வெள்ளி, 18 செப்டம்பர், 2020

நாட்டில் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல இந்த
 விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் 22 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது
.இதன்போது முதலாம் வாசிப்புக்கென நீதி 
அமைச்சரால் குறித்த சட்டமூலம் 
முன்வைக்கப்படவுள்ளது.அதன்பின்னர் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்துவதற்கு ஏழு நாட்கள் வழங்கப்படவுள்ளன.ஏதேனும் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு 
தொடுத்தால் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவுபெறுவதற்கு மூன்று வாரங்கள் எடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்டமூலம் குழுநிலை விவாதத்தின்போதே திருத்தப்படவுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.