வியாழன், 31 டிசம்பர், 2020

முள்ளியவளை நாவல்காட்டில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று இனங்காணப்பட்ட மனித எச்சங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக.31-12-20. இன்றுஇடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் 
இடம்பெற்றன.
தடயவியலாளர்கள், பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் இணைந்து குறித்த மனித எச்சங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, நைலோன் சாரம், ரி-சேர்ட், மண்டையோடு மற்றும் எலும்புகள் உள்ளிட்ட தடயப் பொருட்கள் 
மீட்கப்பட்டன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>புதன், 30 டிசம்பர், 2020

யாழில் மொத்தமாக கொன்று விடுங்கள்’ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.30-12-20. இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நல்லூர் நல்லை ஆதினம் முன்பாக
 இன்று காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“இதன்போது “எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள் இனவாதத்தைக் கக்காதீர்கள், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு 
ஒரு நீதியா? மனிதாபிமானத்துடன் எமது 
பிள்ளைகளை விடுவியுங்கள், இனியும் காலம் தாழ்த்தாது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், எமது உறவுகள் விடுதலை செய்யப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
காணாமல் போன உறவுகளைத் தேடி எத்தனையோ தாய் தந்தையர் உறவுகள் உயிரிழந்திருக்கின்ற 
நிலையிலும் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறு ஒருவர் ஒருவராக சாவதை விட எங்களை ஒட்டு மொத்தமாக கொன்று விடுங்கள்.”இவ்வாறு பல்வேறு கோஷங்களை எழுப்பிய உறவுகள் கதறியழுதனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
யாழ் நல்லூர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வசமானது

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பத்மநாதன் மயூரன் வெற்றி
 பெற்றுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) மதியம் 
இடம்பெற்றது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசுதனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன்மொழியப்பட்டனர். தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. இதன்படி மதுசுதனன் 08 வாக்குகளையும் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றனர்.
மதுசுதனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினர் என 8 உறுப்பினர்கள் 
வாக்களித்தனர்.
மயூரனுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 3 உறுப்பினர்கள், சுயேட்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் தல ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் 
வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இரண்டு பேர் சபை அமர்பில் கலந்து 
கொள்ளவில்லை.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

துங்கும் போது குறட்டை வராமல் தப்பிப்பது எப்படி வியக்க வைக்கும் ஆய்வு முடிவு

என் கணவர் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்” என்று விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்களும் உண்டு. இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் குறட்டைப் பிரச்னை இருந்தது. ஆனால், தற்போது வயது வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் வர கூடிய நோயாக மாறிவிட்டது என எச்சரிக்கிறது மருத்துவ துறை.
குறட்டை வருவது,தொண்டையில் அதிகம் சதை வளர்ந்து சுவாச குழாய்க்கு செல்லும் ஆக்சிஜனில் தடை ஏற்படுவதாலும். தூங்கும்போது, மூளையால் சுவாசிப்பதைக் கட்டுபடுத்த முடியாமல் போவதாலும் நடக்கலாம். மேலும் அதிக எடை, டான்சில் உள்ளவர்கள், சிறு தாடை இடமாற்றம் கொண்டவர்கள், 17 இன்ச்சைவிட பெரிய கழுத்து இருக்கும் ஆண்கள், 16 இன்ச்சைவிட பெரிய கழுத்து இருக்கும் பெண்கள்,அதிகம் புகைப்பழக்கம் உள்ளவர்கள்,மது அருந்துபவர்கள்,சீரற்ற இதய துடிப்பு உள்ளவர்கள் மற்றும் சில மரபியல் காரணங்களும் குறட்டைப் பிரச்னைக்கு காரணமாக இருக்கிறது. இதனை மருத்துவ உலகில், ஸ்லீப் அப்னியா (sleepapnea] என்பார்கள்.இரவில் குறட்டைவிடுவது ரத்த அழுத்தம், இதய நோய்கள், மறதி பிரச்னைகளை ஏற்படுத்தும். இரவில் குறட்டைவிடுபவர்களுக்கு பகலில் சோர்வான மனநிலையிலேயே இருப்பார்கள். மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்த விஷயத்தின் மீதும் கவனம் செலுத்தமுடியாமல் போகும். குறட்டை விடுபவர்களுக்கு பகல் பொழுதுகளில் தூக்கம் வரும். இதய நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது. உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ப, உடல் எடையை கொண்டு வருவதன் மூலம் குறட்டைவிடுவது குறையும்.போதைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது பெரும் பிரச்னை. போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள். குப்புறப் படுத்து உறங்குவதாலும் குறட்டை வரலாம். தூங்கப் போவதற்கு முன் சட்டை பையில் ஒரு டென்னிஸ் பந்தை வைத்து கொண்டு படுக்கலாம். குறட்டை வராமல் தப்பிக்கலாம்.முதுகு தரையில் படும்படி படுங்கள். குப்புறப் படுப்பதோ, ஒரு களித்து படுப்பதோ மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.தலையணையின் உயரத்தை கொஞ்சம் அதிகரியுங்கள்.அறை மிகவும் சூடாக இருந்தால் தொண்டையில் காற்று புகும்போது நெரிசல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் குறட்டைவிட வாய்ப்பிருக்கிறது. இதனால் அறையை முடிந்த வரை குளுமையாக வைத்திருங்கள்.குறட்டைக்கு தூசும் ஒரு காரணமாக இருக்கலாம். வீட்டை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள்.மருத்துவர்களின் ஆலோசனையுடன் கடைகளில் விற்கும் ஆண்டி ஸ்னோரிங் மாத்திரைகளை வாங்கி கொள்ளலாம்.மூச்சுப் பயிற்சி யோகா பயிற்சி நல்ல பலனைத் தரும்.ஒருவேளை மிக அதிகமாக பயங்கர சத்தத்துடன் குறட்டைவிடுகிறீர்கள் என தெரிய வந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். 
அலட்சியம் வேண்டாம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
திங்கள், 28 டிசம்பர், 2020

