வெள்ளி, 31 ஜூலை, 2020

நாட்டில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்



இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் ஆகஸ்ட் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.







பெருமளவு ஹெரோயின் வெள்ளவத்தையில் கைப்பற்றல்



கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 23 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த
தகவலின் அடிப்படையில் அதிரடி படையினரால் இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது
செய்யப்பட்டுள்ளார். .







வியாழன், 30 ஜூலை, 2020

யாழில் 33 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய புத்தள இளைஞன்


யாழ்ப்பாணம், ஐந்துசந்திப் பகுதியில் 33 கிலோ கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஐந்து சந்திப் பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த, கஞ்சா பொதிகளுடன் 36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவர் 28-07-20.  அன்று யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்த மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


வரணியில் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடிய இளைஞன் பலி.


 யாழ் வரணியில் 29-07-20.அன்று.விபத்தில் சிக்கிய இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.வரணியில் 29-07-20.அன்று.பகல், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் 
இருண்டு இளைஞர்கள் பயணித்தனர். இதன்போது வீதியில் பொலிசாரின் வாகனம் வருவதை
 கண்டு, அதிவேகமாக தப்பியோடியுள்ளனர்.கொடிகாமம்- பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் நிறுவனத்தின் டிப்பர் வாகனத்துடன்- வரணி வைத்தியசாலையின் முன்பாக மோதி விபத்திற்குள்ளாகினர்.
இடைக்குறிச்சி வரணியை சேர்ந்த பிரான்சிஸ் சைனிஸ் (26), யோகேந்திரன் கோகுலன் (26) பேரும் படுகாயமடைந்து, 
வரணி வைத்தியசாலையிலிருந்த மேலதிக 
சிகிச்சைகளிற்காக பருத்தித்துறை.
 ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.இந்த நிலையில், படுகாயமடைந்த இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி 
உயிரிழந்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறப்பதில் சிக்கல்


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனினும் தற்போது நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் கொரோனா ரைவஸ் பரவும் அபாயம் தீவிரம் அடைந்துள்ளதால் விமான நிலையத்திதை திறக்கும் நடவடிக்கை காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே
 தெரிவித்துள்ளார்.
எனினும் விமான நிலையத்தை திறப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நாட்டில் சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை


நாட்டில் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற வகையில் வாகனங்களை செலுத்தி, அதன்மூலம் ஆபத்தான விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு
 தாக்கல் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்த பின்னர் அவர்களுக்கு
 எதிராக கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என பொலிஸ் சட்ட பிரிவின் இயக்குநர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.அத்தகைய நபர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய தண்டனை சட்டத்தின் 294வது 
பந்தியின் 4வது பிரிவு தெளிவான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த 20ம் திகதி நுகேகொட மேம்பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் 
உயிரிழந்தார். இராணுவ கெப் ரக வாகனத்துடன், பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்தவும், சாரதி மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கவும் பொலிஸ்மா 
அதிபர், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அறிவுறுத்தல்களைப் பெற்ற பின்னர் சாரதிக்கு எதிரான 
கொலைக் குற்றச்சாட்டுக்களுக்காக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.சட்டத்தின் 294வது பந்தியின் 4வது பிரிவு இதற்கான தெளிவான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் ருவான் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செயலக உத்தியோகஸ்தர் அலுவலக அறைக்குள் கஞ்சா ஸ்டோர்.


இரத்தினபுரி மாவட்டச் செயலக வளாகத்தில்(கச்சேரி) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் ஒருவரும் மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவரும் நேற்று முன்தினம் (27-07-20.) கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, மாவட்ட செயலகத்தின் அறையொன்றில் இருந்து 150 கிலோ கிராம் கேரள கஞ்சா
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பின்னர் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.நீண்ட காலமாக மாவட்ட செயலக வளாகத்தில் குறித்த நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.



செவ்வாய், 28 ஜூலை, 2020

ஒரு தொகை கஞ்சா மற்றும் பெரும் தொகைப் பணத்துடன் இருவர் கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று இலட்சத்து 18 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் 
27-07-20 முற்பகல் 11 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலீஸ் மா அதிபரின் விசேட பொலீஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய செயற்பட்ட பொலீஸார் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரும் செல்வாநகரை சேர்ந்த ஒருவருமாக இருவரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்தே மேற்படி பணம் மற்றும் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


வானிலை தொடர்பான இலங்கையின் சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் வானிலை தொடர்பில் வானிலை அவதான மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று ஜூலை 28ஆம் திகதி மாலையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என வானிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது.
இந்தநிலையில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய 
சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த 
காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
களுத்துறையிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் நீர் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம்
 காணப்படுகின்றது.
எனவே கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு 
கோரப்பட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>



திங்கள், 27 ஜூலை, 2020

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள பழைய பாலம் தெற்கு கடற்கரையில் இன்று திங்கட்கிழமை(27) காலை உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலத்தை 
தலைமன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.தலைமன்னார் கடற்கரைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் சடலத்தை அவதானித்துள்ளனர்.கடற்படையினர் உடனடியாக தலைமன்னார் பொலிஸாருக்கு
 தகவல் வழங்கியதை தொடர்ந்து தலைமன்னார் பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று சடலத்தை 
பார்வையிட்டு 
விசாரணைகளை முன்னெடுத்ததோடு, மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


நாட்டில் அரசாங்க சேவையில் வரப் போகும் மாற்றம்.விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கையில் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை அதிகரித்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் பல்வேறு சேவைப் பிரிவுகளினால் பொது நிர்வாக மற்றும் உள்துறை 
அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை நீடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையினால், இந்த கோரிக்கை விடுக்கப்ட்டுள்ளது.ஓய்வு பெறும் வயதெல்லையை
 நீடிக்குமாறு வேறு சேவை பிரிவுகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்துறை 
அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தக் கோரிக்கையை செயற்படுத்த முடியுமா இல்லையா என்பது தொடர்பில் இதுவரையில் ஆராயப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>



மட்டக்குளி சமித்புர பகுதியில் போதைப் பொருளுடன் இளம் பெண் கைது

1.6 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.கொழும்பு மட்டக்குளி சமித்புர பகுதியில் கைது குறித்த பெண் கைது 
செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருடைய வங்கி கணக்கில் சுமார் 1.6 மில்லியன் 
ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை 
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணம் போதைப்பொருள் கொள்வனவு செய்ய இருந்தவர்களால் மாற்றப்பட்ட பணமாக இருக்கும் எனப் பொலிஸாரால் 
கூறப்பட்டுள்ளது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


சனி, 25 ஜூலை, 2020

பொலிஸாரிடம் .மன்னாரில் வசமாகச் சிக்கிய 45 கிலோ கேரளக்கஞ்சா

மன்னாரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் ஒரு தொகை 
கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மன்னார்- சின்னக்கருசல் பகுதியில் சுமார் 6 கிலோ கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளுடன் குறித்த
 கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய
 ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மன்னார் பகுதியில் பதுக்கி வைத்திருந்த மேலும் ஒரு தொகுதி கேரளா கஞ்சா பொதிகளை நேற்று (வெள்ளிக்கிழமை)மாலை மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.இதன்போது
 45 கிலோ 325 கிராம் கேராளா 
கஞ்சாப் பொதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன .இந்நிலையில், குறித்த சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா அனைத்தும் மேலதிக விசாரணையின் பின் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள் சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>

