ஞாயிறு, 31 ஜூலை, 2022

நாட்டில் பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்தினை நாட்டு மக்கள் பயன்படுத்தி 
வருகின்றனர்.
மிகவும் நெரிசலான பயணங்களின் போது கொள்ளையர்கள் கைவரிசையை காட்டுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தனியார் பேருந்து சேவைகள், அரச பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் என்பவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு அவற்றில் மக்களின் நெரிசலும் 
அதிகரித்துள்ளது.
இதன்போது மக்களின் பயணப் பைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிடுவதற்காக சிலர் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கின்றனர்.
எனவே, பொதுப் போக்குவரத்தை பன்படுத்துபவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

சனி, 30 ஜூலை, 2022

சந்தைக்கு அறிமுகம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார மோட்டார் கார்


ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை .29-07-2022. அன்று சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இந்த காருக்கு ´Ideal Moksha’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புதிய Ideal Moksha கார், உலகம் முழுவதும் அதிக பிரபலம் பெற்ற ஆஸ்டின் மினி மொக் காரை போன்றது.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை பயன்படுத்தி அதிக திருப்திகரமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த காருக்கு ´Moksha´ என பெயரிடப்பட்டுள்ளதாக 
குறிப்பிடப்பட்டுள்ளது.
Ideal Moksha கார் இலங்கையின் பாதைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் தோற்றம், இடவசதி, பயண சொகுசு என்பவற்றின் ஊடாக இந்த தயாரிப்பின் தனித்துவத்தைக் 
காட்டுகின்றது.
நான்கு சக்கர மின்சார Electric Codricycle மாதிரியை சேர்ந்த Ideal Moksha மோட்டார் கார் 22.46 kWh லித்தியம் பெட்டரி மூலம் 
இயக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

வெள்ளி, 29 ஜூலை, 2022

சர்வதேச பொருளாதாரத்தில் 34 வருடங்களில் 1600 கோடி டாலர்கள் இழப்பை ஏற்படுத்திய பாம்பு மற்றும் தவளை

அமெரிக்க நாட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பழுப்பு மர பாம்பு மற்றும் கருந்தவளை போன்ற இரண்டு உயிரினங்களால் 34 வருடங்களில் சர்வதேச பொருளாதாரத்தில் 1600 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டின் சயன்டிஃபிக் ரிப்போா்ட்ஸ் என்ற அறிவியல் இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அமெரிக்க நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பழுப்பு மரப்பாம்பு மற்றும் கருந்தவளை போன்ற இரண்டு உயிரினங்கள் பயிர்களை நாசம் செய்வது, மின்தடையை ஏற்படுத்துவது என்று பல வழிகளில் பொருளாதாரத்தில் பாதிப்பை 
ஏற்படுத்தியிருக்கின்றன.
இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் பசிபிக் தீவுகளுக்கு அமெரிக்க படை கொண்டு வந்த  இந்த இரண்டு உயிரினங்களும் பல மடங்குகளாக கட்டுப்படுத்த முடியாத வகையில் பெருகிவிட்டது. இதனால் இயற்கை பாழாகி வருவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
வியாழன், 28 ஜூலை, 2022

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அபாயம்

தற்போதுள்ள கொரோனா அபாயம் அதிகரித்தால், எதிர்காலத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டலாம் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டால், அது தற்போது பரவி வரும் வேகத்தைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கொரோனா அபாயம் அதிகரித்தால், எதிர்காலத்தில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தற்போது பரவி வரும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் மற்றும் இயக்கத்தில் கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்பது மிகவும் 
தெளிவாக உள்ளது.
ஆனால் இந்நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். எனவே, முகக்கவசங்களை மீண்டும் அணிவது 
மிகவும் முக்கியம்.
தேவையற்ற கூட்டங்களை நிறுத்துங்கள் மற்றும் முடிந்தவரை சமூக இடைவெளியை கடைபிடிக்கவும். இந்தப் பழக்கங்களைப் பேணுவது முக்கியம் எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>புதன், 27 ஜூலை, 2022

