புதன், 13 மே, 2026

நாட்டில் வடக்கிற்கும் பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை

நாட்டில்  மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களுக்குப் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது

 அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு அருகாமையில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக 
வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான
 நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த அறிவித்தல் இன்று (13) காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இது இன்று மாலை 3.30 மணி வரை செல்லுபடியாகும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.  என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.