மனித குலத்தையே 2021ல் கைப்பற்றப் போகும் ட்ராகன் பெண் தீர்க்கதரிசியின் கருத்து

மனித குலத்தையே கைப்பற்றப் போகும் ட்ராகன் 2021 ஆம் ஆண்டு வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என பாபா வாங்கா கணிப்பு வைரலாகி உள்ளது.
பல்கேரியா நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. 
கண் தெரியாத இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் பல்கேரியாவில் தீர்க்கதரிசியாக மதிக்கப்படுகிறார். இவர் 50 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை
 முன் கூட்டியே கணித்துக் கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை நடந்தும் உள்ளன.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளவை
 நடந்து வருவதாக கூறப்படுகிறது.14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவரது வாழ்வு மிக விசித்திரமான 
ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும், விபத்துக்களையும், கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன் தான் அவரது நூலை அணுக வேண்டியிருக்கிறது.அதுபோல் தான் இந்த 
பெண் பாபா வாங்கா. இவரது 
கணிப்புகளில் அதிகம் பலித்து உள்ளன.2016 ஆண்டு மிகப்பெரிய ஐ எஸ் போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக ரசாயன 
ஆயுதத்தை பயன்படுத்துவர். அவர்கள் 2043 ஆம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் ஐ எஸ் ஆட்சியை நிறுவுவார்கள் என கூறினார்.அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே 
அதிர வைத்தது. அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2016 ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் எனவும் கணித்தார். இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி இரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல 
நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். 2019 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் பாபாவை பின்பற்றுவோர் அவரது கணிப்பை நம்புகின்றனர்.2020 ஆம் ஆண்டு குறித்த அவரது
 கணிப்புகளில் சில நடந்து உள்ளன2020ஐ பொறுத்தவரை, வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய 
மக்களுக்கும் கெட்ட நேரம்தான் 2020ல் ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி நடக்கும். மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்கும் திறன் இழந்து மன நலம் பாதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்கலாம் 
என்று கூறி இருந்தார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
ஞாயிறு, 27 டிசம்பர், 2020

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மதத்தலைவர்களுடன் சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கேட்டுக் 
கொண்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த தினங்களாக அரசியல் கட்சி தலைவர்களையும் ஆன்மீகத் தரப்பினரையும் சந்தித்து 
வருகின்றனர்.
இதற்கமைவாக, 26-12-20.அன்று  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அத்தோடு நல்லூர் திருஞான சம்பந்தர் அதீன பிரதம குருக்கள் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளையும் சிவகுரு ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.கே.சிவஞானம் ஆகியோரை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ். மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களது தரப்பில் அருட்பணி ஜெபரணட்னம் அவர்களையும், நீதி சமாதானத்திற்கான ஆணைக்குழுவின் தலைவருமான அருட்பணி வணக்கத்திற்குரிய மங்களராஜா அவரகளையும், அருட்பணி வணக்கத்திற்குரிய இ.ம.வி.ரவிச்சந்திரன் அவர்களையும் சந்தித்து விடயத்தை 
வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, யாழ். நாகவிகாரை பீடாதிபதி வணக்கத்திற்குரிய விமல தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துமாறு கோரி நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களை நேரில் சந்திக்க முயற்சித்த போது அவர் பணத்தில் இருந்த 
காரணத்தினால் தொலைபேசி ஊடாக குறித்த 
விடயங்கள் தெரியப்படுத்தப் பட்டுள்ளதாகவும், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஒன்றிணைந்த வகையில் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு பரிபூரண ஆதரவை தருவதாக கூறியிருந்ததாகவும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் 
தெரிவித்துள்ளார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>மார்ச் மாதத்திற்கு பின்னர் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு


   இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் 40% 
 அதிகரித்துள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் உள்ளடங்கலாக இந்த அதிகரிப்பு காணப்படுகிறது.
இந்த ஆண்டு கொரோனா நிலைமை காரணமாக 100 நாட்கள் மட்டுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன. இவ்வாறான நிலையிலேயே பாடசாலை விடுமுறைக்காலத்தால் இந்த வன்முறைகள்
 அதிகரித்துள்ளன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வெள்ளி, 25 டிசம்பர், 2020

உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் நல் வாழ்த்துக்கள் 25.12.20

கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர்.
இன்றைய தினம் நத்தார் பண்டிகையை
 கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும் வணக்கம் அன்பர்த உறவுகள் நண்பர்கள் இணைய வாசகர்கள் அனைவருக்கும் எனது
 இனிய நத்தார்தின நல் வாழ்த்துக்கள் நவற்கிரி
 இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 22 டிசம்பர், 2020

நாட்டில் பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் covid-19 தனிமைப்படுத்தலுக்கு

தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று காரணமாக முடக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மாளிகாவத்தை பிரதீபா மாவத்தையில் அமைந்திருக்கும் சியத சுவன தொடர்மாடி வீட்டு மக்களின் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களும் தொப்பியும் தேசபந்து தென்னக்கோனினால்.22-12-20.இன்று மாலை வழங்கி வழங்கி வைக்கப்பட்டது.
பிரஜா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிராதன பொலிஸ் பரீட்சகர் இந்திக வீரசிங்க ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் சுயாதீன தொலைக்காட்சியின் அனுசரணையில் தொடர் மாடிவீட்டு மக்களுக்காக இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன..

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
மட்டக்களப்பு பொத்தனை அணைக்கட்டு உடைப்பெடுப்பு ஐயாயிரம் விவசாயிகள் பாதிப்பு

மாதுறு ஓயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டுகள் உடைப்பெடுத்த 
நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பொத்தானை அணைக்கட்டு கடந்த வருடம் மார்கழி மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்து 
போக்குவரத்து மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் விசாயிகள் ஏழு இலட்சம் ரூபாய்க்கு 
மேல் செலவு செய்து மண் மூடையடுக்கி தற்காலிக அணைக்கட்டினை அமைத்து விவசாய செய்கையை 
செயள்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆறு பெருக்கெடுத்தமையினால் தற்காலிக மண் மூடையில் அமைத்த அணைக்கட்டு தற்போது 
வெள்ளத்தில் உடைப்பெடுத்து முன்னர் உடைபட்ட பொத்தானை அணைக்கட்டு ஊடாக சுமார் பதினைந்து அடியில் வெள்ள நீர் செல்வதால் பொத்தானை பிரதேசத்திலுள்ள ஐயாயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலங்க
ள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அணைக்கட்டு உடைப்பெடுத்தமையால் தற்போது வயல் நிலங்கள் ஆறு போன்று காட்சியளிப்பதுடன், நீரில் ஓட்டம் அதிவேகத்தில் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக பொத்தானை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வடக்கில் மன்னாரில் மூன்று நூல்கள் வெளியீடு

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மன்னாரில் மூன்று நூல்கள் வெளியீடு செய்து 
வைக்கப்பட்டுள்ளன
குறித்த வெளியீட்டு விழா நேற்று (20) மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் நெருங்கண்டல் கிராம மக்களின் ‘புனித அந்தோனியார் நாடகம்’ மன்னார் இத்திக்கண்டல் சீனிப்புலவர் 
எழுதிய ‘புனித செபஸ்தியார் வாசகப்பா’, 
நானாட்டான் பெஞ்சமின் செல்வம் எழுதிய ‘மன்னார் மாதோட்டத் தமிழ்ப்புலவர் சரித்திரம்’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீடு செய்து வைக்கப்பட்டன.
 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
திங்கள், 21 டிசம்பர், 2020

