சனி, 31 டிசம்பர், 2022

நாட்டில் அரச ஊழியர்களுக்கு பண பரிசு மழை.உடன் முந்துங்கள்

இலங்கையில் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.அதன்படி, 2023 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய் சிறப்பு முற்பணத்தை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு, அமைச்சுகள், உள்ளூராட்சிகள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த முற்பணம் செலுத்தும் நடவடிக்கை 01.01.2023 அன்று ஆரம்பமாகவுள்ளதுடன், 28.02.2023 அன்று முடிவடையவுள்ளது.
இந்த சுற்றறிக்கை பொது திறைசேரியின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை, இன்றைய தினம் 31 ஆம் திகதி முதல் 30,000 க்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வு
 பெறவுள்ள நிலையில், ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக 
அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுபவர்களையும் உள்ளடக்கி வரலாற்றில் முதல் தடவையாக பெருமளவானோர் இன்று ஓய்வு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இவற்றில் மின்சார சபையின் 1100 ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதுடன், அவர்களின் வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 30 டிசம்பர், 2022

நபர் ஒருவரின் திருமண விண்ணப்பத்தை நிராகரித்த அக்கரைப்பற்று பள்ளிவாசல்

இலங்கை அக்கரைப்பற்ரில்  போதைப்பொருள் பயன்படுத்தும் நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல்
 நிராகரித்துள்ளது.
அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல்  பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு  ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த விண்ணப்பத்தை பரிசீலனைக்காக எடுத்துக் கொண்ட ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை குறித்த நபர் போதை பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், திருமண  சடங்கை நிறைவேற்றி வைப்பதை தவிர்த்துள்ளதுடன் குறித்த விண்ணப்பத்தையும் நிராகரித்துள்ளது.
அத்துடன் திருமணத்திற்கான மணமகனை போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் அனுமதிப்பதுடன் அங்கிருந்து நற்சான்றிதழ் பத்திரம் பெற்று மீண்டும் பள்ளிவாசலில் சமர்ப்பிக்குமாறு 
கேட்கப்பட்டுள்ளது.
குறித்த இவ்விடயம் சமூக ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக மாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 29 டிசம்பர், 2022

சீனாவில் சுவிற்சலாந்து ஊடகவியலாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டாரா

சீனாவில் சுவிஸ் ஊடகவியலாளர் ஒருவர் நேரலையில் செய்தி சேகரிக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்படவிருந்தார்.
பின்னர் இவர் தான் ஒரு ஊடகவியலாளர் என்று தன் அடையாளத்தை காண்பித்ததும் சீனா பொலிஸார் தன்னை விட்டுவிட்டதாக 
நேரலையிலேயே தெரிவித்தார்.
இவர் சீனாவில் கொவிட் கட்டு்ப்பாட்டு நிலைக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்து  நேரலையில் செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும்போது சீனப்பொலிசார் மூன்றுபேர் அவரை சூழ்ந்து
கொண்டுள்ளனர்.
இதே போன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி சேகரித்துக்கொண்டிருந்த பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவரைக் கைது செய்த சீனப்பொலிசார், அவரைத் தாக்கி, கைது செய்ததாகவும், பலமணி நேரம் அவரை காவலில் வைத்திருந்தபின் விடுவித்ததாகவும் பிபிசி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 28 டிசம்பர், 2022

காணிகள் கொழும்பில் வைத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய செய்தி.

கொழும்பு நகருக்குள் காணிகளை வைத்திருப்போருக்கான முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி கொழும்பு நகருக்குள் பயன்படுத்தப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகர சபை (CMC) அபராதம் விதிக்கவுள்ளதாக
 தெரியவருகிறது.
சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டத்தின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவு செலவுத் திட்டத்தின்படி 2023ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் 12 பில்லியன் ரூபா வருமானம் இந்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது எனவும் கூறப்படுகிறது.

