வியாழன், 8 ஜூலை, 2021

அரசாங்கம்ஊடக ங்களை தடை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது


சிரச ஊடகத்தை தடை செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என எதிர்கட்சி தலைவர்சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சிரச ஊடகத்தை மௌனமாக்குவதற்கான சதி முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
சிரச ஊடகத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் சட்டத்தரணிகளுடன் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர் எனஅவர் 
தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நான்காவது தூண் ஊடகம் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அடிப்படை சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டிய கடமை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து தரப்பினரினதும் பிரச்சினைகளை சிரச வெளிப்படுத்துகின்றது பொதுமக்களின் தகவல் பெறும் உரிமையை உறுதிசெய்கின்றது என தெரிவித்துள்ள சஜித்பிரேமதாச கடந்த காலங்களில் சிரச கிளைமோரினால் தாக்கப்பட்டது அது தொடருமா எனகேள்வி எழுப்பியுளளார்.
அரசாங்கம் ஏன் சிரசவை பார்த்து அஞ்சுகின்றது என அவர் கேள்விஎழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தின் சில தரப்பினர் சிரசவை மூடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்- மக்களிற்கு உண்மை தெரிவதை தடுக்க முயல்கின்றனர் -நான் சொல்வது பொய்யில்லை என உண்மை என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
சிரசவிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.