திங்கள், 28 ஜூன், 2021

வைத்தியசாலைக்குள் நுழைந்து 3 பெண்களை மாத்தறையில் கடித்து குதறிய நாய்

மாத்தறையிலுள்ள அரச வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை நிலையத்திற்குள் நுழைந்த நாய் ஒன்று அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்களை கடித்தமையினால் பரபரப்பு 
ஏற்பட்டுள்ளது.
மொரவக்க, கொஸ்நில்கொட பகுதியிலுள்ள வைத்தியசாலையிலுள்ள கொவிட் தொற்றாளர்களின் அறைக்குள் நாய் நுழைந்தவுடன் நோயாளர்கள் கட்டில் மீது ஏறி உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கத்தி
 கூச்சலிட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது வெளிநாட்டில் இருந்த வந்த 18 பெண்கள் உட்பட 38 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் கொவிட் தொற்றில் இருந்து மீண்டு வீடு நோக்கி செல்ல தயாராகி இருந்துள்ளனர். அவர்களை அழைத்து செல்ல வந்த உறவினர்கள் பலரும் வைத்தியசாலை பகுதியில் இருந்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலை ஊழியர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு நாயை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை 
மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் வீதிக்கு வந்த நாயை அங்கு கூடியிருந்தவர்கள் அடித்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நாய் பைத்தியம் பிடித்தது என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 25 ஜூன், 2021

போதிராஜா மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்



கொழும்பு – டாம் வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – டாம்வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதிராஜா மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் இரண்டில்,25-06-2021. இன்று அதிகாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தீயணைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



வியாழன், 24 ஜூன், 2021

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் மேலும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில், புத்தளம் மற்றும் மன்னார் வரையான கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதோடு நாட்டில் உள்ள ஏனைய கடற்பகுதிகளும் சிறிதளவாக கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 23 ஜூன், 2021

ரணில்.மீண்டும் வந்துவிட்டார் .நடக்கப்போவது என்ன.தெளிவான பார்வை

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காகக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரேயொரு தேசிய பட்டியல் உறுப்புரிமை மாத்திரம் கிடைக்கப் பெற்றது.
இதற்காக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை தொடர்ந்து வந்தது.இந்த நிலையில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவை அதற்காக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய தினத்திற்கான நாடாளுமன்ற அமர்வு முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்து 
கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக 9 மாதங்களின் பின்னர் ரணில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 19 ஜூன், 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை ஒன்றில் தீ விபத்து

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் அமைந்திருந்த தற்காலிக கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்து
 நாசமாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் அமைந்திருந்த தற்காலிக கொட்டகை இன்று நண்பகல் திடீரென 
தீப்பற்றி எரிந்ததை
அவதானித்த கிராம மக்கள் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முற்பட்ட போதும் கொட்டகை தீயில் எரிந்து
நாசமாகியுள்ளது
தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று நிலமைகளை பார்வையிட்டு விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 16 ஜூன், 2021

சுருவில் கடற்கரையில் கரையொதுங்கிய பாரிய திமிங்கலம்

ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 32 அடி நீளமான கரையொதுங்கிய குறித்த திமிங்கிலத்தை காலை 8.30 மணியளவில் மீனவர்கள் 
கண்டுள்ளனர்.
தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகளும் வருகை 
தந்துள்ளனர்.
குறிப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் திமிங்கிலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு கடற்றொழில் திணைக்களம் உத்தியோகர்கள், பொது சுகாதார பரிசோதகர், காவல்துறையினர் வருகை தந்துள்ளதை அவதானிக்க
 முடிந்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>






செவ்வாய், 15 ஜூன், 2021

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் ஜினா சானா காலமானார்

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் ஜினா சானா தமது 76ஆவது வயதில் உயிரிழந்துள்ளார் என்று மிசோராம் மாநில முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரக் குழந் தைகளுடன் இவர் வாழ்ந்து வந்தார். மிசோரம் தலைநகர் அய்ஸ் வாலில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள பக்டாங் கிராமத்தில் ஜியோனா சானா வசித்தார். இவர் தனது 17-வது வயதில் முதல் திருமணம் செய்தார். அடுத்தடுத்து பல பெண்களை அவர் திருமணம் செய்துகொண்டார். தனது 60-வது வயதில் அவர் கடைசியாக 39-வது மனைவியை 
திருமணம் செய்தார்.
ஜியோனாவுக்கு 94 பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் பலருக்கு திருமணமாகி 33 பேரக் குழந்தைகள் உள்ளனர். ஒரு கொள்ளுப் பேரனும் உள்ளார். இவர்கள் 4 அடுக்கு மாடிகள் கொண்ட பிரமாண்ட வீட்டில் ஒன்றாக
 வசிக்கின்றனர்.
ஜியோனாவின் குடும்பத்தை பார்ப்பதற்காக உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் பக்டாங் கிராமம் மிசோரமின் முக்கிய சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது.
இந்த பின்னணியில் கடந்த சில ஆண்டுகளாக வயது முதுமை காரணமாக நீரழிவு நோய், இரத்த அழுத்த பிரச்சினைகளால் ஜியோனா பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் அவருக்கு உடல் ந
லக் குறைவு ஏற்பட்டது. 3 நாட்கள் வீட்டிலேயே 
சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமானதால் தலைநகர் அய்ஸ் வாலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு13-06-2021.அன்று  அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு மிசோரம் முதல்வர் சோரம்தங்கா மற்றும்அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் 
தெரிவித்துள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 14 ஜூன், 2021

குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே நாடாளுமன்றத்துக்கு செல்கிறாராம் ரணில்

நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான  நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கு தீர்மானித்திருக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 
 இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்
 நாடாளுமன்றம் செல்வதற்கு ; நான்  எதிர்பார்த்திருக்கவில்லை. என்றாலும் இதுதொடர்பில், பாரிய அழுத்தம் வந்தது. விசேடமாக இரண்டு விடயங்களை பிரதானமாகக்கொண்டே இந்த தீர்மானத்துக்கு வந்தேன். முதலாவதாக கொவிட்டை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. நாங்கள் நினைத்ததை விடவும் மரணங்கள் பாரியளவில் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலைமையில் இதுதொடர்பாக குரல் கொடுக்கவேண்டும் என உணர்ந்தேன்.
 அடுத்ததாக ; அரசியல் நிலைமையை பார்க்கும்பாது, அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது மிகவும் கஷ்டமான நிலையாகும். இதற்கு மாற்றுவழி ஒன்றை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியும் இதுவரை முன்வைக்கவில்லை. இது மிகவும் பயங்கரமான சந்தர்ப்பமாகும். இவ்வாறான அரசியல் நிலைமையை நான் ஒருபோதும் 
கண்டதில்லை. 
தற்போதைய நிலைமையில் நாடும் பிரச்சினைக்குள்ளாகி இருக்கின்றது. அரசியலும் பிரச்சினைக்குள்ளாகி இருக்கின்றது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என என்னாலும் உணர்ந்துகொள்ள முடியாத நிலையே
 இருக்கின்றது. 
 அதனால் சிலவேளை, நான் நாடாளுமன்றம் சென்ற பின்னர் தற்போது செல்லும் போக்கை சரி செய்துகொள்ள முடியுமாக இருக்கும் என நம்புகின்றேன். இந்த விடயங்களே நான் நாடாளுமன்றத்துக்கு செல்ல எடுத்த தீர்மானத்தின் பிரதான காரணிகளாகும்.
அதனால் ; கொவிட்டை கட்டுப்படுத்த என்னால் முடிந்த ஆலோசனைகளை தெரிவிப்பதற்கு முயற்சிப்பேன். அதேபோன்று பொருளாதார ரீதியிலும் நாடு பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
அதனால் அனைத்தையும் புதிதாக சிந்தித்து, ஒரு அமைப்பாக ஒன்றிணைந்து செயற்பட்டாலே இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என நினைக்கின்றேன் என்றார் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 12 ஜூன், 2021

மிருசுவில் பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்ட விவகாரம்.டிப்பர் சாரதி சிக்கினார்

 யாழ்.மிருசுவில் பிள்ளையார் கோவில் மீது டிப்பரால் மோதி இடித்தவர் கைது செய்யப்பட்டதுடன் டிப்பர் வாகனம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.கொடிகாமம் – மிருசுவில் இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் கடந்த 07-06-2021.ஆம் திகதி இடித்து 
உடைக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் கொடிக்காம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் ஆலயத்தை டிப்பர் வாகனம் ஒன்றினால் மோதியே உடைத்தமையை கண்டறிந்தனர்.அதன் அடிப்படையில் குறித்த டிப்பர் வாகனம் தொடர்பிலான தகவலினை பெற்று டிப்பர் வாகனத்தை 
தேடி வந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த டிப்பர் வாகனம்11-06-2021. அன்று மாலை யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் பயணித்த போது கொடிகாம பொலிஸாரினால் வாகனம் வழிமறிக்கப்பட்டு வாகனத்தை கைப்பற்றியதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சாரதியை கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்ட விசாரணையில் டிப்பர் சாரதி முல்லைத்தீவை சேர்ந்தவர் எனவும்,சாரதி முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி வருவதால் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக
பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. இதேவேளை இடித்தழிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் நேற்றைய தினம் மீள கட்டும் பணிகளை சிலர் முன்னெடுத்து இருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 