நாட்டில் அவசர கால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (27) பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால்
 நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 
இன்று மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியதுடன், சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியால் 
வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.
பி.ப 5.20 மணி வரை இதற்கு ஆதரவாகவும், 
எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், விவாதம் முடிவடைந்ததும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷ்மன் கிரியல்லவினால் வாக்கெடுப்புக் கோரப்பட்டமைக்கு அமைய வாக்கெடுப்பு
 நடத்தப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 2022.07.17ஆம் திகதியன்று செய்யப்பட்ட பிரகடனத்தின் மூலம் மேற்படி கட்டளைச்சட்டத்தின் IIஆம் பகுதியின் கீழ் இலங்கை முழுவதும் 2022.07.18ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக அப்போதைய பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலே சொல்லப்பட்ட பிரகடனத்தை மேற்கொள்வதற்கான காரணம் மக்களிடையே அமைதியைப் பாதுகாத்தல், பொது மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைக் கொண்டு நடத்துவதற்காகவெனவும் அரசியலமைப்பின் 155வது உறுப்புரையின் 4வது துணை உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதாகவும் அப்பிரகடனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்துக்கு அமைய இந்தப் பிரகடனத்துக்கு 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் அனுமதி கிடைக்கப்பெற்றால் ஒரு மாத காலத்துக்கு நடைமுறைப்படுத்தலாம். பதின்நான்கு நாட்களுக்குள் இந்தப் பிரகடனத்துக்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கப் பெறாவிட்டால் 
அது இரத்தாகும்.
அத்துடன், ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு முறை அவசரகால நிலைமை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் 
நீடிக்கப்பட முடியும்.


இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>செவ்வாய், 26 ஜூலை, 2022

மீண்டும் யாழில் வழமைக்கு திரும்பிய பேருந்து சேவைகள்

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ். மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இன்று முதல் 50 வீதமளவில் இயங்குமென யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதாரன் தெரிவித்த்துள்ளார்.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


திங்கள், 25 ஜூலை, 2022

இலங்கையில்துவிச்சக்கரவண்டி பாவனையாளர்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் பிரச்சினை காரணமாக துவிச்சக்கரவண்டிகளின் பாவனைகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரொஷான் சந்திரசேகர முக்கிய அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களில் மாத்திரம் துவிச்சக்கர வண்டிகளினால் 15க்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் சிலர் படுகாயமும் 
அடைந்துள்ளனர்.
இவற்றில் இரவு நேரங்களில் பெரும்பாலான விபத்துக்குள் இடம்பெற்றுள்ளதுடன் விபத்துக்களுக்கு காரணமாக 
அமைந்துள்ளமை வெளிச்சமின்றி பயணிக்கும் துவிச்சக்கரவண்டிகளே ஆகும்.
எனவே வவுனியா மாவட்டத்தில் துவிச்சக்கரவண்டிகளில் செல்வோர் டைனமோ பொருத்திய லைட்களை 
பொருத்தியிருக்க 
வேண்டும் என்பதுடன் துவிச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் சாலை விதிகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.
அத்துடன் துவிச்சக்கர வண்டிகளில் கூட்டமாக செல்வதை தவிர்க்குமாறும் இவற்றை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கபடவுள்ளதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரொஷான் சந்திரசேகர 
மேலும் தெரிவித்தார்.
ஞாயிறு, 24 ஜூலை, 2022

இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை(25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு 
தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், வலய பொறுப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பமாவது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும்.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு 
அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>சனி, 23 ஜூலை, 2022

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.சாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள்.24-07-2022. நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளதுடன், யாழ் சாலை முடங்குவதால் அதனுடன் இணைந்த சாலைகளின் செயற்பாடுகளும் பாதிக்கப்படுமென 
தெரிவித்தனர்.
இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே யாழ் சாலை ஊழியர்கள் இதனை கூட்டாக 
அறிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில், 23-07-2022.நேற்று.இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பெறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை
 எடுக்கப்பட வேண்டும்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களே எமது சக ஊழியர்களை தாக்கியது எமது ஊழியர்களுக்கு மிகவும் சங்கடத்தை
 ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலோடு தொடர்புபட்ட ஊழியர்களை உடனடியாக பொலிசார் கைது செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டா விட்டால் நாளைய தினம் இலங்கைப் போக்குவரத்து சபையின் யாழ் சாலை வட பிராந்திய சாலைகளுடன் இணைந்து தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க 
இருக்கின்றோம் – என்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>வெள்ளி, 22 ஜூலை, 2022

இலங்கையில் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு

புகையிரத கட்டணங்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதற்கமைய நாளை  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர
 அறிவித்துள்ளார்.
இதேவேளை, புகையிரத கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய பயணிகள் போக்குவரத்து, கொள்கலன் போக்குவரத்துக்கான புகையிரத கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