நாட்டில் இரு வங்கிகளில் கொள்ளையடித்த கும்பல்

இலங்கையில் பிரதான அரச வங்கி மற்றும் தனியார் வங்கி ஒன்றில் ஒரு கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
.கடன் அட்டைகள் மூலம் கொள்ளையடிக்கும் இந்த கும்பலலை தேடி குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சர்வதேச
 ஹெக்கர்கள் மற்றும் இலங்கை குழுவொன்று இணைந்து மேற்கொண்டதாக 
சந்தேகிக்கப்படுகின்ற இந்த நடவடிக்கையில் இரண்டு வங்கிகளிலும் பல வருடங்களாக பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த இரண்டு வங்கிகளும் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய குற்ற விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்களுக்கு குறித்த வங்கிகளில் வழங்கப்படும் கடன் அட்டை 
மூலம் பொருட்கள் பெற்றுக் கொண்டு இந்த மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி ஜப்பான் சென்ற குழுவொன்று இந்த 
மோசடியில் ஈடுபட்டு 
வருவதாக கூறப்படுகின்றது.கடன் அட்டைகளில் பணம் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டதன் பின்னர் குறித்த நாடுகளில் இருந்து வரும் முறை இந்த வங்கிகளில் இல்லை. அதற்காக வங்கி அதிகாரிகளை ஈடுபடுத்தி தரவுகளை கணக்கில் சேர்க்கும் முறையையே இந்த வங்கிகள் இரண்டு 
கடைபிடித்து வருகின்றது.
அவ்வாறு வங்கி அதிகாரிகள் இணைத்து தரவுகளை சேர்க்கும் போது ஏற்படும் தாமதங்களை அடையாளம் கண்டு இந்த மோசடி குழுவினர் பல லட்சம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.கணக்குகளில் பணம் குறையும் மோசடிகளை புரிந்து கொண்ட போதிலும் அதனை வங்கிகளினால் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. இரகசிய எண்களின் தவறினால் இந்த சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் 
சந்தேகிக்கின்றனர்.
வங்கி அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக இந்த நிதி மோசடி இடம்பெற்றமை உறுதியாகியுள்ளது.மோசடிக்கு தொடர்புடையவர்களை அடையாளம் காணுவதற்காக சர்வதேச வங்கிகளின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


வெள்ளி, 24 ஜூலை, 2020

அமெரிக்காவில் பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது. மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு 
ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.உலகம் முழுவதும் கொரோனாவால் 13,034,955 பேர் பாதிக்கப்பட்டுள்ள 
நிலையில் 7,581,525 பேர் குணமடைந்துள்ளனர். 
58,928 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 571,518 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் அதிக பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 
முதலிடத்தில் உள்ளது. 
அங்கு இதுவரை, 33.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் கொரோனாவிற்கு ‘மாஸ்க் அணிவதால் பயனில்லை என்றும், கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை எல்லாம் வதந்தி என, அமெரிக்காவில் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் தற்போது, அமெரிக்காவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், ‘கொரோனா பார்ட்டி’ நடத்தும் அபாயகரமான 
பழக்கம் திடீரென தொற்றி வருகிறது. கொரோனா பார்ட்டியில் பங்கேற்றதால் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு, பரிசு 
என்ற விபரீத அறிவிப்பும் வெளியிட்டு வருவது நெஞ்சை பத பதக்க வைத்துள்ளது.இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா 
பார்ட்டியில் கலந்து
 கொண்டு தொற்றுக்கு ஆளாகி உயிரையும் பறிகொடுத்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தொற்று ஏற்பட்ட பின் அந்த இளைஞர், நான் தவறு செய்துவிட்டேன் என்று 
நினைக்கிறேன் என வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 அது தற்போது 
இணையத்தில் வைரலாகி வருகிறது.டெக்சாஸ் மாகாண சான் பகுதியில் உள்ள மெத்தடிஸ்ட் என்ற மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜேன் ஆப்பிள்பை கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30 வயதாகும் அந்த இளைஞர் கொரோனா வைரஸ் என்பதே வதந்தி 
என நம்பியுள்ளார். அதனால் அவர், கொரோனா 
பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். கொரோனா பாதித்தவர்களும் அந்தப் பார்ட்டியில் பங்கேற்றதால் அவரும் தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பலனின்றி 
உயிரிழந்துள்ளார். இளைஞர்கள் கொரோனா தொற்றை அலட்சியப்படுத்தக்கூடாது எ
னத் தெரிவித்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


