புகையிரத கட்டணங்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர
அறிவித்துள்ளார்.
இதேவேளை, புகையிரத கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய பயணிகள் போக்குவரத்து, கொள்கலன் போக்குவரத்துக்கான புகையிரத கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக