வெள்ளி, 30 டிசம்பர், 2022

நபர் ஒருவரின் திருமண விண்ணப்பத்தை நிராகரித்த அக்கரைப்பற்று பள்ளிவாசல்

இலங்கை அக்கரைப்பற்ரில்  போதைப்பொருள் பயன்படுத்தும் நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல்
 நிராகரித்துள்ளது.
அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல்  பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு  ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த விண்ணப்பத்தை பரிசீலனைக்காக எடுத்துக் கொண்ட ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை குறித்த நபர் போதை பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், திருமண  சடங்கை நிறைவேற்றி வைப்பதை தவிர்த்துள்ளதுடன் குறித்த விண்ணப்பத்தையும் நிராகரித்துள்ளது.
அத்துடன் திருமணத்திற்கான மணமகனை போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் அனுமதிப்பதுடன் அங்கிருந்து நற்சான்றிதழ் பத்திரம் பெற்று மீண்டும் பள்ளிவாசலில் சமர்ப்பிக்குமாறு 
கேட்கப்பட்டுள்ளது.
குறித்த இவ்விடயம் சமூக ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக மாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.