எதிர்வரும் 30ம் திகதி யாழ் மாநகர முதல்வர் தெரிவு

யாழ் மாநகர சபை 2021ம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ம் திகதி 
இடம்பெறவுள்ளது.
இதற்கான அறிவித்தலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 20 டிசம்பர், 2020

கொழும்பில் சொத்தி உபாலியின் மகள் உள்ளிட்டோர் 5 கோடி பணத்துடன் கைது

கொழும்பு – கடுவளை, வெலிவிட்ட மற்றும் மாலம்பே பகுதிகளில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது பாதாளக் குழு தலைவரான சொத்தி உபாலியின் மகள் உள்ளிட்ட மூவர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 300 கிராம் ஹெரோயினும் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>
சனி, 19 டிசம்பர், 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை விதைகள், வேம்பு மரக் கன்றுகள் நாட்டல்

மட்டக்களப்பில் பற்று மற்றும் தூயதுளிர் அமைப்பினர் இணைந்து ‘அடுத்த தலைமுறைக்கு பசுமையை கையளிப்போம்’ எனும் செயற்திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்கள் முழுவதும் 5000 பனை விதைகள் மற்றும் 500 வேம்பு மர நடுகை திட்டம் இடம்பெற்று 
வருகின்றது.
அந்தவகையில் தூயதுளிர் அமைப்பின் செயலாளரும், பற்று அமைப்பின் ஸ்தாபகருமான யோகநாதன் விஜயலக்ஸ்மணன் தலைமையில் அமைப்பின் நிருவாக உறுப்பினர்கள் சகிதம் கலந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்களில் பனை விதைகள் மற்றும் வேம்பு மரங்களை நடுகை செய்தனர்.
குறித்த திட்டம் தொடர்பில் தூயதுளிர் அமைப்பின் செயலாளரும், பற்று அமைப்பின் ஸ்தாபகருமான யோகநாதன் விஜயலக்ஸ்மணன் கருத்து தெரிவிக்கையில்,
“மரங்கள் நடுகை என்பது வெறுமனே வாழும் சமுதாயத்துக்கு மட்டுமல்ல இனி வரப்போகும் சமுதாயத்துக்குமானது. தலைமுறைகள் கடந்து அதன் பயன்தரும் தாக்கம் இருக்கும். பனை மற்றும் வேம்பு பல்லாயிரம் வருடங்களாக தமிழர் பண்பாடோடும் கலாசாரத்தோடும் மருத்துவத்தோடும் பின்னிப்பிணைந்த மரவகைகளாகும்.
இதன் அடிப்படையில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்கள் முழுவதும் பனம் விதைகளையும் வேம்பு மரங்களை நாட்டி வளிமண்டத்தையும், மண் வளத்தையும் உயிர் பல்வகமையை பேணுவதோடு சுத்தமான காற்றையும் நிலத்தடி நீரின் இருப்பையும் உறுதி செய்ய எல்லோரும் சேர்ந்து இத்திட்டத்தை வெற்றி அடையச் செய்ய அர்பணிப்போடு செயலாற்ற வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மட்டக்களப்பில் இருந்து ரயில் மூலம் கொழும்புக்கு மணல் ஏற்றுமதி

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பு பகுதிக்கு மண்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை 
குறைக்கும் வகையில் புகையிரதத்தின் ஊடாக மண் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 
வருகின்றது.
இதன்படி புணாணை புகையிரத நிலைய பகுதிகளில் இருந்து கொழும்புக்கு மண்களை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரு தடவையில் 100 கியூப் மணல்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகின்றது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பல்கலைக்கழக வைத்திய நிபுணர்கள் இருவருக்கு பேராசிரியர்களாக பதவியுயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட வைத்திய நிபுணர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு 
பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப் பீடாதிபதி, சத்திரசிகிச்சை வல்லுநர் எஸ்.ரவிராஜ், 2019ம் ஆண்டும், குழந்தை நல மருத்துவ வல்லுநர் திருமதி கீதாஞ்சலி சத்தியதாஸ், 2019ம் ஆண்டும் பேராசிரியர் பதவியைப் பெற்றிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் பேராசிரியர் பதவி வழங்க யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை19-12-20.l இன்று 
ஒப்புதல் வழங்கியது.
இதன்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கலாநிதி பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியராக பதவி பெற்ற இரண்டாவது பேராசிரியர் என்ற பெருமையை 
சத்திரச் சிகிச்சை வல்லுநர் எஸ்.ரவிராஜ் பெற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திர சிகிச்சைத் துறையில் 2010ம் ஆண்டு முதல் முதுநிலை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டதுடன் 2012ம் ஆண்டு அந்தத் துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
2015ம் ஆண்டு செப்ரெம்பர் 14ம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், இன்றுவரை அந்தப் பதவியில் நீடிக்கிறார்.
இதேவேளை பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்த குழந்தை மருத்துவ வல்லுநர் திருமதி கீதாஞ்சலி சத்தியதாஸ், 2003ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட குழந்தை மருத்துவத் துறையில் விரிவுரையாளராகப் பதவி
 பெற்றார். அதன் பின்னர் அவர் 2010ம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட குழந்தைகள் மருத்துவத் துறையின் முதுநிலை விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்று சேவையாற்றி வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பேராசிரியர் தெரிவுக்கான சகல தேவைப்பாடுகளையும் நிறைவு செய்துள்ள நிலையில் நடத்தப்பட்ட மூன்று நிலை நேர்முகத் தேர்வுகளிலும் தேறி, பேராசிரியர்களாக பதவியுயர்வு பெற்றிருக்கிறார்.
இதன்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் இருவருக்கும் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளமை19-12-20. இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இந்த ஆண்டு மூன்று மருத்துவ வல்லுநர்களுக்கு பேராசிரியர் பதவி வழங்கி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>வெள்ளி, 18 டிசம்பர், 2020