வியாழன், 21 ஜூலை, 2022

ஜனாதிபதி ரணில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங இராஜினாமா செய்துள்ளார் ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக 
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
இந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதனால் 2022 ஜூலை 21ஆம் திகதி முதல் அதாவது இன்று முதல் 
நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற 
உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாகவும் 
ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் தனக்கு அறிவித்திருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.அரசியலமைப்பின் 66 (இ) உறுப்புரையின் 
பிரகாரம் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில், 
உறுப்பாண்மையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதனால் 1988ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க 
நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) பிரிவின் கீழ் நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>புதன், 20 ஜூலை, 2022

நாட்டில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். எனினும், நேற்றைய தினம் வேட்பாளர்கள் தங்களது மனுவை தாக்கல் செய்திருந்தனர்.இந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே அதிக வாக்குகளை ரணில் பெற்றிருக்கிறார்.
இலங்கை அரசியல் வரலாற்றில், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி, பிரதமராக நியமிக்கப்பட்டு பதில் ஜனாதிபதியாக பதவியேற்று தற்போது இடைக்கால ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

செவ்வாய், 19 ஜூலை, 2022

இலங்கை முழுவதும் குவிக்கப்படும் இராணுவம்

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 
18-07-2022.அன்று .வெளியிட்டார் 
ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இந்த வர்த்தமானி அறிவித்தலை
 வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை கருத்திற்கொண்டு, மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் பாதுகாப்பையும், உறுதி செய்வதற்கும், மக்களின் வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இன்றைய தினம் கொழும்பு நகரிலும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முற்பட்டால் அவர்களை தடுத்து நிறுத்தவும் கலைந்து செல்லவும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக 
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலகத்தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர்த்தாரை, கண்ணீர் புகைக் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>திங்கள், 18 ஜூலை, 2022

இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

அனைத்து மாவட்ட செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி
 தெரிவித்துள்ளார்.
மேலும்,குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்களை அமைப்பதற்கு தற்போது மாவட்ட செயலகங்களில் இடம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 
குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்திற்கமைய,ஏற்கனவே மாவட்ட செயலகங்களில் இருந்து கடவுச்சீட்டை இணையத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதனை தவிர, தெரிவு செய்யப்பட்ட சில பிரதேச செயலகங்களில் குடிவரவு 
மற்றும் குடியகல்வு உப அலுவலகங்களை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை பிரதான காரியாலயத்தின் நெரிசலைக் குறைப்பதே இந்த உப அலுவலகங்களை நிறுவுவதன் நோக்கம் எனவும் 
குறிப்பிட்டுள்ளார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>> ஞாயிறு, 17 ஜூலை, 2022

தொழில் நுட்ப கோளாறால் பாகிஸ்தானில் அவசரமாக இறங்கிய இந்திய விமானம்

இன்டிகோ நிறுவனத்தின் 6இ-1406 விமானம் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சார்ஜாவில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை 
விமானி கண்டறிந்தார். 
2-வது பக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதுபற்றி விமானி கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து இந்தியாவின் இன்டிகோ விமானம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. 
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய விமானம் பாகிஸ்தானில் தரை இறங்கியது. இதனால் விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் பத்திரமாக அங்கு இறங்கினர். 
இதுகுறித்து இன்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரி கூறும்போது, "ஜார்ஜா-ஐதராபாத் விமானத்தில் தொழில்நுட்ப 
கோளாறு ஏற்பட்டது. 
இதை விமானி அறிந்ததும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரை இறக்கம் செய்யப்பட்டது" என்றார். 
அந்த விமானத்தில் இருந்த பயணிகளை ஐதராபாத் நகருக்கு அழைத்து வருவதற்காக கூடுதல் விமானம் ஒன்றும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது எனவும் அந்த 
அதிகாரி தெரிவித்தார். 
விமானத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் கராச்சியில் தரை இறக்கப்பட்ட 2-வது இந்திய விமானம் இதுவாகும். 
இந்த மாதம் தொடக்கத்தில் டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

சனி, 16 ஜூலை, 2022

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை புதிய கொரோனா வைரஸ் அலைகள் வர வாய்ப்பு-

¨கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த வைரஸ் உருமாற்றம் 
அடைந்து வருகிறது. 
தற்போது புதிய உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வகை மாறுபாடுகளில் பல நாடுகளால் நோய் 
தொற்று பரவி வருகிறது. 
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, "கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது
 கவலை அளிக்கிறது. 
இது சுகாதார அமைப்புகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது மேலும் அழுத்தம் கொடுக்கிறது. இறப்புகளின் போக்கு அதிகரித்து வருவது குறித்தும் கவலைப்படுகிறேன்.
ஒமைக்ரானின் துணை வகைகளான பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 போன்றவை உலகம் முழுவதும் பாதிப்புகள், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு ஆகியவற்றின் அலைகளை தொடர்ந்து இயக்குகின்றன 
என்று கூறி இருந்தார். 
இந்த நிலையில் புதிய கொரோனா வைரஸ் அலைகள் வர வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 
விடுத்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>வெள்ளி, 15 ஜூலை, 2022

நாட்டில் பதவியேற்றதும் ரணில் சென்ற முதல் இடம் எது தெரியுமா

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பொல்துவ சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் போது இடம்பெற்ற சம்பவங்களில் காயமடைந்த இரு இராணுவ வீரர்களின் சுகங்களை விசாரிப்பதற்காகவே அவர் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த விஜயத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயும் கலந்து கொண்டார்.
பதில் ஜனாதிபதியாக பதிவியேற்ற ரணில் விக்ரமசிங்கவின் முதல் விஜயமாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>வியாழன், 14 ஜூலை, 2022

இலங்கைக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பல நாடுகள் அறிவுறுத்தியுள்ளது

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தமது பிரஜைகளைக் கேட்டுக்கொண்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>செவ்வாய், 12 ஜூலை, 2022

இலங்கை 14 ஆம் திகதி முடங்குமா வெளியான தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்.13-07-2022 நாளை பதவி விலகாவிடின் .14-07-2022.வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கடுமையாக 
எச்சரித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு 
குறிப்பிட்டுள்ளா அத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு 
எவ்வித தார்மீக உரிமையும் அவர்களுக்கு கிடையாது எனவும் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் இதன்போது
 குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>திங்கள், 11 ஜூலை, 2022

பூந்தோட்ட பொலிஸ் காவலரன் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது

இலங்கை வவுனியா பூந்தோட்டம் பொலிஸ் காவலரன் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (09-07-2022)இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அச்சந்தர்ப்பத்தில் பொலிஸார் எவரும் காவலரனில் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை என பொலிஸார் 
தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 10 ஜூலை, 2022

இலங்கையில் டீசலுக்காக காத்திருக்கும் அம்புலன்ஸ் வண்டிகள் யார் விட்ட தவறு

¨வவுனியாவில் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவைக்கு எரிபொருள் இல்லாத நிலையில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை 
ஏற்பட்டுள்ளது. 
வவுனியா பிரதேச செயலகத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விற்பனை நிலையத்தில் டீசல் வழங்கப்படவுள்ள நிலையில், சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் டீசல் நிரப்புவதற்காக 1990 அம்புலன்ஸ் வரிசையில் காத்து நிற்கின்றது.
வார நாட்களில் இலங்கை போக்குவரத்து சபையால் எரிபொருள் வழங்கப்பட்டாலும் வார இறுதி நாட்களில் எரிபொருள் இல்லாமல் குறித்த சேவைகள் வழங்கமுடியாத சூழ்நிலை 
உருவாகியுள்ளது.
மேலும் கடந்த வாரங்களில் இ. போ. சவினாரால் மேற்கொள்ளப்பட்ட பணிபகிஸ்கரிப்பு காரணமாக எரிபொருள் பெறமுடியாத நிலையும் ஏற்பட்டதுடன், ஐ.ஒ.சி எரிபொருள் விற்பனை நிலையத்தில் அவசர சேவைக்கான எரிபொருட்கள் கையிருப்பில் வைத்துக்கொள்ளப்படாத நிலைமையும் உள்ளது.
மேலும் தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியால் பொதுமக்களின் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு திடீர் நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் இறப்புக்கள் பதிவாகக் கூடிய அதிக ச
ந்தர்ப்பம் உள்ளது.
வவுனியா மாவட்டத்தில் இயங்கும் மூன்று அம்புலன்ஸ் வண்டிகளில் இரண்டு வண்டிக்கு டீசல் இல்லாத அபாய நிலை
 உருவாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை
 விடுக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
சனி, 9 ஜூலை, 2022

இலங்கையில் பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்! கல்வி அமைச்சின் தீர்மானம் வெளியானது

இலங்கையில் அடுத்த வாரமும் பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பான அறிவிப்பு 
 வெளியானது.
அதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள விடுமுறை நீடிக்கப்படுவதுடன், எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீளவும் ஆரம்பித்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது. 
இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
Blogger இயக்குவது.