திங்கள், 28 செப்டம்பர், 2020

யாழ் அச்சுவேலியில் பாதுகாப்பு படைகள் அராஜகம்; வலிகிழக்கு தவிசாளருக்கும் மிரட்டல்

 

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ் –அச்சுவேலி பகுதியில் இராணுவமும் , பொலிஸார் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து சில கடைகளை திறக்க செய்துள்ளனர்.
அச்சுவேலி பகுதியில் கடைகளை திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் அங்கு சென்ற வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோசுக்கு பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு முன் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ உயரதிகாரிகள் சொகுசு வாகனங்களில் அப்பகுதியில் பிரசன்னமாயிருந்தனர். சந்தியை சூழவும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் கருத்து தெரிவிக்கையில்,
“நானும் உப தவிசாளரும் சென்று கடை உரிமையாளர்களிடம் பேசிய போது அவர்கள் தங்களை கடைகளை திறக்குமாறு பொலிஸாரும், இராணுவ புலனாய்வாளர்களும் அச்சுறுத்தியதாக
 தெரிவித்தனர். பஜிரோ ரக வாகனத்தில் வந்த இராணுவ உயரதிகாரிகள் என்னுடைய வாகனத்துக்கு 
முன்பாகவும், பின்பாகவும் பல தடவைகள் இடையூறு விளைவித்து அச்சுவேலி மத்தியகல்லூரி முன் வீடியோவும் எடுத்தார்கள். இந்த விடயம் தவிசாளர் என்கிற முறையில் என்னை அச்சுறுத்துகின்ற
 விடயமாகும்.
இப்போதும் கூட இங்கே ஒரு பதற்றமான சூழ்நிலை இருக்கின்றது. இராணுவத்தினர் தலையிட்டு பூட்டுகின்ற கடைகள் தொடர்பில் அவதானிப்பை செலுத்துகின்றனர். உங்களை கைது 
செய்வோம் என அச்சுவேலிப் பொலிஸார் மிரட்டினர். அச்சுறுத்தப்பட்டு கடைகள் திறக்க வைக்கப்பட்டால் தவிசாளர் என்கிற முறையில் கடைக்காரர்களிடம் கேட்டறிவதாக
 பொலிஸாரிடம் கூறினேன். இராணுவ அச்சுறுத்தலின் பேரில் இங்கே சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. எமது தலையீட்டால் வர்த்தகள் கடைகளை 
மூடியுள்னர்--என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.