புதன், 30 செப்டம்பர், 2020

பிரான்ஸில் வாழும் கோடீஸ்வர தம்பதிகளின் இரு புதல்விகள் கொழும்பில் கைது

 

பிரான்ஸில் வாழும் இலங்கை கோடீஸ்வர தம்பதிகளின் மகள்கள் இருவர் போதைப்பொருள் கொண்டு செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.20 வருடங்களாக பிரான்ஸில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டும் இலங்கை கோடீஸ்வர பெற்றோரினால், இலங்கையில் 
வாழும் திருமணமான தங்கள் பிள்ளைகள் இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பணம் அனுப்பி
 வந்துள்ளனர்.எனினும், அவர்கள் அனுப்பிய பணத்தில் இரண்டு மகன்களும் போதை பொருளுக்கு 
அடிமையாகியுள்ளதுடன், போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் 500000 ரூபாய் பெறுமதியான போதை பொருள் தொகையுடன் குறித்த இருவரும் கொழும்பு
 பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இந்த இருவரும் கொச்சிக்கடை, பல்லன்சேன பிரதேசத்தை 
சேர்ந்தவர்களாகும். அவர்களின் பெற்றோர் 
கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸில் குடியேறியுள்ளனர். அவர்கள் மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கை 
காரணமாக
 கோடீஸ்வரர்களாகியுள்ளனர். எனினும், அவர்களின் இரண்டு பிள்ளைகளும் சொகுசு வீடு ஒன்றை நிர்மாணித்து, கொச்சிக்கடை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.குறித்த இருவரும் நாளுக்கு 7000 ரூபாவை போதைப் பொருளுக்காக செலவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
 குறித்த இருவரும் சிறிது காலம் விமான 
நிறுவனத்தில் சேவை செய்துள்ள போதிலும், போதை பொருள் பயன்பாடு காரணமாக தொழிலை இழந்துள்ளனர்.இதேவேளை, தங்கள் பிள்ளைகளுக்காக ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மோட்டார் 
வாகனம் ஒன்றையும் பிரான்ஸில் வாழும் பெற்றோரினால் வழங்கப்பட்டுள்ளது.பெற்றோர் வழங்கிய மோட்டார் வாகனத்தை பயன்படுத்தி அவர்கள் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



நாட்டில் இன்னமும் 7 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில்

 

 நாட்டில் முப்படையினரால் பராமரிப்பில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் உள்ளனர்.
தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 343 பேர் இன்று (30) விடுவிக்கப்படவுள்ளனர்.
இதனையடுத்து, 46 ஆயிரத்து 673 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்து
 வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதனால், இப்போது 74 தனிமைப்படுத்தல் மையங்களில் 7,132 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கின்றமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேசத்தை நாம் நம்புகிறோம்

 

 வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 
தெரிவித்துள்ளனர்.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று (30) கிளிநொச்சியில்
 இடம்பெற்றது.
இதன்போதே அந்த அமைப்பின் வடக்கு மாகாணத்திற்குரிய திட்டப்பணிப்பாளர் சிவகுமார் விதுரா மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,
“கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிப் பீடமேறிய பேரினவாத ஆட்சியாளர்கள், தமிழ் மக்கள் மீது
 கலவரங்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கடத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும், அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் அநாதைகளாகவும் ஆக்கப்பட்டுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழர் தாயக நிலப்பரப்பில் கிளைமோர்த் தாக்குதல்கள் மூலம் பெருமளவு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
செஞ்சோலை சிறார் இல்லம், மருத்துவமனைகள் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த சிறுவர்கள், பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களிலும் தரை மற்றும் கடல் வழித் தாக்குதல்களிலும் பெருமளவான சிறார்கள் திட்டமிட்டு படுகொலை 
செய்யப்பட்டனர்.
அது மட்டுமின்றி யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுடன் சென்ற அவர்களது பச்சிளம் குழந்தைகள் நூற்றுக் கணக்கானோர் காணாமல் 
ஆக்கப்பட்டுள்ளனர்.
மேலும், யுத்தம் நிறைவடைந்து 10 வருட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடிய போதிலும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து 2012ல் இருந்து 2017ம் ஆண்டு காலப்பகுதிவரை சர்வதேச பாதுகாப்பு சபை வரை தேடியும் தங்களிற்கான நீதி கிடைக்கவில்லை.
இந்த நிலையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதியை கோரியுள்ளோம். இதனூடாகவெனினும் பாதிக்கப்பட்ட எமக்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தர வேண்டும்” – என அவர் 
வலியுறுத்தியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

