ஞாயிறு, 31 மே, 2026

நாட்டில் எரிபொருள் விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வித எரிபொருளுக்குமான விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 
இதற்கமைய ஒரு லீட்டர் ஆட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாய்க்கு விற்பனை 
செய்யப்படுகிறது. 
ஒரு லீடு்டர் சூப்பர் டீசலின் விலை 20 ரூபாயால் அதிகரித்து 478 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெட்ரோல் 92 ஆக்டேன் விலை லிட்டருக்கு   24 ரூபாய் அதிகரித்து 434 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது. 
பெட்ரோல் 95 ஆக்டேன் விலை லிட்டருக்கு  25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. 
மேலும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு  20 ரூபாயால்  அதிகரித்து 285  ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியை கையளிக்கக்கோரி போராட்டம்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 30 மே, 2026

நாட்டில் விபத்துகள் அதிகரிக்கும் சாத்தியம் மக்களே அவதானம்

நாட்டில் நீண்ட விடுமுறையை ஒட்டி விபத்துகள் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுகாதார அமைச்சகத்தின் தொற்றா நோய்கள் பிரிவின் சமூக மருத்துவ ஆலோசகரும் இயக்குநரகமுமான டாக்டர் சமிதா சிறிதுங்க, இந்தக் காலகட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதுகுறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நீண்ட வார இறுதி நாட்களில், குறிப்பாக சாலைப் போக்குவரத்து விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. 
ஆகவே ஓட்டுநர்கள், பயணிகள், பாதசாரிகள், சாலை நிலைமைகள் அல்லது வாகனப் பராமரிப்புப் பிரச்சினைகள் தொடர்பான காரணிகளால் இத்தகைய சம்பவங்கள் ஏற்படலாம். 
 இந்தக் காலகட்டத்தில் சில நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, வலுவான நீரோட்டங்களை உருவாக்கி, நீரில் மூழ்குதல் மற்றும் அது தொடர்பான விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
பயணம் செய்யும்போதும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும்போதும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் அதேவேளை பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார். .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் தையிட்டி விகாரை : பகுதியில் புகைப்படங்கள் எடுத்த இளைஞர்கள் கைது

யாழ் தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படங்களை எடுத்த இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில் , விகாரைக்கு சற்று தொலைவில் , காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை 
முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் , விகாரைக்கு செல்வதாக கூறி விகாரை பகுதிக்கு சென்று ,  புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
அதனை அவதானித்த பொலிஸார்  இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 29 மே, 2026

பல பகுதிகளுக்கு பிரான்சில் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

சீரற்ற காலநிலையால்   பிரான்ஸ் முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, மே மாதத்திற்கான புதிய வெப்ப சாதனை.29-05-2029- இன்று பதிவாகியுள்ளது. 
சாரெண்டே மாகாணத்தின் 37.8°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது பிரான்ஸில் மே மாதத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பமாகக் கருதப்படுகிறது. 
இதற்கு முன்பு, கோர்ஸிகா தீவில் பதிவான 37°C தான் தேசிய சாதனையாக இருந்தது. மேலும், பாரிஸ் உட்பட்ட பிரான்சின் பல பகுதிகளில் நாளை “செம்மஞ்சள் எச்சரிக்கை” அறிவிக்கப்பட்டுள்ளது. 
14 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஆசிரியர்கள் கிழக்கு லண்டனில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஆசிரியர்கள் கிழக்கு லண்டனின் பெருநகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் தேசிய கல்விச் சங்கம்(NEU) மேற்கொண்டு வரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் காரணமாக, பெற்றோர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து இருவேறு கருத்துகள் உருவாகியுள்ளன.
கடந்த வாரம் வால்தம்ஸ்டோ நகரில் உள்ள South Grove ஆரம்பப் பள்ளி , ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் மூடப்பட்டது.
பள்ளிகளில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டமைப்பு மறுசீரமைப்பு காரணமாகப் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும் சூழல் 
உருவாகியுள்ளது.
குறிப்பாக, சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான ஆதரவு மற்றும் உதவிகள் குறையும் என்ற அச்சத்தினால் ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆசிரியர்களின் இந்த நடவடிக்கைக்குப் பெற்றோர்களில் ஒரு தரப்பினர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெற்றோர்களும் குழந்தைகளும் இணைந்து வால்தம்ஸ்டோ நகர சபைக்கு வெளியே தங்களின் எதிர்ப்பை ஊர்வலமாகப் பதிவு செய்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டின் சிறுவனுக்கு : வாயில் சூடு வைத்த தந்தை மட்டக்களப்பில் கைது