இதேநிலை தொடர்ந்தால் யாழில் இரண்டு வாரங்களில் இறுக்கமான கட்டுப்பாட்டு

யாழில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கான
 விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் 
வடபகுதியில் குறிப்பாக யாழில் கொரோனா முதலாவது அலை தாக்கம் ஆரம்பம் முதல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை வடபகுதி மக்கள் ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கிறார்கள். 
அதன் காரணமாக முப்படையினர் மற்றும் போலீசார் சுகாதாரப் பகுதியினரால், வடபகுதியில் இலகுவாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடியாததாகவுள்ளது.அத்தோடு 17-12-20..அன்றயதினம் 
 கூட, ஜனாதிபதி யாழ் மாவட்ட நிலவரம் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடினார். அத்தோடு அரசாங்க
 அதிபர் ஊடாக தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கண்காணித்து வருகிறோம். எனினும் எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய வாரமாக காணப்படுகின்றது.
எனவே இரண்டு வாரங்களும் மக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அத்தோடு 
தமிழ் மக்களுக்கு இந்த கொரோனா நோயினை கட்டுப்படுத்துவதற்கு உதவியதற்காக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் நான் தமிழ் மக்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்ள 
விரும்புகின்றேன்.எதிர்வரும் வாரங்களில் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெறும் வாரங்கள். எனினும் அந்த
 காலத்தில் நாட்டில் சில புதிய சுகாதார 
நடைமுறைகளை நாங்கள் செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அது எவ்வாறான நடைமுறைகள் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.மக்களை covid தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக மக்களை பாதிக்காதவாறு சில சுகாதார கட்டுப்பாடுகளை எடுக்கவுள்ளோம். அதற்காக அனைவரையும்
 தனிமைப்படுத்த மாட்டோம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

புதன், 16 டிசம்பர், 2020

நாட்டில் பண்டிகைக் காலத்தில் பொதுமுடக்கம் குறித்து இராணுவத் தளபதி அறிவிப்பு

நீண்ட நத்தார் வார இறுதியில் மேற்கு மாகாணத்தில் நுழையவோ அல்லது வெளியேறவோ, மாகாணத்திற்குள் ஊரடங்கு உத்தரவினையோ அல்லது முடக்கலை விதிக்கவோ, பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவோ விரும்பவில்லை என்று 
அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்,
எவ்வாறாயினும், பண்டிகை வார இறுதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும்.தற்போதுள்ள நிலைமை தொடர்ந்தால், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது. 
எல்லாம் பொது மக்களின் கைகளிலேயே உள்ளது.அடுத்த ஏழு நாட்களுக்குள் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே எதுவும் அமையும்.கொழும்பின் சில பகுதிகள் கடுமையான 
முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட 13 வீட்டுத் திட்டங்களில், 10 வீடமைப்புத் திட்டங்கள்
 இந்த வாரம் பூட்டப்பட்ட இடத்திலிருந்து நீக்கப்பட்டன.
அளுத்கம பிரதேச மக்கள் உரியமுறையில் நடந்து கொள்ளவில்லை. இதன்காரணமாக மற்றுமொரு கிராமத்துக்கும் பரவல் ஏற்பட்டுள்ளது என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>Blogger இயக்குவது.