கள்ளக்காதலியை கொலை செய்து நடுவீட்டில் புதைத்த காதலன்

முஸ்லிம் மதத்துக்கு மாறுவதற்கு கள்ளக்காதலி மறுத்துவிட்டாராம்.. அதனால், அந்த ஆத்திரத்தில் காதலியை கொன்று புதைத்துவிட்டு, அந்த பிணத்தின் மேலேயே ஒருத்தர் பல மாசம் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் தூக்கி வாரி போட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பர்தாபூர் என்ற பகுதி உள்ளது… இங்கு வசித்து வந்த இஸ்லாமிய 
இளைஞர் பெயர் ஷம்சாத்.. இவருக்கு கல்யாணம் ஆகி, டைவர்ஸும் ஆகிவிட்டது.இதனிடையே ஒரு இந்து பெண்ணோடு
 கள்ளக்காதல் வைத்து கொண்டார்.. 4 வருஷம் ஒன்றாகவே 2 பேரும் வாழ்ந்துள்ளனர்.. ஆனால் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது. 10 வயசில் ஒரு 
பெண் குழந்தையும் இருக்கிறாள்.. இந்த கள்ளக்காதல் ஜோடி தனியாக வீடு எடுத்து வாழ்ந்து கொண்டு வந்துள்ளது.. அந்த குழந்தையும் இவர்களுடன்தான் இருந்திருக்கிறாள்.
இந்நிலையில் ஷம்ஷத், தன் கள்ளக்காதலியை முஸ்லிம் மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தி வந்தார்.. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.இது சம்பந்தமாக அடிக்கடி
 இவர்களுக்குள் சண்டை வந்து போயுள்ளது. கடந்த மார்ச் மாதம் இப்படி ஒரு தகராறு வெடித்து, அந்தப் பெண்ணை
 ஷம்ஷத் கொன்றே விட்டார்.அவரைதான் கொன்றார் என்றால், அந்த 10 வயது குழந்தையையும் சேர்த்து கொன்றுவிட்டார்.. 2 சடலத்தையும் தன் வீட்டு ஹாலிலேயே புதைத்து விட்டார்.. அந்த சடலம் மேலதான் கடந்த 4 மாசமாக நடமாடியும், வாழ்ந்தும் வந்துள்ளார்.
இந்த சமயத்தில்தான், இறந்த அந்த பெண்ணின் தோழிக்கு சந்தேகம் வலுத்துள்ளது.. ஒரே வீட்டில் வசித்து வந்த 
நிலையில், தாயும், மகளையும் காணோம் என்று குழப்பத்திலேயே இருந்துள்ளார்.பிறகு அதே பகுதியில் இருந்த
 ஸ்டேஷனில் தோழியை காணோம் என்று புகாரும் தந்தார்.. அப்போதுதான் ஷம்சாத் வசமாகச் 
சிக்கியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>



வியாழன், 23 ஜூலை, 2020

அச்சுவேலி இராணுவ முகாமில் தன்னைத் தானே சுட்ட இராணுவச் சிப்பாய்

யாழ் அச்சுவேலி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 23-07-20.இன்று.காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கடமையில் 
இருந்த குறித்த சிப்பாய் அதனது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது.தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில்
 அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


புதன், 22 ஜூலை, 2020

மூளாய் பகுதியில் வீடு புகுந்து : 17 பவுன் தங்க நகை கொள்ளை

யாழ் மூளாய் பகுதியில் வாள் , கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூளாய் யில் உள்ள வீடொன்றினுள்.21-07-20. (செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த 2 கொள்ளையர்களே இவ்வாறு நகைகளை கொள்ளையடித்து 
தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது, “வாள் , கோடரி உள்ளிட்டவற்றுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று முகங்களை மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்து எம்மை அச்சுறுத்தி 17 பவுண் நகைகளையும் கொள்ளையடித்து 
தப்பிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்” என வீட்டின் உரிமையாளர் 
தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>



நாட்டில் மின்சார சபையின் நஷ்டம் 2,000 கோடி ரூபாவால் குறைவு

நாட்டில்  கடந்த சில மாதங்களில் சமகால அரசாங்கம் மேற்கொண்ட சரியான தீர்மானங்களினால் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் இரண்டாயிரம் கோடி ரூபாவால் குறைந்ததுள்ளதாக சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மின்சார சபைக்கு எரிபொருள் நிவாரணம் கிடைத்தமை, தாமதமான திட்டங்களைப் பூர்த்தி செய்ய முடிந்தமை போன்றவை இதற்குக் காரணங்களாகும் எனவும் குறிப்பிட்டார்.
கொவிட் 19 நெருக்கடியால் அழுத்தங்களை எதிர்கொண்ட பாவனையாளர்கள் 67 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க
 நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை மின்சார சபை 300 கோடி ரூபாவுக்கு மேலான தொகையை செலவு செய்ய நேரிடுமெனவும் அதன் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


