ஞாயிறு, 1 மார்ச், 2026

முதல் முறையாக ஐரோப்பிய நாடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய ஈரான்

தற்போது   மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஒரு நாடு மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
சைப்ரசில் (Cyprus) நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.​
பிரிட்டிஷ் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். 
சையிப்ரசில் உள்ள அக்ரோதிரி (Akrotiri) வான்படைத் தளம், இஸ்ரேலுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதற்கும் உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக !!ரான் 
குற்றம் சாட்டி வந்தது. 
இந்தத் தளமே ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு முக்கிய இலக்காக இருந்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.