சனி, 24 ஜூலை, 2021

இலங்கையை சேர்ந்த சந்தனி குமாரசிங்க நிலவுக்கு செல்கின்றார்

இலங்கையை சேர்ந்த சந்தனி குமாரசிங்கடியர் மூன் என்ற திட்டத்தின் கீழ் நிலவுக்கு பயணம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ள இறுதியான முழு அணியில் இலங்கையை சேர்ந்த சந்தனி குமாரசிங்க என யுவதி இடம்பெற்றுள்ளார்.
இதனடிப்படையில் இந்த குழுவினர் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நிலவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். 2019 ஆம் ஆண்டு சந்தனி குமாரசிங்கவுக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனத்தில் விண்வெளி மற்றும் விண்வெளி வீரருக்கான பாடநெறியை கற்க புலமைப்பரிசில் 
கிடைத்தது
அந்த பாடநெறியை கற்பதற்கு தனக்குள்ள பொருளாதார சிரமங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அவர், சந்தலிக்கு உதவிகளை 
வழங்கியுள்ளார்
இந்த திட்டத்திற்காக 249 நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் விண்ணப்பங்களில் 17 பேரின் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களில் 8 பேருக்கு இந்த சிறப்பு வாய்ப்பு 
கிடைத்துள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

அச்சுவேலி- உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சாமி காவிய இராணுவத்தினர்

யாழ்ப்பாணம்- அச்சுவேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டதுடன் சாமியையும் காவி உள்ளதாக கூறப்படுகின்றது
ஆலயங்களில், மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினர் குறித்த ஆலயத்திலுள்ள வில்லு மண்டபம் வரை மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமைக்கு பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அச்சுவேலி- உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்தா அலங்கார உற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது. எனினும் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது பஞ்சமுக பிள்ளையார், சிறிய தேரில் எழுந்தருளி, உள்வீதி உலா வந்தார்
இதன்போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் பலரும் ஆலயத்திற்குள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில், இராணுவத்தினர் பலர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை
 மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஆலயத்திற்கு அருகில் வசிப்போர் கூட வெளியே நிற்க, இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு சுவாமி காவியமை, பல வருடங்களாக வழிபாடு செய்து வரும் அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 22 ஜூலை, 2021

குறுக்கே பூனை சென்றால் அபசகுனம் என்று சொல்லுவதற்கு பின்னால் இருக்கும் காரணம்

என்னதான் அறிவியலில் நாம் முன்னேறி இருந்தாலும், நாகரீக வளர்ச்சியில் முன்னேறி இருந்தாலும், நம்மிடம் இருக்கக்கூடிய சில மூட நம்பிக்கையை நம்மால் மாற்றிக் கொள்ளவே முடியாது. அப்படி நம்மிடம் இருக்கும் மூடப்பழக்கங்களில் ஒன்றுதான் பூனை 
சகுனம். நாம் வெளியே
 கிளம்பும்போது பூனை குறுக்கே வந்து விட்டால் அதை 
அபசகுனம் என்று சொல்வார்கள். உடனடியாக நாம் வெளியே செல்லும் வேலையை நிறுத்தி விடுவோம். மீண்டும் வீட்டிற்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்து விட்டு, அதன் பின்பு மீண்டும் நம் வேலையை தொடர்வோம்.
இந்த பழக்கம் எதனால் ஆரம்பித்தது என்ற ஒரு சுவாரசியமான பின்னணி கதையைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா. வாங்க சீக்கிரமா படிச்சு தெரிஞ்சுக்குவோம்.
அந்த காலத்தில் தெருவிளக்கு கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் மாட்டு வண்டியில் தான் பயணம் செய்ய வேண்டும். குதிரை வண்டியில் தான் பயணம் செய்ய வேண்டும். நீண்ட தூர பயணமாக இருந்தால் கட்டாயம் இரவு நேர பயணம் என்பது இருக்கும். இப்படி இருட்டு சமயத்தில் குதிரை வண்டியிலோ மாட்டு வண்டியிலோ நாம் பயணம் செய்யும்போது எதிரே வரக்கூடிய பூனை, வண்டியை ஓட்டி செல்பவர்களுடைய கண்களுக்கு தெரியாது.
பூனையின் கண்கள் மட்டும் தான் இருட்டில் தனியாக தெரியும். அதாவது பொதுவாகவே பூனையின் கண்ணை இருட்டில் பார்க்கும் போது ஒரு ரேடியம் எஃபெக்டில் நமக்கு தெரியும். பூனையின் உருவம் இருட்டில் தெரியாது. ஆனால் லைட் போட்டு வைத்திருப்பது போல இரண்டு கண்களும் 
அப்படியே மின்னும்.
பூனைக்கு மட்டும் கண்கள் இப்படி இருக்காது. புலி, சிறுத்தை, சிங்கம் கருஞ்சிறுத்தை இப்படி எல்லா வகையான காட்டு விலங்குகளுக்கும் கண்கள் இப்படிதான் ரேடியம் மின்னுவது போல தெரியும். (ஆங்கிலத்தில் இந்த மிருகங்களை Big Cats என்று சொல்லுவார்கள்.) இப்படி பூனையின் கண்களை பார்த்து வண்டியில் பூட்டி வைத்திருக்கும் மாடு அல்லது குதிரை பயந்து 
மிரண்டு விட கூடாது.
அதாவது எதிரே வருவது பூனை என்று மாட்டிற்கும் குதிரைக்கும் தெரியாது. இருட்டில் பூனையின் கண்களை பார்த்து, காட்டு விலங்குகள் தான் எதிரே வருகின்றது என்ற அச்சத்தில் குதிரையும் மாடும் மிரண்டு பயந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வண்டியை ஓட்டுபவர்கள், பூனை எதிரே வந்தால், சிறிது நேரம் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, குதிரைக்கும் மாட்டிற்கு தண்ணீர் காட்டி விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு
 செல்வார்களாம்.
இதே சமயத்தில் குதிரையை ஓட்டி செல்பவர்களும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, தண்ணீர் பருகிவிட்டு அதன் பின்பு தங்களுடைய பயணத்தை தொடர்வார்கலாம். இந்தப் பழக்கம் தான் காலப்போக்கில் மாறி மாறி பூனை குறுக்கே வந்தால் அபசகுனம். தண்ணீர் குடித்துவிட்டு, ஓய்வு எடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று நம்முடைய ஜனங்க 
மாத்தி வச்சுட்டாங்க.
உங்களுக்கும் இப்படிப்பட்ட மூட பழக்க வழக்கங்களின் மீது நம்பிக்கை இருந்தால், இனி பூனை குறுக்கே வந்தால் அது அபசகுணம் என்று நினைத்து தேவையில்லாமல் உங்கள் மனதைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் குழப்பமாக செய்யும்போது அதில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். பூனை குறுக்கே வந்தாலும் சரி, பூனை குறுக்கே வரவில்லை என்றாலும் சரி. மனத் திருப்தியோடு செய்யக்கூடிய காரியங்கள் வெற்றியில் முடியும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 20 ஜூலை, 2021

மின்சாரத்துறையினர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, கெரவலபிட்டியில் உள்ள மின்னுற்பத்தி மையத்தின் 40 சதவீத உரிமையை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் பல்வேறு விடயங்களை முன்வைத்து மின்சார சபையின் பல்வேறு தொழிற்சங்கங்கள்.20-07-2021. இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன.
இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.இதன்போது எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய, அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்த அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி, 16 ஜூலை, 2021

விரைவில் இலங்கையில் திருமணச் சட்டத்தில் புதிய திருத்தம்..

இலங்கையில்  16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிறப்பு சந்தர்ப்பங்களில் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதில் நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது
16 வயதிற்கு உள்பட்ட சிறுமி ஒருவரை விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ பாலியல் உறவுக்குப் பயன்படுத்துவதை சட்டம் குற்றவாளியாக்குகிறது என்றாலும், இது 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை உள்ளடக்குவதில்லை.
அந்த சட்ட இடைவெளியை ஈடுகட்ட, தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்ய கவனம் செலுத்தப்படுவதாக நீதி அமைச்சின் ஜனாதிபதியின் 
ஆலோசகர் யு.ஆர் டி சில்வா 
தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>புதன், 14 ஜூலை, 2021

கஞ்சா செய்கை இலங்கையின் கடனை செலுத்தி முடிக்க

கஞ்சா செய்கை மற்றும் ஏற்றுமதியின் ஊடாக நாட்டின் கடனை செலுத்தி முடிக்கலாம் என்றும் பில்லியன் கணக்கில் இலங்கைக்கு லாபம் ஏற்படும் எனவும் அந்த வகையில் நாட்டில் கஞ்சா
 செய்கையில் ஈடுபடவும்
ஏற்றுமதி செய்யவும் தேவையான சட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு கருத்து
 வௌியிட்டுள்ள அவர்,
இவ்விடயம் குறித்து இலங்கையில் உள்ள உயர் ஆயுர்வேத வைத்தியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.கஞ்சாவை போதைப் பொருள் தேவைக்காக செய்கையிட்டால் மாத்திரமே நமக்கு பிரச்சினை எனவும் ஏற்றுமதி நோக்கில் செய்கையிட்டால் பிரச்சினை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
உலகில் 50ற்கும் மேற்பட்ட நாடுகள் கஞ்சா செய்கையில் ஈடுபடுவதாகவும் ஆயுர்வேத மருந்துக்கு அது பயன்படுத்தப்படுவதாகவும் டயானா கமகே தெரிவித்துள்ளார். இத்திட்டம் செயற்படுத்தப்பட்ட பின் அதன் நன்மைகள் வந்தடையும் போது திட்டம் குறித்த பிழையான விமர்சனம் இல்லாது போகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.¨

நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 13 ஜூலை, 2021

நாட்டில் முகக்கவசம் அணிவது தொடர்பான மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர்


பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.பொது இடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில் முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய சிவில் உடையிலும் சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் அதிகளவில் செறிந்திருக்கும் இடங்களில்
 கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டுமெனவும் அவ்வாறு அணியத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலைமை ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் இவ்வாறு நடந்துகொள்வது துரதிஷ்டவசமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
 தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 8 ஜூலை, 2021

அரசாங்கம்ஊடக ங்களை தடை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது


சிரச ஊடகத்தை தடை செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என எதிர்கட்சி தலைவர்சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சிரச ஊடகத்தை மௌனமாக்குவதற்கான சதி முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
சிரச ஊடகத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் சட்டத்தரணிகளுடன் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர் எனஅவர் 
தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நான்காவது தூண் ஊடகம் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அடிப்படை சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டிய கடமை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து தரப்பினரினதும் பிரச்சினைகளை சிரச வெளிப்படுத்துகின்றது பொதுமக்களின் தகவல் பெறும் உரிமையை உறுதிசெய்கின்றது என தெரிவித்துள்ள சஜித்பிரேமதாச கடந்த காலங்களில் சிரச கிளைமோரினால் தாக்கப்பட்டது அது தொடருமா எனகேள்வி எழுப்பியுளளார்.
அரசாங்கம் ஏன் சிரசவை பார்த்து அஞ்சுகின்றது என அவர் கேள்விஎழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தின் சில தரப்பினர் சிரசவை மூடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்- மக்களிற்கு உண்மை தெரிவதை தடுக்க முயல்கின்றனர் -நான் சொல்வது பொய்யில்லை என உண்மை என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
சிரசவிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>கனகபுரம் பகுதியில்மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வீடு முற்றுகை

கிளிநொச்சி–கனகபுரம் பகுதியில் மருத்துவர் ஒருவருடைய 50 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் அதிகளவானோர் கலந்து கொண்டு நடப்பதாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி கனகபுரத்தில் மருத்துவர் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடம் நடைபெறுவதாகவும் நிகழ்வில் 20 இற்கும் மேற்பட்ட சுகாதாரத் தரப்பினர் உட்பட்ட பெருமளவானவர்கள் பங்குகொண்டிருப்பதாகவும் பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
இதயைடுத்து சம்பவ இடத்திற்குள் நுழைந்துள்ள பொலிஸார் தமக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தவருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>Blogger இயக்குவது.