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 27 டிசம்பர், 2022

நீங்கள் ஆட்டுஇறைச்சி வாங்கும்போது இனி இதை கவனமா பார்த்து வாங்குங்கள்

நீங்கள் ஆட்டிறைச்சியை எப்படி பார்த்து வாங்கலாம் அதில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.பொதுவாக அசைவ உணவு என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் தான் இறைச்சியை விரும்ப மாட்டார்கள்.
நாம் சாப்பிடும் பிராய்லர் சிக்கனை விட ஆட்டு இறைச்சி இகவும் சத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்டு இறைச்சி சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நமக்கு கிடைக்கும் என்று குறித்து 
இப்போது பார்க்கலாம்.
கடைக்கு சென்று ஆட்டிறைச்சி வாங்கும்போது ஆட்டின் கழுத்துப் பகுதி மற்றும் நெஞ்சுப் பகுதியை தான் பொதுவாக விரும்பி வாங்குவார்கள். ஏனென்றால் ஆட்டின் கழுத்துப்பகுதியில் உள்ள கறியானது மிகவும் மென்மையாகவும், சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் இது குழந்தைகளுக்கு 
சாப்பிட மிகவும் ஏற்றது
மேலும் ஆட்டின் கழுத்து பகுதியில் கொழுப்பு இருக்காது என்பதால் இது அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். ஆட்டின் தொடைப்பகுதி சற்று சாப்பிடுவதற்கு கடினமாக இருந்தாலும் இதுவும் சுவையாக
 இருக்கும். ஆட்டின் மூளை சாப்பிடுவதால் ஆண்களுக்கு 
மலட்டுத்தன்மை நீங்கும், குழந்தைகளுக்கு நினைவாற்றலை அதிகரிக்கும், உடல் சூடு குறையும்.
ஆட்டுக்கால் சூப் செய்து சாப்பிடுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும், நெஞ்சு சளியை வெளியேற்றும். ஆட்டின் தலையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உள்ள சூடு குறையும். இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை தடுக்கும். மேலும் ஆட்டின் கொழுப்பு உடம்பிலுள்ள எப்பேற்ப்பட்ட வலி, ஆறாத புண் ஆகியவற்றை நீக்கக்கூடியது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 26 டிசம்பர், 2022

நாட்டில் சீரற்ற காலநிலையால் 3மாவட்டங்கள் முழுமையாக பாதிப்பு

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
இதற்கமைய மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 1,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு இருவர் உயிரிழந்துள்ளதுடன்  மூவர் காயமடைந்துள்ளனர்.
மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கையின் மேற்கு கரையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம்
 குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

கொழும்பு க்கு ஒருநாள் தேவைக்காக வருபவர்களுக்கு முக்கிய தகவல்

ஒருநாள் தேவைக்காக (interview, meeting passport சேவை,) வார நிறைய பேர் எதிர் நோக்குற ஒரு பிரச்சினை Room எடுக்கிற இது ஒரு தேவை இல்லாத செலவு wash பண்றதுக்கு dress change பண்றதுக்கு மட்டுமே Room எடுக்கணும் அதுக்கு ஒரு நாள் Room காண காசு கொடுக்கணும்
அதுக்கு பதிலா வெறும் 100/= லயே trailway station ல இந்த தேவை எல்லாம் நிறை வேற்றலாம்.
Compartment 10 க்கு வந்தீங்க என்டா இந்த பிரயாணிகள் வசதிகள் அறை என்ற குளியலறை வசதி இருக்கு. போதியளவு இடவசதியுடன் நல்ல முறையிலும் பேணி வாரங்க. இது tender மூலம் ஏலம் விட பற்றதால தனியாரால நல்ல முறையில பேணப்பட்டு வருது ,
இது சரியா அதிகாலை 5 மணிக்கு திறப்பாங்க. ஆண்கள் பெண்கள் என்டு தனி தனி bathroom வசதி இருக்கு. நிறைய பேருக்கு இந்த மாதிரி ஒன்டு இருக்கிற தெரியா. சும்மா உங்கட காச one day service காக்க room க்கு waste பண்ணாம 
இத use பண்ணுங்க

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 24 டிசம்பர், 2022

நாட்டில் போதைப்பொருள் பாவிப்போரை பரிசோதிக்க அதிநவீன உபகரணம்

போதைப்பொருள் பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண நவீன தொழிநுட்ப உபகரணங்கள் மூலம் சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாகநடைமுறைபடுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாளாந்தம் வாகன விபத்துக்களில் சுமார் 8 பேர் உயிரிழப்பதாகவும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 4 அல்லது 5 பேர் உயிரிழப்பதாகவும் காவல்துறை போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு சோதனைகள் தொடங்கப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 23 டிசம்பர், 2022

கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் சிவப்பு அறிவித்தல்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களில் 7 பேருக்கு, ஏற்கனவே சர்வதேச காவல்துறையான, இன்டர்போலின் சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் காவல்துறை இந்த தகவலை 
வெளியிட்டுள்ளது.
இந்த ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மையென்றாலும், கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை காவல்துறையினருக்கு இதுவரை இந்திய அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று காவல்துறையின் பேச்சாளர் 
தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் குணா என்ற சி குணசேகரன் மற்றும் பூக்குட்டி கண்ணா என்ற புஸ்பராஜா ஆகியோர் அடங்குவர். அவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் ஆயுத விநியோகத்தரான ஹாஜி சலீமுடன் நெருங்கிய தொடர்பில் பணியாற்றினர் என்பது 
தெரியவந்துள்ளது.
இவர்கள், இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்க செயற்பட்டனர் என்று இந்திய புலனாய்வுப்பிரிவு குற்றம்
 சுமத்தியுள்ளது.
ஏற்கனவே இவர்கள் மீது ஜூலை 8ஆம் திகதியன்று வழக்கு ஒன்றும் பதிவுச்செய்யப்பட்டுள்ளது.
குணசேகரன் மற்றும் புஸ்பராஜா ஆகியோரைத் தவிர மொஹமட் அஸ்மின், அழகப்பெருமகே சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா சந்திரசேன, தனுக்க ரொஸான், வெல்ல சுரங்க என்றழைக்கப்படும் கமகே சுரங்க மற்றும் திலீபன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்னர்
இந்தநிலையில் அவர்கள் இந்தியாவில் தவறுகளை செய்திருந்தால், இந்திய நீதிமன்றத்திலேயே அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் 
செய்யப்படும்.
இலங்கைக்கு அவர்களை அழைத்து வரவேண்டுமானால், ராஜதந்திர ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
எனவே, இது தொடர்பில் காவல்துறை மா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்ப்பதாக காவல்துறையின் பேச்சாளர்
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 22 டிசம்பர், 2022

நாட்டில் நாளைய தினம் முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை விடுமுறை

