ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

அமெரிக்காவில் இலங்கை மருத்துவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை

இலங்கை வம்சாவழியான தமிழ் மருத்துவர் ஒருவருக்கு அமெரிக்காவின் ஸ்டப்போட் நீதிமன்றில் உடல்நலப் பாதுகாப்பு மோசடிக்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளிடம் இருந்து பணம் அறவிடவில்லை என்று தெரிவித்து அனந்தகுமார் தில்லைநாதன் என்ற இந்த மருத்துவர் உளவியல் சிகிச்சை சேவைகளுக்கான அரச மருத்துவ உதவி திட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 840,000 டொலர்களை பெற்றதாக குற்றம் 
சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் 1,000 க்கும் மேற்பட்ட மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளைச் சேர்ப்பதற்காக அவர் மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒன்றுக்கு பணம் கொடுத்துள்ளார்.
அதேநேரம் அந்த நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகளுக்காக ஒரு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பணத்தை அவர் பெற்றுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் தில்லைநாதன் உடல்நலப் பாதுகாப்பு மோசடி மற்றும் கூட்டாட்சி சுகாதாரத் திட்டங்களை மீறிய குற்றச்சாட்டை
 ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமையன்று நீதிமன்றில் முன்னிலையான அவரை சிறைத்தண்டனைக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் மேற்பார்வையில் இருக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் அவர் 1.6 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை அரசுக்கு திருப்பிச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டார்.
இதில் 500,000 டொலர்களை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் சட்டத்தரணிகள் அலுவலகம் 
தெரிவித்துள்ளது.
இலங்கையின் குடிமகனாகவும், அமெரிக்காவின் சட்டபூர்வமான நிரந்தர குடிமகனாகவும் இருக்கும் தில்லைநாதன் தனது சிறைத் தண்டனையை முடிக்கும் போது குடியேற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் 2019 ஜூன் முதல் 2022 மே வரையில், 839,724 டொலர்களுக்கான தவறான உளவியல் சிகிச்சை சேவைக் கோரிக்கைகளை அரச மருத்துவ உதவித் திட்டத்திற்குச் சமர்ப்பித்துள்ளார்.
தில்லைநாதன் தனது பணியாளர்கள் ஊடாக நோயாளிகளுக்கு மிக குறுகிய அளவிலான உளநல ஆலோசனை வழங்கியதாகவும் 60 நிமிடங்கள் வரையில் நோயாளிகளுக்கு சேவை வழங்கியதாக போலித் தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 29 ஏப்ரல், 2023

இலங்கைக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் இரண்டு பில்லியன் நஷ்டமாம்

 

இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் இந்த நாட்டுக்கு திரும்பாததன் மூலம் அரசாங்கத்திற்கு 
சுமார் 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக 
தெரியவந்துள்ளது.
 கோப் குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம், பணத்தை வசூலிக்கும் முறையை தயார் செய்யுமாறு
 தெரிவித்துள்ளது.
 பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் கோப் குழு கூடிய போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது..என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 28 ஏப்ரல், 2023

நாட்டில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஜோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

நாட்டில் சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கடனுதவி தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு
 நடைபெற்றது.
குறித்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் செலுத்தப்பட்டன.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 27 ஏப்ரல், 2023

நீங்கள் விமான பயணசீட்டு வாங்கும்பொழுது கவனிக்கவேண்டியவை

நீங்கள் ஏமாராதீர்கள் கவனிக்கவும்- விமான பயணசீட்டு வாங்கும்பொழுது கவனிக்கவேண்டியவை டிக்கெட் கட்டணதத்கை 24/12 மாதங்கள் 
பிரித்து கட்ட முடியுமா?
 பயணம் தடைப்பட்டால் கட்டிய கட்டணத்தை மீழ பெற முடியுமா?
 எத்தனை கிலோ பொருட்க்கள் கொண்டு 
செல்ல முடியும்?
 எத்தனை மணித்தியாலம் TRANSIT செய்யவேண்டும்? காப்புறுதி இருக்கா?
 டிக்கெட் பயண திகதி மாற்றினால் எவ்வளவு தண்டம் 
கட்டவேண்டு? 
இவை முக்கியமானவைகள். மேலதிக கேழ்விகள் இருந்தாலோ, விமானப் பயண சீட்டை உடன் அல்லது 24 மாதத்தில் கட்டிப் பெற்றுக்கொள்ள AMMAS TRAVELS TEL: 041 790 64 68 MOB: 076 773 77 77

