செவ்வாய், 28 டிசம்பர், 2021

உலகில் 2022 ஆம் ஆண்டு என்ன நடக்கும்.பீதியை கிளப்பும் பாபா வங்கா கணிப்புக்கள்

பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா. எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே கணித்து கூறியவர். இவர் 12 வயதாக இருக்கும்போது சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார்.கண் பார்வையை இழந்த பிறகு, கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை 
கொடுத்துள்ளதாக கூறிவந்தார்.
கடந்த 1996ம் ஆண்டு 84 வயதில் பாபா வங்கா உயிரிழந்தார். எனினும், இவர் ஒவ்வொரு ஆண்டும் இந்த உலகத்தில் நடக்கக்கூடிய முக்கிய, பயங்கர நிகழ்வுகள் குறித்து அவர் கணித்து வைத்து சென்றுள்ளார். 5079ம் ஆண்டு இந்த உலகம் முடிவுக்கு வரும் என்றும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
பாபா வங்காவின் பல்வேறு கணிப்புக்கள் ஏற்கனவே உண்மையாகியுள்ளன. அவர் முன்கூட்டியே கணித்திருந்த சோவியத் யூனியன் சீர்குலைவு, இளவரசி டயானா மரணம், 2004ல் தாய்லாந்தை சுனாமி தாக்கியது, அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றது உள்ளிட்ட நிகழ்வுகள் 
உண்மையாகி உள்ளன.
மேலும், 9/11 தீவிரவாத தாக்குதல் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகியதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்தும் பாபா வங்கா முன்கூட்டியே கூறியுள்ளார். இதேபோல், 2022ம் ஆண்டில் நடக்கக் கூடிய பல்வேறு சம்பவங்களையும் பாபா வங்கா குறிப்பிட்டு 
சென்றுள்ளார்.
அவற்றில் முக்கியமான சிலவற்றின் விவரம் வருமாறு:விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்கி அழிக்கும். இதன் காரணமாக பஞ்சம் தலைவிரித்தாடும்.உலகின் மிகப் பெரிய நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.நதிகள் மாசுபாடு காரணமாக தண்ணீர் பற்றாக்குறை 
ஏற்பட்டு போர் உருவாகும்.
ஆசிய நாடுகளும், ஆஸ்திரேலியாவும் கடுமையான வெள்ளப்பெருக்கினால் பாதிக்கக்கூடும்.ஏராளமான பூகம்ப சம்பவங்களும், சுனாமி ஆபத்தும் அதிகரிக்கும்.சுனாமியின் காரணமாக பல ஆயிரம் மக்கள் பலியாகக்கூடும்.ஸ்வீடன் நாட்டில் இதுவரை உறைந்த நிலையில் இருந்த ஒரு கொடிய வைரசை ஆராய்ச்சியாளர்கள் குழு 
கண்டுபிடிக்கும்.
இவ்வாறு பல கணிப்புகளை அவர் கூறியுள்ளார். புவி வெப்பமடைதல், அதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் பாபாவின் கொடிய வைரஸ் கூற்று உண்மையாகும் சாத்தியங்கள் இருப்பதாக நிபுணர்கள் 
கருத்து தெரிவித்துள்ளனர்.
வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் 2022ம் ஆண்டு அதிகளவில் கணினி பயன்பாடுகளை சார்ந்ததாக இருக்கும் என்றும் உலக மக்கள் முன்பை காட்டிலும் அதிக நேரத்தை திரைகளின் முன் செலவிடுவார்கள் என்றும் தனது 2022ம் ஆண்டுக்கான கணிப்பில் பாபா வங்கா 
கூறியுள்ளார்.
மேலும், ‘ஏலியன்’கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பூமியில் வாழ்வதற்கான வழிகளை தேடி, ‘ஒமுஅமுவா’ (oumuaumu) என்ற சிறிய கோளை அனுப்புவார்கள் என்றும் பாபா வங்கா தெரிவித்துள்ளார்.-

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
திங்கள், 27 டிசம்பர், 2021

அமரர் தம்பு. துரைராஜாவின்19ம் ஆண்டு நீங்காத நினைவுகள் 27.12.2021

மலர்வு .15-.04-1926. உதிர்வு .14-01.2004
திதி -27-12-2021
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் மாகக் கொண்ட
அமரர் ,தம்பு துரைராஜா.அமரர் துரைராஜா-சிதம்பரம். (பூரணம்).அமரர் துரைராஜா தங்கரத்தினம்.
தோற்றம் 06-05-1949-மறைவு-23-01-2005.(தங்காள் ) அமரர் இராசையா கனகசபாபதி.தோற்றம் 01-04-1949- (தேவர் பிறப்பிடம் கோண்டாவில் ).வாழ்ந்த இடம்நவற்கிரி.)அகியோரின் 
 நீங்காத நினைவுடன் பத்தொன்பதாவது ஆண்டு
 நினைவஞ்சலி.(திதி )27-12-.2021.இன்று
பத்தொன்பது ஆண்டுகளாய்
வளர்ந்து நிற்பது உங்கள் பிரிவின் சோகம்
எம் இதயம் கவர்ந்த செல்வங்களே  ஏன் - இந்த
உலகம் கடந்து சென்றீர்கள்
அனைவராலும் ஐயா தாத்தா என அழைக்கபட உங்கள்
நீங்காத நினைவுகளுடன்
பத்தொன்பது ஆண்டுகளல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்
நாம் வாழ்ந்தாலும்..
வாழும் காலமெல்லாம் உன் பிரிவின் ஏக்கம் தொடரும்…
நினைவு அஞ்சலி
காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வனாக
தர்மத்தின் தலைவனாக
காலத்தை வென்ற தலைமகனாக
தம்பு- மாணிக்கத்தின்
அன்பில் சிவமாக
என்றும் எங்களில்
வாழ்கிறீர்கள் அன்பின்ஐயா
என்றென்றும் எங்கள் தெய்வம் நீங்கள்
…அன்பும் ஆற்றலும்
பண்பும் பாசமும்
உறுதியும் உன்னதமும்
உண்மையும் உழைப்பும்
உற்ற தோழமையும்
இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே !
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்
அன்புப் பிள்ளைகள் , பிள்ளைகள்,
சகோதர்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:,குடும்பத்தினர்.


அமரர் துரைராஜா-சிதம்பரம். (பூரணம்)
எங்கள் அம்மாவே ஆண்டுகள் பல கடந்தும் 
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை..அன்பையும் பண்பையும் பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?
இனி எப்போது எம் முகம் பார்ப்பாய்?
 உன் புன்முகம் பார்க்க
ஏங்கித் தவிக்கின்றோம்!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய் அழுகின்றோம்...உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில் வழிகின்றதே
 கண்ணீர்த்துளிகள்...உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்


 அமரர் இராசையா கனகசபாபதி.தோற்றம் 01-04-1949- (தேவர் பிறப்பிடம் கோண்டாவில் ).வாழ்ந்த இடம்நவற்கிரி.)
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்னநிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரேஎங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்அன்பிற்கு இலக்கணமாக இருந்த எங்கள் அம்மாவே
ஆயிரம் உறவுகள் அணைத்திட இருந்தாலும்
உம்மை போன்று அன்பு காட்ட யாரும் இல்லையம்மா...அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்தகவல்: குடும்பத்தினர்


.அமரர் துரைராஜா தங்கரத்தினம்.
தோற்றம் 06-05-1949-மறைவு-23-01-2005.(தங்காள் ) 
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
 நீங்கள் இன்றிஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
 வளர்த்தீர்கள்!எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
 உன் நினைவு எமை விட்டு அகலாது நாங்கள் உன்னை மறந்தால்
 தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் எண்கள் அக்காவே!!!உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்
அன்புச் சகோதர்கள் மருமக்கள்
பெறாமக்கள் 
பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:,குடும்பத்தினர்.