ஐநா செயலாளர் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து கவலை

 ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டரஸ் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பாக கவலை 
வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 45வது மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கை.30-09-20. இன்றுசமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அவர் குறித்த அறிக்கையில் தனது கருத்துக்களை 
முன்வைத்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறப்படுதல் தொடர்பாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக குறித்த அறிக்கையில் குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்றவர்கள், தமது பயணத்துக்கு முன்னரும் அதற்கு பின்பும் விசாரிக்கப்பட்டதாக அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாண்டு நடைபெறும் மனித உரிமை கூட்டத்தொடரின் கிளைக் கூட்டங்களின்போது இலங்கை மற்றும் ஜெனீவாவை தளமாகக்கொண்டு இயங்கும் பல அமைப்புகள் இவ்வாறான சவால்கள் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2019ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உதவி செயலாளர் நாயகம் இலங்கையில் நிலவும் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல் முறைமை தொடர்பாக எழுத்து மூல அறிக்கையை இலங்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை 
விடுத்துள்ளார்.
மேலும் இலங்கை அரசாங்கம் குறித்த விடயங்களுக்கான பதிலை உடனடியாக வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்ட அண்டோனியோ குட்டரஸ், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

அச்சுவேலியில் படையினர் பிரதேசசபை தலைவர் மீது தாக்குதல் முயற்சி

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில்,28.09.2020.அன்று
வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு 
விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்ககூடாதென இலங்கை இராணுவம் அச்சுவேலி பகுதியில் வர்த்தகர்களை 
அச்சுறுத்தியுள்ளது.
ஒன்றிணைந்த அழைப்பில் இன்று வடக்கு கிழக்கில் முழு அடைப்பு இடம்பெற்று வருவதால் யாழ்ப்பாண நகரமும் முடங்கியுள்ளது. இந்நிலையில் அச்சுவேலி பகுதியில் கடைகளை திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு நேற்று மாலை நேரடியாக படை அதிகாரிகளாலும் புலனாய்வாளர்களாலும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு சென்ற வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோஸ் மீது தாக்குதல் முயற்சி 
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அச்சுவேலி சந்தியில் உள்ள பேரூந்து தரிப்பிடத்துக்கு முன் இராணுவம், மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ உயரதிகாரிகள் சொகுசு வாகனங்களில் அப்பகுதியில் பிரசன்னமாயிருந்தனர். சந்தியை சூழவும்  புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 
சம்பவம் தொடர்பில் வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஸ் கருத்து தெரிவிக்கையில், 
நானும் உப தவிசாளரும் சென்று கடை உரிமையாளர்களிடம் பேசிய போது அவர்கள் தங்களை கடைகளை திறக்குமாறு காவல்துறையினரும்;, இராணுவ புலனாய்வாளர்களும் அச்சுறுத்தியதாக
 தெரிவித்தனர். பஜிரோ ரக வாகனத்தில் வந்த இராணுவ உயரதிகாரிகள் என்னுடைய 
வாகனத்துக்கு முன்பாகவும், பின்பாகவும்  பல தடவைகள் இடையூறு விளைவித்து வீடியோவும் எடுத்தார்கள். இந்த விடயம் தவிசாளர் என்கிற முறையில் என்னை அச்சுறுத்துகின்ற 
விடயமாகும். 
இப்போதும் கூட இங்கே ஒரு பதற்றமான சூழ்நிலை இருக்கின்றது. இராணுவத்தினர் நான் நேரில் சென்றதையடுத்து அச்சம் நீங்கி கடைகள் பூட்டப்பட்ட போது படையினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்துகின்றனர்.உங்களை கைது செய்வோம் என அச்சுவேலி காவல்துறையினர் மிரட்டினர்  என்றார்;. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஆரம்பம் 20வது அரசியலமைப்பை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை

 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதம நீதியரசர் தலைமையில் ஐவரடங்கிய குழு முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் 
கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வட,கிழக்கில் ஹர்த்தால் அரசுக்கு எதிராக கிழக்கும் முடங்கியது


தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாகவும், திருகோணமலையில் புறநகரங்களிலும் முடங்கியிருந்தன.
இதன்படி மட்டக்களப்பில் மட்டு நகரம், செங்கலடி, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி உட்பட பல்வேறு பிரதேசங்களில் முஸ்லிம் பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டன
இதேவேளை திருகோணமலையில் நகர் பகுதிகளை தவிர்ந்த புறநகர் பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது

நிலாவரை.கொம் செய்திகள் >>>













வடக்கு மற்றும் கிழக்கு ஹர்த்தால் வெற்றி சேனாதிராஜா தெரிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்28.09.2020.அன்று  முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா
 தெரிவித்துள்ளார்.
இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் மாலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் கடப்பாடுகள் மனித குலத்தினாலும் ஐ.நா. சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட கடப்பாடாகும் என்றும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் இக்கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றபோதும் இலங்கையில் இறந்தவர்கள் நினைவு கூரும் கடப்பாடுகள் அரசுகளினால் மறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வருவதாக 
குற்றம் சாட்டினார்.
இதேவேளை 20வது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றில் நிறைவேற்றினால் நாடாளுமன்ற ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டு சர்வாதிகார பலத்துடன் நிறைவேற்று அதிகார 
ஜனாதிபதி முறையும் நாட்டில் இராணுவ மயமான பொலிஸ் அதிகாரமுமான ஆட்சி ஏற்படும் என்றும் மாவை சேனாதிராஜா 
சுட்டிக்காட்டினார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

யாழ் தெல்லிப்பழை புற்று நோய் கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு எதிராக முறையீடு

 

யாழ் போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை 
பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை
 தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் 28.09.2020.அன்றுயாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்
 ஸ்ரீபவானந்தராஜாவை சந்தித்து 
முறையிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்ப வியலாளர்கள் நாடு பூராகவும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக குறித்த உத்தியோகத்தர்கள் கடமை புரிவது இல்லை, எனினும் புற்று நோய் 
இனங்காணப்பட்ட நோயாளிக்கு குறித்த கதிரியக்க சிகிச்சை அளிக்காவிடில் மீண்டும் புற்றுநோய் பரவும் நிலை காணப்படுகின்ற நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக குறித்த ஊழியர்கத் புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுடன் முரண்பட்டு அவர்களை திருப்பி அனுப்புகின்றனர் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மட்டுமே புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக காணப்படுகின்றது. மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, 
மன்னார் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் புற்றுநோய் சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளர்களை குறித்த 
உத்தியோகத்தர்கள் தங்களால் சிகிச்சை வழங்க முடியாது. நாங்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுகிறோம் எனக் கூறி திருப்பி அனுப்புகின்ற நிலை காணப்படுகிறது.
எனினும் குறித்த உத்தியோகத்தர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்காது. மேலதிக நேர கொடுப்பனவினை கடந்த இரண்டு மாதங்களாக பெற்றிருப்பதாக வைத்திய சாலை நிர்வாகத்தினரால் 
சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே இன்றைய தினம் புற்றுநோய் சிகிச்சைக்கு சென்று திருப்பி அனுப்பப்பட்ட 5 நோயாளிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜாவை சந்தித்து தமது குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்கள்.
இது தொடர்பில் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“குறித்த விடயம் தொடர்பில் எமக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அது தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டத்திலும் தெரிவித்திருக்கிறோம். நேற்றைய தினம் கூட குறித்த 
தொழிற் சங்கத்தினருடன் கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். எனினும் அவர்கள் உடன்படுவதாக இல்லை. எனினும் விரைவில் குறித்த உத்தியோகத்தர்கள் 8 பேருக்கும் உரிய நடவடிக்கை 
எடுக்கப்படும்.
கடந்த இரண்டு மாதங்களாக அந்த எட்டு உத்தியோகத்தர்களும் மேலதிக கொடுப்பனவை பெற்றமை சம்பந்தமாக அதனை மீள் பரிசீலனை செய்வதற்கான அறிக்கை ஒன்றும் 
தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட
 தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை 20 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் அங்கேயுள்ள வைத்திய 
நிபுணர்களினாலேயே குறித்த உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
எனினும் இனிவரும் காலத்தில் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட
 நோயாளர்கள் இனிமேலும் பாதிக்கப்படாத வண்ணம் வெகுவிரைவில் நடவடிக்கை 
எடுக்கப்படும்” எனக்குறியுள்ளார் ,

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>




திங்கள், 28 செப்டம்பர், 2020

முல்லையில் அரசுக்கு எதிராக முழு அடைப்பு; பொலிஸார் மிரட்டல்

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில்.28-09-20. இன்றைய தினம்வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் பல்வேறு பகுதிகதிளில் பொலிஸாரால் அச்சுறுத்தல் 
விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி முல்லைத்தீவு நகர கடைகளை திறக்குமாறு தமிழ் வர்த்தகர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்
 விடுத்துள்ளனர்.
எனினும் அங்கும் வர்த்தகர்கள் கடைகளைத் திறக்காமல் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>