இலங்கையில்  நத்தார் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.2022இன் 3ஆம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
அதனடிப்படையில், கல்வி அமைச்சின் 2022.09.02ஆம் திகதிய மற்றும் 11/2022(I) இலக்க சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை திருத்தம் செய்யப்படுவதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு தவணை இடம்பெறும் காலப்பகுதி,
இரண்டாம் தவணை 2022.09.13 தொடக்கம் 2022.12.01 வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2022.12.02 ஆம் திகதி தொடக்கம் 2022.12.04 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.)
மூன்றாம் தவணை முதலாம் கட்டம் 2022.12.05ஆம் திகதி தொடக்கம் 2022.12.22 ஆம் திகதி வியாழக்கிழமை வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2022.12.23ஆம் திகதி தொடக்கம் 2023.01.01 வரையில் நத்தார் விடுமுறை வழங்கப்படும்)
இரண்டாம் கட்டம் 2023.01.02ஆம் திகதி தொடக்கம் 2023.01.20ஆம் திகதி வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2023.01.21ஆம் திகதி தொடக்கம் 2023.02.19ஆம் திகதி வரையில் க.பொ.த (உயர்தரப்) பரீட்சை – 2022 இற்கான விடுமுறை வழங்கப்படும்.)
மூன்றாம் கட்டம் 2023.02.20ஆம் திகதி தொடக்கம் 2023.03.24ஆம் திகதி வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) முஸ்லிம் பாடசாலைகளுக்கு தவணை இடம்பெறும் காலப்பகுதி,
இரண்டாம் தவணை 2022.09.13 தொடக்கம் 2022.12.01 வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2022.12.02 ஆம் திகதி தொடக்கம் 2022.12.04ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.)
மூன்றாம் தவணை முதலாம் கட்டம் 2022.12.05ஆம் திகதி தொடக்கம் 2022.12.22 ஆம் திகதி வியாழக்கிழமை வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2022.12.23 ஆம் திகதி தொடக்கம் 2023.01.01 வரையில் நத்தார் விடுமுறை வழங்கப்படும்.)
இரண்டாம் கட்டம் 2023.01.02ஆம் திகதி தொடக்கம் 2023.02.15 ஆம் திகதி வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2023.02.16ஆம் திகதி தொடக்கம் 2023.02.28ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.)
மூன்றாம் கட்டம் 2023.03.01ஆம் திகதி தொடக்கம் 2023.03.21ஆம் திகதி வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக)

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 21 டிசம்பர், 2022

வெளிநாட்டு வேலைவாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய .உடன் விண்ணப்பங்களினை பூர்த்தி செய்யுங்கள்

வேலை வாய்ப்பு தொ்டர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.ஜப்பானில் கார் 
இருக்கை உற்பத்தி, தையல் வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் ஏற்றுக்கொள்ளப்படும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி,2022 டிசம்பர் 28 புதன்கிழமை பத்தரமுல்லையிலுள்ள பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது தகுதியுடையவர்கள் பதிவு செய்யலாம் என்றும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்படிவங்களை www.slbfe.lk என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளுமாறும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களைக் கொண்டு வருமாறும் பணியகம் 
தெரிவித்துள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
செவ்வாய், 20 டிசம்பர், 2022

ஆஸ்திரேலிய சுகாதார நிபுணர் உடல் பருமனான கிறிஸ்துமஸ் தாத்தாக்களை வணிக வளாகங்களில் தடை செய்ய வேண்டும்-

கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பரிசுப்பொருட்களை வழங்கி வருகிறார்கள். 
வீடு வீடாக சென்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளை
 வழங்குகிறார்கள். 
பொதுவாக கிறிஸ்துமஸ் தாத்தா உடல் பருமனுடன் இருப்பார். இந்த நிலையில் உடல் பருமனான கிறிஸ்துமஸ் தாத்தாக்களை வணிக வளாகங்களில் தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுகாதார நிபுணர் வின்சென்ட் கான்ட்ரா வினாட்டா வேண்டுகோள் 
விடுத்துள்ளார். 
அதிக எடை கொண்ட கிறிஸ்துமஸ் தாத்தா ஒரு மோசமான முன்னுதாரணத்தை அமைத்து அதிகமாக சாப்பிடுவதை ஊக்குவிப்பதால் அனைத்து உடல் பருமனான சாண்டா கிளாசை (கிறிஸ்துமஸ் தாத்தா) தடை செய்ய வேண்டும். 
சாண்டா உடல் பருமனாக இருப்பார் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. ஏனென்றால் அது தவறான செய்தியை 
அளித்துவிடும். 
நீங்கள் நிறைய சாப்பிட வேண்டும். அதை பண்டிகைகளுடன் தொடர்புப்படுத்தி கொண்டாட வேண்டும் என்பதற்கு எதிராக போராட விரும்புகிறேன். 
அதிக எடையுடன் இருப்பதை மகிழ்ச்சியுடன் தொடர்புபடுத்தக்கூடாது. புதிய நெறிமுறைகளை வகுத்து சாண்டா கிளாஸ் பருமன் இல்லாமல் இருக்க நான் விரும்புகிறேன். 
கிறிஸ்துமஸ் தாத்தா உடையின் முன்பகுதியில் தலையணைகள் அல்லது வேறு பொருட்களை திணிக்கும் பழக்கம் முடிவுக்கு
 வரவேண்டும். 
வணிக வளாகங்களில் சாண்டாவை கொழுப்பாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளக்கூடாது. இது மகிழ்ச்சியான உறவு முறை மற்றும் உணவு, பானங்களின் அடிப்படையில் குழந்தைகள் நாம் நினைப்பதைவிட அதிகமாக சாப்பிடுவார்கள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 19 டிசம்பர், 2022

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு தடையாக இருக்கும் சீனா

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிமொழியை நிறைவேற்றுவதில்,  சீனா, மிகப்பெரிய தடையாக உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 2.9 பில்லியன் டொலர்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெற்றுக்கொள்ள சீனா உட்பட்ட கடனாளிகளிடம் கடன் நிலைத்தன்மை உத்தரவாதங்களை இலங்கை 
பெறவேண்டியுள்ளது.
இதனை அடிக்கடி சர்வதேச நாணய நிதியமும் வலியுறுத்தி வருகிறது.
சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களாக உள்ளன.
இதில் சீனாவின் பங்கு 52 சதவீதமாக உள்ளது. ஜப்பானின் பங்கு 19.5 சதவீதம் மற்றும் இந்தியாவின் பங்கு 12 சதவீதமாகும்.
இதில் இந்தியாவும் ஜப்பானும் கடன் மறுசீரமைப்புக்களுக்கு இணக்கம் வெளியிட்டு வருகின்றன.
எனினும் சீனா, இன்னும் இசையவில்லை.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதாக அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறினார். 
இது சீனாவுக்கு எதிரான கண்டனத்தை ஏ
ற்படுத்தியுள்ளது. 
இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு கிடைக்கவேண்டிய நிதியளிப்புக்கு வீதித்தடையாகவே உள்ளது என்றும் இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 18 டிசம்பர், 2022

கிளிநொச்சியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பவள விழா ஆரம்ப நிகழ்வு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பவள விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு
.18-12-2022. இன்று கிளிநொச்சியில். 
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பவள விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு, இன்றைய தினம் .18-12-2022., கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில், கட்சியின் தலைவர் மாவை.சோ
சேனாதிராசா தலைமையில் நடைபெற்றுள்ளது. 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர். சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய இந்நிகழ்வில், நாடாளுமன்ற
 உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கட்சியின் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர்,
 பொருளாளர், வடக்குமாகாண அவைத்தலைவர் மற்றும் நா
டாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள், வடக்குமாகாண சபையின் மேனாள் உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள்,அபிமானிகள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர் என்பது
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 17 டிசம்பர், 2022

உங்கள் கனவில் இறந்தவர்கள் வருவது ஏன் எப்படி என்று தெரியுமா!!!


உறங்கும் போது நாம் ஆழ்ந்த நித்திரையிலிருந்து வரும் அடுத்தபடிக்கு வரும் போது கனவு வருகிறது, இது சகல விலங்குகளினதும் 
ஒரு பொது இயல்பு.
கனவுகள் என்பது பன்மடங்கு தன்மையை கொண்டதாகும். நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு  ஆகும்.
இது எழுந்ததும் புரிவதில்லை. அதனை சரியான வழியில் நாம் கவனமாக புரிந்து கொண்டால், அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான பல்வேறு நுண்ணறிவுகளை நாம் பெறலாம்.
இறந்து போனவர்கள் வருகிறார்கள் என்ற கேள்விக்கு உளவியல் ரீதியாகவும் ஆன்மீக நிலைப்பாடுகளிலும் பதிலளிக்க வேண்டி வரும். இங்கு இறந்தவர்கள் உங்கள் கனவில் வருவதற்கான காரணங்கள் 
கொடுக்கப்பட்டுள்ளன.
இறந்த ஆன்மாக்கள் உங்களை தொடர்பு கொள்ள ஏன் கனவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள்
இறந்த பிறகு, இறந்தவர்களுக்கு நுண்ணியம் வாய்ந்த சக்தி கிடைக்கும். நீங்கள் விழித்திருக்கும் நிலையில் இருப்பதை விட தூக்கத்தில் தான் அவர்கள் உங்களுடன சுலபமாக தொடர்பு கொள்ள முடியும்.
நீங்கள் விழித்திருக்கும் போது, உங்களது ஐம்புலன்களும் வேலை செய்து கொண்டிருக்கும். அதனால் தங்களை இறந்த ஆன்மாக்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறது என்பதை மிக உயர்ந்த ஆன்மீக பீடத்தை அடைந்தவர்களை தவிர மற்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது.
மறுபுறம், கனவுகளின் போது, நுட்பமான செய்திகளுக்கு நம் மனது அதிகமாக செவி சாய்க்கும். அதனால் தான் இறந்தவர்கள் உங்களை கனவில் தொடர்பு கொள்ளும் முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இறந்தவர்களை பற்றி கனவு காண்பதற்கான உளவியல் காரணங்கள்
இறந்தவர் உயிருடன் இருந்த போது அவருக்கு செய்ய 
வேண்டியதை சரியாக செய்யவில்லையே என்ற குற்ற 
உணர்வு அல்லது மன 
வருத்தம் உங்களை வதைக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு கனவுகளில் இறந்தவர்கள் தோன்றலாம். அவர்களின் இறப்பு உங்களுக்கு 
அதீத பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தால், அவர்களை நீங்கள் கனவில் காணலாம். அப்படிப்பட்ட சூழலில், நம் ஆழ்மனதில் ஆழமாக வேரூன்றிய நம் உணர்வுகளின் வெளிப்பாடே கனவுகள்.
இறந்தவர்களைப் பற்றி கனவு காண்பதற்கான ஆன்மீக காரணங்கள்
இறந்து போன சொந்தக்காரரோ அல்லது நண்பனோ 
உங்கள் கனவில் தோன்றுவதற்கு ஆன்மீக காரணமும் உள்ளது. சில சமயம், இறந்து போன ஆன்மாவிற்கு, பூமியில் வாழும் தன் சந்ததி வழியாக ஏதேனும் உதவி தேவைப்படலாம்.
மேலும், உங்கள் உதவி மூலமாக யாரையாவது பலி தீர்க்க நினைக்கலாம், அல்லது குடும்பம்/நண்பர்கள் வட்டத்தில் யாருடனாவது தொடர்பு கொள்ள நினைக்கலாம். முதலில் கூறியது முதன்மையான காரணமாக கருதப்பட்டாலும், இரண்டாவதாக கூறியது மிக 
அரிதானதே.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 16 டிசம்பர், 2022

புத்தாண்டு அன்று தப்பித்தவறியும் இதெல்லாம் செய்யாதீர்கள்

எதிர் வரும் 2023 புத்தாண்டில் காலடியை எடுத்து வைக்கப் போவதால் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருப்போம். ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும், ஆண்டின் முதல் நாளன்று ஒருசில தீர்மானங்களை எடுக்க உலகம் முழுவதும் பலரும் மும்முரமாக இருப்பர். புத்தாண்டு நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு பலவிதமான சுவாரஸ்யமான திட்டங்களை 
பலரும் தீட்டுவர்.
ஆனால் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் போது, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சொல்லப்போனால் அவை மிகவும் பிரபலமான புத்தாண்டு மூடநம்பிக்கைகள் ஆகும். இப்போது அந்த மூடநம்பிக்கைகளைக் காண்போம்.
புத்தாண்டின் முதல் நாளன்று தட்டைப்பயறு மற்றும் கீரைகளை பலர் சாப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஏனென்றால், இவற்றை உண்பதன் மூலம் அந்த வருடத்தில் அதிர்ஷ்டம் கொட்டும் மற்றும் வீட்டின் நிதி நிலைமை மேம்படும். வீட்டின் செழிப்புக்காக கீரைகளுடன் பட்டாணி சாப்பிட வேண்டும். இதில் பட்டாணி நல்ல அதிர்ஷ்டத்தையும், கீரைகள் பணத்தையும் 
குறிக்கும்.
புத்தாண்டு அன்று வீட்டில் உள்ள குப்பைகளையோ அல்லது உணவையோ அல்லது வேறு எந்த பொருளையோ தூக்கி எறியக்கூடாது. எதை தூக்கி எறிவதாக இருந்தாலும், புத்தாண்டு தினத்தின் முந்தைய நாள் அல்லது புத்தாண்டு தினத்தின் மறுநாள் தூக்கி எறியுங்கள். ஒருவேளை தூக்கி எறிந்தால், வீட்டில் செல்வம் நிலைத்தில்லாமல், செலவு அதிகமாக இருக்கும் என்ற ஓர் நம்பிக்கை உள்ளது.
மகரத்தில் சனி, சுக்கிரன், புதன் சேர்க்கையால் டிசம்பர் இறுதியில் இந்த 4 ராசிகளுக்கு சூப்பரா இருக்கப் போகுது..மகரத்தில் சனி, சுக்கிரன், புதன் சேர்க்கையால் டிசம்பர் இறுதியில் இந்த 4 ராசிகளுக்கு சூப்பரா 
இருக்கப் போகுது..
புத்தாண்டு அன்று யாரிடமும் கடன் வாங்கவோ அல்லது பணத்தைக் கொடுக்கவோ கூடாது. ஒருவேளை அவ்வாறு செய்தால், வருடம் முழுவதும் உங்கள் நிதி நிலைமை இப்படி தான் இருக்கும். எனவே 
இந்நாளில் உங்கள் பர்ஸில் பணத்தை முழுமையாக நிரப்பி வைத்திருங்கள். இதனால் வருடம் முழுவதும் பணம் உங்கள் பர்ஸில் நிரம்பி இருக்கும்.
புத்தாண்டு தினத்தின் போது எக்காரணம் கொண்டும் 
அழக் கூடாது. இதனால் அந்த வருடம் முழுவதும் 
மகிழ்ச்சியை இழந்து இருக்கக்கூடும். எனவே நீங்கள் வருடம் முழுவதும் சந்தோஷமாக இருக்க விரும்பினால், ஆண்டின் முதல் நாளில் அழாதீர்கள்.புத்தாண்டு அன்று துணியை துவைக்கக்கூடாது. வீட்டில் அழுக்குத் துணிகள் இருந்தால், ஜனவரி 2 ஆம் நாள் துவையுங்கள்.
 உலகின் சில பகுதிகளில் புத்தாண்டின் முதல் நாளன்று பாத்திரம் கூட கழுவமாட்டார்களாம்.
வீட்டில் உள்ள அலமாரியை காலியாக வைத்திருக்கக்கூடாது.
 எனவே உங்கள் வீட்டில் உள்ள அலமாரி காலியாக இருந்தால், புத்தாண்டின் முதல் நாளன்றே ஏதாவது பொருளால் நிரப்புங்கள். இல்லாவிட்டால் வருடம் முழுவதும் அலமாரி காலியாக இருப்பது போன்றே உங்கள் வாழ்வும் இருக்கும் என்று சில மக்கள் நம்புகின்றனர்.
புத்தாண்டு பிறக்கும் தினத்தில் மட்டுமின்றி, முந்தைய நாளில் இருந்தே வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்திருங்கள். இதனால் முந்தைய வருடம் வீட்டில் புகுந்த துர்சக்திகள் அனைத்தும் 
வெளியேறிவிடுமாம்.
எதையும் உடைக்காதீர்கள். முக்கியமாக கண்ணாடியை தப்பித்தவறியும் நழுவ விட்டு உடைத்து விடாதீர்கள். கண்ணாடியை மட்டுமின்று வேறு எந்த பொருளையும் உடைத்துவிடாதீர்கள். இதனால் வீட்டில் துரதிர்ஷ்டம் 
தான் குடிப்புகும்.
மிகவும் பிரபலமான மற்றும் உண்மையான ஓர் மூடநம்பிக்கை தான் இது. அது என்னவெனில், புத்தாண்டு தினத்தின் போது யார் முதலில் உங்கள் வீட்டிற்கு வருகிறார்களோ, அவர்களைப் போன்று உங்களுக்கு 
அந்த ஆண்டு இருக்கும் என்பது. குறிப்பாக வீட்டிற்கு 
வருபவர் உயரமாக, மாநிறமாக மற்றும் நன்கு அழகாக காட்சியளிக்க வேண்டும். இதனால் அந்த வருடம் முழுவதும் உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையுமாம்.
புத்தாண்டு பிறந்த நடுராத்திரியில் உங்கள் துணைக்கு முத்தம் கொடுங்கள். இதன் மூலம், அந்த வருடம் முழுவதும் நல்ல அன்புடனும் பிணைப்புடனும் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஒருவேளை நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்கள் செல்ல பிராணிக்கு முத்தம் கொடுங்கள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வியாழன், 15 டிசம்பர், 2022

நாட்டில் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்

பண்டிகை காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பொருட்களை பதுக்கி வைப்போரை தேடி விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார 
சபை தெரிவித்துள்ளது.
பிரதேச ரீதியில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு இந்த விடயங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் இந்த செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
புதன், 14 டிசம்பர், 2022

நாட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டிற்கு வருகை தரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் மார்ச் மாதத்தில் நாட்டிற்கு அதிகளவான சுற்றுலா பயணிகள்(106,500) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
இம்மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
20 நாடுகள்முக்கியமாக 20 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இதுவரை நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 13 டிசம்பர், 2022

யாழ் பலாலியில் லிருந்து ஆரம்பமானது விமான நிலையத்தின் போக்குவரத்து கட்டண விபரம்

யாழ்.நகரில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்  பலாலி சர்வதேச விமான நிலையம் மீளவும் சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்-பலாலி இடையேயான போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே தற்போது இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம், முற்பகல் 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடையும். பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து, 11.50 மணிக்கு சென்னை 
நோக்கிப் புறப்படும்.
இந்த விமான சேவை பயணிகளுக்காகவே யாழ்.நகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் காலை 8 மணிக்கு பலாலி விமான நிலையம் நோக்கி பேருந்து சேவை இடம்பெறும்.
அதேபோன்று நண்பகல் 12 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் இருந்து யாழ்.நகர் நோக்கி பேருந்து சேவை இடம்பெறும். தேவை ஏற்படின் ரயில் நிலையம் வரையிலும் சேவை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பயணிக்கும் பயணிகளுக்கான ஒரு வழிக் கட்டணமாக 500 ரூபா அறவிடப்படும். மேலும் பயணப் பொதி ஒன்றுக்கு 200 ரூபா அறவிடப்படும். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு யாழ்.மாவட்ட
 பேருந்து நிலைய பொறுப்பதிகாரியின் 0765378432 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என வட மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை தலைவர் அறிவித்துள்ளார் என்பதும் 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


Blogger இயக்குவது.