 

வெள்ளி, 11 ஜூன், 2021

நாட்டில் வங்கியில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

நாட்டில் கொவிட்-19 மூன்றாவது அலையையடுத்து, அரசாங்கம் வழங்கிய ஆலோசனைக்கமைய, வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகை வழங்காவிட்டால், 
அது குறித்த
முறைப்பாடுகளை அளிக்க இலங்கை மத்திய வங்கி விசேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.அதற்கமைய, 011 – 24 77 966 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 8 ஜூன், 2021

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, கம்பஹா, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் வரை இந்த அபாய எச்சரிக்கை 
நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்து வரும் இரண்டு நாட்களில் மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் மாவட்டத்திலும் மழை பெய்யலாம் எனவும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எச்சரிக்கை
 விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இதனால் ஏற்படும் சேதங்களை தவிர்த்துக் கொள்ள பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
.




புதன், 2 ஜூன், 2021

பெறுமதியான மதுபான போத்தல்களுடன் கொழும்பில் இருவர் கைது

கொழும்பு – சீதுவையிலிருந்து மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலைகளுக்கு லொறியொன்றில் 17 மில்லியன் ரூபா பெறுமதியான 9240 மதுபானப் போத்தல்களை எடுத்துச்சென்ற லொறியை வாழைச்சேனை ரிதிதென்னை பொலிஸ் சோதனைச்சாவடி பொலிஸார் 01-06-2021.அன்று மடக்கி பிடித்துள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை 
பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, பொலநறுவை எல்லை பகுதியான ரிதிதென்னை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதிச்சோதனை சாவடியில் இன்று பொலிஸார் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் 
கொண்டிருந்தனர்.
தன்போது மட்டக்களப்பை நோக்கிச் சென்ற லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது பயணத்தடையை மீறி சீதுவையிலுள்ள மதுபான உற்பத்தி நிலையத்தில் இருந்து மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலைக்கு மதுபானங்களை எடுத்துச் செல்வதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த லொறியிலுள்ள 17 மில்லியன் ரூபா பெறுமதியான 9240 போத்தல் கொண்ட மதுபானங்களையும்,லொறியையும் கைப்பற்றியதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களை நீதிம
ன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 1 ஜூன், 2021