யாழ்ப்பாணம் அரசின் அடாவடியை எதிர்த்து முடங்கியது

 

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை 
வழங்கியுள்ளார்கள்.
ஹர்த்தாலினால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியதுடன், யாழ்ப்பாண வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. இதனால் பாடசாலைகள்
 மூடப்பட்டுள்ளன.
பொது மக்கள் வீதிகளில் பயணிக்கவில்லை, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் 
அடைந்துள்ளன.
குறித்த அழைப்பிற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள், எனினும் நேற்றைய தினம் இன்றைய ஹர்தாலுக்கு எதிராக அரசுடன் இயங்கும் சிலர் யாழில் போராட்டம் முன்னெடுத்த போதும், தமிழ் மக்கள் ஹர்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





வவுனியாவில் கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில்.28-09-20. இன்றைய தினம் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல்
 விடுத்துள்ளனர்.
இதன்படி வவுனியா பசார் வீதியில் உள்ள கடைகளை திறக்குமாறு தமிழ் வர்த்தகர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்
 விடுத்துள்ளனர்.
இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
எனினும், வர்த்தகர்கள் கடைகளைத் திறக்காமல் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



யாழ் அச்சுவேலியில் பாதுகாப்பு படைகள் அராஜகம்; வலிகிழக்கு தவிசாளருக்கும் மிரட்டல்

 

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ் –அச்சுவேலி பகுதியில் இராணுவமும் , பொலிஸார் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து சில கடைகளை திறக்க செய்துள்ளனர்.
அச்சுவேலி பகுதியில் கடைகளை திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் அங்கு சென்ற வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோசுக்கு பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு முன் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ உயரதிகாரிகள் சொகுசு வாகனங்களில் அப்பகுதியில் பிரசன்னமாயிருந்தனர். சந்தியை சூழவும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் கருத்து தெரிவிக்கையில்,
“நானும் உப தவிசாளரும் சென்று கடை உரிமையாளர்களிடம் பேசிய போது அவர்கள் தங்களை கடைகளை திறக்குமாறு பொலிஸாரும், இராணுவ புலனாய்வாளர்களும் அச்சுறுத்தியதாக
 தெரிவித்தனர். பஜிரோ ரக வாகனத்தில் வந்த இராணுவ உயரதிகாரிகள் என்னுடைய வாகனத்துக்கு 
முன்பாகவும், பின்பாகவும் பல தடவைகள் இடையூறு விளைவித்து அச்சுவேலி மத்தியகல்லூரி முன் வீடியோவும் எடுத்தார்கள். இந்த விடயம் தவிசாளர் என்கிற முறையில் என்னை அச்சுறுத்துகின்ற
 விடயமாகும்.
இப்போதும் கூட இங்கே ஒரு பதற்றமான சூழ்நிலை இருக்கின்றது. இராணுவத்தினர் தலையிட்டு பூட்டுகின்ற கடைகள் தொடர்பில் அவதானிப்பை செலுத்துகின்றனர். உங்களை கைது 
செய்வோம் என அச்சுவேலிப் பொலிஸார் மிரட்டினர். அச்சுறுத்தப்பட்டு கடைகள் திறக்க வைக்கப்பட்டால் தவிசாளர் என்கிற முறையில் கடைக்காரர்களிடம் கேட்டறிவதாக
 பொலிஸாரிடம் கூறினேன். இராணுவ அச்சுறுத்தலின் பேரில் இங்கே சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. எமது தலையீட்டால் வர்த்தகள் கடைகளை 
மூடியுள்னர்--என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் ஹர்த்தாலுக்கு ஆதரவு

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நினைவேந்தலை தடையை கண்டித்து முன்னெடுக்கப்படும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 
தெரிவித்துள்ளது.
இயாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 26 செப்டம்பர், 2020

இலங்கையைச் சுற்றி குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க பாதுகாப்பு வலயம்

இலங்கையைச் சுற்றி தீவிர பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டிலிருந்து குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கும் சட்டவிரோதமாக
 நாட்டிற்கு நுழைவதனை தடுப்பதற்கும், தடை
 செய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதனை தடுப்பதற்கும் தீவிர பாதுகாப்பு வலயம் ஒன்றை செயற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்காக முப்படையினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் வடக்கு மீனவ பிரஜைகளின் ஆதரவும் இதற்காக 
கிடைத்துள்ளது.நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பிற்கான முடிந்த அளவு செயற்படுவதாகவும் இராணுவ 
ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் நுழைவதனை தடுப்பதற்காவே வடக்கு மீன்பிடி பிரஜைகளின் பாதுகாப்பு குழுவின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும்,
 பொலிஸாரினால் நாட்டினுள் சிவில் சட்டம் செயற்படுத்தும் போது நாட்டின் கடன் வழியான தப்பி செல்ல முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் 
தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



பாடகர் எஸ்.பி.பி..கண்ணீர்கடலுக்கு மத்தியில் 72 பீரங்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி.