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 26 ஏப்ரல், 2023

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும்

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க 
தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் 
இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாய் மாற்றப்பட்டுள்ளமையானது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக தீர்வுக்கு உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையேயான டிஜிட்டல் கொடுப்பனவு முறைக்கும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆதரவை வெளிப்படுத்தினார்.
இதேநேரம் குறித்த நிகழ்வில் உரையாற்றிய, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வருங்கால பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் கருத்து வெளியிட்டார்.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் கவனம் செலுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
செவ்வாய், 25 ஏப்ரல், 2023

உலக இராணுவச் செலவுகள் 2022 ஆம் ஆண்டில் 2.24 டிரில்லியன் டாலர்களை எட்டியது

2022 ஆம் ஆண்டில் உலக இராணுவச் செலவினம் 2.24 டிரில்லியன் டாலர்களை எட்டியது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐரோப்பா முழுவதும் இராணுவச் செலவில் கூர்மையான உயர்வைத் தூண்டியது என்று ஒரு முன்னணி பாதுகாப்பு சிந்தனைக் குழு 
தெரிவித்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) உலகளாவிய இராணுவ செலவினங்கள் குறித்த தனது வருடாந்திர அறிக்கையில் உலக செலவினம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக 
உயர்ந்துள்ளது.
அதில் பெரும்பாலானவை ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் தொடர்புடையவை என்று SIPRI கூறியது, ஆனால் ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மற்ற நாடுகளும் இராணுவ செலவினங்களை 
முடுக்கிவிட்டன.
சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய இராணுவச் செலவினங்களின் தொடர்ச்சியான அதிகரிப்பு, நாம் பெருகிய முறையில் பாதுகாப்பற்ற உலகில் வாழ்கிறோம் என்பதற்கான அறிகுறியாகும் என்று SIPRI இன் இராணுவச் செலவு மற்றும் ஆயுத உற்பத்தித் திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் நான்
 தியான் கூறினார். 
இந்த நகர்வுகள் அண்டை நாடான ரஷ்யா அல்லது ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த மற்ற நாடுகளிடையே எச்சரிக்கையை பரப்பியுள்ளன, பின்லாந்தின் செலவு 36 சதவீதம் மற்றும் லிதுவேனியாவின் இராணுவ செலவு 27 சதவீதம் அதிகரித்துள்ளது என்று SIPRI தெரிவித்துள்ளது
.
என்பதுகுறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திங்கள், 24 ஏப்ரல், 2023

தமிழக அரசு திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதி:

திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை 
வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், வீடுகளில் 
நடைபெறும் 
விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் 
மதுபானம் பரிமாறுவதற்கு சிறப்பு உரிமம் வழங்க வசதியாக தமிழ்நாடு மதுபானம் விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் 
செய்துள்ளது.
இந்த சிறப்பு உரிமம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும் உரிமக் கட்டணம் செலுத்திய பிறகு ஆட்சியர் ஒப்புதலுடன் சிறப்பு உரிமம் வழங்கப்படும் என்றும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உரிமம் பெற்றவர், மாநகர காவல் ஆணையரிடம் ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமம் பெற்றவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை 
விருந்தினருக்கு பரிமாறலாம் என்று செய்திகள் வெளியாகியது. திருமண நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாறுவதற்கு உரிமை வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியான விவகாரம் சர்ச்சை
 ஏற்படுத்தியது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

