாதார உதவியாளர் ஒருவரின் அலுமாரியில் இருந்து விசேட முத்திரைகள் கொண்ட ஏழு அரசாங்க மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரகசிய தகவலின் பேரில், மருத்துவமனை நிர்வாக பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இந்த மதுபோத்தல்களை 
கண்டுபிடித்தது.
மதுபான போத்தல்களை அலுமாரியில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் சுகாதார உதவியாளரும் கைது செய்யப்பட்டதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்
மருத்துவமனையின் சில ஊழியர்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த மது போத்தல்கள் அவரது அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியசாலை பேச்சாளர்
 மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சுகாதார உதவியாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
Blogger இயக்குவது.