இந்த  பாதிக்கப்பட்ட சிறுவன் முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 3 இல் கல்வி கற்று வருகிறான். கடந்த சில தினங்களாக வகுப்பறையில் சக மாணவர்களுடன் பேசும்போது அச்சிறுவன் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனை அவதானித்த வகுப்பு ஆசிரியர், 
சிறுவனின் நடத்தையைத் திருத்துவதற்காக அவனது பெற்றோரைக் கூப்பிட்டு கண்டித்துள்ளார். ஆசிரியர் கொடுத்த புகாரால் கடும் ஆத்திரமடைந்த தந்தை, கடந்த செவ்வாய்க்கிழமை (மே 26) சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று மிகக் கொடூரமாகத் தண்டித்துள்ளார். 
வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை அடுப்பில் வைத்து பழுக்கக் காய்ச்சி, "இனிமேல் வாயில் கெட்ட வார்த்தை வரக்கூடாது" எனக் கூறி அச்சிறுவனின் வாயில் நேரடியாகவே சூடு வைத்துள்ளார்.
சூடு வைக்கப்பட்டதில் சிறுவனின் வாய் மற்றும் உதட்டுப் பகுதிகள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி, வீங்கிப் போயிருந்தன. இதனால் சிறுவனால் சரியாகப் பேசவோ, உணவு உட்கொள்ளவோ முடியாமல்
 தவித்துள்ளான். 
இரண்டு நாட்களாக இந்த விடயம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை (மே 28) கிராமத்திற்குள் வந்த பகுதி கிராம உத்தியோகத்தர் (Grama Niladhari) சிறுவனின் நிலையை 
அவதானித்துள்ளார்.
சிறுவனுக்கு நேர்ந்த கொடூரத்தை உடனடியாகப் புரிந்துகொண்ட அவர், சந்திவெளி காவல் நிலையத்திற்குத் தகவல் வழங்கி உத்தியோகபூர்வமாக முறைப்பாடு அளித்தார். 
இதனையடுத்து, சந்திவெளி காவல்துறையினர் உடனடியாகச் செயற்பட்டு முறக்கொட்டாஞ்சேனை கிராமத்திற்குச் சென்று சிறுவனின் தந்தையை அதிரடியாகக் கைது செய்தனர். மீட்கப்பட்ட 8 வயது சிறுவன் காவல்துறையினரால் உடனடியாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் (Batticaloa Teaching Hospital) 
அனுமதிக்கப்பட்டான். 
அங்கு அவனது தீக்காயங்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, சிறுவன் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள்
 தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டுள்ள தந்தைக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாரதூரமான காயம் விளைவித்தல் (Child Abuse and Grievous Hurt) ஆகிய பிரிவுகளின் கீழ் சந்திவெளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 28 மே, 2026

நாட்டுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட எழுவர் வந்தடைந்தனர்

இலங்கைக்கு .ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 07 பேர்-27-05-2026- அன்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளனர். 
மத்தியக்கிழக்கில் நிலவும் மோதல் நிலமைகளின்போது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தம்வசம் வைத்திருந்தமைக்காக அந்நாட்டின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 
23 முதல் 33 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 
அவர்கள் நாடு திரும்பியதைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து இவர்களிடம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இந்திய மாம்பழங்களுக்கு இருபது ஆண்டுகளுக்குப் பிறகுதடை விதித்த ஜப்பான்

ஜப்பான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய பதப்படுத்தும் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, ​​பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் குறைபாடுகளை ஜப்பான் தனிமைப்படுத்தல் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதியை ஜப்பான் நிறுத்தி வைத்துள்ளது. 
இந்த நடவடிக்கை, முக்கியமான கோடை மாம்பழப் பருவத்தில் ஏற்றுமதியைப் பாதித்துள்ளதுடன், அல்போன்சோ, கேசர், லங்ரா மற்றும் பங்கனபள்ளி போன்ற உயர்தர இந்திய ரகங்களையும் பாதித்துள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் இது போன்ற முதல் கட்டுப்பாடு இதுவாகும். முன்னதாக, பழ ஈக்கள் குறித்த கவலைகள் காரணமாக ஜப்பான் இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதித்திருந்தது. 
இந்தியா தனது பதப்படுத்தும் நெறிமுறைகளை வலுப்படுத்திய பின்னரே, 2006ல் அந்த தடை நீக்கப்பட்டது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

கருப்பு நிற பால் தரும் உலகத்தில் உள்ள விலங்கு எது

பலருக்கும் தெரியும். பொதுவாக பெரும்பாலான விலங்குகள் வெள்ளை நிறத்தில் தான் பால் கொடுக்கும். ஆனால் உலகத்தில் ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிறத்தில் பால் கொடுக்குமாம். இயற்கையில் பல அற்புதமான விஷயங்கள் நம்மை கவரும். அந்த வகையில் உலகத்தில் ஒரு விலங்குகிற்கு மட்டும் கருப்பு நிறத்தில் தான் பால் வரும். இதை பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் போன்ற விலங்குகளின் பால் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்பது பலருக்கும் தெரியும். 
கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு பற்றி யாருக்கெல்லாம் தெரியுமா இந்த சுவாரஷ்ய தகவல் பற்றி பதிவில் பார்க்கலாம். 
கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகமாகும் (Black Rhinoceros). இது ஆப்பிரிக்காவில் இருக்கும் அரிதான
 வனவிலங்கு இனம் எனப்படுகின்றது. இது பார்ப்பதற்கு பெரிய உடல் மற்றும் வலிமையான கொம்பை கொண்டிருக்கும். இது ஆப்பிரிக்க கண்டத்தின் சில காட்டு பகுதிகளில் வாழ்கிறது. இந்த விலங்கை வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட அழிப்பு காரணமாக தற்போது இதன் எண்ணிக்கை 
குறைந்து வருகின்றது. 
இந்த விலங்கின் பால் கருப்பு நிறத்தில் இருக்குமாம். ஆனால் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த பால் முற்றிலும் கருப்பு நிறத்தில் இருக்காது எனப்படுகின்றது. இந்த பாலை சாதாரண பாலுடன் ஒப்பிடும்போது
, அதன் நிறம் சற்று மங்கலாகவும் அல்லது சாம்பல் நிறமாகவும் இருக்குமாம். இதன் காரணமாக தான் இது "கருப்பு பால்" என்று அழைக்கப்படுகிறது. பாலின் இந்த பாலின் நிறத்திற்கு காரணம் கருப்பு காண்டாமிருகப் பாலில் கொழுப்பு மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் என்பதனால் ஆகும்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 27 மே, 2026

விவாகரத்தானவர்கள் மற்றும் விவாகரத்தாக போகின்றவர்கள் சுவிஸ்சில் கட்டாயம் கவனிக்க வேண்டியவை