நடிகர் திலகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் யாழில் குழப்பம் விளைவித்த பெண்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிலையில் தன்னை ஏற்பாட்டாளர் எனக் கூறிய பெண் ஒருவர் ஊடகங்களை வெளியேறுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர்  மற்றும் நூல் ஆசிரியர் ஆகியோர் 
நூல் வெளியீட்டு விழாவிற்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் குறித்த நிகழ்வு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு
 செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்ட நிலையில் திடீரென அங்கு நின்ற பெண், சில ஊடகவியலாளர்களை அடையாள அட்டை காட்டுமாறு வற்புறுத்தினார்.
இந்நிலையில் சில ஊடகவியலாளர்கள் நாங்கள் அடையாள அட்டையை காட்டுவதில் பிரச்சனையில்லை நீங்கள் யார் என்பதை முதலில் கூற முடியுமா என கேள்வி எழுப்ப நீங்கள் வெளியேறலாம் என குறித்த பெண்மணி கடுந் தொனியில் எச்சரித்தார்.
இந் நிலையில் அங்கு நின்ற பத்துக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்வை புறக்கணித்து வெளியேறினர்.
அதன் பின் ஏற்பாட்டாளர்கள்  சிலர் ஊடகவியலாளர்களை அணுகி நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியதுடன் நிகழ்வுக்கு 
வருமாறு கோரினர்.

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 22 ஏப்ரல், 2023

வண்டலூர் பூங்காவிற்கு கர்நாடகாவில் இருந்து வந்த புதிய சிங்கம்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்ததால் மாற்று ஏற்பாடு.
வெள்ளைப் புலியைக் கொடுத்து பெங்களூர் (Zoo) ஜூவிடம் இருந்து வாங்கிய ஆண் சிங்கம் சென்னை வந்தது.
21 நாட்கள் தனிமைபடுத்துதலுக்குப் பிறகு அந்தச் சிங்கம் பார்வையாளர்கள் பார்வைக்குக் காண்பிக்கப்படும் எனப் பூங்கா நிர்வாகம் 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 21 ஏப்ரல், 2023

மாரத்தான் போட்டியில் இங்கிலாந்தில் சேலையுடன் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பெண்மணி

இங்கிலாந்தில் மாரத்தான் போட்டியில் சேலையுடன் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடிய இந்திய வம்சாவழி பெண் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.
சேலையுடன் ஓட்டம்
இவர் கைத்தறியிலான சம்புல்வரி வகை சேலை அணிந்து இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய மான்செஸ்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடி உள்ளார்.
சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. தனது மாரத்தான் அனுபவம் குறித்து மதுஸ்மிதா ஜெனா கூறுகையில்,
சேலை அணிந்து மாரத்தான் ஓடிய ஒரே நபர் நான் தான். இவ்வளவு நீண்ட தூரம் ஓடுவது ஒரு தொடர் வேலை.. ஆனால் சேலையில் இவ்வாறு செய்வது இன்னும் கடினமானது.
முழு தூரத்தையும் 4.50 மணி நேரத்தில் முடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது பாட்டி மற்றும் தாயார் எப்போதும் சேலை அணிந்திருந்ததால் அவர்களை பார்த்து இந்த ஆடையை 
தேர்ந்தெடுத்தேன்.
அதேவேளை பெண்கள் சேலை அணிந்து கொண்டு ஓட முடியாது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் முடிவு தவறானது என நான் நிரூபித்துள்ளேன் என பெருமித்ததுடன் கூறியுள்ளார்.
  என்பதுகுறிப்பிடத்தக்கது.        


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 20 ஏப்ரல், 2023

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்சொட்டு மருந்து மீளப்பெறுமாற உத்தரவு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரெட்னி சோலோன் என்ற கண்சொட்டு மருந்து தொகுதியை மாத்திரம் மீளப்பெறுமாறு சுகாதார அமைச்சு அனைத்து மருத்துவமனை பணிப்பாளர்களுக்கும் 
அறிவித்துள்ளது.
கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று நோயாளிகள் சிக்கல்களை அனுபவித்ததை அடுத்து, ப்ரெட்னிசோலோன் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்துவதில் 
சிக்கல்கள் எழுந்தன.
இதையடுத்து, இந்த சத்திரசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
48 மணித்தியாலங்களின் பின்னர் கிடைத்த அறிக்கைக்கு அமைய, நோய்த்தொற்றுக்கு காரணமான மருந்து கண்டறியப்பட்டுள்ளது.
என்பதுகுறிப்பிடத்தக்கது.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 19 ஏப்ரல், 2023

நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நீர் பாவனை அதிகரிப்பு

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10% அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மக்கள் முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதன் துணைப் பொது கண்காணிப்பாளர் என். யு. கே. ரணதுங்க 
தெரிவித்துள்ளார்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நிலைமையை நிர்வகித்து வருவதாகவும் அவர் கூறினார்.
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் நீண்டகாலத்திற்கு பிரச்சினையின்றி நீரினை வழங்க முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது அத்தியட்சகர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 18 ஏப்ரல், 2023

கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழுவுடன் குத்தகைக்கு ஒப்பந்தம்

ஆசிரி போர்ட் சிட்டி ஹாஸ்பிடல் (பிரைவேட்) லிமிடெட், 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில்அதிநவீன மருத்துவமனையை 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் கூடிய அதிநவீன 
மருத்துவமனையை மேம்படுத்துவதற்கும் இயக்குவதற்கும், கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழுவுடன் குத்தகைக்கு 
ஒப்பந்தம் செய்துள்ளது. 
கொழும்பு துறைமுக நகருக்குள் அடையாளம் காணப்பட்ட நான்கு முக்கிய மூலோபாய மற்றும் பாரிய அளவிலான சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றாக உத்தேச மருத்துவமனை அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரப்பினரால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மற்றும் ஆசிரி போர்ட் சிட்டி மருத்துவமனை (பிரைவேட்) லிமிடெட் ஆகியவை 
முன்மொழியப்பட்ட மருத்துவமனையின் வளர்ச்சி மற்றும் 
செயல்பாட்டிற்காக 99 வருட குத்தகை உரிமைகளுக்கான குத்தகை ஒப்பந்தத்தில் நுழைய விரும்புகின்றன என்பது 
குறிப்பிடத்தக்கது .


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 17 ஏப்ரல், 2023

நாட்டில் வடக்கு - கிழக்கில் ஆழமாக கால் பதித்துள்ள சீனா! அச்சத்தில் இந்தியா

சீனா இலங்கைக்கு கடன் வழங்கியுள்ளது என்பதற்காக வடக்கு கிழக்கி உள்ள காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) வலியுறுத்தியுள்ளார்.
சீனா வடக்கு - கிழக்கில் செலுத்தும் ஆதிக்கம் என்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும், எனவே சீன அரசாங்கம் தமிழர் பகுதிகளுக்கு ஊடுருவுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை அரசிடம் மீள கடனை பெற்றுகொள்வதற்கான வழிகளை சீன அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்றும் மாறாக அரசாங்கத்திற்கு வழங்கிய கடன்களுக்கு ஈடாக, வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகளை அபகரிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் 
அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஹம்பாந்தோட்டை மற்றும் மதனை அண்டிய பகுதியில் சுமார், 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு என்பன சீன அரசாங்கத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் தொடர்ச்சியாகவே வடகிழக்கிலும் சீனர்கள் சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் 
குறிப்பிட்டள்ளார்.
குறிப்பாக கடலட்டை குஞ்சுகளை வளர்க்ககூடிய தொழில் நுட்பம் சீனர்களிடம் மாத்திரமே உள்ளதால், கடலட்டைப் பண்ணைகளை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு மீனவர்களை சந்திப்பதாகவும் வறுமைக்கோட்டிற்கு 
கீழே உள்ள மீனவர்களுக்கு உலர் உணவு பொருட்களை 
இலவசமாக வழங்கி வருவதாகவும் இவ்வாறு 
வடக்கில் பல வேலைத்திட்டங்களை சீனா முன்னெடுத்துள்ளதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலிறுத்தியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

இலங்கையர்களும் நேரடியாக பார்வையிட முடியும் ஏப்ரல் 20 கலப்பின சூரிய கிரகணம்

இலங்கையர்களும் ஏப்ரல் 20ஆம் திகதி கலப்பு சூரிய கிரகணம் நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன 
தெரிவித்துள்ளார்.
இது கலப்பின சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுவதற்கான காரணம், சூரிய கிரகணத்தின் பாதையை உலகின் சில பகுதிகளில் முழு சூரிய கிரகணமாகவும், மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அதை வளைய சூரிய கிரகணமாகவும் பார்க்கிறார்கள் என்று பேராசிரியர் கூறினார். .
இரண்டு சந்தர்ப்பங்களிலும், சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் கடந்து செல்கிறது, மேலும் ஒரு சந்திர நாளில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது, ​​சந்திரனின் நிழல் பூமியின் மீது விழும் பகுதிகளில் சூரிய கிரகணம் தோன்றும். .
இலங்கையின் வழக்கமான நேரப்படி, ஏப்ரல் 20ஆம் தேதி இந்தியப் பெருங்கடலில் இருந்து காலை 7.04 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி பசிபிக் பெருங்கடலில் இருந்து மதியம் 12.29 மணிக்கு 
முடிவடையும்.
இந்த சூரிய கிரகணத்தை பூமியில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே காண முடியும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன 
தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த இரண்டு இடங்களும் கடலுக்கு நடுவில் அமைந்துள்ளன, இந்த சூரிய கிரகணம் இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் காணப்படாது என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த கிரகணத்தை மேற்கு ஆஸ்திரேலியா, கிழக்கு திமோர் மற்றும் கிழக்கு இந்தோனேசிய தீவுகளில் உள்ள மக்களுக்குத் தெரியும், அவர்கள் வாழ்நாளில் ஒரு முறை நிகழ்வைக் காண தயாராகி 
வருகின்றனர்.
இந்த சூரிய கிரகணத்தை உலக மக்கள் தொகையில் 8.77% மட்டுமே காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கலப்பின சூரிய கிரகணம் மிகவும் அரிதானது மற்றும் கடைசி கலப்பின சூரிய கிரகணம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 3, 2013 அன்று ஏற்பட்டது, மேலும் அடுத்த கலப்பின சூரிய கிரகணம் நவம்பர் 2031 இல்
 நிகழ உள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை இலங்கைக்கு காண முடியாவிட்டாலும், நாசா இணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்களும் நேரடியாக பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 15 ஏப்ரல், 2023

இன்று நாடளாவிய ரீதியில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கையில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று (சனிக்கிழமை) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
முறையான பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல 
பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இதனை சமுர்த்தி தொழிற்சங்கங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் டபிள்யூ.ஜோதிரத்ன தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 14 ஏப்ரல், 2023

நோர்வே அரசாங்கம் 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை அதிரடியாக வெளியேற்றியுள்ளது

உளவு தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டுக்காக 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நோர்வே அரசாங்கம் அதிரடியாக 
வெளியேற்றியுள்ளது.
கடந்தாண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கியதுடன் சில நாடுகள் அவர்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்கவும் மறுத்திருந்தன.
உளவுத்தகவல்களை திருடும் ரஷ்ய  அதிகாரிகள்
இந்த நிலையில், ரஷ்யாவின் அயல் நாடான நோர்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தில் பணிபுரியும் தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனை நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக நோர்வே கருதிய நிலையில், குறித்த அதிகாரிகளிடத்தில் விசாரணைகளும் நடத்தப்பட்டு அவர்களது செயல்பாடுகள் இராஜதந்திர நடவடிக்கைகளுடன் பொருந்தவில்லை என நோர்வே முடிவு
 செய்துள்ளது.
இதனையடுத்து நோர்வேயில் உள்ள ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள் 15 பேரை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை நோர்வே அரசாங்கம் நேற்று வெளியிட்டது.
இது குறித்து கருத்து வெளியிட்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் அன்னிகென் ஹூய்ட்பெல்ட் கூறுகையில்,
ரஷ்யாவின் உளவுத்துறை நடவடிக்கைகளின் நோக்கத்தை எதிர்ப்பதற்கும், அதன் மூலம் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கும் இது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும் எனத் தெரிவித்தார்.
அதேவேளை கடந்த ஆண்டிலும் இதுபோல 3 தூதரக அதிகாரிகளை நோர்வே வெளியேற்றியிருந்தது. இதேசமயம் நோர்வே அரசாங்கத்தின் இந்த செயலுக்கு ரஷ்யா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வியாழன், 13 ஏப்ரல், 2023

திருப்பூரில் 2000 ரூபாய் கடனுக்காக சக தொழிலாளியின் குழந்தையை கடத்திய தம்பதியை கைது

இரண்டாயிரம் ரூபாய் கடனுக்காக சக தொழிலாளியின் இரண்டரை வயது ஆண் குழந்தையை ஜோலார்பேட்டையிலிருந்து கடத்தி வந்த தம்பதியை திருப்பூரில் போலீசார் பிடித்தனர்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி ஆண் குழந்தையுடன் சுற்றித் திரிந்த தம்பதி குறித்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தம்பதியிடம் போலீசார் விசாரணை 
நடத்தினர்.
விசாரணையில் ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் தங்கி தூய்மைப்பணி செய்யும் வேலு-வள்ளி தம்பதி, உடன் பணியாற்றும் டென்னி என்பவரின் குழந்தையை கடத்தி வந்தது
 தெரிய வந்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 12 ஏப்ரல், 2023

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் சட்ட மன்றத்தில் இன்று அறிவிப்பு

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய போது, பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகள் மூடல்தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் தகுதியான 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் மூடப்படும். அவ்வகையில், இந்த ஆண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சம்பளம் உயர்வு 
டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு 1,100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய் மற்றும் உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக சம்பளம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கானல் நீராகும் முழு மதுவிலக்கு
டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு, பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த 500 டாஸ்மாக் 
கடைகள் மட்டும் தான் தமிழ்நாட்டில் உள்ளதா எனும் கேள்வி 
மக்கள் மத்தியில் கேட்கப்பட்டுள்ளது. ஏனென்றால் 
எங்க பார்த்தாலும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் குறையில்லை. இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. முழு 
மதுவிலக்கு தான் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், இன்று வரையிலும் அது மட்டும் நடக்கவே இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு முழு மதுவிலக்கு என்பது இன்னும் கானல்
 நீராகவே உள்ளது.


 


செவ்வாய், 11 ஏப்ரல், 2023

நாட்டில் பள்ளிப் பைகள், காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க முடிவு

நாட்டில் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு செய்வதில்
 பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைப் பைகள் மற்றும் காலணிகளின் 
விலைகள் 
தொடர்பில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு
 தெரிவித்தார்.
தற்போது காலணி மற்றும் பைகள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டு உள்ளுர் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மட்டுமே இறக்குமதி
 செய்யப்படுகின்றன.
டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப உள்ளூர் சந்தையில் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் சியம்பலாபிட்டிய, வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களம் இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை வழங்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் , விலை குறையவில்லை என்றால் உடனடியாக ஜனாதிபதிக்கு அறிவித்து விலையை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திங்கள், 10 ஏப்ரல், 2023

நாட்டில் கடவுச்சீட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்காக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதியன்று நேரம் ஒதுக்கிக் கொண்டவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்தலொன்றை 
விடுத்துள்ளது.
அதன்படி அன்றைய தினத்தில் நேரம் ஒதுக்கியவர்கள் நண்பகல் 12 மணிக்கு முன்னர் திணைக்களத்துக்கு வருகை தந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.   


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>Blogger இயக்குவது.