யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஆறாம் நாளான இன்று இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டுள்ளன.
இன்று அடையாளம் காணப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, செம்மணிப் புதைகுழியில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 246 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 243 எலும்புக்கூடுகள் முழுமையாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான கறுப்பு நிற மண் சேகரிக்கப்பட்டு, தற்போது உலர விடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி
வைக்கப்படவுள்ளன.
புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற உருவம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்த உறுதியான தகவல்கள் அப்பணிகளின் பின்னரே தெரியவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக