ஞாயிறு, 3 ஜூலை, 2022

நாட்டில் எரிபொருளுக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

இன்று (03) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அமைச்சர் இதனைத் 
தெரிவித்துள்ளார்.
அதன்படி 50,000 மெற்றிக் டொன் பெற்றோல் மற்றும் 10,000 மெற்றிக் டொன் மண்ணெண்ணெய் என்பன எதிர்வரும் ஜுலை மாதம் 10 அல்லது 11 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் மேலும் 
குறிப்பிட்டார்.
தலா 40,000 மெற்றிக் டொன் டீசல் கொண்ட இரண்டு எரிபொருள் கப்பல்கள் ஜூலை 08 – 09 மற்றும் ஜூலை 11 – 14 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு வரும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர
 குறிப்பிட்டுள்ளார்.
இதுவேளை, எரிபொருள் வழங்குவதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டோக்கன் முறையானது ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மாத்திரமே அமுலில் இருந்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன 
விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் எரிபொருள் இல்லாமல் தங்குவதைத் தடுப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், தற்போது IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் டோக்கன்கள் வியாபாரமாக மாறியுள்ளதாகவும் அமைச்சர்
 குறிப்பிட்டார்.
இந்த டோக்கன் முறையானது எமது அமைச்சின் தலையீட்டினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.