வெள்ளி, 18 செப்டம்பர், 2020

சர்வதேச ரீதியில் பல்வேறு தடைகளையும் தாண்டி முன்னிலைக்கு வந்த இலங்கை..

 

உலக பொருளாதார சுதந்திர பட்டியலில் ஸ்ரீலங்கா 83 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக புதிய தரப்படுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இத்தரப்படுத்தலை
 Canada’s Fraser Institute மற்றும் Advocata Institute Sri Lanka ஆகியன இணைந்து வெளியிட்டுள்ளன.162 நாடுகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்ட தரப்படுத்தலிலேயே ஸ்ரீலங்காவுக்கு 83 ஆவது
 இடம் கிடைத்துள்ளது.அதிக செழிப்பு , அரசியல் மற்றும் சுதந்திரம் என்பவற்றை முதல்நிலைப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற இப்பட்டியலில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் என்பன முறையே
 முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளன.இதேவேளை நியூசிலாந்து, சுவிஸ்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.