திங்கள், 20 ஜூலை, 2020

விமானத்தை உலகில் முதன்முறையாக பயன்படுத்திய இலங்கைத் தமிழ் மன்னன்

இலங்கையில் தமிழ் மன்னன் இராவணன் தொடர்பில் புதிய கண்டுபிடிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.இராமாயணத்தின் வில்லனான இராவணன், ராமரின் காலத்தில் இலங்கையின் ஆட்சியாளராக 
இருந்துள்ளார்.அவர் இந்தியாவில் இந்துக்களுக்கு ஒரு அரக்கனாக காணப்பட்டாலும், அவர் நிச்சயமாக ஒரு 
புதிரானவர் எனவும், ஒரு சிறந்த மன்னன் மற்றும் பல இலங்கையர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில், மன்னன் இராவணனைப் பற்றி ஏதாவது ஆவணங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் 
கோரியிருந்தது.
சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சினால் வெளியிட்ட செய்தித்தாள் விளம்பரத்தில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.புராண மன்னர், இழந்த பாரம்பரியம் மற்றும் நாட்டின் விமான
 ஆதிக்கம் குறித்து ஆழமான ஆராய்ச்சியை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு உதவுவதற்காக, இராவண மன்னருடன் தொடர்புடைய 
ஏதேனும் ஆவணங்கள் அல்லது புத்தகங்களை இருப்பின் பகிர்ந்து கொள்ளுமாறு 
மக்களிடம் கோரப்பட்டது.5000 வருடங்களுக்கு முன்னர் உலகில் முதன் முறையான விமானத்தை 
பயன்படுத்தியவர் இராணவனன் என இலங்கை அரசாங்கம் நம்புவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, பண்டைய காலங்களில் விமானங்களில் பறக்க
 இராவணனன் பயன்படுத்திய முறைகளைப் அறிந்துக் கொள்வதற்குகான முயற்சியை ஆரம்பித்துள்ளது.இராவணன் முன்னோடியானவர் என்பதையும், விமானத்தைப் பயன்படுத்தி முதன்முதலில்
 பறந்தவர் என்பதையும் நிரூபிக்க மறுக்க முடியாத ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதான இந்திய ஊடகத்திடம் கருத்து வெளியிட்ட இலங்கை அதிகாரி 
குறிப்பிட்டுள்ளார்.
இராவண மன்னன் ஒரு மேதை. அவர் தான் முதலில் விமானத்தில் பறந்தார். அவர் ஒரு விமானியாக இருந்தார். இது புராணம் அல்ல. இது ஒரு உண்மை. இது குறித்து விரிவான ஆராய்ச்சி முன்னெடுக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை நாங்கள் நிரூபிப்போம், ”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


ஞாயிறு, 19 ஜூலை, 2020

நாட்டில் உயர்தர புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதி குறித்து முக்கிய அறிவிப்பு

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடுமுறை மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்காக 
பாடசாலைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்படுமெனவும் ஏனைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு 
உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் கடந்த திங்கட்கிழமை முதல் ஒருவார காலத்திற்கு மூடுவதற்கு 
தீர்மானிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கற்றல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சுடன் கல்வி அமைச்சு கலந்துரையாடியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அத்தோடு, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றின் திகதிகள் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


மட்டக்களப்பில் எரிவாயு சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை

மட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் ஒருவர் தற்கொலை
 செய்துள்ளார்.இச்சம்பவம் மட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (65 வயது) என்பவரே
 உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணையை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து 
வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 18 ஜூலை, 2020

நாட்டில் பாடசாலைகள் மீள திறக்கப்படுமா இன்று அறிவிப்பு

நாட்டில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இன்று 18-07-20.அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த வாரம் முதல் 2ம் கொரோனா அலைக்கான நிலைமை காணப்பட்டதால் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கடந்த திங்கட்கிழமை  (17-07-20) வரை 
மூடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கற்றல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு 
கலந்துரையாடியிருந்தது.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


வெள்ளி, 17 ஜூலை, 2020

புத்தங்கல பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி தன்னை தானே சுட்டு சாவு

சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைநேர துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து
 கொண்டுள்ளார்.
அம்பாறை – புத்தங்கல பகுதியிலேயே குறித்த சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


Blogger இயக்குவது.