தற்போது சுவிட்சர்லாந்தில் விவாகரத்து சட்டம் பெரும்பாலும் Swiss Civil Code (ZGB/CC) அடிப்படையில் செயல்படுகிறது. 
முக்கிய அம்சங்கள் இதோ:
1. இருவரும் சம்மதித்து விவாகரத்து (Mutual Consent Divorce) 
கணவன்-மனைவி இருவரும் விவாகரத்துக்கும் அதன் விளைவுகளுக்கும் (சொத்து, குழந்தைகள், maintenance போன்றவை) ஒப்புக்கொண்டால், நீதிமன்றத்தில் கூட்டு மனு தாக்கல் செய்யலாம். 
இது சாதாரணமாகவே வேகமானதும் குறைந்த செலவுடையதுமாக இருக்கும். 
பொதுவாக தீர்மானிக்க வேண்டியவை:
குழந்தை பாதுகாப்பு (custody)
child support
spouse maintenance/alimony 
pension (2nd pillar) பகிர்வு
சொத்து மற்றும் கடன் பகிர்வு
2. ஒருதலைப்பட்ச விவாகரத்து (Unilateral Divorce)
ஒருவர் மட்டும் விவாகரத்து விரும்பினாலும்:
சாதாரணமாக 2 வருட பிரிவு வாழ்வு (separation) கடந்த பிறகு தனியாக விவாகரத்து கோரலாம்.
சில கடுமையான சூழ்நிலைகளில் (violence, severe abuse) உடனடியான divorce petition அனுமதிக்கப்படலாம்.
3. குழந்தை பாதுகாப்பு (Child Custody)
2014 முதல், சுவிஸில் joint parental authority தான் default rule. அதாவது:
இரு பெற்றோரும் குழந்தை தொடர்பான முக்கிய முடிவுகளில் பங்கு பெறுவார்கள். 
நீதிமன்றம் “child’s best interest” அடிப்படையில் முடிவு எடுக்கும்.
4. Maintenance / Alimony
குழந்தைகளுக்கான maintenance கட்டாயம்.
spouse maintenance (alimony) சில சூழ்நிலைகளில் வழங்கப்படும்.
குறிப்பாக:
ஒருவர் நீண்ட காலம் வேலை செய்யாமல் குடும்பத்தை பார்த்திருந்தால்.
வருமானத்தில் பெரிய வித்தியாசம் இருந்தால்.
குழந்தை பராமரிப்பு காரணமாக career பாதிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றம் இருவரின் வருமானம், வாழ்க்கைமுறை, திருமண காலம் ஆகியவற்றைப் பார்க்கும்.
5. சொத்து பகிர்வு (Property Division)
சுவிஸில் default marital regime:
திருமணத்திற்கு முன் இருந்த சொத்து - தனிப்பட்டது.
inheritance/gifts - பொதுவாக தனிப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு சேர்த்த செல்வம் - பொதுவாக பகிரப்படும்.
6. Pension (2nd Pillar) பகிர்வு
திருமண காலத்தில் சேர்க்கப்பட்ட pension savings பொதுவாக இருவருக்கும் பகிரப்படும். இது Swiss divorce law-இல் மிகவும் முக்கியமான பகுதி. 
7. Separation vs Divorce
சுவிஸில் “legal separation” மாதிரி பாதுகாப்பு நடவடிக்கைகள் (Measures Protecting the Marital Union / MPUC) இருக்கின்றன:
உடனே divorce செய்யாமல் பிரிந்து வாழலாம்.
maintenance, குழந்தை வசிப்பு, செலவுகள் போன்றவற்றை court தற்காலிகமாக ஒழுங்குபடுத்தலாம்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இன்றி முடங்கிய மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

நாட்டில்  மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு (RMV) கடந்த இரண்டு மாதங்களாக புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாததன் காரணமாக, திணைக்களத்தின் அன்றாட நிர்வாகப் பணிகள் முற்றாக முடங்கியுள்ளதாக உள்ளகத் தரப்புகள் 
தெரிவித்துள்ளன.
வாகன முறைகேடு மற்றும் சட்டவிரோத வாகனப் பதிவு தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ், திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கடந்த மார்ச் மாத இறுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் 
வைக்கப்பட்டார். 
இதனைத் தொடர்ந்து, திணைக்களத்தின் கொள்கை ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான முடிவுகளை எடுப்பதில் பெரும் மந்தகதி ஏற்பட்டுள்ளது. நிர்வாக முடக்கம் காரணமாக, சுமார் 10 இலட்சம் வாகன இலக்கத் தகடுகளும், 3 இலட்சம் ஓட்டுநர் உரிமங்களும் விநியோகிக்கப்படாமல் கடந்த இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ளன.
இதனால் புதிய வாகனங்களை வாங்கிய உரிமையாளர்களும், ஓட்டுநர் உரிமங்களுக்கு விண்ணப்பித்த பொதுமக்களும் வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தத் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து 
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் தாரக தேசப்பிரிய கருத்துத் தெரிவிக்கையில்; "முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமை குறித்து அமைச்சு மட்டத்தில் கொள்கை ரீதியான முடிவு 
விரைவில் எடுக்கப்படும். 
தற்போதைய தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் மூலம் மாத்திரம் விண்ணப்பங்களை அனுப்பும் 14 'ஓப்லைன்' (Offline) மாவட்ட அலுவலகங்களை, விரைவாக 'ஒன்லைன்' (Online) மயமாக்கும் பணிகள் 
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
" மேலும், நிலுவையில் உள்ள ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக இராணுவம் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிகள் பெறப்பட்டுள்ளன. அவர்களின் பங்களிப்புடன் 
தற்போது 50% இற்கும் அதிகமான நிலுவை அட்டைகள் அச்சிடப்பட்டு அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மேலும் ஒரு மில்லியன் அட்டைகள் அச்சிடப்பட்டு கிடைக்கவுள்ளதாகவும்
 அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், புதிய விநியோகஸ்தர் ஒருவரின் மூலம் மே 10 ஆம் திகதி முதல் இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அனைத்து இலக்கத் தகடுகளும் விரைவில் அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என திணைக்களம் உறுதியளித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 26 மே, 2026

