வெள்ளி, 26 ஜூலை, 2024

நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம்

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு 
அறிவித்துள்ளது.
அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 25 ஜூலை, 2024

நாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.  
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.  
சர்வதேச விசாரணையை தேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 



புதன், 24 ஜூலை, 2024

நாட்டில் உத்தேச சமரிசி சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய தேரர்கள்

நாட்டில் உத்தேச சமரிசி சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை திரியணிகைக மகாநாயக்க தேரர்கள் அனுப்பி 
வைத்துள்ளனர்.
 உத்தேச சமரிசி சட்டமூலம் சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் ஒழுக்கக்கேடானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.  
குறுகிய எதேச்சதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசின் நிர்வாகத்தில் ஏதாவது கேலி செய்யப்பட்டால், அது மாநில 
அராஜகத்திற்கும் சமூகச் சிதைவுக்கும் வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 அதற்கிணங்க, நடைமுறைப்படுத்த முடியாத, நெறிமுறையற்ற இந்த சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 23 ஜூலை, 2024

பாராளுமன்றத்தில் கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவு கூர்ந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு ஜூலைக் கலவரத்தின் 41 ஆவது ஆண்டு நிறைவை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் 
நினைவு கூர்ந்தார்.
 பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றும்போதே கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவு கூர்ந்த அவர் மேலும் பேசுகையில், இன்று (23) ஜூலைக் கலவரத்தின் 41 ஆவது 
ஆண்டு தினம் .
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இலங்கையின் சகல பகுதிகளிலும் தமிழர்கள் மீது தொடர்ந்து 3 தினங்கள் காட்டேறித்தனமான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன . அவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் 41 வருடங்கள் ஆகிவிட்டன. 
ஆனால் இன்னும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தற்போது தமிழர்களுக்கு இருந்த நிலங்களும் ,கலாசார அடையாளங்களும் பறிபோய்க்கொண்டிருக்கின்றன என்பதனை இந்த சபையில் கவலையுடன் பதிவு செய்கின்றேன் என்றார்.என்பது குறிப்பிடத்தக்கது 


திங்கள், 22 ஜூலை, 2024

நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கௌரவம் வழங்கப்படும்

நாட்டில்கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் எனவும் கடந்த பொருளாதார நெருக்கடியின்போது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 இலங்கையின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டுவதற்காக, நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சி வடமேற்கு மாகாணத்தில் 
ஆரம்பிக்கப்பட்டதுடன், இதில் குருணாகல், புத்தளம்,
 அனுராதபுரம், மாத்தளை, கேகாலை 
ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 5,000 பேர் கலந்துகொண்டனர்.
 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடாத்தும் நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் தொழில் முனைவர்களை உருவாக்குவதற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பரிந்துரைக்கும் சுயதொழிலை
 ஆரம்பிக்கத் தேவையான நிதி மூலதனமாக தலா 50,000 ரூபாவையும் ஜனாதிபதி வழங்கினார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 21 ஜூலை, 2024

விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணை ஒன்றுக்கு அமைய அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற 
முயன்றபோது குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  குற்றச்சாட்டுகள் மற்றும் அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 20 ஜூலை, 2024

யாழில் குழந்தையை கணவனுடன் விட்டுவிட்டு காதலனுடன் ஓடிய தாய்

யாழில் தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, கள்ள காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலுடன் ஊரை விட்டு 
சென்று இருந்தார்.
 இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும் , அவரது காதலனான இளைஞனையும் 
கைது செய்தனர். 
 கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற விசாரணைகளை அடுத்து இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.