 

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவர்களுக்கு வெளியான விசேட சலுகை

இலங்கை மத்திய வங்கி தற்போது விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.இதன்படி, வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில் தொழில்புரிபவர்களினால் அனுப்பப்படும் பணத்திற்காக “தொழிலாளர்களின் உள்முகப் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் கொடுப்பனவு செய்யப்படும் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான 2 ரூபாவினை கொண்ட ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக அவ்வாறு அனுப்பும் பணத்திற்காக மேலும் 8 ரூபாவினை வழங்குவதை 2022.01.31 வரை நீடிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 திசெம்பர் காலப்பகுதியில் இதுவரையிலும் வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பணவனுப்பல்களில் அவதானிக்கப்பட்ட சாதகமான முன்னேற்றங்களுக்கு பதிலிறுத்தும் விதத்திலேயே ஐ.அ.டொலர் ஒன்றிற்கு 10 ரூபா கொண்ட இம் மேலதிக ஊக்குவிப்பினை தொடர்ந்தும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்கள், பணப் பரிமாற்று நிறுவனங்கள் அத்துடன்/ அல்லது வங்கிகள் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்புகின்ற போது அவர்களுக்கு ஏற்படுகின்ற பரிமாற்றுச் செலவின் வரையறை செய்யப்பட்ட மட்டமொன்று வரை ஏற்றுக்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டில் தொழில்புரிகின்ற பாரிய எண்ணிக்கையிலானோர் எவ்விதக் கட்டணமுமின்றி தமது பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடியதாகவிருக்கும். தொடங்கும் திகதி உள்ளடங்கலாக இது தொடர்பிலான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் இலங்கை மத்திய வங்கியினால் விரைவில் வழங்கப்படும்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>சனி, 25 டிசம்பர், 2021

உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர்.
இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும்  அன்பர்த வணக்கம்   உறவுகள் நண்பர்கள் இணைய வாசகர்கள் அனைவருக்கும் எமது நவக்கிரி.கொம்
 நிலாவரை. கொம் நவற்கிரி. கொம் நவற்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களின் இனிய நத்தார் வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>வெள்ளி, 24 டிசம்பர், 2021

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வெளியான முக்கிய செய்தி

நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அது மாத்திரமின்றி சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பிலும் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கள் நத்தார் பண்டிகையின் போதும், புத்தாண்டு பிறப்பின் போதும் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் இவ்வாறான அன்றாட நடவடிக்கைகள் தொடர்பில் தீவிர கண்காணிப்பை முன்னெடுக்குமாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இதன்போது சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத நபர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அத்தோடு அதிக வேகத்தில் , கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துபவர்கள் தொடர்பிலும் கண்காணிப்புக்களை முன்னெடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் 24 மணித்தியாலங்களும் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் அதிகளவில் பொருட் கொள்வனவில் ஈடுபடக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.கொள்வனவு செய்யும் பொருட்களின் தரம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும், காரணம் சில வியாபாரிகளால் பாவனைக்கு உதவாத பொருட்கள் விற்பனை செய்யப்படக் கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி வாகனங்களை தரித்து நிறுத்தும் போதும் , மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். இவை தொடர்பில் கண்காணிப்பதற்காக புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
குறிப்பாக பொருட்களை கொள்வனவு செய்யும் போது போலி நாணயத்தாள்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.பொது மக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களில் நடமாடும் காவல்துறை சேவை ஊடாக 
கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி தரித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை காவல்றை பொறுப்பிலெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மாத்திரமின்றி தேவையேற்படின் இராணுவத்தினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளுமாறும் ஆலோசனை 
வழங்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவது தொடர்பான அறிவித்தல்

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.அன்றைய தினமே சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் போது மோசடிகள் நடப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் 
எடுக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் அலுவலகத்தில் இப்படியான மோசடிகள் சம்பந்தமாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கிடைத்த சில முறைப்பாடுகளை அடுத்து, இந்த நடவடிக்கையை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.எழுத்து மூலம் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பின்னர், செயன்முறை பரீட்சையில் தேர்ச்சி பெறும் நபர்கள் 500 ரூபாய் செலுத்திய பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடைமுறை 
இருந்து வந்தது.
செயன்முறை பரீட்சையில் தேர்ச்சி பெற்ற தினத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாவிட்டாலும் தற்காலிக அனுமதிப்பத்திரம் கிடைக்கும் என்பதுடன் அதனை பயன்படுத்தி வாகனங்களைசெலுத்த முடியும்.மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நேரத்தை ஒதுக்கிக்கொண்ட நபர்களுக்கான ஒரு நாள் சேவை மற்றும் ஏனைய சேவைகள் தொடர்ந்தும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>வியாழன், 23 டிசம்பர், 2021

ஹெலியில் வந்த பிறந்தநாள் கொண்டாடிய சிறுப்பிட்டிப் பெண்.

யாழ் சிறுப்பிட்டியில் .22.12.2021.அன்று சுவாரசிய சம்பவமும் நடந்துள்ளது.தனது பிறந்தாள் கொண்டாட்டத்துக்காக பெண் ஒருவர் ஹெலிகொப்பரரில் வந்து சிறுப்பிட்டியில் இறங்கியுள்ளார்.
வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஹெலிகொப்டர் மூலம் அவர் வந்திறங்கி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். அவர் ஹெலிகொப்டரில் வந்திறக்குவதைக் ஏராளாமானோர் கூடி நின்று 
வேடிக்கை பார்த்தனர்.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
இலங்கையில் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முன்னறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் 23-12-2021.இன்று  மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>செவ்வாய், 21 டிசம்பர், 2021

நாட்டில் பாட்டு பாடி பிரபலமான சிங்கள பெண்ணுக்கு கொழும்பில் காணி

நாட்டில் அண்மையில் பிரபலமான இலங்கையின் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு காணி ஒன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி 
வழங்கியுள்ளது.
அதன்படி, பத்தரமுல்லை ரொபட் குணவர்தன மாவத்தையில் அவருக்காக 9.68 பேர்சஸ் காணியை பரிசாக வழங்க அரசாங்கம் 
தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பில் இன்றைய அமைச்சரவையில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
ஞாயிறு, 19 டிசம்பர், 2021

இலங்கையில் அதிகளவான மண்ணெண்ணெய்யினை கொள்வனவு செய்வதால் திண்டாடும் அரசாங்கம்

இலங்கையில் மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 100 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.இதுவரையான காலத்தில் மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 500 மெற்றிக் தொன்னாக
 இருந்து வந்தது.
தற்போது அது 600 மெற்றிக்தொன்னாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக சந்தையில் பற்றாக்குறையில்லாமல் விநியோகத்தை பராமரிக்க வேண்டியுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதேவேளை
மீனவ சமூகத்துக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தையும் உரிய முறையில் மேற்கொண்டு வருவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இந்த கேள்வி அதிகரிப்புக்கு எரிவாயு கொள்கலன்களின் பற்றாக்குறையும் காரணம் என்று கருதப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>வியாழன், 16 டிசம்பர், 2021

நாட்டில் 2022ஆம் ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் எனத் தகவல்கள்

அரசிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பல தரப்பினரும் கடந்த காலங்களில் முறைப்பாடுகளை முன்வைத்தனர். ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இது தொடர்பில் ஜனாதிபதிக்குக் கடிதங்களை 
அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், அமைச்சுகளின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன, திட்டங்கள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார்.
அந்தக் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அமைச்சரவையில் மறுசீரமைப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது அமைச்சரவை மாற்றத்துக்கு ஆரம்பத்தில் அதிருப்தியை வெளியிட்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
புதன், 15 டிசம்பர், 2021

வரவு செலவு திட்டம் நிறைவேற்றம் யாழ் மாநகர சபையின் 2022ம் ஆண்டு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்றைய தினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் 
சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் என 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். இதனால் யாழ் மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் 13 உறுப்பினர்களும்,
 ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சி சார்பில் 2உ றுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
நாட்டில் தபால் அலுவலகங்கள்,உப தபால் அலுவலகங்கள் செயலிழப்பு

நாட்டில்14-12-2021.அன்று செவ்வாய்க்கிழமை தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 
தபால்சேவைகள் 

முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன.மட்டக்களப்பு பிரதம தபால் நிலைம் உட்பட மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தபால் அலுவலகங்கள் உப தபால் அலுவலகங்கள் செயலிழந்து காணப்பட்டன.
தபால் வினியோகம் உட்பட அனைத்து நடவடிக்கைககளும் ஸ்தம்பித்திருந்தன.தபால் சேவைகளைப்பெற தபால் நிலையங்களுக்கு வந்தோர் திரும்பிச் சென்றதை 
அவதானிக்க முடிந்தது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>திங்கள், 13 டிசம்பர், 2021

நாட்டுக்கு கடன் கொடுத்த வெளிநாட்டவர்கள் பயன்படுத்த கடல் வழி நெடுஞ்சாலை

வெளியான விரிவான செய்தி இலங்கை கடலில் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணித்து, அந்த நெடுஞ்சாலையை இலங்கை கடனை பெற்றுக்கொண்டுள்ள நாடுகள் பயன்படுத்த வழங்கி, கடனை திரும்ப செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோரும் யோசனை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இந்த அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்வதன் மூலம் நேரம் மீதமாகும் என்பதுடன் வான் வழியாக பயணம் செய்யும் நேரம் ஒரு மணித்தியாலத்தால் குறையும் என கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மீதமாகும் பணத்திற்கு ஈடாக இலங்கை பெற்ற கடனை திரும்ப செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோருவது இந்த யோசனையின் திட்டமாகும்.
கடல் வழியிலான இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் நாடுகள், அவற்றின் வருடாந்த இலாபத்தை 8 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கவும் செலவுகளை 2 பில்லியன் டொலர்களாக குறைக்கவும் முடியும் என 
கணக்கிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான எண்ணக்கருவை உள்ளடக்கிய ஆவணம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதுடன் இதனடிப்படையில் இது குறித்து உலக வங்கி உட்பட ஏனைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவையில் அனுமதி பெறப்படவுள்ளது.
இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு கடன் தொகையானது சுமார் 60 பில்லியன் டொலர்களாகும்.எது எப்படி இருந்த போதிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இலங்கையின் தலைமன்னாருக்கும்
 இந்தியாவின்
ராமேஸ்வரத்திற்கும் இடையில் கடல் வழியிலான வீதியை நிர்மாணிப்பது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.எனினும் அந்த யோசனையானது பேச்சளவில் மாத்திரமே இருந்து வந்ததுடன் அதனை செயற்படுத்தும் விதமான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 12 டிசம்பர், 2021

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலை

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச ஊடாக 50 வகையான பொருட்கள் சந்தை விலையை விடவும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளனர்.சதொச ஊடக குறைந்த விலையின் கீழ் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு 
வழங்குவதற்கு
தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எந்தவொரு வகையான அரிசியும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். ஒருவரால் 5 கிலோ கிராம் அரிசிி பெற்றுக் கொள்ள முடியும்.டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை குறைந்த விலையில் இந்த பொருட்களை வழங்குவதற்கான
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் 50 வகையான பொருட்கள் நிவாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கமைய சீனி ஒரு கிலோ 125 விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன் சவர்க்காரம் முதல் உப்பு வரையான பொருட்கள் குறைந்த விலையில் பெற்றுக் 
கொள்ள முடியும்
நாளைய தினம் முக்கியமான 50 பொருட்கள் இவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும். தேவையான பொருட்கள் வீட்டிற்கே கொண்டுவந்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதென அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
வெள்ளி, 10 டிசம்பர், 2021

நாட்டில் இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

 

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில், இன்று (10) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின் படி,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை 
அல்லது இடியுடன் 
கூடிய மழை பெய்யக்கூடும்.சப்ரகமுவ மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த 
காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
வியாழன், 9 டிசம்பர், 2021

நாடு மீண்டும் முடக்கப்படுவது குறித்து சுகாதார அமைச்சின் முக்கிய செய்தி

நாட்டினை முழுமையாக முடக்காது கோவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை 
கூறியுள்ளார்.
இதேவேளை, கோவிட் வைரஸ் பரவல் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாட்டை முடக்காமல் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றார். நாட்டின் சகல பிரஜைகளுக்கும் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்குவதைக் கட்டாயமாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் 
குறிப்பிட்டார்.
இதேவேளை, கோவிட் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>Blogger இயக்குவது.