இலங்கை வலி. வடக்கில் சில காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம்

நாட்டில்  யாழ், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையிலான விசேட குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர். 
குறித்த குழுவினருடன் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் இணைந்து இராணுவ கட்டுப்பாட்டில் மக்களின் காணிகளை நேரில் 
பார்வையிட்டனர். 
"மக்களின் காணிகள் மக்களுக்கே .. " என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய காணிகளை விடுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
அதன் ஒரு கட்டமாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் , பலாலி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் , உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தனியார் காணிகளுக்குள் சென்று காணி விடுவிப்பு தொடர்பிலான சாத்தியங்கள் குறித்து நேரில் ஆராய்ந்தனர். 
அதனை தொடர்ந்து பலாலி இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் குறித்த குழுவினர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இத்தாலியில் அவசரமாக தரையிறங்கிய இங்கிலாந்து நோக்கி சென்ற ஈஸிஜெட் விமானம்

விமனந்தில் ஒரு பயணியின் பையில் பவர் பேங்க் சார்ஜ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து நோக்கிச் சென்ற ஈஸிஜெட் விமானம் ஒன்று ரோம் நகருக்குத் திருப்பி விடப்பட்டதாகத் 
தெரியவந்துள்ளது.
எகிப்தின் ஹுர்கடாவிலிருந்து லண்டன் லூட்டன் நோக்கிச் சென்ற EZY2618 விமானம், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக" இத்தாலி தலைநகரில் தரையிறங்கியது.
விமானத்தின் பொருட்கள் அறையில் கையடக்க சார்ஜர் இருப்பதை ஒரு பயணி விமானப் பணியாளர்களிடம் தெரிவித்ததை அடுத்து, "பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க" விமானத்தை திருப்பி விட கேப்டன் முடிவு செய்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பவர் பேங்கில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அறியப்படுகிறது, ஆனால் விமானப் பயணத்தின் போது பொருட்கள் அறையில் பவர் பேங்குகளை சார்ஜ் செய்ய அனுமதி இல்லை என விதிமுறைகள் கூறுகின்றன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 25 மே, 2026

நாட்டில் நாற்பது நாடுகளுக்கான இலவச விசா செயல்முறை இன்று முதல் நடைமுறைக்கு

நாட்டிற்கு  வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

 அதன்படி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, மலேசியா, சவுதி அரேபியா, ஜேர்மனி, நேபாளம், தென் கொரியா, பஹ்ரைன், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், பெலாரஸ், இந்தோனேசியா, நியூசிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், 
கஜகஸ்தான், குவைத், நோர்வே, ஓமான், பாகிஸ்தான், போலந்து, கட்டார், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம்  மற்றும் அமெரிக்கா ஆகிய 40 நாடுகளின் பிரஜைகள் இந்த சலுகையை பெற முடியும். 
 இதேவேளை குறித்த 40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளும்  இலங்கைக்கு வருகைத் தர முன்னர் இணையவழி சுற்றுலா
 அனுமதி  ஒன்றைப் பெற்றுக்கொள்வதும்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 மேலும் இந்த இலவச விசாவைப் பெற்றுக்கொண்டு 30 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியிருக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள், அதற்குரிய விசா கட்டணத்தைச் செலுத்தி விசா காலத்தை நீடிப்பதற்குக் விண்ணப்பிக்கலாம். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் பணம் அச்சிடுதல் பற்றிய தவறான தகவல்கள் மத்திய வங்கி :மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் பணம் அச்சிடுதல், பணப்புழக்கம் மற்றும் நாணய மாற்று விகிதம் தொடர்பில் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. 
 இவ்வாறான விடயங்கள், அதுகுறித்த விசேட தொழில்நுட்ப அறிவு மற்றும் புரிதலுடன் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியவை என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 
 இத்தகைய தொழில்நுட்ப அறிவு இல்லாத தரப்பினரால் இந்நாட்களில் வெளியிடப்பட்டு வரும் தவறான கூற்றுகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 24 மே, 2026

திருட்டு மற்றும் நாசவேலைகளில் அமெரிக்காவில் ஈடுபட்ட இந்தியர் கைது

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE), 26 வயதான இந்தியரான பர்மிந்தர்பால் சிங் கைது செய்துள்ளதாக
 தெரிவித்துள்ளது.
X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், இந்தியாவைச் சேர்ந்த 26 வயதான பர்மிந்தர்பால் சிங்கை கைது செய்தது. 
சிங்கின் குற்றப் பதிவில் வாகனத் திருட்டு, பெரும் திருட்டு, அத்துமீறி நுழைதல் மற்றும் நாசவேலைகள் ஆகியவை அடங்கும். அவர் நாடு கடத்தப்படும் வரை ICE காவலில் வைக்கப்பட்டுள்ளார்"
 என்று கூறியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சிங்குக்கு வாகனத் திருட்டு, பெரும் திருட்டு, அத்துமீறி நுழைதல் மற்றும் நாசவேலைகள் உள்ளிட்ட முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளன..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் எண்பது இலட்சம் ரூபாய் மதிப்பிலான பதினெட்டு தங்கச் சங்கிலிகள் கொள்ளை

நாட்டில்  .சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவரை, மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 அவரிடம் இருந்து 02 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடிக்கப்பட்ட 18 தங்கச் சங்கிலிகள் மற்றும் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்த 17 கிராம் 800 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 குறித்த நபர் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மஹரகம, ஹோமாகம, மீகொட, மிரிஹான, கொட்டாவ மற்றும் மாலபே ஆகிய பகுதிகளில் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.
அவரிடம்  முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துத் தங்க நகைகளையும் மஹரகம பிரதேசத்திலுள்ள ஒரேயொரு அடகு வைக்கும் நிலையத்திற்கே அவர் விற்பனை செய்துள்ளமைதெரியவந்துள்ளது. 
 சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 23 மே, 2026

நாட்டில் கல்முனையில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு பேரணி

நாட்டில்  தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலிலும் அம்பாறை மாவட்டத்திற்கான விசேட போதை ஒழிப்பு பேரணி.23-05-2026. இன்று  தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிகா தமயந்தி தலைமையில் கல்முனையில் நடைபெற்றது.
“போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பேரணி, சாய்ந்தமருது எல்லைக்கு முன்பாக காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
பேரணியில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.பீ.எம். றஸாட், இளைஞர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகள் மற்றும் கோஷங்களை ஏந்தியவாறு கல்முனை நகர் வழியாக
 ஊர்வலமாகச் சென்றனர். 
பின்னர், கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் பேரணி நிறைவடைந்தது. போதைப்பொருள் பாவனையால் சமூகத்திற்கும் இளைஞர் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைப்பதோடு, போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும். 
இந்நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் அமைப்புகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


கனடா விமான நிலையங்களில் எபோலா பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன

பயணிகளுக்காக விமான நிலையங்களில் எபோலாவிற்கான மேம்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று கனடாவின் உயர்மட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர். ஜோஸ் ரெய்மர் ஒரு மெய்நிகர் செய்தியாளர் 
சந்திப்பின் போது, ​​ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பரவும் அபாயம்
 கனடியர்களுக்கு குறைவாகவே உள்ளது என்று
 தெரிவித்துள்ளார்.
"ஒன்டாரியோவில் நடத்தப்பட்ட ஆரம்ப சோதனை மற்றும் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் உறுதிப்படுத்தும் சோதனை இரண்டும் எதிர்மறையானவை" என்று ரெய்மர் குறிப்பிட்டுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 22 மே, 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 354.24 ரூபா
ஜப்பானிய யென் 2.27 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 479.74 ரூபா
யூரோ 414.75 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 258.04 ரூபா
சுவிஸ் பிராங் 455.32 ரூபா
கனடிய டாலர் 259.74 ரூபா
கத்தார் ரியால் 98.49 ரூபா
குவைத் தினார் 1165.01 ரூபா
சவுதி ரியால் 95.68 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் பாதிப்பு : மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானங்கள்

கொழும்பு  கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பகுதியில் நிலவும் கடுமையான மழை மற்றும் மோசமான வானிலை
 காரணமாக, அங்கு தரையிறங்க வந்த 9 சர்வதேச விமானங்கள் மத்தள
 ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை வேளையில் பெய்த அதிக மழை காரணமாக விமான நிலைய ஓடுதளப் பகுதியில் பார்வைத்திறன் (Visibility) கணிசமாகக் குறைவடைந்ததை அடுத்தே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய
 அதிகாரி தெரிவித்தார்.
விமான நிலையத் தகவல்களின்படி, அதிகாலை வேளையில் தரையிறங்கவிருந்த பின்வரும் நிறுவனங்களின் விமானங்கள் இவ்வாறு மத்தளவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன:என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 21 மே, 2026

இலங்கையில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் தடை

இலங்கையில் மாலிசிறிபுரப் பகுதியின் பெரும்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் உயர் அழுத்த மின்பாதை அறுந்து விழுந்துள்ள
மையால் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. 
காட்டுப் பகுதியில் உள்ள மின் பாதையே இவ்வாறு அறுந்து விழுந்துள்ளது. இதனால் நேற்றைய தினம் சம்பவ இடத்தை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இந்நிலையில் மாலிசிறிபுரப் பண்ணைக்கு அருகிலிருந்து ஓமரகொல்ல வரையிலும், ஓமரகொல்லவிலிருந்து மதஹபோல கந்த வரையிலும், ஹெவனதென்னவிலிருந்து கட்டுவலந்த வரையிலும் உள்ள பகுதிகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நிலைமை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் தையிட்டி பவானி வீதி விவகாரம்: பொலிஸாரின் தடை மனு மீதான கட்டளை ஜூன் 25க்கு ஒத்திவைப்பு

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான "பவானி" வீதியினை மீட்கும் நடவடிக்கைக்குத் தடை கோரி பலாலி 
பொலிஸார் தாக்கல் செய்த மனு மீதான கட்டளை, எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என மல்லாகம் நீதவான் நீதிமன்றம்
 உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் (மே 21) இவ்வழக்கு மீதான கட்டளை வழங்கப்படும் என கடந்த 11ஆம் திகதி மன்று திகதியிட்டிருந்த நிலையில், இன்றைய அமர்வின் போது இக்கட்டளை அடுத்த மாதம் ஜூன் 25 ஆம் திகதிக்கு 
ஒத்திவைக்கப்பட்டது.
இவ்விவகாரத்தின் பின்னணி விபரங்கள் வருமாறு: வீதி அளவீடும் விகாராதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதமும் தையிட்டி விகாரை வளாகத்திற்குள் அமைந்துள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது. 
அதனைத் தொடர்ந்து, வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் பிரதேச சபையே வேலியை அகற்றி அதற்கான செலவீனத்தை 
விகாராதிபதியிடமிருந்து அறவிடும் எனவும் தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
பொலிஸாரின் அச்சுறுத்தலும் நீதிமன்ற மனுவும் பிரதேச சபை விகாரை வேலியை அகற்ற முற்படுவதாக விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இம்முறைப்பாட்டின் பிரகாரம் தவிசாளரை அழைத்த பொலிஸார், "வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையில் நல்லிணக்க பாதிப்பு ஏற்படும் என்பதால் இப்பணியைக் கைவிட வேண்டும்" என அச்சுறுத்தும் தொனியில் கூறினர். 
எனினும், பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விடுவிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தவிசாளர் பொலிஸாரிடம் மறுத்துரைத்தார். இதனையடுத்து, வீதியை மீட்கும் பணியை வலி. வடக்கு பிரதேச சபை கைவிட வேண்டும் எனத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
சுமந்திரனின் வாதமும் தள்ளிவைக்கப்பட்ட கட்டளையும் இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், ஒருதலைப்பட்சமாக உத்தரவிட முடியாது எனக் கூறி வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு
 விடுத்திருந்தது.
அதன்படி கடந்த 11ஆம் திகதி அவர்கள் மன்றில் முன்னிலையான போது, அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகிப் பிரதேச சபை தரப்பு வாதங்களை 
முன்வைத்தார். 
இதனைத் தொடர்ந்து இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த தீர்ப்புக் கட்டளையே, தற்போது ஜூன் 25ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஎன்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 20 மே, 2026

நாட்டில் அரிசி, சீனி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர வாய்ப்பு

தற்போது இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான மதிப்பு வீழ்ச்சி  காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சர்க்கரை, பருப்பு மற்றும் அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வரும் காலத்தில் அதிகரிக்கும் என சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவை நேரடியாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.