 

தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் பொலிஸாரின் மரியாதையுடன் தாமரைப்பாக்கம் பண்ணை 
வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்றினால்
 பாதிக்கப்பட்டிருந்த பாடகர் பாலசுப்ரமணியம்,.25-09-20.  அன்றையதினம் மதியம் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது
.இந்த நிலையில் நேற்றிலிருந்து திரையுலக 
பிரபலங்கள் பொதுமக்கள் என பலர் இதுவரையில் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் சற்றுமுன்னர் அவரது 
உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் எஸ்.பி.பி..

நிலாவரை.கொம் செய்திகள் >>>



அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் 26.09.20

தோற்றம்.04-06-1946-மறைவு .25.09.2020  
உடல்நலக்குறைவால்.25-09-20. அன்று  காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் அவரது தாமரைப்பாக்க இல்லத்தில்.26-09-20. இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் 
அஞ்சலி செலுத்தினர்.
நல்லடக்கம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என கூறப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்தலாம் என 
தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூக இடைவெளியை கடைபிடித்து, 100 பேருக்கு மிகாமல் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
"பாலு... நீ இல்லாம உலகம் சூன்யமாயிடுச்சு" - இளையராஜாவின் 
உருக்கமான அஞ்சலி
எஸ்.பி.பி என்ற "பன்முக கலைஞன்" - "பாடும் நிலா" மறைந்தது
பல்வேறு தரப்பினரும் எஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை
 விடுத்திருந்தினர்.
இந்நிலையில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் வெளியிட்டார்.
தாமரைப்பாக்கம் இல்லத்தில் இறுதி மரியாதை 
நடைபெற்று வருகிறது
மருத்துவமனை தெரிவித்தது என்ன?
கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில்
 குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை 
நேற்று முன் தினம் தெரிவித்தது.
இந்நிலையில் .25-09-20. அன்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி
எஸ்.பி.பியின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை 
அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் 
கமல் ஹாசன், நடிகர் ரஜினி காந்த், மேற்கு 
வங்க முதலமைச்சர் மம்தா பனேர்ஜி, மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் செளஹான், மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைத்துறையினர் என பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






வெள்ளி, 25 செப்டம்பர், 2020

தொடர் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மூவா் யாழில் கைது

 

 யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இவா்களால் திருடப்பட்ட 25-க்கும் மேற்பட்ட துவிச்சக்கரவண்டிகள் கோப்பாய் பொலிஸாரினால் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் 
செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை,26-09-20. நாளை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



உடதும்பர பகுதியில் புலி இறைச்சி விற்ற மூவா் கைது

உடதும்பர பகுதியில் புலியை கொலை செய்து அதன் இறைச்சியை விற்பனை செய்த பெண் ஒருவா் உட்பட 03 பேர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இறைச்சி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றும் காவற்துறையினரால் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 24 செப்டம்பர், 2020

நாட்டில் வங்கிகளில் கடன் பெறுவதற்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு.

நாட்டில் கடன் தகவல் பணியகத்தின் (CRIB) அறிக்கைகளில் பெயர் பதிவாகியுள்ளமையினால், சில நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல்
 பணியகத்தில் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடன் தகவல் பணியகத்தினால் கடன் செலுத்தாத நபர்களை தவறாக பட்டியலிடாதென அந்த பணியகத்தின் 
இயக்குனர் தெரிவித்துள்ளார்.யாராவது ஒருவர் கடன் பெற சென்றால் CRIBஇல் பெயர் இருந்தால் கடன் வழங்க முடியாதென கூறுகின்றார்கள். எனினும், நாங்கள் அதனை முழுமையாக நிராகரிக்கின்றோம்.
 அவ்வாறு கூற முடியாது. கடன் வழங்குவதற்கான 
முழுமையான தீர்மானம் கடன் வழங்கும் நிறுவனத்துடையதாகும்.CRIBஇல் பெயர் இருந்தால் கடன் வழங்க முடியாதென நிதி நிறுவனங்கள் கூறினால், உடனடியாக எங்களை தொடர்பு 
கொள்ளுங்கள். இல்லை என்றால், வார நாட்களில் எங்கள் அதிகாரிகளை சந்தித்து பேசுமாறு அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.