இந்த ராசிக்காரரா இவர்களிடம் சற்று கவனமாக இருங்கள்

சமூகம் என்பதே அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது தான். இருப்பினும் அனைவரும் அன்பாக, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மை தற்போது குறைந்துள்ளது.
முன்னர் ஒருவரின் பெயர் சொன்னால் அந்த ஊரில் உள்ள அனைவருக்கு யார் என்று தெரிந்து விடும்.
ஆனால் தற்போது அருகில் உள்ள வீட்டாருக்கே யார் என்று தெரியாத நிலை தான் உள்ளது.
யார் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிந்து பழகுவது அவசியம். அப்படிப்பட்ட முக்கிய விஷயத்தை ஜோதிடத்தின் மூலம் சற்று 
தெரிந்து கொள்ளலாம்.
அப்படிப்பட்ட ராசியினர் யார் என்பதை தெரிந்து கொண்டு அவர்களின் சற்று கவனமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர்களிடமிருந்து சற்று தள்ளியே இருப்பது நல்லது.
கும்ப ராசி
சனிபகவானை ராசி நாதனாக கொண்ட காலசக்கரத்தில் 11வதாக இருக்கும் கும்ப ராசியினர் தேங்கி நிற்கும் தண்ணீரைப் போல மிக தெளிவாக, அமைதியாக தெரிவார்கள்.
அதாவது தங்களின் கோபம், கல் நெஞ்சத்தையும், உணர்ச்சியையும் மறைக்கும் சிறந்த கலையை கையில் கொண்டவர்கள். அதனால் இவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள 
முடியாதவர்கள்.
ஒருவர் தங்களின் உணர்ச்சிகள் அல்லது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினால் அவர் எப்படிப்பட்டவர், அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியும். ஆனால் கும்ப ராசியினரோ தங்களின் எண்ண ஓட்டத்தை மற்றவருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வதால் இவர்களிடம் சற்று எச்சரிக்கையாக தான் பழகவும், நடந்து 
கொள்ள வேண்டும்.
உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று நினைக்கக்கூடியவர்கள் என்பதால் இவர்களிடம் கவனம் தேவை.
விருச்சிகம்
மிகவும் ஆபத்தான ராசிகளில் விருச்சிக ராசியினர் முக்கியமானவர்கள். இவர்களின் மிகப்பெரிய பலமே இவர்களின் 
நினைவாற்றல் தான்.
தன்னுடன் பழகக்கூடிய ஒருவர் முன்பு எப்படி இருந்தான், என்னென்ன சொன்னார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய இவர்கள், அதை மறக்காமல் அவர்களுக்கு தேவையான நேரங்களில் பழிவாங்கப் பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள்.
இதுவே இவர்களின் நல்ல விஷயமாகவும் பார்க்கலாம். நீங்கள் செய்த நல்ல விஷயத்தை நினைவில் வைத்துக் கொண்டு நல்லது 
நினைப்பார்கள்.
இதனால் இவர்களிடம் அன்பாக, தன் முழு காதலை வெளிப்படுத்தக்கூடிய துணைக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள். அதே போல சில மோசமான விஷயங்களையும் மறக்க மாட்டார்கள் என்பதால் மிகுந்த கவனத்துடன் பழகுவது நல்லது.
துலாம்
துலாம் ராசியினர் மிகவும் நல்லவர்களாகக் கருதப்பட்டாலும், உங்களுடன் ஒரு நல்ல உறவைக் கொண்டிருந்தாலும், மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும், எப்படி அவர்களை கையாள வேண்டும் என்ற வரம்புகளை 
கொண்டிருப்பார்கள்.
அதனால் நன்றாக பழகுகிறார்கள் என்பதால் அவர்களின் நிலைப்பாட்டிலிருந்து மாறமாட்டார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே செய்ய விரும்புவர் அதனால் எப்போதும் ஆபத்தானவர்களாகப் 
பார்க்கப்படுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இவர்களிடம் சற்று கோபப்பட்டாலும் அந்த இடத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்.
​மீனம்
ஜோதிடத்தில், இந்த ராசியினர் மிகவும் உன்னதமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் திறந்த மனதுடன் மக்களை
 நேசிக்கிறார்கள்.
சொர்க்கத்தில் இருப்பதைப் போல உணர்கின்றனர். மற்றவர்களிடமிருந்து அன்பை அதிகம் எதிர்பார்க்கக்கூடியவர்கள்
 மீன ராசியினர்.
இவர்கள் தங்களை யாரேனும் ஏமாற்றுகிறார்கள், அல்லது பொய்யானவர்களாகத் தெரிந்தால் அவர்களிடம் மீண்டும் பழைய படி பழகவோ, சேர்ந்து வாழ்வது மிகவும் கடினம். இவர்களுக்கு வரக்கூடிய கோபத்தை தங்களை சுற்றியுள்ளவர்கள் மீது செலுத்த தொடங்கிவிடுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் தந்திரக்காரர்களாக கருதப்பட்டாலும், இவர்கள் பெரிய பொய்யர்கள் கிடையாது. இவர்கள் சில விஷயங்களை மறைத்து, தங்களுக்கு உகந்தது போல, தங்களுக்கு பலன் ஏற்பட வேண்டும் என செயல்படக்கூடியவர்கள்.
மிதுன ராசி நபர்களுக்குள் இருக்கும் சிறப்பு என்னவென்றால், தன் முன் நிற்பவரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களின் கண்களைப் பார்த்து அறிந்து கொள்ளும் வல்லமை 
மிக்கவர்கள்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தன்னுடைய மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை மற்றவர்களுக்கு துளியும் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.
எனவே இவர்கள் மிகவும் ஆபத்தானவை என்று கருதப்படுகின்றன.
​மேஷ ராசி
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசியினர் இயற்கையிலேயே மிகவும் கடுமையானவர்களாகப் 
பார்க்கப்படுகின்றனர்.
நெருப்பு ராசியான இவர்கள் அதே போல கோபமும், கடுமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியை சேர்ந்த சிலர் ஒரு விஷயத்தை மறைக்க நூறு பொய் சொல்லவும் தயங்கமாட்டார்கள். அதாவது தங்களின் காரியம் நிறைவேற எந்த ஒரு விதிமுறையையும் பின்பற்றாமல்
 நடக்கக்கூடியவர்கள்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.