வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் பிரச்சினை காரணமாக துவிச்சக்கரவண்டிகளின் பாவனைகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரொஷான் சந்திரசேகர முக்கிய அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களில் மாத்திரம் துவிச்சக்கர வண்டிகளினால் 15க்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் சிலர் படுகாயமும்
அடைந்துள்ளனர்.
இவற்றில் இரவு நேரங்களில் பெரும்பாலான விபத்துக்குள் இடம்பெற்றுள்ளதுடன் விபத்துக்களுக்கு காரணமாக
அமைந்துள்ளமை வெளிச்சமின்றி பயணிக்கும் துவிச்சக்கரவண்டிகளே ஆகும்.
எனவே வவுனியா மாவட்டத்தில் துவிச்சக்கரவண்டிகளில் செல்வோர் டைனமோ பொருத்திய லைட்களை
பொருத்தியிருக்க
வேண்டும் என்பதுடன் துவிச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் சாலை விதிகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.
அத்துடன் துவிச்சக்கர வண்டிகளில் கூட்டமாக செல்வதை தவிர்க்குமாறும் இவற்றை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கபடவுள்ளதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரொஷான் சந்திரசேகர
மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக