புதன், 11 மார்ச், 2026

துபாயில் விதிகளை மீறியதற்காக கைது செய்யப்பட்ட பிரித்தானிய சுற்றுலா பயணி

மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்திவரும் நிலையில், தாக்குதல் தொடர்பிலான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரக அதிகாரிகள் 
எச்சரித்துள்ளார்கள்.
இந்நிலையில், எச்சரிக்கையை மீறிய பிரித்தானிய சுற்றுலாப்பயணி ஒருவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். 
லண்டனைச் சேர்ந்த அந்த 60 வயது நபர் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், ஈரானிலிருந்து வீசப்படும் ஏவுகணைகளை வீடியோ எடுத்துள்ளார். 
அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குற்றத்துக்காக அவர் இரண்டு ஆண்டுகள் சிறை செல்லக்கூடும் அல்லது அவருக்கு 58,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படக்கூடும் 
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.