செவ்வாய், 22 டிசம்பர், 2020

மட்டக்களப்பு பொத்தனை அணைக்கட்டு உடைப்பெடுப்பு ஐயாயிரம் விவசாயிகள் பாதிப்பு

மாதுறு ஓயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டுகள் உடைப்பெடுத்த 
நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பொத்தானை அணைக்கட்டு கடந்த வருடம் மார்கழி மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்து 
போக்குவரத்து மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் விசாயிகள் ஏழு இலட்சம் ரூபாய்க்கு 
மேல் செலவு செய்து மண் மூடையடுக்கி தற்காலிக அணைக்கட்டினை அமைத்து விவசாய செய்கையை 
செயள்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆறு பெருக்கெடுத்தமையினால் தற்காலிக மண் மூடையில் அமைத்த அணைக்கட்டு தற்போது 
வெள்ளத்தில் உடைப்பெடுத்து முன்னர் உடைபட்ட பொத்தானை அணைக்கட்டு ஊடாக சுமார் பதினைந்து அடியில் வெள்ள நீர் செல்வதால் பொத்தானை பிரதேசத்திலுள்ள ஐயாயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலங்க
ள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அணைக்கட்டு உடைப்பெடுத்தமையால் தற்போது வயல் நிலங்கள் ஆறு போன்று காட்சியளிப்பதுடன், நீரில் ஓட்டம் அதிவேகத்தில் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக பொத்தானை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.